படுகொலை விசாரணை.?
காசாவில் அப்பாவி மக்களின் வீடுகளைத் தகர்த்து, மனிதநேயமற்ற முறையில் அழிவின் சுவடுகளைப் பதித்துவிட்டு, அந்தச் செயல்களைச் சமூக வலைதளங்களில் கொண்டாடிய ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர், இந்தியாவின் இமய மலை அடிவாரத்தில் சுற்றுலாப் பயணி போல உலாவிவிட்டுத் தப்பிச் சென்றிருப்பது ஒட்டு மொத்த மனித உரிமையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈதன் கில்போவா எனும் அந்த நபர், இஸ்ரேலிய ராணுவத்தின் 271-வது போர் பொறியியல் படைப்பிரிவில் பணியாற்றியவர்.
காசாவின் கான் யூனிஸ் மற்றும் ரஃபா பகுதிகளில் குடியிருப்பு வீடுகள் இடிக்கப்படுவதை வேடிக்கை பார்த்தும், அதை வீடியோக்களாகப் பதிவு செய்து வெளி யிட்டும் தனது வன்மத்தைக் காட்டியவர். இத்த கைய கொடுஞ்செயல்கள் நான்காம் ஜெனிவா ஒப்பந்தத்தை மீறுவதாகவும், போர்க் குற்றங்கள் என்றும் சர்வதேசச் சட்டங்கள் தெளிவாக வரை யறுத்துள்ளன.
ஆனால், இத்தகைய கொடிய குற்றச்சாட்டு க்கு ஆளான நபர், இந்தியாவில் தாராளமாக சுற்றுலாப் பயணம் மேற்கொண்டது ஒருபுறம் இருக்க, அவர் மீது ‘ஹிந்த் ரஜாப் அறக்கட்டளை’ ஆதாரங்களுடன் புகார் அளித்தும் இந்திய அரசு காட்டிய மெத்தனப் போக்கு மிகுந்த கவலை யளிக்கிறது.
1960-ஆம் ஆண்டின் இந்திய -ஜெனி வா ஒப்பந்தங்கள் சட்டத்தின்படி, தனது மண்ணில் நுழையும் போர்க் குற்றவாளிகளை விசாரிப்ப தற்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் இந்தியாவுக்குப் பொறுப்பும் அதிகாரமும் உண்டு.
ஆனால், புகார் அளிக்கப்பட்ட பிறகும் இந்திய அரசு எடுத்த “மெதுவான” நடவடிக்கை கள், குற்றவாளி தப்பிச் செல்வதற்கே வழி வகுத்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ராஜதந்திர உறவுகளோ அல்லது வர்த்தக ஒப்பந்தங்களோ, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரி மைகளை விட மேலானவை அல்ல.
இனப்படு கொலை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒருவரை, தற்காலிகமாகப் புகலிடம் அளித்துத் தப்ப விடுவது, நீதியின் பார்வையில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்காது. “இந்தியா தனது மண்ணைச் சர்வதேசக் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக மாற்ற அனுமதிக்கக்கூடாது” என்ற ஹிந்த் ரஜாப் அறக்கட்டளையின் கோரிக்கை, மனிதாபிமானம் கொண்ட ஒவ்வொருவரின் உணர்வும் ஆகும்.
சர்வதேச நீதிமன்றத்தில் காசா விவகாரம் குறித்த விசாரணைகள் வரும் வேளையில், இது போன்ற குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பது சர்வதேச நீதிக்கே சவால் விடுக்கிறது.
இந்திய அரசு தனது கடந்தகால ஜனநாயகப் பாரம்பரியத்தைப் பேணிக்காக்கும் வகையில், இத்தகைய போர்க் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச சமூகம் இதைக் கூர்ந்து கவனித்து வரு கிறது. ஈதன் கில்போவா போன்ற போர்க் குற்ற வாளிகள் எந்த நாட்டில் பதுங்கினாலும், அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்.
கரூர் படுகொலை மீண்டும் விசாரணை!
அதிமுகவில் இருக்க கூடிய முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணையும் விழா சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது .
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கரூரில் எங்களுக்கு ஒரு கணக்கு வழக்கு உள்ளது அதை முடிக்காமல் விடமாட்டோம் உதயநிதியின் வாழ்க்கைக்காக கரூரில் எங்கள் மக்களை காவல்துறை மூலம் கொன்று குவித்து விட்டீர்களே ஸ்டாலின் சார்..
காவல்துறையை வைத்துக்கொண்டு எங்கள் மக்களை கொன்று குவித்தீர்களே ஸ்டாலின் சார் என ஆதவ் அர்ஜுனா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த பட்டது.
அந்த மனுவில், கரூர் வழக்கு நீதிமன்றக் கண்காணிப்பில் நடந்து வரும் சி.பி.ஐ விசாரணை உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவரான பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, பேசியது சாட்சிகளை கலைக்க வழிவகை செய்யக்கூடும்.
இது குறித்து பொதுவெளியில் தவெகவினர் பேச தடைவிதிக்க வேண்டுமென்று திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
முதலமைச்சர் விஜய் அவர்கள் வரும் ஜூலை 10-ஆம் தேதி கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசாணைகள், கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் மற்றும் இதர நிவாரண உதவிகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த வழக்கின் முக்கியச் சாட்சிகளாக இருப்பதால், அவர்களைச் சந்திப்பது விசாரணையைப் பாதிக்காத வண்ணம் உரிய வழிகாட்டுதல்களை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தனது மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுமீதான விசாரணை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டது உச்சநீதிமன்றம்.
இந்த மனுமீது நாளை விசாரணைக்கு நடைபெற உள்ளது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளச் சம்மதித்தது.
கரூர் வழக்கின் பின்னணி:
கடந்த 2025 ஆம் ஆண்டும் கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக தவெக சார்ப்பில் அக்டோபர் 13-ஆம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்க்கொண்டார்.
காலதாமதமாக விஜய் சென்றதால் இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு சுமார் குழந் தைகள் உள்பட 41 பேர் பலியாகினர்.
இந்த நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டநெரிசல் விவகாரத்தை விசாரிக்க ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டது.
இதற்கு தவெக சார்ப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சம்பவத்தில் அரசியல் சதி இருப்பதாக கூறி தவெக உச்சநீதிமன்றத்தை நாடியது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வைத்து விசாரணைக்கு எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த நிலையில், கரூர் வழக்கில் இரண்டு முறை விஜய் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.
மேலும், இந்த வழக்கில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரின் பெயர்கள் FIR – ரில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில்அப்போது கரூர் எம்.எல்.ஏ.வாக இருந்த செந்தில் பாலாஜியும் தேவையின்றி விஜயால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
தொடர்ந்து ஆதாரங்களை சேகரித்து, சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.




