புதன், 18 மே, 2011

அழகிரிக்கே அதிரடியா,,,?

  

  


 "" எனக்கு எதிராக பொய் வாக்குமூலம் அளிக்க, நடிகை ரஞ்சிதாவுக்கு, 20 கோடி ரூபாய் மற்றும் எம்.எல்.ஏ., சீட் தருவதாக பேரம் பேசப்பட்டது. இதற்கு நடிகை ரஞ்சிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கோர்ட்டில் தெரிவித்து, என் மீது போடப்பட்டுள்ள வழக்கு பொய் வழக்கு என நிரூபிப்பேன்,'' என, சாமியார் நித்யானந்தா கூறினார்.

திருவண்ணாமலையில், கிரிவலப் பாதையில் உள்ள நித்யானந்தா பீடத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எந்த வேலையையும் துவங்கும் முன், திருவண்ணாமலைக்கு வந்து அருணாச்சலேஸ்வரரை தரிசித்து விட்டுச் செல்வது என் வழக்கம். இந்தியாவில் நாத்திகம் உள்ள தமிழகத்தில் தான், குடிப்பழக்கத்துக்கு அடிமையானோர் எண்ணிக்கை அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. என் மீது ஆபாச புகார் கூறப்பட்டது. என்னைப் பற்றி அவதூறாக வெளியிட்ட, "சிடி' போலியானது என, கோர்ட்டில் நிரூபிக்க உள்ளேன். இதை வைத்து மிரட்டி, என் பக்தர்களிடம் பணம் பறித்தவர்களையும் கோர்ட்டில் நிரூபிப்பேன், என் மீது பொய் வழக்கு போட்டவர்கள், ரஞ்சிதாவிடம், 20 கோடி ரூபாயும், எம்.எல்.ஏ., சீட்டும் தருகிறேன், எனக்கு (நித்யானந்தா) எதிராக வாக்கு மூலம் கொடு என, கூறியுள்ளனர். அதற்கு ரஞ்சிதா மறுத்துள்ளார். இதையெல்லாம் கோர்ட்டில் தெரிவிப்பேன், என் ஒழுக்கத்தைப் பற்றி சட்ட ரீதியாக கோர்ட் கேட்க வேண்டும், இல்லையெனில் மத ரீதியாக, என் மதத்தைச் சேர்ந்த பெரியவர்கள் கேட்க வேண்டும்.

என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை, கோர்ட் மூலம் பொய் என நிரூபித்து விட்டு, தமிழகம் முழுவதும் மக்களிடம் நியாயம் கேட்டு பாத யாத்திரை செல்வேன். சித்தர்களுடைய யோகக் கலையையும், மருத்துவக் கலையையும் உலகம் முழுவதும் எடுத்துச் செல்வதே எங்கள் பணி. சித்தர்களின் மூலிகையை பற்றியும் ஆராய்ச்சி செய்து வருகிறோம். இவ்வாறு நித்யானந்தா கூறினார்.
===========================================================================
அல்கொய்தாவின் புதிய தலைவர்,,[இவராவது தேர்வாவாரா]அல்கொய்தா அமைப்பின் தற்காலிக தலைவராக சயிப் அல்-அதல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாபாத் அருகே அமெரிக்க படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து அந்த இயக்கத்துக்கு ஒசாமாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த அல்ஜவாரி புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அல்கொய்தாவின் புதிய தலைவராக சயிப் அல்-அதல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தற்காலிகமாக பதவியில் இருப்பார். சயிப் அல்&அதல் அல்கொய்தாவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
எகிப்தியரான இவர், அந்நாட்டு ராணுவப்படையில் அதிகாரியாக பணியாற்றியவர். இந்த தகவல்களை லிபியன் இஸ்லாமிய போராட்ட அமைப்பின் முன்னாள் தலைவர் நோமன் பெனோட்மன் தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 20 வருடங்களாக அல்கொய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்புடையவர்.
சயிப் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை சவுதி, ஏமன் நாட்டு அல்கொய்தா தலைவர்கள் விரும்பவில்லை. முஸ்லிம்களின் புனித தலமாக கருதப்படும் அரேபிய பகுதியை சேர்ந்த ஒருவரே தலைவராக வருவதையே விரும்புவதாகவும் தெரிகிறது..
 ============================================================================
 அழகிரிக்கே அதிரடியா,,,,?

