கசாரே மீது காங்கிரசின் புது ஊழல் குற்றசாட்டு.....




                              
ஊழலுக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் அறிவித்துள்ள அன்னா கசாரே மீதும் காங்கிரசினர்.ஊழல் குற்றசாட்டுகளை அள்ளி விட்டுள்ளனர்.
ஆனால் கசாரேயோ அதைப்பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.ஆனால் அவர் குழுவைச்சேர்ந்த பிரசாந்த் பூசன் நீதிமன்றத்தில் சந்திப்பதாக கூறிவிட்டார்.ஆனால் ஊழல்களைப்பற்றி அவரும் ஒன்றும் தெரிவிக்கவில்லை.காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர் மணீஷ் திவாரி நேற்று டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த 2003ம் ஆண்டில், அப்போதைய மகாராஷ்டிர அரசின் அமைச்சர்கள் நான்கு பேருக்கு எதிராக, சமூக சேவகர் அன்னா ஹசாரே ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, நீதிபதி சாவந்த் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன், ஹசாரேயால் நடத்தப்படும் இந்து சுவராஜ் அறக்கட்டளை உட்பட நான்கு அறக்கட்டளைகள் குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்தது. இந்த அறக்கட்டளைகள் எல்லாம், கிராமப்புற மேம்பாடு மற்றும் நீதி போதனை கல்விக்காக உருவாக்கப்பட்டவை. கடந்த 2005 பிப்ரவரி 23ல் சாவந்த் கமிஷன் அறிக்கை தாக்கல் செய்தது.
அந்த 116 பக்க அறிக்கையில், "ஹசாரே தான் நடத்தும் அறக்கட்டளை ஒன்றிலிருந்து, தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 2.2 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். 
இது சட்ட விரோதமானது; ஊழலுக்கு சமமானது. மேலும், ஹசாரே நடத்தும் அமைப்புகளில் ஒன்று, 20 ஆண்டுகளுக்கு கணக்கு சமர்ப்பிக்கவில்லை.


மற்றொரு அறக்கட்டளையில் பணியாற்றும் ஊழியர்கள், மிரட்டி பணம் பறிப்பது, சொத்துக்களை அபகரிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டது.
மேலும், ராணுவத்தில் ஹசாரே பணியாற்றிய போது, அறக்கட்டளைகளுக்கு அவர் கொடுத்த பணம் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆண்டு கேட்கப்பட்ட விவரங்களுக்கும், அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை.ஹசாரே எப்படிப்பட்டவர் என்பது, சாவந்த் கமிஷன் அறிக்கை மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இப்படி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, அன்னா ஹசாரே நாளை முதல் நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டம், ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டம் அல்ல.
என திவாரி கூறியுள்ளார்.
--------------------------------------------------------------------------
மெரிக்க வளர்ச்சி சீனா கைகளில்! 
அமெரிக்கா கடன் பிரச்சனையில் தள்ளாடுகிறது. அந்த நாட்டினுடைய வளர்ச்சி சீனா மற்றும் ஜேர்மனி நாடுகளின் வசமே உள்ளது என பாங்க் ஆப் இங்கிலாந்து கவர்னர் தெரிவித்தார்.
பாங்க் ஆப் இங்கிலாந்து வேகமாக அதிகரித்து வரும் பண வீக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இங்கிலாந்து என்ன செய்ய முடியுமோ அதனை செய்துள்ளது என வங்கி கவர்னர் மெர்வின் கிங் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட குறைவாகவே உள்ளது. கட்டுப்பாடு நிலை இன்னும் 2 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக பொருளாதார சரிவு மீண்டு வர சீனா போன்ற நாடுகள் முன்வர வேண்டும்.
அந்த நாடு தானாக முன்வந்து உதவினால் மீட்சி பெற முடியும் என்றும் மெர்வின் கிங் தெரிவித்துள்ளார். சீனாவும், ஜேர்மனியும் அதிக அளவில் தங்கள் உற்பத்தி பொருட்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
அவர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கிறது. மிக மலிவான அளிப்பின் மூலம் அவர்கள் அதிகம் பணம் பெறுகிறார்கள். அந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலையில் ஒரு பள்ளம் ஏற்படுகிறது.
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களுக்காக அதிகம் செலவழிக்கிறார்கள். அதற்காக அவர்கள் அதிகம் கடன் வாங்கவும் செய்கிறார்கள் என்றும் பாங்க் ஆப் இங்கிலாந்து அறிக்கை எச்சரித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேகமூட்டத்தைக் கூர்ந்து கவனியுங்கள் .மனித முகத்தோற்றம் தெரிகிறதா-/?
_____________________________________________________________________________________



