போபால்-தீவிரவாதிகள்-ராகுல்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,.
இந்தியாவால் தேடப்படும் பயங்கர வாதிகளின் பட்டியல்: முதலிடத்தில் ஹபீஸ் சயிது |
[ வியாழக்கிழமை, 12 மே 20 1 |
ந்தியா தேடி வரும் 50 பயங்கரவாதிகளில் மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீது முதலாவது இடத்தில் உள்ளார். |
கடந்த 1993ல் மும்பையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள், 1999ல் பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு சதி திட்டம் தீட்டிய ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மவுலானா மசூத் அசார், மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு காரணகர்த்தாவான லஷ்கர்- இ-தொய்பா தலைவர் ஹபீஸ் சயீது என 50 பயங்கரவாதிகளை மத்திய அரசு தேடி வருகிறது. இந்த பயங்கரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் சுற்றித்திரிகின்றனர். சர்வ பாதுகாப்புடன் வலம் வரும் தாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டு மண்ணில் இல்லவே இல்லை என சாதிக்கிறது பாகிஸ்தான் அரசு. ஒசாமா பின்லேடன் எங்கள் நாட்டில் இல்லை என உண்மை பேசி வந்த பாகிஸ்தான் மண்ணில் தான் சமீபத்தில் அமெரிக்க படைகள் சுற்றி வளைத்து ஒசாமாவை சுட்டுக் கொன்றது. அமெரிக்காவை போல அதிரடியாக இந்தியாவால் செயல்படமுடியாது என்பதால் இந்த பயங்கரவாதிகளையெல்லாம் ஒப்படைக்கும் படி பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறது. இந்தியா தயாரித்துள்ள 50 பயங்கரவாதிகளின் பட்டியலில் முதலில் இருப்பவர் மும்பை தாக்குதலுக்கு வித்திட்ட ஹபீஸ் சயீது. கடந்த மார்ச் மாதம் இருநாட்டு செயலர்கள் மட்டத்தில் நடந்த பேச்சு வார்த்தையின் போது மத்திய அரசு இந்த 50 பயங்கரவாதிகளின் பட்டியலை அந்நாட்டு உள்துறை செயலர் சவுதாரி காமர் சமானிடம் ஒப்படைத்தது. மும்பை தாக்குதலில் பலியான அமெரிக்கர்களின் உறவினர்கள் புருக்லின் நகர நீதிமன்றத்தில் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ தலைவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு சதி திட்டம் தீட்டி ஐ.எஸ்.ஐ தலைவர்கள் உதவியுள்ளனர் என அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கால் இந்திய- பாகிஸ்தான் இடையேயான பிணக்கு மேலும் வலுவடையும் என்பதால் புருக்லின் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை நிறுத்தி வைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக கெவின் வால்ஷ் என்ற வக்கீலை பாகிஸ்தான் நியமித்துள்ளது. ============================================================================================================= |
- தேர்தல் கமட்டு எணதூள் கிமத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை இருந்தது. இந்த தொழிற்சாலையில் இருந்து 1984-ம் ஆண்டு விஷவாயு கசிந்ததால் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் பலியானார்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகிகள் 7 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். ஆனால் கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய நீதிபதி ஏ.எம்.அகமதி தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை கவனக்குறைவாக மரணத்தை ஏற்படுத்துதல் பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்டது. இந்த பிரிவின் கீழ் அதிகபட்சமாக 2 ஆண்டு ஜெயில் தண்டனை தான் விதிக்க முடியும்.
அதன்படி சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 500-க்கும் மேற்படட பக்கங்களை கொண்ட இந்த மனுவை வக்கீல் தேவ்தத் காமத் தயாரித்தார். இதை அட்டர்னி ஜெனரல் வாகன்வதி தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் வழக்கின் பிரிவை மாற்றியது தவறு என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆதாரங்களை பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது நீதியை சிதைப்பதாக அமைந்து விட்டது. எனவே வழக்கை கூடுதல் தண்டனை விதிக்கும் வகையில் மாற்ற உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது.
