தோல்வி நிலையென நினத்தால்,,,,,,,,,,,

 தி.மு.க.தோல்வி-ஒரு சில குறிப்புகள்............
தேர்தலில் எதிர்பாராத அளவு தோல்வியால்துவண்டுள்ளதுதி.மு.க,.இது ஒண்ரும் அவர்களுக்கு புதிதல்ல.ஆனால் வெற்றி பெறுவோம் என்ற நிலையில்,நம்பிக்கையிருக்கையில் இது
போன்ற படு தோல்வி யாரையுமே துவண்டு விடச்செய்து விடும்.எந்த வித மக்கள் விரோத செயல்களும் தங்கள் ஆட்சியில் இல்லை என்ற நிலையில் இத்தோல்விக்குக்காரணம் மின்வெட்டு,அலைக்கற்றை ஊழல்,ஈழத்தமிழர் படுகொலையில் சோனியா அரசை உரிய முறையில்,எதிர் கொள்ளாததுபோன்றவையைக் காரணமாகக் கொள்ளலாம்.இதைவிட முக்கியக் காரணம்.ஊடகஙகள்தான்.திட்டமிட்டே ஆட்சியின் இறுதிக்காலங்களில் தி.மு.க.அரசை ஒரு மக்கள் விரோத அரசாகக் காண்பித்து மக்கள் மத்தியில் வெறுப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கி விட்டன.ஜெயலலிதாதான் ஆளப் பொறுத்தமானவர் என்றும் திட்டமிட்ட ’கோயபல்ஸ்’பாணி பரப்புரை செய்தும் வந்தன.
தி.மு.க,வின் மக்கள்நலத்திட்டங்களை அவை கேவலமாகச்சித்தரித்தன,அல்லது புறந்தள்ளின.அவைகளின் பாதிப்பை அதிகரிக்க கருத்துத்திணிப்பும் அவைகளே வெளியிட்டன.இவைகளுக்கானக் காரணம் என்ன? முதலில் இவ்வேலையை சிறப்பாகச்செய்த ஊடக விபரத்தைக்காண்போம்.
தினமலர்,தினமணி,துக்ளக்,முக்கியமாக ஆனந்தவிகடன் குழுமம்,கல்கி,இந்தியாடுடே,என்.டி.டிவி,ஹெட்லைன்ஸ் டுடே,தி இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,சூரியகதிர்[இதற்காகவே பக்கத்தையும் அதிகரித்து விலயை குறைத்தது], இவைகளைப்பார்க்கும் போது ஒரு உண்மை தெரிகிறது.இவை அனைத்துமே பார்ப்பனர் சமுகத்தை சேர்ந்தவை.சாணக்கியனின் வாரிசுகள்.இவர்களின் நோக்கம் தங்கள் இன விரோதி கருணாநிதியை ஒழிப்பதோடு,சில சமயம் தங்களுக்கு எதிராகச்செயல் பட்டாலும் பரவாயில்லை என்று தங்கள் குலச்செல்வியை அரியணை ஏற்றுவதும் தான். இவை மட்டுமல்ல விஜய் மல்லையா ,அனில் அகர்வால் போன்றோர் தி.மு.க.வையும்,ம.தி.மு.க.வையும் அகற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை இங்கு செலவிட்டுள்ளனர்.அந்தப்பணம் எந்த வழியில் செலவானது,செலவளிக்கப்பட்டது?வாக்காளர்களுக்கு வழங்கப்படவில்லை,வேட்பாளர்களுக்கும் கொடுக்கப்படவில்லை எந்தவழியில்தான் அது செலவானது.
இப்போது காசுகொடுத்து செய்திகளை தனக்கு ஆதரவாக எழுதச்செய்யும் விளம்பர காலாச்சாரம் ஊடகங்களில் பரவிவிட்டது. அது விளம்பரமாகக் கருதப்பட்டு பக்க அளவில் காசு வாங்கப்படும்.அதாவது ஊடகம் விபசாரம்.மக்கள் அதை உண்மை என நம்பும் அளவு செய்திகள் என்ற விளம்பரம் இருக்கும்.  பத்திரிகையே சிலநாட்கள் காசு கொடுத்தவர் கையில். அவர்கள் சொல்வதுதான் செய்தி,அவர்கள் எழுதுவதுதான் உண்மை என்ற அளவு இருக்கும்.நம்பும் மக்கள்தான் ஏமாளிகள்.இதைத்தான்  ஹிட்லரின்  கொள்கை பரப்புச்செயலாளர்,வலதுகை கோயபல்ஸ் செய்தான்.
அவனது இரண்டு பத்திரிகைகள் யூதர்கள் நம்நாட்டை சுரண்டுகிறார்கள்,அவர்களால்தான் ஜெர்மானியர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் ஏழ்மையாய் ஆகிவிட்டோம்.அவர்களை ஒழிக்க வேண்டும்,நாம் ஆரியர்கள் ,.உயர்ந்த இனம்.யூதர்கள் தாழ்ந்தவர்கள் அவர்களைத்தாக்கிக் கொள்வோம் எனதனது எழுத்துத்திறமையால் செய்திகளை உருவாக்கி வெளியிட்டு வரச் செய்தான்.வானொலியிலும் இதே பரப்புரைதான் ஆனால் செய்தி வாசிப்பு வடிவில் ,விளைவு நமக்குத்தெரிந்ததே.
