2-ஜி உண்மை இழப்பு எவ்வளவு...?


                                     

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது ஸ்வான் டெலிகாம் உரிமையாளர் ஷாகித் உஸ்மான் பால்வா, இந்தக் கேள்வியை எழுப்பினார். இந்த ஒதுக்கீட்டில் நிகழ்ந்த இழப்பு குறித்து பிரதமர் அல்லது நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உண்மையில் ஏற்பட்ட நஷ்ட விவரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு நீதிமன்றத்தில் இதனால் ஏற்பட்ட இழப்பு விவரத்தை துல்லியமாகத் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி ஓ.பி. சைனியிடம் அவர் கோரினார்.

தொலைத் தொடர்பு ஆணையம் (டிராய்) பரிந்துரைத்த கொள்கைபடியே ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது. . தொலைபேசி அடர்வை அதிகரிப்பது, கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்பது 10-வது ஐந்தாண்டு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அரசுக்கு ஏற்பட்ட இழப்பு அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றால், அதை உரிய ஆவணங்கள் மூலம் உறுதி செய்வது அவசியம் என்று பால்வா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மஜீத் மேமன் கூறினார். 2-ஜி ஒதுக்கீட்டில் நிகழ்ந்த இழப்பிற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனால் நாடாளுமன்றத்தில் அரசு, இந்த ஒதுக்கீட்டில் இழப்பு ஏற்படவில்லை என தெரிவித்துள்ளதோடு, தொலைபேசி அடர்வு 2004-ம் ஆண்டில் இருந்ததைவிட அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது. அத்துடன் 2008-ம் ஆண்டில் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஒருங்கிணைந்த தொடர்பு சேவை (யுஏஎஸ்) அளிக்கும் லைசென்ஸ் பெற தகுதியற்றதாக இருந்ததா? என்பதை சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வாதாடினார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்வதில் சிபிஐ பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 22 வட்டாரத்தில் லைசென்ஸ் பெற்ற பல நிறுவனங்களின் மீது வழக்குத் தொடரவில்லை. அதேசமயம் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். கைது செய்வதில் குறிப்பிட்ட சிலரை மட்டும் சிபிஐ தேர்ந்தெடுத்தது ஏன்? என்றும் அவர் கேள்வியெழுப்பினார். இதிலிருந்தே சிபிஐ-யின் வழக்கு விசாரணையில் காணப்படும் பாரபட்ச தன்மை புரியும் என்றார்.
தங்கள் விருப்பம் போல ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் ஒரு சிலரை மட்டும் சிபிஐ கைது செய்துள்ளது. அத்துடன் இந்த வழக்கை சிபிஐ பெரிதுபடுத்தி வருகிறது. ஒரு சிலர் மட்டும் பல மாதங்களாக சிறையில் இருப்பதால் அவர்களது தனிநபர் சுதந்திரம் பறிக்கப்படுவதை சிபிஐ கருத்தில் கொள்ளவேயில்லை. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் தவறான தோற்றத்தை சிபிஐ ஏற்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை மட்டும் சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஏன்? முந்தைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களை கைது செய்யாததற்கான காரணத்தை சிபிஐ விளக்க வேண்டும். மேலும் தொழில்முறை பகை காரணமாக பால்வா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெற்றிகரமான தொழிலதிபரான பால்வா, தொழில் முறை எதிரிகளால் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவாலாக பால்வா இருப்பார் என்பதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட 13 பேரில் பால்வாவும் ஒருவர். ஏமாற்றுதல், போலி ஆவணம், சதிச் செயல், ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் பால்வா கைது செய்யப்பட்டுள்ளார்.ஒதுக்கீடு தொடர்பான அனைத்து விவரங்களையும் பிரதமரிடம் தெரிவித்துள்ளார் ராசா. சில விஷயங்களை பிரதமரிடம் விவாதித்துள்ளார் என்று அவர் குறிப்பிட்டார்.
லஞ்சப் பணம் ரூ. 200 கோடியை பால்வாவின் டிபி ரியால்டி நிறுவனம் மூலம் கலைஞர் டி.விக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகை சினியுக் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் குசேகான் ஃபுரூட்ஸ் மற்றும் வெஜிடபிள் நிறுவனம் மூலம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பால்வாவுக்குச் சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் வழங்குவதற்காக இந்த லஞ்சப்பணம் அளிக்கப்பட்டதாகசி.பி.ஐ, குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் பால்வா வழக்குரைஞர் கூறியபடி ஒரு சிலரை மட்டும் கைது செய்து அவர்களுக்கு பிணைகூட வழங்க விடாமல் சி.பி.ஐ.,தடுப்பது ஏன்.2-ஜி யில் சம்பந்தப்பட்டு வெளியேஉள்ளவர்கள்  நல்லவர்கள் அவர்களை ராசா,பால்வா,கனிமொழிதான் கெடுத்து விட்டார்கள் என சி.பி.ஐ சொல்லுகிறதா?
அவர்கள்  தடையங்களை-சாட்சிகளை கலைத்து விட மாட்டார்களா?
ஆ.ராசா கூறியது போல் சி.பி.ஐ,இவ்வழக்கில் நடந்து கொள்ளும் முறை அதற்கு சிக்கலையே ஏற்படுத்தும்.வழக்கின் நோக்கத்தையே சிதறடித்து விடும்.குற்றவாளிகள் தப்பி அடுத்த முறைகேட்டினை ஆரம்பிக்க வழி வகுத்துவிடும்.
                                                                        

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?