வாழ்த்த வயதில்லை வணக்குகிறோம்,,,,,?
பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் 17ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சென்னை நகரம், படிப்படியாக உயர்ந்து, தற்போது தென்னிந்தியாவின் மிகப் பெரிய முக்கிய நகரங்களில் ஒன்றாக உருவெடித்துள்ளது. சென்னை நகரம் உருவாக்கப்பட்டதன் 372வது ஆண்டு விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட சென்னை நகரில், ஆங்கிலேயர்-நாயக்கர்களின் கூட்டாட்சியின் போது புனித ஜார்ஜ் கோட்டைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது தமிழகத்தின் தலைநகராக செயல்பட்டு வரும் சென்னை நகரின் மக்கள் தொகை 4.6 மில்லியன் ஆகும். புறநகர்களை சேர்த்து 6.4 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்புக்களையும், புராதான சின்னங்களையும் தன்னகத்தே கொண்ட சிறப்பு பெற்ற நகரமாக விளங்கும் சென்னை நகரின் பிறந்த தினம் ஆகஸ்டு22 ஆக கொண்டாடப்பட உள்ளது.
______________________________________________________________________________
கோவில் நகைகளை கொள்ளையடித்த முன்னாள்அரச குடும்பம்.
"பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பலமுறை பொக்கிஷங்களை கடத்தி சென்றுள்ளார்" என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். |
கேரளாவில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 5 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. "பி" என்ற கடைசி அறை திறக்கப்படாமல் உள்ளது. இதை திறப்பது மற்றும் 5 அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்வது பற்றி முடிவெடுப்பதற்கு ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. இதற்கிடையே, மன்னர் குடும்பத்தின் சார்பில் தேவபிசன்னம் பார்க்கப்பட்டது. அதில், கடைசி அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்டது. மேலும், நகைகளை மதிப்பீடு செய்பவர்கள் கொடிய விஷ ஜந்துக்கள் தீண்டி இறப்பார்கள், அவர்களது வம்சம் அழியும் என்றும், திறக்கப்பட்ட அறைகளில் உள்ள நகைகளை மதிப்பிட கூடாது என்றும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடைசி அறையை திறக்க தடை விதிக்கக் கோரி மன்னர் குடும்பம் சார்பில் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழ்நிலையில், கேரள எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் இப்போது மன்னர் ஆட்சி இல்லை. எனவே, உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவுக்கு மன்னருக்கு உரிய அந்தஸ்து கிடையாது என்றே உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனால்தான், மார்த்தாண்ட வர்மா காலத்தில் இருந்து மன்னர் குடும்பத்தின் கைவசம் உள்ள பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறைகளை திறந்து பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை தடுப்பதற்காகத்தான் மன்னர் குடும்பத்தின் சார்பில் கோயிலில் தேவ பிரசன்னம் நடத்தப்பட்டது. தேவ பிரசன்னத்தில் பொக்கிஷங்களை பரிசோதிக்கக் கூடாது என்றும், பி அறையை திறந்தால் திறப்பவர்கள் வம்சமே அழியும் என்றும் கூறி, உச்ச நீதிமன்றத்தை மிரட்டியுள்ளனர். இதற்கு முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் "பி" அறை திறக்கப்பட்டுள்ளது. அப்போது புகைப்படமும் எடுக்கப்பட்டுள்ளது. அறையை திறந்த யாரும் இறக்கவோ, குடும்பம் அழியவோ இல்லை. இப்போது மட்டும் அந்த அறையை திறந்தால் வம்சமே அழியும் என்று கூறுவதை ஏற்க முடியாது. உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பும்போது ஒரு வாளியில் கோயில் பாயாசம் எடுத்து