கட்சத்தீவு நமதே,,,,,,

"இலங்கை மீது பொருளாதாரத் தடை
ஜெ ஜெயலலிதா

 *இலங்கைத் தமிழர்கள் அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, சிங்கள மக்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வழிவகைகள் காணப்படும் வரையில் இலங்கை அரசின் மீது பொருளாதாரத்தடை விதிக்கப்படவேண்டும் எனக்கோரும் தீர்மானம் ஒன்று இன்று தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.அதேபோல்
கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானமும் சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது. இந்தியாவின் பார்லிமென்ட் ஒப்புதல் இல்லாமல் இந்தியா, இலங்கை இடையே கடந்த 74-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் கட்சதீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் செல்லாது என அதிமுக சார்பில் 2008-ல் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கச்சத்தீவு குறித்த அனைத்து ஆதாரங்களையும் தன் வசம்வைத்திருக்கும் மாநில வருவாய்த்துறை சார்பில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வேண்டுமென தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது.
       இந்த இரு தீர்மானங்களை நிறைவேற்றியது முக்கியமான செயலாகும்.
தீர்மானம் நிறைவேற்றியதுடன் தங்கள் கடமை முடிந்து விட்டதாக விட்டு விடக்கூடாது.
மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து அதை நிறைவேற்றிட வேண்டும்.
     ஈழத்தமிழர் கொன்றொழிப்பில் வெறும் கண்ணீர் கவிதைகளும்.,மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியதுடன் தனது கடமை நிறைவேறிவிட்டது.மத்திய அரசும் சேர்ந்தே ஈழப்படுகொலை நடத்துகிறது எனத்தெரிந்தும் கூட்டணி தர்மம் என்ற பெயரிலோ-2ஜி பயமுறுத்தலிலோ கருணாநிதி வாயை மூடிக்கொண்டிருந்ததால்தான் இன்று தீராப்பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டார்.
       மத்தியில் காங்கிரசுடனான தி.மு.க வின் கூட்டணி  தற்போது முடிவுக்கு வருகிற நிலை தெரிகிறது. அந்த இடத்தை பிடிக்க காங்கிரசுடந்மத்திய அரசுடன்  சுமுகமாக செல்ல நினைத்து இத்தீர்மானங்கள் மீதான தீவிரத்தை ஜெயலலிதா விட்டு விடக்கூடாது.
     கட்சத்தீவு மீட்புதான் இந்திய பாதுகாப்பை மட்டுமின்றி,தமிழக மீனவர் பாதுகாப்பையும் தரும்.
   சீன,பாகிஸ்தான்,அமெரிக்கா போன்ற வல்லூருகள் இந்தியாவை பலகினப்படுத்த கட்சத்தீவினை உபயோகிக்க விடக்கூடாது.ராஜ பக்‌ஷே தான் போர்குற்ற  குற்றச்சாட்டில் இருந்து விலகிட கட்சத்தீவை தாரைவார்க்கும் நிலையில் உள்ளார்.
                                                                                    
      இந்திய பாதுகாப்பு மட்டுமின்றி இப்போது கட்சத்தீவு சுற்றிய பகுதிகளில் இயற்கை எரிவாயுவும்-பெட்ரோலிய கச்சா எண்ணையும் அதிக அளவு இருக்கிறதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
     இதற்காகவும் அந்த வல்லூறுகள் வட்டமிடுகின்றன.ந்மது மத்திய காங்கிரசு அரசோ கொஞ்சம் கூட நாட்டின் பாதுகாப்பையும்,நலனையும் பற்றி சிந்திப்பது கிடையாது. அவர்களின் பிறப்பு அப்படி.
      ஆட்சியில் ஏறியது முதல் சென்ற ஆட்சியின் திட்டங்களை தீர்த்துக்கட்டுவதிலேயே குறியாக இருந்த ஜெயலலிதா இப்போதுதான் தமிழக நலனுக்கான இரு தீர்மானங்களைக் கொண்டு வந்துள்ளார்.அவை வெறும் தீர்மானங்களாக நீர்த்துப் போகாமல் செயல் பட வேண்டும் என்பதே நமது ஆசை.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?