வராத செலவு..

ஒ.பன்னீர் செல்வம் படித்த வரவு-செலவு திட்டம் பாதியில் ஜெயலலிதாவைப் பாராட்டவும்-அ.தி.மு.க, பெற்ற வெற்றியை விளக்கிக் கூறவுமே சரியாகி விட்டது.
                         
மற்ற படி உருப்படியான திட்டங்கள் இருப்பதாகத்தெரிய வில்லை.
புதிய வரிகள ஏதும் அறிவிக்கப்படவில்லை.என துதிபாடிகள் ’உரைக்கலா’ம்.
புதிய வரிகள் அறிவிக்க எங்கே மிச்சம் உள்ளது.ஏற்கனவே படிப்படியாக 5600கோடிக்கு வரிகளை விதித்து வசூலிக்க ஆரம்பித்தாகிவிட்டதே.
சூரிய மின்சக்திக்கு248 கோடிகள் ஒதுக்கியது,மட்டுமே வளர்சிக்கான மின்தடையை போக்கும் செய்தியாக உள்ளது.
வேறு என்றால் தேடியும் கிடைக்கவில்லை.
சட்டமன்ற உறுப்பினர் நிதி 2கோடிகளாக்கியது அவர்கள் கமிசன் அதிகரித்து வாழ்வில் செழிப்புற செய்யும்.
இலவசத்திட்டங்கள் ஒதுக்கீடு மாநில வளர்ச்சிக்கோ யாருக்குமே உதவாத செலவினம்.
வேற ஒன்றும் சொல்ல இல்லை.
வரவு செலவு திட்டத்தில் இருக்க வேண்டாத அறிவிப்புகள் இருக்கிறது.
காவல் ஆணையரக இணைப்புக்கும் பட்ஜெட்டுக்கும் என்ன தொடர்பு/?
      ஆக அம்மாவின் பட்ஜெட் ரொம்ப சும்மா.
இடதுசாரிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.
இரவோடு இரவாக 5600 கோடி வரியை போட்டு தீட்டியதற்கும்,விரைவு பேருந்துகளில் சராசரி 90 ரூபாய் கட்டணம் கூட்டியதற்கும் ஒண்ணும் சொல்லாதவர்கள் இதை வரவேற்கவே செய்வார்கள் என நம்புகிறேன்.
      அதுவும் தா.பாண்டியன் போன்ற அ.தி.மு.க .கிளை[ கம்யூனிஸ்ட்] கட்சிக்காரர் பாராட்டு அதிகமாகவே இருக்கும்.அவருக்கு மற்றவர்கள் போட்டால் வரி,ஜெயலலிதா போட்டால் நிதி திரட்டல்{?} அல்லவா.
சமச்ச்சீர் கல்வியை கொண்டுவரப்போராடியஇடதுசாரிகள் இப்போது இல்லாமல் ஆக்கப்படும் போது செத்தப்பாம்பு போன்ற கருணாநிதியைப்பற்றியே குறைகூறிக்கொண்டிருக்கிறார்களே ஒழிய சமச்சீர் கல்வியில் ஒரு எதிர்ப்பைக்கூட காண்பிக்காமல் இருப்பது அவர்களின் கொள்கைப்பற்றை விட ஜெ,பற்றே அதிகம் எனக் காண்பிக்கிறது.
வரிகளை பட்ஜெட்டுக்கு முன்னதாகவே போட்டுத்தாக்கி விட்டு பட்ஜெட்டில் இலவசங்களை மட்டுமே காட்டும் ஜெயலலிதாவின் மாயாஜால பட்ஜெட் இது.
ஒருவனை படுகாயமாகத் தாக்கிவிட்டு அவனை மருத்துவமனையில் சென்று ஆப்பிள் கொடுப்பதைப் போன்றதுஇந்த பட்ஜெட் மோசடி.
இதையும் இல்லாத காரணங்களைத் தேடிக்கண்டு பிடித்து பாராட்டும் இடது சாரிகள்,நடிகர் விஜய்காந்த்,போன்றவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
___________________________________________________________________________________3500 கோடிஸ்வரர்: அழகிரி?