செல்வார். அதில் பாயாசம் இருப்பதாகத்தான் அனைவரும் கருதுகின்றனர். உண்மையில் அந்த வாளியில் கோயில் பொக்கிஷங்களை எடுத்து சென்றுள்ளார். இவ்வாறு அச்சுதானந்தன் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி விரைவில் தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் நியமித்த ஆய்வுக் குழுவினர் கூறி வருகின்றனர். இதற்கு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மன்னர் குடும்பத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பி அறையை திறக்க அனுமதிக்கக் கூடாது. அதேபோல், மற்ற ரகசிய அறைகளின் பொக்கிஷங்களை வீடியோவில் பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடலுக்கு சுரங்கப்பாதையா? திருவனந்தபபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப் பாதை செல்வதாக பல்லாண்டு காலமாக கூறப்பட்டு வருகிறது. திறக்கப்படாமல் உள்ள �பி� அறையில் இருந்துதான் இந்த சுரங்கப்பாதை செல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது பற்றி ஆய்வு செய்ய கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள தேசிய நில ஆய்வியல் மைய அதிகாரிகள் விரைவில் திருவனந்தபுரம் வரவுள்ளனர். அவர்கள் ரேடார் மூலம் சுரங்கப்பாதை உள்ளதா என்பதை கண்டு பிடிப்பார்கள்.< _______________________________________________________ வசூல் குவிக்கும் ஆங்கிலத்திரைப்படங்கள். |
இயக்குனர் Steven Spielberg தயாரித்துள்ள படம் இது என்பது, எதிர்பார்ப்புக்கு முதல் காரணம். J. J. Abrams டைரக்ட் செய்துள்ள படம் என்பது, அடுத்த காரணம். J. J. Abrams கூட ஒரு தயாரிப்பாளர்தான். அத்துடன் சிறந்த திரைக்கதை அமைப்பாளர். இவரது திரைப்படங்களைவிட டீ.வி. ஷோக்கள் பிரபலமானவை. Mission: Impossible III படத்தின் டைரக்டரும் இவரே.
Super 8 திரைப்படம் Science Fiction & Fantasy ரகத்திலான படம். 1970களின் இறுதியில் நடப்பதான கதை. சிறிய நகரம் ஒன்றில் நடைபெறும் ரயில் விபத்தின் பின் ஏற்படும் விசித்திரமான சம்பவங்களை வைத்து அமைக்கப்பட்ட கதை.
வெள்ளி-சனி-ஞாயிறு வசூல் 37 மில்லியன் டொலர். அடுத்தடுத்த வாரங்களிலும் தூள் கிளப்பும் என்றே தெரிகிறது.
கடந்தவாரம் நாம் ‘லேட் பிக்கப்” என்று குறிப்பிட்ட Midnight in Paris, இந்த வாரமும் டாப் 10க்குள் வந்திருப்பது சந்தோஷமான விடயம். வசூல் விவகாரங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இந்த வருடம் வெளியான மிகவும் சுவாரசியமான படங்களில் ஒன்று இது.
வெள்ளிக்கிழமை வெளியான மற்றொரு புதிய படமான Judy Moody and the NOT Bummer Summer, பட்டியலில் 7வது இடத்துக்குத்தான் வந்திருக்கிறது. வசூலும் மிகச் சுமார்தான். Kids & Family Comedy ரகத்திலான படம் அது. சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை!
இதோ, டந்த வார இறுதியின் பாக்ஸ் ஆபீஸ் டாப் 10 வரிசையைப் பாருங்கள்:
1 Super 8
வார இறுதி வசூல்- 37.0 மில்லியன் டாலர்.
2 X-Men: First Class
வார இறுதி வசூல்- 25.0 மில்லியன் டாலர்.
3 The Hangover Part II
வார இறுதி வசூல்- 18.5 மில்லியன் டாலர்.
4 Kung Fu Panda 2
$16.6 மில்லியன் டாலர்.
5 Pirates of the Caribbean: On Stranger Tides
வார இறுதி வசூல்- 10.8 மில்லியன் டாலர்.
6 Bridesmaids
வார இறுதி வசூல்- 10.2 மில்லியன் டாலர்.
7 Judy Moody and the NOT Bummer Summer
வார இறுதி வசூல்- 6.3 மில்லியன் டாலர்.
8 Midnight in Paris
வார இறுதி வசூல்- 6.1 மில்லியன் டாலர்.
9 Thor
வார இறுதி வசூல்- 2.4 மில்லியன் டாலர்.
10 Fast Five
வார இறுதி வசூல்- 1.7 மில்லியன் டாலர்.
நன்றி:”விறுவிறுப்பு’இனையம்.