தி.மு.க.விற்கும் நம் ஊடகங்களால் யூதர்களின் நிலைமை வந்து விட்டது.விஜய்மல்லையா போன்றோரின் பணம் போன இடம் தெரிகிறதா. பக்கங்களைக்கூட்டி ,விலை குறைக்கும் சூட்சுமம் புரிகிறதா?இது ஒருவழி,
மற்றொன்று தி.மு.க.வை வரவிடக்கூடாது என தேர்தல் ஆணையம் சில வழிகளைக்கையாண்டு கடுமையாக நடந்து கொண்டது.கேட்டால் இம்மாநில விதிகள் அப்படி என்ற பதில் வருகிறது.இந்திய அளவிலான தேர்தல் ஆணையம் மாநிலத்திற்கு ஒரு விதியையாக் கடைபிடிக்கும்? ஜெயலலிதா வாக்கு எண்ணிக்கைக்கு முந்தையநாள் வெளியிட்ட அறிகையில்”தனக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் டேடா எண்ட்ரி மோசடி நடந்துள்ளதாகத்தகவல் கிடைத்துள்ளது,அதன் மூலம் பெரும்பாண்மையிடங்களில் குறிப்பிட்ட கட்சியை வெல்ல வைக்கப் போவதாகத்தெரிகிறது”என்று கூறிப்பிட்டிருந்தார்.வென்ற மகிழ்சியில் அவர் அதை விட்டு விட்டார்.ஆனால் அது இப்போது உண்மையாக இருக்கலாமோ எனத்தொணுகிறது அல்லவா?[இனி இதைப்பிடித்து செல்ல வேண்டியவர் கருனாநிதிதான்]. அந்த வெல்ல வேண்டியகட்சி அ.தி.மு.க, என்று தெரிகிறதா?
 காசுக்கு செய்தி வெளியிடுவது பற்றி உஙக்ளுக்கு சந்தேகமிருந்தால் ,சமீபத்தில் நடந்த பீகார் தேர்தல் சமய தினமலர் இதழ்களைப்படியுங்கள். நமக்குத்தேவையில்லாத பீகார் செய்திகள் தினசரிக்கட்டுரை வடிவிலும்,செய்தி வடிவிலும் இருக்கும்.அனைத்துமே நிதீஸ்குமார் நல்லவர், வல்லவர் .அவர் ஆட்சியில்தான் பீகார் எங்கேயோபோய்கிட்டிருக்கிறது.இன்னும் அவர் வந்தால் எங்கேயோபோய்விடும்.என்ற பானியில் அனைத்தும் இருக்கும்.அதை படிக்கும் நமக்கே பீகார் தேர்தலில் நிதீசுக்கு கள்ள வாக்காவது போட வேண்டும் போல் இருக்கும்.
முடிவு பீகாரில் நிதீஸ்குமார் அறுதிபெரும்பான்மையில் ஆட்சியைப்பிடித்தார்.தினமலர் பீகார் தேர்தலுக்கு இங்கு எழுதுவானேன்.இந்த காசுக்கு செய்தி விற்கும் புதிய ஊடக விபசாரத்துக்கு எதிராக மக்களவையில் விவாதம் கூட நடந்தது. 
இபோது கருணாநிதி செய்யப்போவது என்ன?இதுபோன்ற படு தோல்விகள் அவருக்கு புதுசு அல்ல.எம்.ஜி.யார் இருக்கும் வரை கோட்டை பக்கம் செல்லும் அனுமதி கூட மக்கள் அவருக்குக் கொடுக்கவில்லை.ராஜீவ் கொலையால் விடுதலைப்புலிகளைவிட அதிக இழப்புகள் தி.மு/.க.விற்குத்தான்.ராஜீவைக்கொன்றதே கருணாநிதிதான் என்பது போன்றநிலை.அதைப்போன்றவற்றைத்தாண்டிவந்தவருக்கு இதையும் தாண்டிவிடும்  உறுதியிருக்கும்.இனி 2016 தான் அதில் முதல்வராகும் நிலைக்கு அவரின் வயதும் ,உடல்நிலையும் கொண்டுசெல்வதைப்பற்றி சொல்ல இயலாது.ஆனால் தி.மு.க.ஆட்சியேற செய்யும் மன உறுதி இருக்கலாம்.இனிகுடும்ப அரசியலில் அவர் கவனம் செலுத்தவேண்டும்.அவர்களின் அடங்கா ஆட்டமும் தோல்விகளின் காரணிகளில் ஒன்று.வாரிசுகளை அடக்கிவைக்காததும் சரியல்ல.அழகிரி பார்முலாவை இனியும் நம்ப இயலாது.மக்கள் நலன் ,மக்கள் ஆதரவினைப் பெறும் பார்முலாதான் இனி எடுபடும். இனியும் கதை வசனம் எழுதி படங்களை எடுக்கும் முயற்சி வேண்டாம் .அதைப் பார்த்த கோபத்திலேயே வாக்குகள் எதிராக விழுந்திருக்கும் வாய்ப்பு உள்ளது.
 பேசாமல் அடுத்த[ஊராட்சி] தேர்தல்வரை ‘நெஞ்சுக்கு நீதி’ அடுத்தபாகத்தை எழுத ஆரம்பியுங்கள்.அதில் ஜெ,,யை தேநீர் அருந்த சோனியா அழைத்ததை மறக்காமல் எழுதுங்கள்.
===============================================

