ஒழிக்க வேண்டியவைகள்,,,,,,
இன்னொரு தீவிரவாதியும் ஒழிப்பு
பாகிஸ்தானின் வசீர்ஸ்தான்இடுகைகள் பட்டியலுக்கு திரும்புக பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் முக்கிய தீவிரவாதி இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
மும்பை தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்டது இலியாஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹர்கத் உல் ஜிகாத் அல் இஸ்லாமி என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரான இலியாஸ், அல்-கொய்தாவுக்கு மிக நெருக்காக இருந்தான். இந்தியாவில் பல்வேறு தீவிரவாதத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்திய இவன், மும்பையில் நடந்த பயங்கர தாக்குதலை ஒருங்கிணைத்தவன் ஆவான்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஹெட்லி அமெரிக்க நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், மும்பை தாக்குதலில் ஐஎஸ்ஐ மற்றும் இலியாசுக்கு உள்ள தொடர்புகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார்இது தவிர அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் ஏராளமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளான் இலியாஸ். சமீபத்தில் பாகிஸ்தானின் கடற்படைத் தளத்தைத் தாக்கி 3 உளவு விமானங்களை தீயிட்டு எரித்த தாக்குதலிலும் இலியாசுக்கு மிக முக்கிய பங்குண்டு.
இந் நிலையில் ஒசாமாவின் மரணத்தைத் தொடர்ந்து அல்-கொய்தா தலைவராக இலியாஸ் காஷ்மீரி தேர்வாகக் கூட வாய்ப்புள்ளதாக அமெரிக்க உளவுப் பிரிவினர் கூறியிருந்தனர்.
இதையடுத்து அல்-கொய்தா தலைவர் ஜவாஹிரி, தலிபான் தலைவர் முல்லா ஒமர், இலியாஸ் காஷ்மீரி உள்ளிட்ட 9 தீவிரவாதிகளின் பட்டியலை சமீபத்தில் பாகிஸ்தானிடம் வழங்கிய அமெரிக்கா அவர்களை ஜூலை மாதத்துக்குள் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கெடு விதித்தது. இல்லாவிட்டால் நாங்கள் களமிறங்குவோம் என்று எச்சரித்தது.அதே போல இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்குக் காரணமான 50 தீவிரவாதிகளின் பட்டியலை பாகிஸ்தானிடம் மத்திய அரசு வழங்கி, அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியது. இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிமுடன் இலியாசின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
இந் நிலையில் பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்குப் பேர் போன சுயாட்சி கொண்ட வட-மேற்கு எல்லைப் புற மாகாணமான வசீர்ஸ்தான் பகுதியில் இன்று அமெரிக்க ஆளில்லா உளவு விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இலியாஸ் காஷ்மீரி உள்பட 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.
வானாபஜார் என்ற இடத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த 20 தீவிரவாதிகளை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்ததாகவும் அதில் இலியாஸ் உள்பட 9 பேர் பலியாகிவிட்டதாகவும் தெரிகிறது.
கைபர் பகுதியிலிருந்து வந்த இலியாஸ் வசீர்ஸ்தானில் தனது கூட்டாளிகளுடனன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இலியாஸ் காஷ்மீரியின் நடமாட்டத்தை அமெரிக்கா கடந்த சில நாட்களாகவே ரகசியமாக கண்காணித்து வந்ததாகத் தெரிகிறது. சரியான சமயம் கிடைத்தவுடன் ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் ஏவுகணையை வீசி காலி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் அமெரிக்கா நடத்தியுள்ள ஆளில்லா உளவு விமானத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அமெரிக்காவுக்கு இந்த ஆளில்லா விமானங்களைத் தயாரித்து வழங்கி வரும் லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் மீது எரிச்சலில் இருந்த இலியாஸ் காஷ்மீரி அந்த நிறுவனத்தின் தலைவரை கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி வாக்குமூலம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே ஆளில்லா விமானம் தாக்கியதிலேயே இலியாஸ் ஒழிக்கப்பட்டுள்ளான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உலகின் முதல் எஸ்.எம்.எஸ் எது தெரியுமா..?
1973-ல் செல்போனை முதன்முதலில் உபயோகப்படுத்தியவர் டாக்டர் மார்ட்டின் கூப்பர். ‘மேரி கிறிஸ்துமஸ்’ என்பதுதான் உலகின் முதல் குறுஞ்செய்தி. அனுப்பியவர் நீல்டேப்வொர்த் (டிசம்பர் 1992).==========================================================================
கதவைத்திற கறுப்புப்பணம் ஒழியட்டும்,,,,?
அறிவித்தபடி, ராம்லீலா மைதானத்தில் நேற்று காலை 7 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். மைதானத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் படையெடுத்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சட்டம், ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவிடம் போன் மூலம் பேசிய மத்திய அமைச்சர்கள், சாத்தியமாகும் அவரது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். எழுத்து பூர்வமாகவும் அவருக்கு நேற்று மாலை கடிதம் அனுப்பினர். பிரதமர் என்னிடம் உறுதியளிக்க வேண்டும் என ராம்தேவ் கோரிக்கை விடுத்தார்.
இதனால், உண்ணாவிரத போராட்டத்தை வலுக்கட்டாயமாக நிறுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் போலீசார் மற்றும் அதிரடிப் படையினர் சுமார் 5 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டனர். உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தும்படி பாபா ராம்தேவிடம் போலீஸ் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். அப்போது பெண் தொண்டர்கள் உள்பட அவரது ஆதரவாளர்கள் ராம்தேவை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்தபடி போலீசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேடையில் இருந்து கீழே குதித்த ராம்தேவ், தொண்டர்களின் தோளில் அமர்ந்தபடி தனது ஆதரவாளர்களிடம் பேசினார். சுமார் 1 மணி நேரமாக ராம்தேவை போலீசாரால் நெருங்க முடியவில்லை. அதன்பின் மீண்டும் மேடை ஏறிய ராம்தேவை போலீசார் சுற்றிவளைத்து ராம்லீலா மைதானத்துக்கு வெளியே அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து போலீசாருக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலர் போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஆதரவாளர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். சிலர் பந்தலுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம்போல காட்சி அளித்தது. போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இன்று காலை 6 மணிக்குள் அனைவரையும் விரட்டியத்தனர்.
டெல்லியில் உள்ள அதிகாரிகள் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்த பாபா ராம்தேவ், பின்னர் டெல்லியை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் அவர் ஹரித்வாருக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்தேவ் கைது செய்யப்பட்டதாக முதலில் தகவல் பரவியதால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் கைது செய்யப்படவில்லை என மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியுள்ளார்.
ராம்தேவ் ஆசைபட்டபடி அவருக்கு தேவைக்கு அதிகமாகவே விளம்பரம் கிடைத்து விட்டது.
இதற்குதானே ஆசைபட்டீர்கள் பாபா ராம் தேவ்.
பாபா என்று பெயரை வைத்துக் கொண்டு கறுப்புப்பணத்தை,ஊழலை ஒழிக்க முடியாமல் இப்படி மக்களை பதறவைக்கலாமா/ உங்கள் சக்தியை வெளிக்காட்டுங்கள் மகாதேவா.....ராம்தேவா,,,,