சமச்சீர் கல்வி-_. முதல் அடி

பல நாள் இழுத்தடித்த சமச்சீர் கல்வி விடயத்தில் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது.
தமிழ்நாட்டில் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. சமச்சீர் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் தான் 25 காரணங்களை ஆராய்ந்து முடிவிதான் இத்தீர்ப்பை வழங்கியதாக தெரிவித்துள்ளது.
கருணாநிதி அரசுகாலத்தில் கொண்டுவரப்பட்டதால் ஜெயா அரசு சமச்சீர் கல்வியை நீக்க முயன்றதாகக் கூறப்பட்டாலும் உள்ளடி காரணங்கள் சில உள்ளன.ஜெ யலலைதாவின் அரசியல் குறு சோ ,மற்றும் கல்வி வியாபாரிகள் வற்புறுத்தலும் இதன்பின் மறைந்துள்ளது.அதில் வருணசிர க் காரணங்களும் உண்டு.
இப்போது ஜெயா அரசுக்கு முதல் குட்டு விழுந்துள்ளது.இதை தொடர வைப்பதும் தேவையற்ற பிடிவாதங்களை விட்டு  ஆட்சியை நல்லமுறையில் நடத்துவதும் அவர் கையில்.
உச்ச நீதிமன்றம் தரப்போகும் தீர்ப்பை பலர் எதிர்பார்த்திருந்தாலும் ஜெயலலிதா அதை அறிந்தே உச்ச நீதிமன்றத்தீர்ப்பை உடனே நிறைவேற்றுவதாக அறிவித்திருந்தார்.


அவரின் பிடிவாதத்திற்கு முதல் அடி.ஆனால் இதை அவர் கண்டு கொள்ளாதது போல் ஒன்றும் அறியாதது போல் உள்ளார்.அவரின் எடுபிடி ஊடகங்களும் எங்கோ நடந்த சம்பந்தமில்லாத விடயம் போல் காட்டிக்கொள்ள் முயல்கிறார்கள்.
========================================================================================================

இன்று நாம் எல்லோம் மிக அதிகமாகப் பயன்படுத்துகின்றவோர்ல்ட் வைட் வெப்(www)எனப்படும் கணினி வலயத்தை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஒருவர் தொடங்கி இன்றோடு இருபது வருடங்கள் ஆகின்றன.
இணையம் 
                        
ஒரு கணிணியில் இருக்கின்ற தகவல்களை மற்ற கணினிகள் வழியாக பார்ப்பதற்கும் உலக அளவில் கணினி வலயமைப்பில் பகிர்ந்துகொள்வதற்குமான ஒரு எளிய முறையை பேராசிரியர் டிம் பர்னர்ஸ் லீஉருவாக்கியிருந்தார்.

பல்வேறு கணினிகள் வெவ்வேறு இயந்திர மொழியைப் பயன்படுத்தியதாலும் ஆவணங்கள் பல்வேறு கணிணி வடிவங்களில் இருந்ததாலும் இந்த தகவல் பரிமாற்றம் என்பது சிக்கலும் சிரமமும் நிறைந்த ஒன்றாக இருந்துவந்தது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுற்று ஒன்றுக்கு முன்பாக இண்டர்நெட் என்பது விஞ்ஞானிகள் தங்களுக்கு இடையில் தகவல் பரிமாறுவதற்கான ஒரு வழியாகவே இருந்துவந்தது.
அச்சமயம் ஜெனீவாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைபார்த்து வந்த சர் டிம் பர்னர்ஸ் லீ, கணினிகள் தமக்கிடையில் எளிமையாக தகவல் பரிமாறுவதற்கான இணைய மொழியான HTMLஐ உருவாக்கினார்.
இணையத்தில் உள்ள ஒரு பக்கத்தை இன்னொரு பக்கத்துடன் எளிதில் இணைப்பதற்கு, அதாவது ஒரு கிளிக் செய்தால் போதும் அந்த ஆவணத்துக்கு சென்றுவிடலாம் என்ற முறையில் இணைப்பதற்கு, இந்த HTML வழிவகுத்தது.
மிகவும் சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாகத் தெரியும் இந்த கண்டுபிடிப்புதான் இன்று உலகத்தையே ஆட்கொண்டுள்ள இணையமாக வொர்ல்ட் வைட் வெப்பாக உருவெடுத்துள்ளது.
மூன்று மாத உழைப்பில் டிம் பர்னர்ஸ் லீ கண்டுபிடித்த அந்த இணையத்தை இன்று உலகின் முப்பது சதவீதமான மக்கள் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு காலத்தில் ஹாலிவுட் கனவுக் கன்னியாகத் திகழ்ந்த மறைந்த நடிகை மர்லின் மன்ரோ சிறு வயதில் நடித்த 'ஆபாச படம்' என்று கூறப்படும் வீடியோ அர்ஜெண்டினாவில் ஏலத்தில் விற்கத் தவறியது.
எட்டு மில்லி மீட்டர் படச்சுருளில் கருப்பு வெள்ளையில் ஆறு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவுக்கு அர்ஜெண்டினாவின் பெஸோ நாணயத்தில் குறைந்தது இரண்டு மில்லியன் வேண்டும் என அரிய பொருட்களை சேகரித்துவருபவரான மிகெல் பர்ஸாஎதிர்பார்த்திருந்தார்.
தான் பெற்றுள்ள அந்த வீடியோ 1946 அல்லது 47ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்று பர்சா கூறுகிறார்.
"
சிறு வயதில் ஏழ்மையில் வாடியும் பட வாய்ப்புகள் தேடியும் வந்த சமயத்தில்நோர்மா ஜீன் பேகர் என அப்போது அறியப்பட்ட மர்லின் மன்ரோ த வீடியோவில் ஆபாசக் காட்சியில் நடித்துள்ளார் என அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் இது போலி வீடியோ என்று மர்லின் மன்ரோ பற்றிய தகவல்களை பாதுகாத்துவரும் அமைப்பு கூறுகிறது. இந்த வீடியோவில் வரும் பெண்ணுக்கு மர்லின் மன்ரோவின் சாயல் கூட இல்லை என ஆதண்டிக் பிராண்ட்ஸ் குரூப் எனப்படும் அந்த அமைப்பைச் சேர்ந்த நான்ஸி கார்ல்சன் கூறுகிறார்.
இருந்தாலும், மர்லின் மன்ரோவின் பெயரும் படங்களும் வருடந்தோறும் பல மில்லியன் டாலர்களைப் பெற்றுத் தரும் நிலையில், அவரின் பெயருக்கு களங்கம் வராமல் பார்த்துக்கொள்வதில் உள்ள நன்மை கருதி இந்த அமைப்பு தனது வீடியோவை போலி என்று கூறுகிறது என பர்சா வாதிடுகிறார்.
இவர்கள் போலி என்று கூறிவிட்டதால்தான் தான் வைத்துள்ள வீடியோ ஏலம் போகத் தவறியது என்று அவர் தெரிவிக்கிறார்.
மர்லின் மன்ரோ
 ============================================================================================================                                 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?