எதிர்பார்த்தது போலவே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதி தீர்ப்பு அளித்த போபால் விரைவு கோர்ட்டு குற்றவாளிகள் 7பேருக்கும் தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது.இதையடுத்து இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்க மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் த€லைமையில் 9 மந்திரிகள் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வாகன்வதியை கேட்டுக்கொண்டது.
அதன்படி சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 500-க்கும் மேற்படட பக்கங்களை கொண்ட இந்த மனுவை வக்கீல் தேவ்தத் காமத் தயாரித்தார். இதை அட்டர்னி ஜெனரல் வாகன்வதி தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் வழக்கின் பிரிவை மாற்றியது தவறு என்றும் சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆதாரங்களை பரிசீலிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது நீதியை சிதைப்பதாக அமைந்து விட்டது. எனவே வழக்கை கூடுதல் தண்டனை விதிக்கும் வகையில் மாற்ற உத்தரவிடவேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. 14 ஆண்டு கழித்து மிகுந்த காலதாமதமாக இந்த மனுவை தாக்கல் செய்ததற்கான காரணத்தை சி.பி.ஐ. தெரிவிக்க தவறி விட்டது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்தது.அதோடு விரைவு கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்கை பாதிக்கும் வகையில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படக்கூடாது என்றும் கோர்ட்டு தன் தீர்ப்பில் கூறி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது இந்த விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது.
===========================================================================
சூப்பர் ஸ்டார் ராகுல்
: உ.பி., போலீசாருக்கு தகவல் கொடுக்காமல், நேற்று அதிகாலையில் மோட்டர் சைக்கிளில், கிரேட்டர் நொய்டா மாவட்டம், பட்டா பர்சவுல் கிராமத்திற்கு வந்த ராகுல், அங்கு, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டார். அவரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
உ.பி., மாநிலம், நொய்டா உள்ளிட்ட நகரங்களில், சாலை அமைப்பது உள்ளிட்ட, அரசு திட்டங்களுக்காக, விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு, நொய்டா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசு தரப்பில், தங்களுக்கு தரப்பட்டுள்ள இழப்பீடு மிகவும் குறைவு என்றும் கூறி வருகின்றனர்.சாலை ஆய்வுப் பணிக்காக சென்ற, மாநில அரசின் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மூன்று பேரை, கடந்த சில நாட்களுக்கு முன், விவசாயிகள் பிடித்து வைத்துக் கொண்டனர்.இவர்களை விடுவிப்பதற்காக கடந்த சனிக்கிழமை, ஏராளமான போலீசார், கிரேட்டர் நொய்டாவில் உள்ள பட்டா பர்சவுல் கிராமத்துக்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. அங்கு திரண்டிருந்த விவசாயிகள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் போலீசாரை தாக்கினர். இதில், இரண்டு போலீசார் பரிதாபமாக பலியாயினர். போலீசாரும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரண்டு விவசாயிகள் பலியாயினர்.இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு பட்டா பர்சவுல் கிராமத்திற்கு, பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல், உ.பி., போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், ஒரு மோட்டார்சைக்கிளில் ஒருவரின் பின்னால் அமர்ந்து வந்த காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், அங்கு விவசாயிகளிடம் பல மணி நேரம் அவர்களின் பிரச்னையை கேட்டறிந்தார்.விவசாயிகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்தனர். போலீசார் தாக்கியதில், தங்களுக்கு ஏற்பட்ட காயத்தையும், ராகுலிடம் காட்டினர். "கிராமத்தில் உள்ள இளைஞர்களில் நிறைய பேரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். ஏராளமானவர்கள் பயத்தில் கிராமத்தை விட்டு வெளியேறி விட்டனர்' என்றும் புகார் கூறினர்.
பின்னர் விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு நீதி விசாரணை கோரி, விவசாயிகளுடன் சேர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பட்டா பர்சவுல் கிராமத்தில் சவுபால் என்ற இடத்தில், நாள் முழுக்க நடந்த தர்ணா போராட்டத்தில், ராகுலுடன் மற்றொரு காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய்சிங்கும் பங்கேற்றார்.
இதையடுத்து, ராகுலைச் சந்தித்த மாவட்ட துணை கலெக்டர் விஷால் சிங், "பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு தர்ணா போராட்டத்தை அவர் கைவிட வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். மேலும், ராகுல் திடீரென கிராமத்திற்கு வந்ததால், தன்னால் அவருக்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றும் கூறினார்.