__________________________________________________________________________________________________
போலிகளை ஒழிக்க புதிய ”மின்னணு” குடும்ப அட்டை |
தமிழகத்தில் புழகத்தில் உள்ள குடும்ப அட்டைகள் நான்கு மாதங்களில் காலாவதியாகிவிடும் நிலையில் கைரேகை மற்றும் கண் பாவை உள்ளிட்டவற்றின் அடையாளங்களுடன் கூடிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. |
இந்தத் திட்டத்தை கடந்த ஆண்டே மகாராஷ்டிர அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. கேஸ் சிலிண்டர்கள் இணைப்பு முத்திரையிடும் பணி 50.24 லட்சம் குடும்ப அட்டைகளில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. பதிவு செய்யாத அட்டைகளை கண்டறிந்து முத்திரையிட்டு அதன் மூலம் 3 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் சேமிக்க இயலும். தற்போது நடப்பில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலம் 31.12.2011 தேதியுடன் முடிகிறது. ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டையில் பெயரை பதிவு செய்தால் அதனை கண்டுபிடிக்க வழிவகைகள் இல்லை. இதன் காரணமாக போலி குடும்ப அட்டைகள் வழங்கப்படும் நிலையும் உள்ளது. இந்தப் பிரச்சனைகளை களைய தற்போது நடப்பிலுள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக பயோ-மெட்ரிக் முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் கணக்கெடுப்பு செயல்பாட்டு இயக்குநர், மக்களின் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண் பாவையை பதிவு செய்து பிரத்தியேக அடையாள எண் வழங்கும் கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு முடிந்தவுடன் அதனைப் பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டைகள் 2012-13ம் ஆண்டில் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 7,21,38,958. குடும்ப அட்டை தொகுப்பின்படி உறுப்பினர்களின் எண்ணிக்கை 8,37,57,610. வித்தியாசம் 1,16,18,652 உள்ளதற்கான காரணம் ஒரே பெயர் பல அட்டைகளில் இருப்பதும், போலி அட்டைகளும் ஆகும். 100 சதவீதம் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து 31 மாவட்டங்களில் 14,29,374 போலி அட்டைகள் கண்டறியப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 2,65,027 அட்டைகள் போலி என கண்டறிந்து ரத்து செய்யப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. |
தமிழக அரசின் இம்முடிவு மிக வரவேற்க வேண்டியுள்ளது.தேவையானவர்கள் குடும்ப அட்டை கிடைக்காமல் அலையும் போது,நியாய விலைக்கடைக்காரைகளும்-அரிசி,மண்ணெண்ணை கடத்துபவர்கள் கை நிறைய குடும்ப அட்டைகளை வைத்து பொருட்களைக் கடத்தி வருகின்றனர்.அலுவலர்களும் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். இது போன்ற் மின்னணு முறையில் குடும்பத்தலைவர் படம்-கைரேகை பதிவுடன் குடும்ப அட்டைக் கொடுப்பதுதான் மக்களுக்கு பயனுள்ளதாக போலிகளை ஒழிக்கும் படியிருக்கும். ___________________________________________________________________________________ வளரும் மக்கள் தொகை இந்த ஆண்டு இறுதியில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என பிரான்சின் தேசிய மக்கள் தொகை ஆய்வு நிறுவனத்தின் (அய்என் இடி) ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. அதன் விவரம்: 19ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலிருந்து உலக மக்கள்தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 200 ஆண்டுகளில் 7 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் 700 கோடியைத் தொடும். 2024ஆம் ஆண்டில் 800 கோடியை தொடும். 21ஆம் நூற்றாண்டின் இறுதியில் இது 900 கோடி முதல் 1000 கோடியை எட்டும். அய்.நா. சபை மற்றும் உலக வங்கி ஆகியவை ஏற் கனவே நடத்திய ஆய்வை ஒட் டியே இதுவும் அமைந்துள்ளது. உலகின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் சீனா, இந் தியா, அமெரிக்கா, இந்தோ னேசியா, பிரேசில், பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய 7 நாடுகளில் உள்ளனர். சீனா 133 கோடி பேருடன் முதலிடத்திலும், இந்தியா 121 கோடியுடன் 2ஆம் இடத்திலும் உள்ளது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் நடைமுறையில் இருப்பதால், மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து உள்ளது. இதனால் 2050ஆம் ஆண்டுக்குள் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்துவிடும். உலக அளவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. |