காங் ,' வந்தால் வரலை >>>!>

 ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. 

அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆரஞ்சு  எச்சரிக்கை!


தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 தேனி, தென்காசி, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
18 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு போன சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "18 ஹார்ட் டிஸ்க்குகள் காணவில்லை என செய்திகள் வருகின்றன. தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?


 நடு இரவில் திருடர்கள் வந்து திருட , இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம். 


தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி?


 ஹார்ட் டிஸ்க்குகள் திருட்டு குறித்து முறையான சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட்டு , உண்மை வெளிவர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.


தூய்யய சக்தி ×

உதகையில் 4 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் - நிபுணர்கள் தீவிர சோதனை

உதகையில் உள்ள மாவட்ட ஆட்சிய அலுவலகம், ஆட்சியர் முகாம் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 4 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. 


அனைத்து இடங்களிலும் மோப்ப நயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் 2 மணி நேரம் செய்த தீவிர சோதனையில் வெடி குண்டு மிரட்டல் போலியானது என தெரிய வந்தது. வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் குறித்து காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் துறையினருடன் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.