 பின்லேடன் கம்பெனிகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 சவுதி அரேபியாவில் பின்லேடன் குரூப் கம்பெனியில் வேலைக்காக சென்ற இந்தியர்கள் பலர் அடிமைகளாக கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். அல்கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனின் சகோதரர்கள், சகோதரிகள் சவுதி அரேபியாவில் பல்வேறு கம்பெனிகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் வேலை செய்ய இந்தியர்கள் பலர் தரகர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தில் இருந்து சென்ற 12-க்கும் அதிகமான தொழிலாளிகள் பின்லேடன் கம்பெனியில் அடிமைகளாக வேலை செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தாய்நாடு திரும்ப முடியாமல் அவர்கள் அங்கு தவித்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில்லை, சரியான உணவு இல்லை. தங்கும் இடத்தில் அடிப்படை வசதிகள் சரியில்லை. பல மணி நேரம் வேலை வாங்குகின்றனர். தாய்நாடு திரும்ப விரும்புபவர்களை சித்ரவதை செய்கின்றனர் என்று அவர்கள் தகவல் அனுப்பி உள்ளனர்.
இதை அறிந்த தொழிலாளிகளின் உறவினர்கள், மாநில தொழிலாளர் நலத்துறையின் உதவியை கேட்டுள்ளனர். Ôசவுதியில் சித்ரவதை அனுபவித்து வருபவர்களை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வரவேண்டும்Õ என்று அதிகாரிகளை கண்ணீர் விட்டு கெஞ்சி கொண்டிருக்கின்றனர்.
படிப்பறிவு இல்லாத பீகார் மக்களை இடைத்தரகர்கள் அணுகி ஆசை வார்த்தை கூறி வளைகுடா நாடுகளுக்கு ஏஜென்சிகள் மூலம் அனுப்பி விடுகின்றனர். அங்கு கட்டிட வேலை உள்பட கடுமையான வேலைகளில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுபோல் ஆண்டுதோறும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான பீகார் மக்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2008-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 8.5 லட்சம் இந்தியர்கள் பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் படிப்பறிவு இல்லாதவர்கள். அங்கு சென்ற பிறகு எல்லா விதமான கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர்.
சில நேரங்களில் வேலைக்கு அனுப்புவதாக கூறி, வெளிநாடுகளுக்கு செல்வோரிடம் கடத்தல் பொருட்களையும் கொடுத்து அனுப்பி விடுகின்றனர். விமான நிலையங்களில் அவர்கள் சிக்கும்போது, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள், தரகர்கள் தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்கள் வெளிநாடுகளில் சிறை தண்டனை பெறும் அவல நிலையும் உள்ளது.
பீகார் தவிர ஆந்திரா, தமிழ்நாடு, கேரளாவை சேர்ந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர். வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் பல நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெறாதவை. சட்டவிரோதமான அந்த ஏஜென்சிகளை நம்பி பலர் மோசம் போகின்றனர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அதேநேரத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கள் குடிமக்கள் மூலம் அதிக பணம் பெறும் நாடுகளில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் கேரள மக்கள்தான் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு அதிகம் பணம் அனுப்புகின்றனர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடன் தரம் வரிசை மதிப்பீடு எப்படி?
கொஞ்சம் நாளாகவே அமெரிக்கா ஏஏஎ+இலிருந்து  குறைந்து விட்டது-ஏறி விட்டது என்கிறார்களே ஏன் ?இதை எப்படி மதிப்பீடு செய்கிறார்கள் என்று சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கலாம்.அது பற்றிய தகவல்கள் :
”ஒரு நாட்டின் பொருளாதார நிலவரம், அரசு கடன் பத்திரங்களில் முதலீடு, அரசின் கடன் வாங்கும் சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் தர வரிசையை தனியார் நிதி ஆய்வு நிறுவனங்கள் வெளியிடுகின்றன. மார்கன் ஸ்டேன்லி, ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் ஆகியவை அவற்றில் சில. இந்த தர வரிசை குறியீடுகளின் விளக்கம் என்ன?

‘ஏஏஏ’ - நாட்டின் நிதி பொறுப்புகளை சிறப்பாக கையாளக்கூடிய வலிமையான திறன் உள்ளது.

ஏஏ+’ - நிதி பொறுப்பை கையாள்வதில் மிக வலிமை கொண்டது.

‘ஏ’ - எதிர்மறை பொருளாதார நிலவரங்கள், சூழ்நிலை மாற்றங்கள் ஏற்படாத நிலையில் மிக வலிமையான கடன் நிர்வாகம்.

