இந்தியா பாடம் கற்றுக்கொள்ளுமா?


அமெரிக்க நெருக்கடி.  இந்தியாவுக்கு ஒரு பாடம்.                    
அமெரிக்காவில் மூன்றே ஆண்டுகளில் மறு படியும் ஏற்பட்டிருக்கிற பொருளாதாரச் சரிவு, அந்த நாட்டு மக்களுக்கு கடுமையான நிலை மைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதே அள வுக்கு மற்ற நாடுகளிலும் மோசமான நெருக்கடி களை ஏற்படுத்தும் என்ற அபாயம் எழுந்துள் ளது. ஏற்கெனவே 2008ம் ஆண்டில் பொருளா தாரச் சரிவு ஏற்பட்டபோது, பல மக்கள் நலத் திட்டங்களை காவுகொடுத்துவிட்டு, நெருக்க டிக்கு காரணமான நிறுவனங்களுக்கே பல ஆயிரக்கணக்கான கோடி டாலர் அளவுக்கு உதவி வழங்குகிற தற்காலிக சமாளிப்பு நட வடிக்கையில்தான் புஷ் நிர்வாகம் இறங்கியது.

இப்படிப்பட்ட அறிவியல்பூர்வமற்ற அணுகு முறைகள்தான், மூன்று ஆண்டுகளில் பெரும் கடன் நெருக்கடியாக வெடித்து, மறுபடியும் ஒரு பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில், 1917ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட, அமெரிக்க அரசு பெறக்கூடிய கடன் நிதிக்கு உச்சவரம்பு கட்டுகிற ஒரு சட்டம் இருக் கிறது. அவ்வப்போது அந்த கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்படும். இந்த சட்ட ஏற்பாட்டைத் திருத்துவது குறித்து ஆளுங்கட்சியும், எதிர்க் கட்சியும், மக்களும் கவலைப்பட்டதில்லை.

ஆனால், இந்த முறை அது ஒரு கடுமையான நெருக்கடியாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், இரண்டு தவறான நடவடிக்கைகள் தான் என்று பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒன்று, அரசு கடன் பத்திரங் களை வெளியிட்டு நிதி திரட்டுவதற்கு மாறாக, புதிய பண நோட்டுகளை அச்சிட்டு கடன் சுமையை சமாளிக்க முயன்றது. இரண்டு, அங்கே உள்ள ஏகபோக வர்த்தக நிறுவனங் களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வரிச் சலுகைகளை அறிவித்த நடவடிக்கை. அவர் களுக்கு வரிச்சலுகை அளித்ததோடு நில்லா மல், அதை ஈடுகட்ட அரசின் சமூகச் செல வினங்களை வெட்டியது. மக்களுக்கான சமூகச் செலவுகளை வெட்டுவதற்கு ஒப்புக் கொண் டால்தான் கடன் சமாளிப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க முடியும் என்று பெரிய எதிர்க்கட்சி யான குடியரசுக் கட்சி நிபந்தனை விதிக்க, ஆளும் ஜனநாயகக் கட்சி அதற்கு அடிபணிந்த வேடிக்கையும் நடந்திருக்கிறது.

இது ஒருபுறமிருக்க, இக்கொள்கைகள் எங்கே இட்டுச்செல்லும் என்று கணித்தது போல், உலக அளவில் நாடுகளின் கடன் தகுதியை முடிவு செய்யும் ஸ்டாண்டர்டு அன் பூவர் என்ற நிறுவனம், அமெரிக்காவின் கடன் தகுதி குறைந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து உலகப் பங்கு மூலதன சூதாட்டக்காரர்கள் தங்களது முதலீடுகளை விலக்கிக்கொள்வது, வேறு எங்காவது அதைக் கடத்துவது போன்ற திருவிளையாடல்களை ஆரம்பித்துவிட்டனர். இதுவும் சேர்ந்துதான் அங்கே இன்றைய நெருக்கடியை ஏற்படுத்தி யிருக்கிறது.

அமெரிக்க பாணி என்ற மயக்கத்துடன், இங் கேயும் கல்வி, மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட மக்களுக்கான சமூகச் செலவினங்களைக் குறைக்கத் தயங்காத மன்மோகன் அரசுக்கும், அதன் கொள்கைகளைக் கண்மூடித்தனமாக ஆதரிப்போருக்கும் அமெரிக்காவின் இன்றைய நெருக்கடியில் ஒரு பாடம் இருக்கிறது. அவர்கள் அந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதையே பிரணாப் முகர்ஜி போன்றோர் பேட்டிகள் உணர்த்துகிறது
.
இன்றைய நிலையில் அமெரிக்க டாலரைவிட சீன பணத்திற்கே உலகில் செல்வாக்கு கூடிவருகிறது. 
டாலருக்குப் பதில் பொதுவான பணத்தை உலக நாடுகளின் செலவாணியாக்குவதே இவ்வீழ்ச்சி கற்றுத்தரும் பாடம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------

அமெரிக்கா குடிநீர் தட்டுப்பாடு.சிறுநீர்-கழிவு நீர்களை குடிராக்க முயற்சி.



 அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுநீர் உள்பட கழிவுநீரை வடிகட்டி பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.அமெரிக்காவின் தென்கோடி மாநிலம் டெக்சாஸ். இங்கு கடுமையான வறட்சி நிலவுகிறது. வழக்கமாக இந்த சீசனில் வடக்கு டெக்சாஸ் பகுதியில் 7 இஞ்ச் அளவு மழை பெய்யுமாம். இந்த ஆண்டில் 0.1 இஞ்ச்சைவிட குறைவாகவே பெய்திருக்கிறது. டெக்சாஸ் மாநிலத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் அதிகபட்ச வறட்சியில் இருப்பதாக மாநில விவசாயத்துறை தெரிவித்துள்ளது. வறட்சியால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களிலும் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள பிக் ஸ்பிரிங் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் சிறுநீர் உள்ளிட்ட சாக்கடை நீரை வடிகட்டி சுத்தப்படுத்தி குடிநீராக பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது.
இதுபற்றி நகர நிர்வாக அதிகாரி ஜான் கிரான்ட் கூறுகையில், ‘‘பிக் ஸ்பிரிங் நகரில் 27 ஆயிரம் வீடுகள் உள்ளன. கொலராடோ ஆற்று நீர்தான் வழக்கமாக வீடுகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. அங்கு தண்ணீர் குறைந்துவிட்டது. இந்நிலையில், வீடுகளின் கழிவுநீரை வீணாக்க விரும்பவில்லை. அதை வடிகட்டி சுத்தப்படுத்தி குடிநீராக பயன்படுத்த முடியுமா என்று ஆலோசனை நடந்து வருகிறது’’ என்றார்.
சிறுநீரை குடிநீராக்குவது தொடர்பாக நாசா ஏற்கனவே ஆய்வு நடத்தியிருக்கிறது. சமீபத்திய விண்கல பயணத்தின்போது விஞ்ஞானிகளின் சிறுநீர், வியர்வையை மைக்ரோகிராவிட்டி மற்றும் ஃபார்வர்டு ஆஸ்மாசிஸ் முறையில் குடிநீராக மாற்றி பயன்படுத்துவது  குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது
==========================================================================================================
                   
சுதந்திர போராட்டக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பத்மநாப சுவாமி கோவில் அருகே ஒளிந்திருந்ததாகக் கருதி, பிரிட்டிஷ் அரசு இந்த பகுதியை தீவிரமாக கண்காணித்து வந்ததாக, வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறையில் இருந்து, லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன. இதனால், இந்த கோவில் தற்போது அதிக பட்ச கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளது. சுதந்திர போராட்டக் காலத்திலும் இந்த கோவில் அமைந்த பகுதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கண்காணிப்புக்கு ஆளானது என்பது, வரலாற்று ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்திய தேசிய படையை தலைமை ஏற்று நடத்திய அவர், 1941ம் ஆண்டு ஜப்பான் மற்றும் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. வெளிநாடு சென்று திரும்பியதும், அவரால் பல அபாயம் ஏற்படும் என்று பயந்த பிரிட்டிஷ் அரசு, அவரது நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தது. ஏதாவது ஒரு துறைமுகம் மூலம் அவர், நாட்டுக்குள் நுழையக்கூடும் என்பதால், துறைமுகப்பகுதிகள் உஷார் படுத்தப்பட்டன.
சுபாஷ் சந்திரபோஸ், திருவனந்தபுரம் மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் நடமாடுவதாக வந்த அனாமதேய கடிதத்தால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அப்போது சென்னை மாகாணத்தின் ராணுவ அதிகாரியாக விளங்கிய லெப்டினன்ட் கர்னல் ஜி.பி.மர்பிக்கு ஒரு கடிதத்தை அனுப்பினர். இந்த கடிதத்தை ராணுவ அதிகாரி, 
திருவாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யருக்கு அனுப்பி, திருவாங்கூர் ஆளுகைக்கு உட்பட்ட திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை கண்காணிக்கும்படி கூறினார்.
பிரிட்டிஷ் அரசின் இந்த உத்தரவை ஏற்று, திருவனந்தபுரத்தில் பத்மநாப சுவாமி கோவிலையொட்டிய அக்ரகார பகுதியில், தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக, திவான் சி.பி.ராமசாமி அய்யர் பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதங்கள் தற்போது ஆவண காப்பகத்தில் உள்ளன. பிரிட்டிஷ் அரசின் கடிதத்தின் பேரில், பத்மநாப சுவாமி கோவிலிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலை சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் வீரர்கள், சுபாஷ் சந்திரபோசை தேடும் பணியில் ஈடுபட்டதாக வரலாற்று ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?