மிழக முதல்வராக ஜெயலலிதா வும் , அவரது அமைச்சரவையில்உள்ள 33அமைச்சர்கள் விபரமும்,

புதிய அமைச்சரவை பட்டியலில், 24 பேர் புதிய முகங்களாக இடம் பெற்றுள்ளனர்.                                                                                                                         கடந்த 2001-06ம் ஆண்டு வரையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இடம் பெற்ற அமைச்சர்கள் சிலர், தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்; சிலர் இடம் பெறவில்லை. ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, தனபால், விஜயலட்சுமி பழனிச்சாமி, நயினார்நாகேந்திரன், சோமசுந்தரம், கு.ப.கிருஷ்ணன், அன்பழகன் போன்றவர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

பெயர்   - வெற்றி பெற்ற தொகுதி       - துறை

1. ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பொது நிர்வாகம், உள்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் நிதி மற்றும் திட்டத்துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் கோபி விவசாயம்
4. நத்தம் விசுவநாதன் நத்தம் மின் துறை
5. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி உள்ளாட்சித் துறை
6. சண்முகவேலு மடத்துக்குளம் தொழில் துறை
7. ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் உணவுத்துறை
9. சி.கருப்பசாமி சங்கரன்கோவில் கால்நடை மற்றும் பால்வளம்
10. பி.பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி உயர்கல்வித் துறை
11. சி.வி.சண்முகம் விழுப்புரம் பள்ளி கல்வித்துறை
12. செல்லூர் கே.ராஜு மதுரை மேற்கு கூட்டுறவுத் துறை
13. கே.டி.பச்சைமால் கன்னியாகுமரி வனத்துறை
14. எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை
15. எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை
16. கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு பொதுப்பணித் துறை
17. எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சிறப்பு திட்ட அமலாக்கம்
18. டி.கே.எம்.சின்னய்யா தாம்பரம் பிற்படுத்தப்பட்ட நலத்துறை
19. எம்.சி.சம்பத் கடலூர் ஊரக வளர்ச்சித் துறை
20. பி.தங்கமணி குமாரபாளையம் வருவாய் துறை
21. ஜி.செந்தமிழன் சைதாப்பேட்டை செய்தி மற்றும் விளம்பரத்துறை
22. எஸ்.கோகுல இந்திரா அண்ணா நகர் வணிக வரித்துறை
23. செல்வி ராமஜெயம் புவனகிரி சமூகநலத்துறை
24. பி.வி.ரமணா திருவள்ளூர் கைத்தறித்துறை
25. ஆர்.பி.உதயகுமார் சாத்தூர் தகவல் தொழில்நுட்பத் துறை
26. என்.சுப்பிரமணியன் கந்தர்வகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை
27. வி.செந்தில் பாலாஜி கரூர் போக்குவரத்துத் துறை
28. என்.மரியம் பிச்சை திருச்சி மேற்கு சுற்றுச்சூழல் துறை
29. கே.ஏ.ஜெயபால் நாகப்பட்டினம் மீன்வளத்துறை
30. இ.சுப்பையா அம்பாசமுத்திரம் சட்டத்துறை
31. புத்திசந்திரன் உதகை சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொழிலாளர் துறை
33. வி.எஸ்.விஜய் வேலூர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
34. என்.ஆர்.சிவபதி முசிறி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?