புதன், 4 மே, 2011

நான் ஆணையிட்டால்.....?

தேர்தல் சர்வதிகாராணையம்?
 
 
  
 ""தேர்தல் கமிஷனின் சட்ட, திட்டங்களுக்கு உட்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி விதிமுறைகள் உள்ளன. அதற்கு உட்பட்ட சட்ட, விதிமுறைகளையே தமிழகத்தில் தேர்தல் கமிஷன் நடைமுறைபடுத்தியது,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறினார்.
     இந்த சொல்லை அவரே நம்ப மாட்டார். 
துவரை இல்லா அளவு தேர்தல் ஆணையம் மிசா காலத்தை போல் ஒரு ஆட்டம் ஆடிவிட்டது.
இதை தி.மு.க,மட்டுமல்ல எதிர்கட்சியினரே மனசாட்சியுடன் இருப்பின் ஒப்புக்கொள்வார்கள்.
பணத்தால் தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள் என்றால் பணம் வரும் வழிகளை அதிரடி சோதனை மூலம் ண்டுபிடித்துதடுத்தது சரிதான்.
ஒட்டு சேகரிக்க 5பேர்களுக்கு மேல் செல்லக்கூடாது.கொடிகளைக் கட்டக்கூடாது.
தேர்தல் பணியாற்றும் தொண்டர்களுக்கு சாப்பாடு போடக்கூடாது. கொடிக்கம்பங்களில் கொடி இருக்கக் கூடாது.கொடிக்கம்பங்களில் வெள்ளைத்துணிவைத்துக் கட்டி மறைக்க வேண்டும்.அரசு நாட்காட்டிகளை கழற்றி எறி.
குடு்ம்ப அட்டைகளைக் கொட்uக்கக் கூடாது.சாதி,வருமானச்சான்றுகளை கொடுக்கக் கூடாது.
கற்கள் விரித்து ஏற்கனவேபோட ஆரம்பித்த சாலை வேலைகளை அப்படி-அப்படியேநிப்பாட்டு,
என்ன ஆட்டம். மனதுக்குள் ஆட்சிசெய்ய வேண்டும் என்ற அரிப்பைத்தீர்த்துக்கொண்டார்கள் தேர்தல் ஆணையர்கள்.
            தமிழகத்தேர்தலில் பணம் விளையாடுகிறது.உண்மைதான்.அதை வாகண சோதனையில் ,வேட்பாளர் பணம் கொடுக்கிறாரா என்ற சோதனையில் நிப்பாட்டியாகிட்டே.
மற்ற கெடுபிடிகள் எதற்கு?
சரி.இதே கெடுபிடிகள் மற்ற அசாம்,கேரளா,வங்காளம், போன்றவற்றில் ஏன் இல்லை?
பக்கத்து மாநிலம் கேரளாவில் நாள் தோறும் ஊர்வலம்,கொடிகளுடன் வாக்கு சேகரிப்பு.
தமிழகம் மட்டும் பொம்பளப்பிள்ளை பிறந்த வீடு மாதிரி தேர்தல் உற்சாகமே இல்லாமல் இருக்க வைக்கப்பட்டது ஏன்?
மேற்கு வங்கத்தில் பகிரங்கமாக திரினமுல் காங்கிரஸ் வேட்பாளர் செலவுக்கு என  பணம் கொடுக்ிறது.அதற்காக அவர்கள் தலைவி திடீர் ஒவியராகி வண்ணத்தில் எதையோ கிறிகித்தள்ள அதற்காகவே காத்திருந்த கலாரசிகர்கள் கோடிகளில் ஒவியங்களை[?] வாங்கிட ,,
இதை அங்குள்ள ஆணையம் அனுமதித்திருக்கிறது.யார் வாங்கினார்கள் .எவ்வளவு பணம் கொடுத்தார்கள் ஒன்றும் தெரியாது.கணக்கும் கிடையாது.
ஆனால் இங்கு?
தேர்தல்தொடர்புடைய ஒருவர்{அரசு ஊழியர்தான்} சொன்னத் தகவல் .தேர்தல் ஆணயத்திற்கு வரும் புகார்களில் தி.மு.க,மீது என்றால் உடனே நடவடிக்கை எடுக்ககூறி  சென்னையில் இருந்து ஆணை பறக்குமாம் .அதுவே அ.தி.மு.க,விற்கு எதிராக என்றால்  கண்டு கொள்ளப்படுவதே இல்லையாம்.  
இப்போது தெரிகிறதா? தேர்தல் ஆணையம் தேர்தலில் யார் வெல்ல வேண்டும் என்பதையும் தீர்மானிக்கும் சக்தியையும் விரும்புகிறது என்பது .
சரி .தேர்தல் முடிந்தாகி விட்டதே  இன்னும் ஏன் குடும்பஅட்டையை  வழங்கக் கூடாது,சாதி-வருமான சான்றுகளையும் வழங்கக் கூடாது. மின்சாரத்தையும் மத்தியத் தொகுப்பில் இருந்து வாங்காதே என்கிறது.
மத்தியத்தொகுப்பில் இருந்து வாங்கக் கூடாதாம்.ஆனால் தனியாரிடம் இருந்து அதிக விலையில் யூனிட் 12 ரூபாய்க்கு வாங்கிக் கொள்ள்மட்டும் தடையில்லையாம். 
       என்ன நடக்குது?தேர்தல் ஆணையம் இப்படி சர்வதிகாரித்தன்மையுடன் நடக்கக் காரணம் என்ன? 5 மாநிலத்தேர்தலில் தமிழகம்,புதுச்சேரியில் மட்டும் இப்படி துக்ளக் தன்மை ஏன்?
  இவ்வளவையும் செய்து விட்டு எப்படித்தான் பிரவின்குமார் இப்படி பேசுகின்றாரோ?
  தேர்தல் பணம் பாயாமல்,மோதல்கள் இன்றி நடத்தியதற்கு தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவிக்கலாம்.ஆனால் தமிழகத்தில் அதன் செயல்பாடு சற்று கடுமை,கெடுபிடிகள் அதிகம்தான்.மற்ற மாநிலங்களில் அது இல்லை என்பதே ஒரவஞ்சனைத் தனம்  எதற்காக என எண்ணத்தொன்றுகிறது.