லஞ்சத்தை ஒழிப்பது எப்படி..?
++++++++++++++++
நீச்சல் அடிப்பது எப்படி,கராத்தே பழகுவது எப்படி என்பது போல் இதுவும் எப்படி வரிசை கட்டுரை என எண்ணாமல் மேலே படியுங்கள்
மொபைல்போன் ரீஜார்ஜ் செய்ய, ஒரு ரூபாயை அதிகமாக தர விருப்பமின்றி, கல்லூரி மாணவர் ஒருவர், கடை உரிமையாளர் மீது, கரூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.திண்டுக்கல் மாவட்டம், சின்னதம்பிபட்டி பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் சத்யராஜ், 18. இவர், தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படிக்கிறார்.நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு, கரூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள பாப்புலர் எலக்ட்ரானிக்ஸ் கடையில், "ஐடியா' நிறுவனத்தின் எஸ்.எம்.எஸ்., பூஸ்டர் பேக், 35 ரூபாய்க்கு போட, கடை உரிமையாளர் அப்துல் மாலிக், 35, என்பவரிடம் கூறினார். அப்துல் மாலிக், ஒரு ரூபாய் கூடுதலாக, 36 ரூபாய் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசாரிடம், சத்தியராஜ் புகார் கூற, அவர், சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார்.
அங்கு சென்ற சத்தியராஜ், போலீசார் ஒருவரை, கடைக்கு அழைத்து வந்தபோது, அப்துல் மாலிக் அங்கு இல்லை. "ஒரு ரூபாய்க்கு வழக்கு போட முடியாது' எனக் கூறியும், சத்தியராஜ் விடவில்லை.மீண்டும் புகார் கொடுக்க, போலீஸ் ஸ்டேஷன் சென்றார். இரவு நேரப்பணியில் இருந்த போலீஸ்காரர் திட்டியதால், "நீங்கள் புகாரை வாங்க வில்லை என்றால், நான் எஸ்.பி., யிடம் புகார் செய்வேன்' என, சத்தியராஜ் தெரிவித்தார்.அதிர்ச்சியடைந்த மற்றொரு போலீஸ்காரர், "காலையில் வா' எனக் கூறி சத்தியராஜை அனுப்பி வைத்தார். காலையில் சத்தியராஜ் வந்ததும், "மண்டைகாய்ந்து போன' போலீசார், கடை உரிமையாளர் அப்துல் மாலிக்கை அழைத்து வந்தனர். விசாரணை நடத்தியதில், சமரசமாக போவதாக இருவரும் கூறியதால், புகார் முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாய்க்காக, 12 மணி நேரம் தனி ஆளாக போராடிய கல்லூரி மாணவர் சத்தியராஜை,நாம் பாராட்டியாக வேண்டும்.
லஞ்சம் ,ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம்-போராட்டம் என நடத்துவதைவிட
நம்ம சத்தியராஜ் போல் காசு கொடுக்காமல் உரிமைக்காக போராடினால் போதுமே தன்னால் எல்லாம் ஒழிந்துவிடுமே.
திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.பட்டுக்கோட்டை வரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் லஞ்சம் கோடுக்காவிட்டால் லஞ்சம் எப்படி வாங்கப்படும்?
நம்மேல் மக்கள் மீது குறையை வைத்து விட்டு லஞ்சம்,ஊழல் பெருகிவிட்டது என்பது வேடிக்கையான வார்த்தைகள்.
நீ லஞ்சம் கோடாதே-மற்றவர்களையும் கொடுக்க விடாதே லோக்பால்,அன்னாகசாரே -ராம்தேவ் உண்ணாவிரதம் எல்லாம் எதற்கு தேவையில்லையே?
சத்தியராஜ் இன்று போராடியது வெறும் ஒத்தை ரூபாய்க்கல்ல.அதிகப்படியான வசூலிக்கும் பணமும் லஞ்சம்தானே?
நாம் வாஇயை மூடிக்கொண்டும்,நமது காரியம் உடனே நடக்க வேண்டும் என்பதாற்கு லஞ்சத்தை வளர்த்து வருகிறோம்.
பின் லஞ்சம்-லாவண்யம் பெருகிவிட்டதே என புலம்புகிறோம்.
முதலில் உங்களிலாரம்பியுங்கள்.காரியம் நடக்க தேவையின்றி லஞ்சமாக பணம் கொடுக்க மாட்டேன் என உறுதி எடுங்கள்.பணம் கொடுக்காததால் சற்று தாமதமானாலும் பரவாயில்லை என உறுதியாக இருங்கள்.
அல்லாது வேலை நடக்கவில்லை என்றால் முறையீடு செய்யுங்கள்.அல்லாது காவல்துறையில் புகார் கொடுங்கள்.
தேவையின்றி போராடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டாம் .லஞ்சத்தை நாம் கொடுக்காமல் ஒழித்தாலே லஞ்சம் ஒழிந்து விடுமே.
லஞ்சம் வாங்கவும் வேண்டாம் அதை விட முக்கியம் கொடுக்காமல் இருப்பதே.
_____________________________________________________________________
ரீசைக்கிள்பின்னுக்குப் பின் கோப்பின் நிலை?
பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open என்பதனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் அழித்த பைல்கள் தெரிய வரும். ஆனால் இவற்றை அங்கேயே கிளிக் செய்வதன் மூலம் படிக்க முடியாது.
நீங்கள் மீண்டும் படிக்க விரும்பும் பைல்களை அந்த பைல் இருந்த டிரைவ் மற்றும் போல்டருக்குக் கொண்டு சென்ற பின்னரே படிக்க முடியும். இதற்கு மீண்டும் காண விரும்பும் பைலை செலக்ட் செய்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Restore என்ற பிரிவைக் கிளிக் செய்திட பைல் அதன் முந்தைய இடத்திற்குச் செல்லும். அங்கு சென்று அந்த பைலைத் திறந்து படித்துக் கொள்ளலாம்.
தமிழகத்தில் இன்று காலை திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. வீடு, பள்ளிகள், அலுவலகங்களில் இருந்தவர்கள் பலர் அச்சத்துடன் வீதிக்கு வந்தனர். திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் , நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலை சரியாக 11.30 மணியளவில் மேற்கூறிய மாவட்டங்களில் மக்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நேரத்தில் திடீர் நில அதிர்வு உணரப்பட்டது. பெருத்த சேதம் ஏதும் இல்லையென்றாலும் சிறிய குலுக்கத்தில் மக்கள் நடுங்கிபோயினர்.
சேலம் மாவட்டம் கிழக்குப்பகுதியான ஆத்தூர், தலைவால் பகுதிகளில் சவல்பட்டி, வெத்தூர், முல்லைவாடி, மணிவழுந்தூர், காட்டுக்கோட்டை, சார்வாய், சந்தேரி, வீரகனூர், மும்முடி உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் இது உணரப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறினர்.