மு.க.அழகிரி
திருமண மண்டபம் மீது தாக்குதல்


மதுரையில் மத்திய அமைச்சர்  மு.க. அழகிரிக்கு சொந்தமான ‘’தயா’’ திருமண மண்டபம் மீது நேற்று
நள்ளிரவில் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மண்டபத்தின் காவலாளி ஓடிவந்து துரத்தியுள்ளார்.      ‘’நாங்க அதிமுக காரங்கடா...உங்கள சும்மா
விடமாட்டோம்டா...’’ என்று சத்தம்போட்டு ஓடியதாக காவலாளி கூறியுள்ளார்.


நடிகர் வடிவேலு வீடு தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் நிலையில்,   அழகிரியின் திருமண மண்டபமும்
தாக்கப்பட்டுள்ளது.   மேலும்,  அழகிரியின் ஆதரவாளர்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதுரை திமுக பிரமுகர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார்.   இந்த
தாக்குதல் தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கையாக  என்ன செய்யலாம் என்று ஆலோசனை நடைபெறுகிறது.   சென்னை வந்து
கவர்னரை சந்தித்து புகார் அளிக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்படுகிறது.
    இவை எல்லாம் ஜெயலலிதாவின் பழைய ஆட்சிக்கால ஆட்டோ சம்பவங்களின் புதிய காப்பி போல்தெரிகிறது.நல்லதற்கல்ல.ஜெ,யும்,நடிகர் விஜய்காந்தும் தங்கள் கட்சிக்காரர்களை அடக்கி வைப்பது நல்லது.இல்லை எனில் இவை எல்லாம் அவர்களின் வெற்றிக்கு பழிப்பு சொல்லாக மக்களிடம் பிரதிபலிக்க ஆரம்பித்து விடும்.
தேர்தலில் மட்டுமல்ல அரசியல் கட்சி என வந்து விட்டாலே பலரும் விமர்சனம் செய்வார்கள்.அவர்களை எல்லாம் தாக்கிக் கொண்டுத்திரிந்தால் அது அழிவுக்கான பாதையாகிவிடும். நடிகர் விஜய்காந்த் இதை உணர வேண்டும்.நடிகர் வடிவேலு தேர்தலில் தாக்கிப் பேசினால் அதற்கும் பேச்சின் மூலம் தான் பதில் தாக்குதல் இருக்க வேண்டுமே தவிர ,அவர் வீட்டின் மீது கல் வீசுவது,அவர கார் மீது கல் வீசுவது சரியானது அல்ல.இவை எல்லாம் தாதாத்தனம்.நல்ல அரசியல் தலைவனுக்கு அழகல்ல.அழிவைத்தேடுபவர்கள்தான் தாக்குதலில் இறங்குவார்கள்.
இதுவரை வடிவேலு வீட்டின் மீதானத்தாக்குதல் பல நடந்துவிட்டது.நடிகர் விஜய்காந்த் தனது கட்சிக்காரர்களை ஒரு ஒப்புக்காகக் கூட அடக்கிவைக்கும் வார்த்தைகளைக் கூறாமல் இருப்பது  அவர்தான் இதை செய்யக்கூறி இருப்பாரோ என்ற சந்தேகத்தை தூண்டுகிறது.
ஜெயலலிதாவும் தான் முதல்வர்.சட்டம் -ஒழுங்கு காக்க வெண்டியவர் என்ற முறையில் இதை தட்டிக்கேட்காமல் இருப்பதும் இது போன்று நடப்பதை எதிர்பார்ப்பது போல் உள்ளது.வடிவேலு வெறும் நடிகர் ஒதுங்கிப்போய்விடுவார்.ஆனால் அழகிரி,,,? தி.மு.க.கட்சியின் மண்டலச் செயலர் மட்டுமல்ல மத்திய அமைச்சரும் கூட.எதிர்த்து  மோதினால் பாதிக்கப்படுவது அப்பாவி மகக்ளும்,சட்டம் ஒழுங்கும்தான்.ஜெ ,வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல .எதிர்த்து வாக்களித்தவர்களுக்கும்  தமிழக முதல்வர்தான். 
அதுசரி தேர்தலின் போது கதாநாயகனாக வலம் வந்த மாவட்ட ஆட்சியர் சகாயம்,காவல் கண்கானிப்பாளர்  இப்போது என்ன செய்கிறார்கள்.தேர்தலின் போது மட்டும் தான் சட்டம் -ஒழுங்கைப்பாதுகாப்பார்களா? அல்லது அழகிரியால் ஏற்படும் சட்டம் -ஒழுங்கை பராமரிப்பார்களா? இப்போது எங்கே அந்த இரு கதாநாயகர்களும்?மதுரையில் இல்லையா?அல்லது போயஸ் தோட்ட பாதுகாப்பிற்கு போய்விட்டார்களா?
===========================================================================================