மத்திய அமைச்சரும், தி.மு.க. தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரிக்கு பினாமி பெயர்களில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாகதெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.
                                               

புலனாய்வு இதழான தெகல்கா மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் சொத்து விவரங்கள் குறித்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. மதுரையின் காட்பாதர் என்று அழைக்கப்படும் அழகிரி தனது நெருங்கிய கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் வருத்தத்தில் உள்ளார். அவரது மனைவி காந்திக்கும் நில மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது. நில அபகரிப்பு புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தெகல்கா, அழகிரியின் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அழகிரி கடந்த 2009 ம் ஆண்டு மக்களைவைத் தேர்தலுக்குப் பிறகு தனது சொத்துக் கணக்கை வெளியிட்டார். அப்போது தன்னிடம் ரூ. 133.65 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் பினாமி பெயரில் ரூ. 3 ஆயிரத்து 500 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்கிறது.
நிலம், சினிமா தயாரிப்பு மற்றும் வினியோகம், ரியல் எஸ்டேட், சுகாதாரம், சுரங்கம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் தனது குடும்பத்தார் மற்றும் நெருங்கியவர்களின் பெயர்களில் முதலீடு செய்துள்ளார். அழகிரியின் மனைவி காந்தி, மகன் துரை தயாநிதி, மகள்கள் கயல்விழி, அஞ்சுக செல்வி, மருமகள் அனுஷ்கா, மருமகன்கள் ஒய்.கே. வெங்கடேஷ், விவேக் ரத்தினவேல் ஆகியோர் பெயர்களில் ஏராளமான சொத்துக்களும், வியாபாரங்களும் உள்ளன. இது தவிர அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் மொரீஷியஸ், வெர்ஜின் தீவுகள், அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தொழில் நடத்தி வருகின்றனர் என்று உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
                              
