புதன், 25 மே, 2011

இதுவும் ஒரு- நாக்கு முக்க,நாக்குமுக்க


முதல்  அமைச்சர் ஜெயலலிதா 24ந் தேதி தலைமை செயலகத்தில் சரிதாவின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சத்துணவுத் துறையில் சத்துணவு உதவியாளர் வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இதன் மூலம் சரிதா மாத ஊதியமாக ரூ.2077 பெறுவார். மேலும் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சரிதாவின் சிகிச்சைக்கான முழுக்கட்டணத் தொகை 36,195 ரூபாய் செலுத்தவும் உத்தரவிட்டார்.

அண்ணா தி.மு.க,வில் இருந்து உதவிகள் செய்தது சரி.கட்சிக்காரர் என்ற முறையில்.ஆனால் அரசுப்பணியை வழங்கியது எந்த விதத்திலும் சரியானது அல்ல.இவர் ஆட்சி அமைய நாக்கைத்துண்டித்தவருக்கு  பொதுவான அரசுப்பணிக்கு பல தகுதியானவர்கள் காத்திருக்கையில் கடைத்தேங்காயை வழியில் சாமிக்கு உடைத்தது போல் அல்லவா இருக்கிறது.இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.நாளை தர்மபுரி கல்லூரி பேருந்து எரித்து 3 மாணவிகள் உயிரைப் பறித்து ,தூக்கை எதிர்பார்த்திருக்கும் “தியாகிகள்’வாரிசுகளுக்கும் அரசுப் பணி என்று வழங்குவார்.நாம் பார்த்துக்கொண்டு கைத்தடவேண்டுமா?
எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். இதைத்தவிர அவர் வசிப்பதற்கு சொந்த கிராமமான தொண்டியில் வாடகை வீடு ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான மாத வாடகையாக எம்.ஜி.ஆர். அறக்கட்டளையின் மூலம் தொடர்ந்து வழங்கிடவும் ஆணையிட்டார்.சரிதா செய்த சாதனை என்ன? ஜெயலலிதா முதல்வராக தனது நாக்கை அறுத்துக்கொண்டதுதான்.இது ஒரு மடத்தனமான ,பிற்போக்கான-பகுத்டறிவுக்கு ஒவ்வாத செயல்.இதை ஊக்குவிக்குமாறு ஜெ,,,சரிதாவுக்கு பண உதவி-வேலைஅதுவும் அரசுப்பணி வழங்கியுள்ளது மிக கண்டிக்கத்தக்கது.இதுவும் கட்சிக்காரர்களுக்கு தலைமை கொடுக்கும் லஞ்சம்தானே.அதுவும் அரசுபணத்தில்-மக்கள் வரி பணத்தில்.