ஊழல் முதல்வர்கள்,,
$முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தற்போதைய டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருக்கு அடுத்தபடியாக உ.பி. முதல்வர் மாயாவதி இப்போது தலைமைக் கணக்காயர் தணிக்கை வலையில் சிக்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் இரு திட்டங்களான அம்பேத்கர் மற்றும் கன்ஷிராம் நினைவுச் சின்னங்கள் அமைப்பதில் ரூ.66 கோடிக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி கண்டித்திருக்கிறது.
இதில் சுமார் ரூ.15 கோடிக்கு கற்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்துச் செலவுக்கு கூடுதலாக செலவழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒப்பந்தங்களை மறு ஏலம் எடுத்து மேற்கொண்டதில் ரூ.22 கோடி இழப்பைத் தவிர்த்திருக்கலாம் என்றும் அந்த தணிக்கை அறிக்கை மாயாவதியைக் குறைகூறியுள்ளது.
பீம்ராவ் அம்பேத்கர் சமாஜக் பரிவர்தன் ஸ்தல் மற்றும் மாயாவார் கன்ஷி ராம் ஸ்மாரக் ஸ்தல் என்ற இந்த இரண்டு திட்டங்களும் மாநில அரசின் ராஜ்கிய நிர்மாண் நிகாம் அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்டன.
இதன் முதற்கட்ட திட்ட மதிப்பீடாக ரூ.881.22 கோடி ரூபாய் முன்வைக்கப்பட்டது. இதில் ரூ.366.82 கோடி அம்பேத்கர் ஸ்தல்-க்கும் ரூ.514.4 கோடி கன்ஷிராம் ஸ்தல்-க்கும் திட்டமிடப்பட்டது. ஆனால் அதன் பின்னர் டிசம்பர் 31, 2009ம் வருடம் இதன் திட்ட மதிப்பீடு ரூ.2451.93 கோடியாக மாற்றப்பட்டது.
மேலும் நவம்பர் 2007 முதல் டிசம்பர் 2009 வரை ரூ.2451.93 மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் நிறுத்தப்பட்டதில், செப்டம்பர் 2009- டிசம்பர் 2009 வரை நடந்த பணிகளுக்கு செலவாக ரூ.1776.57 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 2009 முதல் பிப்ரவரி 2010 வரை, இவ்விரு பணிகளிலும் மேற்கொள்ளப்பட்ட முறைகேடுகள் தணிக்கை அறிக்கை மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக ரூ.66.48 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அறிக்கை கூறுகிறது. இது, போக்குவரத்துச் செலவுகளில் செய்யப்பட்ட முறைகேடுகளில் இழப்பு என்று தெரிகிறது. இவ்வகையில், மாயாவதி அரசை சிஏஜி அறிக்கை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
________________________________________________________________________________
காமன்வெல்த் போட்டி ஊழல் பிரதமர் அலுவலகத்திற்கு தொடர்பு தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றச்சாட்டு-அம்பலப்படுத்தியது சிஏஜி

பல நூறு கோடி ரூபாய் ஊழல் நடந்த காமன்வெல்த் விளையாட்டு அமைப்புக்குழுவின் தலைவராக சுரேஷ் கல்மாடி நியமனம் செய்யப்பட் டதற்கு பிரதமர் அலுவலகமே காரணம் என தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) , வெள்ளிக்கிழமையன்று குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக 2009ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி நடைபெற் றது. இந்தப் போட்டி ஏற்பாடுகளில் பலநூறுகோடி ரூபாய் ஊழல் நடந்தது. இதனால் சர்வதேச அரங்கில் இந் தியா வெட்கித் தலைகுனிய நேர்ந்தது.
காங்கிரஸ் எம்.பி.யும் இந்திய ஒலிம் பிக் சங்க தலைவருமான சுரேஷ் கல் மாடி, மெகா ஊழல் நடந்த காமன் வெல்த் விளையாட்டு அமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார்.
இந்த ஊழல் தொடர்பாக விரி வான விசாரணை நடத்திய சிஏஜி, வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் 800 பக்கங்கள் கொண்ட அறிக்கை யை தாக்கல் செய்தது. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் பாரபட்ச முறையில் பல்வேறு திட்டப்பணிக ளுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது; கட்டுமானப் பணி, விளை யாட்டு அரங்குகள் மேம்பாடு தில்லி யை அழகுப்படுத்துதல், ஒளிபரப்பு உரிமை என அனைத்திலும் பாரபட் சம்-முறைகேடு நடந்துள்ளது என சிஏஜி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.
2003ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு ஆவணத்தில், காமன் வெல்த் போட்டி அமைப்புக்குழு அர சுக்கு சொந்தமான அமைப்பு என்றும் அதன் தலைவர் அரசு நியமனம் செய்த நபராக இருக்க வேண்டும் என்றும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர், செயற்குழுவின் துணைத் தலைவராகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருப்பினும் காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக்குழு 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு சாராத சொசைட்டியாகவே அமைக்கப்பட் டது. அதன் தலைவராக சுரேஷ் கல் மாடி நியமிக்கப்பட்டார் என சிஏஜி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.
அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத் கடு மையான எதிர்ப்பு தெரிவித்தபோதும் கல்மாடியை காமன்வெல்த் விளை யாட்டு அமைப்புக்குழு தலைவராக நியமிக்க பிரதமர் அலுவலகம் 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரிந்துரை செய்தது என்று சிஏஜி குற்றம் சாட்டி யுள்ளது. அரசின் கட்டுப்பாடு இல் லாத நபரால் காமன்வெல்த் விளை யாட்டுக்குழுவின் நிர்வாகத்தில் நம்பகத்தன்மை இல்லாமல் இருந் தது. காமன்வெல்த் விளையாட்டுக் குழு, நிதி கையாள்வது தொடர்பான விஷயங்களில் நம்பகத்தன்மை இல் லாமல் இருந்தது. அரசு நிதிஒதுக்கீடு அளிக்கப்பட்ட போதும், அரசின் பொறுப்பு இல்லாததாக-வெளிப்ப டைத்தன்மை இல்லாததாகவே போட்டி ஏற்பாடுகள் இருந்தன.
2007ம் ஆண்டு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மணி சங்கர் அய்யர் மற்றும் விளை யாட்டுத்துறை முன்னாள் செயலாளர் எஸ்.கே.அரோரா ஆகியோர் பிரதமர் அலுவலகத்திடம், விளையாட்டுத் துறை அமைச்சகத்திற்கு, அதிகார மற்ற நிலையில் காமன்வெல்த் விளையாட்டுக்குழுவின் நடவடிக் கை உள்ளது என அவர் கூறினார். அப்போதும் காமன்வெல்த் விளை யாட்டுக்குழு தலைவர் பதவியில் கல்மாடி தாக்குப்பிடித்து நீடித்தார். காமன்வெல்த் விளையாட்டு என்பது இந்திய ஒலிம்பிக்கிற்கு உரியது என் பதைவிட தேசத்தின் சொத்து; ஆனால் அதன் அமைப்புக்குழு நிய மனமானது, இந்திய ஒலிம்பிக் சங்க நடவடிக்கையாக மட்டுமே மேற் கொள்ளப்பட்டுள்ளது என்றும் சிஏஜி குற்றம்சாட்டியது.
காமன்வெல்த் விளையாட்டுத் திட்ட ஏற்பாடுகள் மற்றும் பணிகளை ஒருமித்த அதிகாரம் கொண்ட ஆணையத்தின் தலைமையிலும் பொறுப்பிலும் நடைபெற்று இருக்க வேண்டும் என்றும் சிஏஜி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
போட்டி ஏற்பாடுகளுக்கான செல வுகளை தவறாக பயன்படுத்தியதாக தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தங்கள் கட்சி முதல்வர்களி லேயே சிறந்தவர் என்று காங்கிரஸ் கட்சி கூறிக்கொள்ளும் ஷீலா தீட்சித் மீது, நிதியை முறைகேடாக செலவிட் டதாக சிஏஜி குற்றம் சாட்டியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக் கடியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல சுரேஷ் கல்மாடியை தலைவராக நியமித்ததில் பிரதமர் அலுவலகம் தவறிழைத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருப்பதால் பிரதம ருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், விளையாட் டுத்துறை அமைச்சகம், நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம், தில்லி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றின் மீதும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
தாழ்தளப் பேருந்துகளை வாங்கி யது, பஸ் நிறுத்த நிழற்கூரைகளை அமைத்தது, தெரு விளக்குகள் அமைத்து, தில்லி பஸ்களில் எல்இடி லைட் பேனல்களைப் பொருத்தியது ஆகியவற்றில் நிதி முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
தெரு விளக்குகள் அமைத்தது போன்றவை தொடர்பான ஒப்பந்தங் களை தவறானவர்களுக்கு அளித்த தன் மூலம் ரூ. 31 கோடி அளவுக்கு அரசுக்கு வீண்செலவு ஏற்பட முதல் வர் ஷீலா தீட்சித்தான் காரணம் என் றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
_______________________________________________________
ப்ரூஸ் லீயின் மேலங்கிக்கு 77 ஆயிரம் டாலர்கள்
' |
மறைந்த குங் ஃபூ நட்சத்திரம் ப்ருஸ் லீ நடித்த இறுதிப் படத்தில், அவர் அணிந்திருந்த மேலங்கி (கோட்) ஹாங்காங்கில் 77 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் சென்றிருக்கின்றது.
இது தவிர, அவரது கடிதமொன்றும் பெயர் விபர அட்டையொன்றும் அடங்கலாக இன்னும் வேறு 12 பொருட்களும், மொத்தமாக 200 ஆயிரம் டாலர்களுக்கும் அதிக தொகைக்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.
‘கேம் ஆஃப் டெத்’ என்ற திரைப்படத்தில் ப்ரூஸ் லீ அணிந்திருந்த, மிருகங்களின் தோல் மயிரைக் கொண்டு தைக்கப்பட்ட இந்த கோட்டை எதிர்ப்பார்க்கப்பட்ட விலையை விட 9 மடங்கு அதிக விலைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் வாங்கியுள்ளார்.
1940ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த ப்ரூஸ் லீ, மிகக் குறுகிய காலத்திலேயே புகழின் உச்சியைத் தொட்டவர்.
ப்ரூஸ் லீ சிலை |
======================================================================