விடுவிப்புகள் ,,,,,,,,
$ 1993-94-ம் ஆண்டுக்கான செல்வ வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என்று வருமான வரித் துறை சார்பில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து, பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றத்தில், வருமான வரித் துறை சார்பில் 1997-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை, 8.7.2010-ல் முதன்மைப் பெருநகர நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று நான் வேண்டுமென்றே எந்தத் தவறும் செய்யவில்லை. குறிப்பிட்ட தேதிக்குள் நான் செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், எனக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி, என் தரப்பு கருத்தை தெரிவிக்க உரிய வாய்ப்பு தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வருமான வரித் துறை சார்பில் அத்தகைய விளக்க நோட்டீஸ் எதுவும் எனக்கு அனுப்பப்படவில்லை. எனவே, வேண்டுமென்றே நான் எந்தத் தவறும் செய்யாததால், இந்த வழக்கிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியிருந்தார்.இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி பி.ஆர். சிவகுமார், திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று வேண்டுமென்றே ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை என்பது தெரிகிறது. எனவே, இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்படுகிறார். இந்த வழக்கு தொடர்பாக பொருளாதார குற்றங்களுக்கான எழும்பூர் தலைமைப் பெருநகர நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
ஒரு மாநில முதல்வருக்கு வரிகட்டுவதைப்பற்றி தெரியாமல்போனது மிகவும் வேடிக்கை.வரிகளைப்போட மட்டும்தான் தெரியுமோ? அவரது ஆடிட்டர் மிகவும் பரபரப்பாக செய்திகளில் அடி’பட்டாரே .அவர் கூட சொல்லாதது வேடிக்கை.
அதை விட வேதனை அனைவருக்கும் முன் மாதிரியாக வேண்டிய முதல்வர்களே சட்டங்களை மீறுவது.
முதல்வராகி விட்டார்.முதலில் செல்வ வரி வழக்கு தள்ளுபடி.
அடுத்து வாய்தா புகழ் சொத்துக்குவிப்பு வழக்குதானே?
# தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைக்காட்சி பேட்டியில் ”:லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர் பதவியைக் கொண்டுவருவது அவரது அதிகார வரம்பைக் குறைக்கும்; மத்திய அரசுக்கு இணையாக மற்றொரு அரசு நடப்பதற்கு இது வழிவகுக்கும்.ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதமர் பதவி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்கலாம். எனவே, லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது. இதில் பிரதமரைச் சேர்த்தால், வெளிநாட்டு சக்திகள் நாட்டின் ஸதிரத்தன்மையைக் குலைப்பதற்கு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தக் கூடும்.அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று நிரூபிக்கப்பட்டாலும் அவரது அதிகாரம் பாதிக்கப்படும். அவர் எப்போதும் தன்னை தற்காத்துக்கொள்வதிலேயே கவனம் செலுத்த நேரிடும்.இந்த விஷயத்தில் நான் எந்தவொரு தனிநபரையும் ஆதரிக்கவில்லை. பிரதமருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டாலொழிய அவரால் செயல்பட முடியாது. பிரதமருக்கு உள்ள அதிகாரம் எதையும் குறைக்கக் கூடாது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக்கொள்வேன். அரசியலுக்கு வருவேன் என்றோ, தமிழ்நாட்டின் முதல்வராக ஆவேன் என்றோ நினைக்கவில்லை; இருந்தாலும், தமிழகத்தின் முதல்வராக இப்போது பணியாற்றுகிறேன்.இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு உண்டு. அதற்கான திறமை நம்மிடம் உள்ளது. உறுதியான, தேசப்பற்று மிகுந்த தலைவர்தான் நமது நாட்டுக்குத் தேவை ”என்றார் ஜெயலலிதா.
அவரது தேசபக்திதான் பிரதமரை லோக்பாலில் சேர்க்கக்கூடாது எனக் கூற வைத்துள்ளது.
ஆனால் நீதிபதிகளை பற்றி ஒன்றும் கூற வில்லையே.ஏன்?
அது போகட்டும் .
அடுத்தப் பேட்டியில் மறக்காமல் நீதிபதிகளையும் சேர்த்துடுங்கள்.நமது சொத்துக் குவிப்பு வழக்குக்கு உதவும்.
அது போக “லோக்பாலில் முதல்வர்களையும் விடுவிக்க வேண்டும்.சேர்க்கக்கூடாது[கருணாநிதி என்ற பெயர் உடையவர்களைத் தவிர] என்றும் மறக்காமல் கூறிவிடுங்கள்.நமக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
2016ல் என்ன நிலையில் இருக்கிறோமோ?
==========================================================================
=========================================================================