ரகசியங்கள்-3 ,?
ரகசியங்கள் விற்பனைக்கு,-சீன ரகசியம்-
அமெரிக்காவிலிருந்து வெளியாகும் தி வாஷிங்டன் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தியில் இந்திய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றின் தகவல்களை சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சேகரித்துள்ளதாக மெக்பி என்ற கணினி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, தென் கொரியா உள்பட உலகம் முழுவதிலும் 72 மிகப்பெரிய அமைப்புகளின் இணையதள தகவல்கள் ஹேக்கர்களால் ஊடுருவி சேகரிக்கப்பட்டுள்ளன என மெக்பியின் துணை தலைவர் டிமிட்ரி அல்பெரோவிட்ச் தனது 14 பக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்ற செயலுக்கு பின்புலமாக சீனா இருப்பதாக அந்த அறிக்கையில் கூற்ப்பட்டுள்ளது.
ஆக நாம் ரகசியம் என நினைக்கும் கணினி தகவல்களும் ரகசியத்தன்மையில் இருப்பதில்லை.
சீன,அமெரிக்க அரசுகளுக்கு தங்கள் நாட்டைக்கவனிப்பதை விட அடுத்தநாடுகள் விடயத்தில் தலையை நுழைப்பதுதான் முக்கிய வேலையாக இருக்கிறது.
_____________________________________________________________________________________________________________
அப்பாவி தமிழர்கள் பலியானது உண்மை இலங்கை அரசு.-ஈழ ரகசியம்- |
இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇ அமைப்பிற்கும் இடையே நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் அப் பாவி தமிழ்மக்கள் பலியானது உண்மை தான் என்று முதல்முறையாக இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், ராணுவ தாக்குதல் நடக்கும்போது அப்பாவிகள் பலியாவது “தவிர்க்க முடியாதது” என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது. இலங்கைப்போரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப் பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக் கையைத் தொடர்ந்து மறுத்துவந்த இலங்கை அரசு, தற்போது பாதுகாப்புத் துறை செயலாளர் கோதபாய ராஜ பக்சே வெளியிட்ட அறிக்கையின் மூலம் அந்த தகவலை ஒப்புக்கொண்டுள்ளது. ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சேயின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளரு மான கோதபாய ராஜபக்சே, “மனிதாபி மான நடவடிக்கை : புள்ளிவிவர ஆய்வு” என்ற தலைப்பில் திங்களன்று கொழும் புவில் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கை அரசு எண்ணற்ற முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருந்தபோதிலும், அப்பாவி மக் களுக்கு ஆபத்தாக செயல்பட்டுக்கொண் டிருந்த ஒரு ஈவிரக்கமற்ற எதிரிக்கு எதிராக, பெரிய அளவில் நடந்த இந்தப்போரில், அப்பாவி மக்களின் உயிர்ப்பலியை தவிர்க்கவேண்டும் என்பது இயலாமல்போய்விட்டது” என்று கூறியுள்ளார். “போர் நடக்கும் பகுதியில் பாது காப்பு வளையங்களை ஏற்படுத்துவதன் மூலமும், துப்பாக்கிச்சூடு நடத்தப்படக் கூடாத பகுதிகளை உருவாக்குவதன் மூலமும் அப்பாவி மக்களின் உயிர்ப் பலியை தடுக்க வேண்டும் என்ற கொள் கையை நிறைவேற்ற இலங்கை அரசு அனைத்து முயற்சிகளையும் மேற் கொண் டது ; இதுதொடர்பாக அனைத்து படையினருக்கும் மீண்டும் மீண்டும் பயிற்சியும் உத்தரவுகளும் அளிக்கப்பட்டன” என்று தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ள கோதபாய ராஜபக்சே, இந்தப்போரில் எத்தனை அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப் பட்டன என்பது குறித்து எந்த விவரத் தையும் குறிப்பிடவில்லை. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனால் அமைக்கப்பட்ட குழு அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிக்கையை வெளி யிட்ட அவர், ராணுவ நடவடிக்கையில் 40 ஆயிரம் அப்பாவிகள் கொல்லப்பட் டனர் என்ற குற்றச்சாட்டை மறுத்தார். இந்த குற்றச்சாட்டு ஆதாரமில்லாத ஒன்று என அவர் கூறினார். எல்டிடிஇ-யின் கட்டுப்பாட்டில் இருந்த வடக்கு பகுதிகளில் எவ்வளவு மக்கள் இருந்தார்கள் என்பது குறித்த உறுதியான விவரங்களை கண்டறிவது கடினமானது எனவும் அவர் கூறினார். வடக்கு பகுதியில் 75 ஆயிரம் பேர் இருந்திருக்கக்கூடும் என்று இலங்கை அரசும், 3 லட்சத்து 5 ஆயிரம் பேர் இருந் திருக்கக்கூடும் என்று ஐ.