அதற்குப் பதில் அளித்த ராகுல், "கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிப்பது உட்பட அவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் உ.பி., மாநில அரசு நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் கிராமத்தை விட்டுச் செல்வேன். காங்கிரஸ் கட்சி எப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாகவே இருக்கும். அவர்களின் நலனுக்காக பாடுபடும். உ.பி., அரசின் நிலம் கையகப்படுத்துதல் கொள்கை, விவசாயிகளுக்கு எதிரானது' என, திட்டவட்டமாகக் கூறினார்.
ராகுலுடன் தர்ணாவிடம் ஈடுபட்ட திக்விஜய்சிங் கூறுகையில், "விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை விவசாயிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. கைது செய்யப்பட்ட விவசாயிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்' என்றார்.
விவசாயிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பட்டா பர்சவுல் கிராமத்தில், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தும், மோட்டார் சைக்கிளில் எப்போது ராகுல் வந்தார் என்பதை யாரும் கவனிக்கவில்லை. விவசாயிகளை சந்தித்து ராகுல் குறை கேட்கத் துவங்கிய பின்னரே, அவர் வந்துள்ளதை போலீசார் பார்த்துள்ளனர்.ராகுல் பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் யார் என்பதும் தெரியவில்லை.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ராகுலையும், திக்விஜய் சிங்கையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். பின்னர் ராகுல்விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து டில்லி சென்றார்.
ஆகாக ஆகா”
ஒருதேர்ந்த அரசியல் நடிப்பு ராகுலுக்கு அழகாக கைவரப்பெற்றுள்ளார்.இதெல்லாம் ஜீன் கோளாறு.இவரின் குடும்ப ஆட்சிதானே மேலே நடிக்கிறது தவறு நடக்கிறது. பழங்குடியினர் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என ஒரு சட்டத்தை பொம்மை மன்மோகன் சிங் மூலம் போட்டால் காணாதா?.
==========================================================================

ராகுல் அதிரடி நடிப்பு வர ,வர மெருகு கூடுகிறது. குடிசையில் நுழைந்து காபி,கஞ்சி குடிப்பது,இளவரசருக்கான பாதுகாப்பை மீறி கூட்டதில் புகுந்து ஏழைகளின் கண்ணீரைத்துடைப்பது, கல்லூரிகளில் கலந்துரையாடி மாணவர்களின் அறிவுப்பசியைப்போக்கும்படி கலந்துரையாடுவது. பழங்குடியினர் நிலம் கையகப்படுத்துவதை தடுப்பது.’
ஆகாக ஆகா”
ஒருதேர்ந்த அரசியல் நடிப்பு ராகுலுக்கு அழகாக கைவரப்பெற்றுள்ளார்.இதெல்லாம் ஜீன் கோளாறு.இவரின் குடும்ப ஆட்சிதானே மேலே நடிக்கிறது தவறு நடக்கிறது. பழங்குடியினர் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என ஒரு சட்டத்தை பொம்மை மன்மோகன் சிங் மூலம் போட்டால் காணாதா?.
உ.பி.யில் மட்டுமா இப்போராட்டம் நடக்கிறது.இவர்களின் ஆந்திராவிலும் பற்றி எரிகிறதே.சட்டமன்ற உறுப்பினர் மீதி சாணத்தைக்கரைத்து ,அடித்து விரடுகிறார்களே அங்கு இவர் சென்று தனது விவசாய ஆதரவை காட்டலாமே.தனக்கும் சாணமரியாதை கிடைத்துவிடும் என்ற பயம்தானே?எப்படியோ இவரின் இந்த ஏழைப்பங்காளவேடம் மக்களைக் கவரவில்லை.அதைத்தான் ராஜஸ்தான் தேர்தலில் நான்கு இடத்துடன் ஒரங்கட்டிக் காட்டிவிட்டார்களே. இன்னூமா இதைநம்புகிறார் ராகுல்.வேறு வேசம்கட்டுங்கள் ராகுல் .உங்களுக்கு உண்மையில் மட்டுமல்ல வேசத்திலும் ஏழைப்பங்காளன் சரிவரவில்லை.