பிபிபி’+ - நிதி பொறுப்புகளை சந்திக்க போதுமான திறன். எதிர்மறை பொருளாதார சூழ்நிலையால் பாதிக்கப்படும் நிலை.

பிபிபி-’ -குறைவான முதலீடுகளை பெறக்கூடிய சூழ்நிலை.

‘பிபி+’ - சந்தை பங்களிப்பாளர்கள் வாயிலாக யூக அடிப்படையில் முதலீடு.

பிபி’ - குறுகிய காலத்தில் நிதி நெருக்கடி சந்திக்க தேவையிருக்காது என்றாலும் எதிர்மறை வர்த்தக, நிதி, பொருளாதார சூழ்நிலையில் பாதிக்கக்கூடும்.

‘பி’ - எதிர்மறை வர்த்தகத்தில் எளிதாக பாதிக்கப்படலாம்.

சிசிசி’ - நிதி பொறுப்புகளை சந்திப்பதில் பொருளாதார, நிதி, வர்த்தக சூழ்நிலைகளை சார்ந்திருத்தல்.

‘சிசி’ - பாதிப்புக்கான அதிகபட்ச வாய்ப்பு.

சி’ - குறிப்பிட்ட சூழ்நிலைகளில் பாதிக்கப்படக்கூடிய நிலை.

‘டி’ - நிதி பொறுப்புகளில் செலுத்த வேண்டிய தவணைகளை தவறுதல்.

குறிப்பு: இவற்றில் ‘ப்ளஸ்’ என்று குறிப்பிடப்படுவது இரண்டு குறியீடுகளுக்கு இடைப்பட்ட நிலையாகும்
.
__________________________________________________________________________
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

 பாகிஸ்தான் சுதந்திர தின அணிவகுப்பு மற்றும் ஓட்டலில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் உட்பட 20 பேர் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் சுதந்திர தின விழா பலத்த பாதுகாப்புக்கு இடையில் நேற்று நடந்தது. பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கும் அடிக்கடி தாக்குதல் நடப்பதால் வழக்கத்தை விட ராணுவ வீரர்களும் போலீசாரும் கண்காணிப்பில் இருந்தனர். ஆனால், பலுசிஸ்தான் டேரா அல்லா பகுதியில் உள்ள ஓட்டல் தரைதளத்தில் தலிபான் தீவிரவாதிகள் நேற்று குண்டுவைத்து ரிமோட் மூலம் வெடிக்கச் செய்தனர். இதில் 2 மாடி ஓட்டல் தரைமட்டமானது. இதில் 17 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

ஓட்டல் அருகில் இருந்த கடைகள், கட்டிடங்களும் நொறுங்கின. இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடக்கிறது. மேலும், கோஸ் பைப் லைன் செல்லும் பகுதியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.
இதற்கிடையில் வடக்கு வசிரிஸ்தான் மிரான் ஷா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் நேற்று சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. அப்போது தலிபான் தீவிரவாதிகள் 4 ராக்கெட்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அணிவகுப்பில் சென்று கொண்டிருந்த வீரர்கள் 3 பேர் உடல் சிதறி இறந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். தவிர பலுசிஸ்தான் லாஸ்பெலா மாவட்டத்தில் 2 தொழிலாளர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். சக்ரான் பகுதியில் பத்திரிகையாளர் முனிர் ஷகீர் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இவருடன் சேர்த்து கடந்த ஓராண்டில் மட்டும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு குவெட்டா பிரஸ் கிளப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஓட்டலில் நடந்த தாக்குதலுக்கு மட்டும் பலோச் விடுதலை புலி என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மற்ற தாக்குதல்களை எந்த அமைப்பு நடத்தியது என்று தெரியவில்லை.
வன்முறையாளர்கள் எதை இதன் மூலம் சாதிக்க உள்ளனர் எனத்தெரியவில்லை.மனித உயிர்கள் பலியாவதைத்தவிர என்ன பயன் உள்ளது.மனித குலத்துக்கு நன்மைதரதானே மதங்கள்,சாமிகள்? 
மக்களை பலியிட்டு அவர்களுக்கு வீடு பேறு தரும் மதங்கள் அடிப்படையிலான தீவிரவாதம் தேவைதானா?அரசியல் அடிப்படையான தீவிரவாதத்தையே எதிர்க்கும் மனித ஆர்வலர்கள் இது போன்ற கொடுஞ்செயலரகளுக்கு துணைபோவது மிக ஆபத்தானது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?