நா. சபை குழுவி னரும் முரண்பட்ட விவரங்களை அளித் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போரின்போது ராணுவ நடவடிக் கைகள் அனைத்தும் அரசுக்கு ஆதரவாக முன்னேறிக்கொண்டிருந்த நிலையில், எல்டிடிஇ தலைமை தங்களைப் பாது காத்துக்கொள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களை தங்களது மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக்கொண் டன என்று தனது அறிக்கையில் கூறி யுள்ள இலங்கைப்பாதுகாப்பு செயலா ளர், “தங்களது போராளிகளுக்கும் அப் பாவி மக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை மறைத்ததன் மூலமும், மக்களின் குடியிருப்புப்பகுதிகளை தங்களது ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதன் மூலமும் எல்டிடிஇ-யினரே அந்த மக்களின் உயிர்களுக்கு பாதகமாக மாறினார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. குழுவின் அறிக்கையில், இலங்கை அரசுக்கு எதி ராக போர்க்குற்றங்கள் குறித்த குற்றச் சாட்டுக்கள் இடம்பெற்றிருப்பதை மறுத்த அவர், ராணுவத்திடம் சரண டைந்த எல்டிடிஇ-யினரையும் அவர்க ளது குடும்பத்தினரையும் அரசு பாது காத்து வருகிறது என்றும் கூறினார். [பிடிஐ] _______________________________________________________________________ ஒடி ஒளியஎன்கவுண்டர் குற்றவாளியா நான், நில ரகசியம்- நிலமோசடி தொடர்பாக நடிகர் வடிவேலு தலைமறைவாகி விட்டதாக வந்த செய்தியை அடுத்து, வடிவேலு தான் எங்கும் ஓடவில்லை என்றும், தலைமறைவாக இருப்பதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா என்று கூறியுள்ளார். தாம்பரம் அருகேயுள்ள இரும்புலியூர் பகுதியில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் ஏலத்தில் விட்ட நிலத்தை ரூ.20லட்சத்திற்கு வாங்கியதாகவும், அதை போலி ஆவணம் தயாரித்து நடிகர் வடிவேலு வாங்கியுள்ளதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி பழனியப்பன் என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்தவழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு தலைறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் வடிவேலோ நான் எங்கும் ஓடவில்லை, போலீசார் எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருவேன் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நிலமோசடி செய்ததாக என் மீது புகார் கொடுத்துள்ளனர். மேலும் நான் தலைமறைவாகிவிட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லணும்னா, இதில் ஏமாந்தவனே நான் தான். வாங்கிய இடத்தை பறிகொடுத்து போய் நிற்கிறேன். 2002-ல் அந்த நிலத்தை எனக்கு விற்றார்கள். 2006-ல் அங்கு காம்பவுண்டு சுவர் போட்டேன். 2009-ல் பழனியப்பன் வாங்கியதாக உரிமை கொண்டாடிட்டு வந்து நின்னார். நான் பதறி போனேன். அவர் 2006-ல் அந்த இடத்தை வாங்கியதாக சொன்னார்கள். இ.சி. பார்த்து இருந்தால் என் பெயர் வந்து இருக்கும். அதை எப்படி வாங்கினார் என்று புரியவில்லை. ஒரிஜினல் பத்திரம் காணாமல் போச்சு என்று விற்றவர் மேல் கோர்ட்டில் வழக்கு போட்டு இருக்கிறேன். அந்த நபர் யார் என்று மக்களுக்கு தெரியும். பழனியப்பன் செங்கல்பட்டு கோர்ட்டில் 2009-ல் என் மேல் வழக்கு போட்டார். 2011 வரை அவர் கோர்ட்டுக்கே வரவில்லை. முக்கியமான ஒருத்தர் மூலமா ரூ.1 கோடி தந்தால் விலகிக்கிறேன் என்றார். நான் மறுத்து விட்டேன். இரண்டு வழக்குகள் மீதும் விசாரணை நடந்துட்டு இருக்கு. உலகம் பூரா குழந்தைகள், பெண்கள், வயசானவங்க, இளைஞர்கள் என எல்லாரையும் சிரிக்க வைச்சு சம்பாதித்த பணத்தில்தான் இந்த சொத்துக்களை வாங்கினேன். ஆனால் மோசடி பத்திரம் மூலம் இதை வாங்கியதாக சொல்றாங்க. நான், என் பொண்டாட்டி, குழந்தை எல்லோரும் போலி பத்திரம், தயாரிக்கிறத குடிசை தொழிலாவா செய்துட்டு இருக்கோம். எனக்கு படிப்பறிவு குறைவு, பத்திரங்களில் உள்ள விஷயங்கள் தெரியாது. அதனால் ஏமாற்றப்பட்டேன். என் குல தெய்வமான அய்யனார் சாமி முன்னால் நின்று பணத்தை கொடுத்தேன். எல்லாத்தையும் வாங்கிட்டு, மோசடி சொத்தை வாங்கி கொடுத்து என்னை ஏமாற்றி விட்டனர். என் மீதான புகாரை சட்ட ரீதியா சந்திப்பேன். நிலமோசடி புகாரில் போலீஸ் தேடுது, நான் தலைமறைவாயிட்டேன் என்றெல்லாம் செய்தி வருது. நான் எங்கும் ஓடல, அப்படியே போனாலும் ஒண்ணு சென்னைக்கு போவேன், இல்லேன்னா மதுரைக்கு போவேன். போலீஸ் தேடலுக்கு பயந்து போய் ஒளிய, நான் என்ன எனகவுன்டர் குற்றவாளியா...? நான் எங்கும் ஓட மாட்டேன். போலீஸ் எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு போவேன் என்று கூறியுள்ளார். |