அழகிரி வெளியிட்ட சொத்து விவரத்தின்படி அவரிடம் 18 ஏக்கர், 63 சென்ட் விவசாய நிலம், 1 ஏக்கர், 82 சென்ட், 23 ஆயிரத்து 278 சதுர அடி நிலம், 20 சென்ட் பிளாட், சென்னை, மதுரையில் வீடுகள், ரூ. 4 கோடி வைப்பு நிதி மற்றும் வங்கி சேமிப்பு கணக்கில் ரூ. 1.39 கோடி, 85 கிராம் தங்கம், ரூ. 1. 40 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிட்டி, ரூ. 1.20 லட்சம் மதிப்புள்ள லேண்ட் ரோவர் எஸ்யூவி, தயா டயாக்னோஸ்டிக்ஸில் ரூ. 96 லட்சம் முதலீடு உள்ளது.
சிவரக்கோட்டையில் உள்ள தயா பொறியியல் கல்லூரியை நடத்தி வரும் மு.க.அழகிரி அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரத்தை அவர் வெளியிடவில்லை. விதிமுறைகளை மீறி 4 ஏக்கர் விவசாய நிலத்தில் தயா பொறியியல் கல்லூரி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர் தனது சொத்துக்களின் மதி்ப்பை குறைத்தே வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
உதாரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆயிரத்து 100 சதுர அடி வீட்டின் மதிப்பு ரூ. 22 லட்சம் என்று வெளியிட்டுள்ளார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு ரூ. 2. 5 கோடி. அழகிரியின் மனைவி காந்திக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலங்கள் உள்ளன. அவர் தான் தயா சைபர் பார்க்கின் தலைவர். மேலும், மு.க.அழகிரி கல்வி அறக்கட்டளை உறுப்பினராகவும் இருக்கிறார்.
அழகிரி வெளியிட்ட காந்தியின் சொத்துக்கள் விவரம். 48. 42 ஏக்கர் விவசாய நிலம், கொடைக்கானலில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள 82.3 சென்ட் பிளாட், சென்னையில் ரூ. 4.30 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 376 சதுர அடி பிளாட், சேமியர்ஸ் ரோட்டில் ரூ. 4. 39 கோடி மதிப்புள்ள 5 ஆயிரத்து 488 சதுர அடி பிளாட், மதுரை பாப்பாக்குடியில் 3 ஆயித்து 60 சதுர அடி பிளாட், மதுரையில் 4 ஆயிரத்து 378 சதுர அடியில் தயா கல்யாண மண்டபம், கொட்டிவாக்கத்தில் ஆயிரத்து 845 சதுர அடி வியாபார நிலம், மாதவரம் மேடாஸ் கிரீன் பார்க்கில் ஆயிரத்து 320 சதுர அடி வீடு.
அழகிரி தனது மனைவி பெயரில் இருக்கும் சொத்துக்களை வெளியிட்டபோது தயா சைபர் பார்க்கில் காந்தி செய்திருக்கும் முதலீடு குறித்து தெரிவிக்க மறந்துவிட்டார். கடந்த 2007 ம் ஆண்டு செப்டம்பர் 3 ம் திகதி நடந்த நிறுவனக் கூட்டத்தில் தயா சைபர் பார்க் பங்கு மூலதனம் ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடியாக உயர்த்தப்பட்டது. அந்த நிறுவனத்தின் சேர்மன் மற்றும் எம்.டி.யாக இருக்கும் காந்தி தனக்கு வெறும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள பங்குகள் தான் இருப்பதாக தெரிவித்தார். அவர் தனக்கு சொந்தமான ஒரு நிலத்தை பற்றி தெரிவிக்க மறந்துவிட்டார். அந்த நிலம் தான் தற்போது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக காந்தி மற்றும் லாட்டரி மாபியா மன்னன் சான்டியாகோ மார்டின் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கிடைத்துள்ள ஆவணங்களின்படி மார்டின் கோவில் நிலத்தை காந்திக்கு ரூ. 85 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். அந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ. 24 கோடி. அழகிரி தனது மகன் தயாநிதி பெயரில் இருக்கும் சில சொத்துக்கள் பற்றியும் தெரிவிக்க மறந்துவிட்டார்.
தயாநிதி அழகிரி தான் தயா பொறியியல் கல்லூரி, தயா பல் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக உறுப்பினர், ஜே.ஏ.கே. கம்யூனிகேஷன்ஸ், கிளவுட் நைன் மூவிஸ் எம்.டி., ராயல் கேபிள் விஷன் மற்றும் மகேஷ் எலாஸ்டோமர்ஸின் தலைவர். ஆனால் இத்தனை சொத்துக்களையும் தெரிவிக்க மறந்துவிட்டார் அழகிரி.
சென்னை, திருவள்ளூரில் செயல்பட்டு வரும் கேபிள் ஓபரேட்டரான ஜே.ஏ.கே. கம்யூனிகேஷன்ஸில் தாயநிதிக்கு தற்போது 50 சதவீத பங்குகள் உள்ளது. கருணாநிதி குடும்பத்தினர் தங்களிடம் உள்ள கருப்பு பணத்தை மாற்றவே சினிமாத்துறையில் நுழைந்ததாக சினிமாத் துறையில் உள்ள சிலர் தெரிவித்தனர். அழகிரியின் பணம் மற்றும் பதவி மோகத்தால் தான் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலினை தோற்கடிக்கவே அழகிரி இத்தனை விரிந்த சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளார்.
கருணாநிதிக்கு அடுத்து தி.மு.க.வின் தலைவராக அழகிரி விரும்புகிறார். அதற்கு பண பலமும், ஆள் பலமும் சேர்த்து வைத்துள்ளார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர் என்று தெகல்கா செய்தி வெளியிட்டுள்ளது.
    எப்படிங்க இவ்வளவு பணம் இருக்குமோ?   இவ்வளத்தியும் என்னதான் செய்வாங்க?                                                                                                                                                                                               
நன்றி:நியு இந்தியா நியுஸ்.
யானைக்கும்  இடுகைக்கும் என்ன சம்மந்தம். சும்மா படம் நல்லாயிருக்கேனுதான்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?