தமிழர் நிலை



# மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள டோட்டன்ஹேம் பகுதியை சேர்ந்த மார்க் டக்கன், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சாவுக்கு நீதி கேட்டு, பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதையடுத்து, டோட்டன்ஹேம் நகரின் பல இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் போன்றவை தீ வைத்து எரிக்கப்பட்டன.


 டோட்டன்ஹேம் பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், டோட்டன்ஹேமில் ஏற்பட்ட கலவரம் படிப்படியாக, லண்டனின் பிறபகுதிகளுக்கும் பரவியது. பார்க்கும் இடங்களில் எல்லாம், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், ஏ.டி.எம்., இயந்திரங்கள் அனைத்தையும் கலவரக்காரர்கள் தீ வைத்து எரித்ததுடன், அடித்து நொறுக்கினர். சாலைகளில் சென்ற வாகனங்கள் குறிப்பாக, போலீஸ் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில், முகமூடி அணிந்த நபர்கள், கும்பல் கும்பலாக, கடைகளில் புகுந்து பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.


 ஹாக்னே என்ற இடத்தில், 2012ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அங்கும் போலீசார் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கலவரத்தின் மூன்றாவது நாளான நேற்று, லண்டன் நகரை தொடர்ந்து, பிரிட்டனின் இதர வணிக நகரங்களான பர்மிங்காம், பிரிஸ்டல், லிவர்பூல் மற்றும் நாட்டிங்காம் போன்ற நகரங்களுக்கும் கலவரம் பரவியுள்ளது. இதில், பர்மிங்காம் நகரில் இன்று, இந்தியா - பிரிட்டன் இடையே, டெஸ்ட் கிரிக்கெட் தொடர் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, லண்டன் நகரம் முழுவதும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


 பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தனது இத்தாலி விடுமுறை சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டு, நாடு திரும்பினார். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பாக, பார்லிமென்ட் அவசர கூட்டத்தை (கோப்ரா) கூட்டி, பிரதமர் கேமரூன் ஆலோசனை நடத்தினார்.
                                 
கலவரம் தொடர்பாக கேமரூன்கூறியதாவது, " கலவரத்தில் ஈடுபட்டதாக, இதுவரையிலும், 460 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டன் தெருக்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள ப்படும். சட்டத்தின் கடுமையை கலவரக்காரர்கள் உணர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. போலீசார் முழு பலத்தையும் பிரயோகிக்க வேண்டியுள்ளது' என்றார்.


 லண்டனின் வடக்கில் பிரபல தாதாவாக வலம் வந்தவன் மார்க் டக்கன், 30. இவனது பெற்றோர் பிரிட்டன் - ஆப்ரிக்க தம்பதியினர். துவக்க காலத்தில், நண்பர்கள் சகிதமாக, வார இறுதி நாட்களில் மட்டும் லண்டன் தெருக்களில் அடிதடியில் இறங்கி, சாகசம் காட்டி வந்த டக்கன், அதன்பின் வன்முறையை முழு நேர வாழ்க்கையாக மாற்றிக்கொண்டான். ஒரு கட்டத்தில், லண்டனின் பிரபல தாதாக் குழுக்களுக்கு துப்பாக்கி மற்றும் போதைப் பொருட்கள் சப்ளையராக மாறியவன், போலீஸ் கண்காணிப்பில் சிக்கினான். கடந்த 4ம் தேதி, லண்டனில் உள்ள டோட்டன்ஹேமில் மார்க் டக்கனை போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடைய மறுத்த மார்க், ஹாலிவுட் படத்தில் வருவது போல், போலீசாருடன் மோதலில் ஈடுபட்டான். இதையடுத்து, போலீசார் அவனை சுட்டுக் கொன்றனர்.
ஆனால் மார்க் டக்கன் கொலை மட்டும் இக்கலவரங்களுக்குக் காரணமில்லை.அவன் அந்த அளவு மக்கள் செல்வாக்குப் பெற்றவனும்க் இல்லை.கலவரம் வெடிக்க அவன் கொலையை மக்கல் சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.உண்மையானக் காரணம் பல.
* பிரிட்டனில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளது.
* கலவரத்தின் மையப்புள்ளியான டோட்டன்ஹேம் உட்பட ஹாக்னே போன்ற பகுதிகளில், ஆப்ரிக்கர்கள், சீனர்கள், துருக்கியர்கள் என, பல நாடுகளை சேர்ந்த ஏழை மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
* டோட்டன்ஹேமில் மட்டும், 10 ஆயிரம் இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* கிரீஸ் உட்பட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. இதனால், மாணவர்களுக்கு கல்விச் சலுகைகள் நிறுத்தப்படவே, கடந்த சில மாதங்களாக பிரிட்டன் முழுவதும் கல்லூரி மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
* "நாட்டின் ஒரு பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் அடிப்படை வசதிகள் அனைவருக்கும் வேண்டும் என, கேள்வி கேட்டவர்களுக்கு, எதிர்ப்பை பதிவு செய்ய கிடைத்த நல்லவாய்ப்பு தான் மார்க் டக்கன் கொலை, அதைத் தொடர்ந்த கலவரங்கள்' என டோட்டன்ஹேம் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
லண்டனில் வெடித்துள்ள கலவரம் தற்போது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்துள்ளது. லண்டன் ஹக்னிப் பகுதியில் வெடித்த கலவரம் குரொய்டன் பகுதிக்கும் பரவியுள்ளது. அதனை அண்டிய பகுதிகளான டூட்டிங், மிச்சம் மற்றும் பேளி போன்ற பகுதிகளுக்கும் கலவரம் பரவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப் பகுதியில் பெருமளவான ஆபிரிக்கர்கள் வாழ்வதும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதிகளில் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதால் அவர்களுக்கு மத்தியில் பெரும் பதற்றம் தோன்றியுள்ளது.

அவர்கள் வீடுகளும் சூறையாடப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல தமிழர்கள் தமது உடமைகளுடன் அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தங்க ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.




சிந்திப்பார்களா சீமான்கள்........
                                            -----------------------------------------------------------------------------------------------------
                          
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அந்த நாடு விமர்சித்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் ஜெயலலிதாவுக்கு ஒன்று என்றால் ஒடிவந்து போராடுகிறார்.பரவாயில்லை.
கோத்தபய இலங்கை அரசை சேர்ந்தவர்.த்மைழர் படுகொலைகளை நியாயப்படுத்தக் கோருபவர்.அவர் தனது நாட்டிற்கு எதிராகத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை வரவேற்றா அறிக்கை விடுவார்.அவரை பொறுத்தவரையில் அவர் செய்தது நியாயம்.
அதற்கு அவர் மேல் சீமான் பாய்வது எந்தவகையிலும் சரியல்ல.ஜெயலலிதாவே சும்மா இருக்கும் போது ஈழம் வைத்து அரசியல் நடத்தும் இவருக்கு கோபம் வருவது அவரைப் பொறுத்தவரையில் சரியாக இருக்கலாம்.
ஆனால் உண்மைநிலை என்ன ?இலங்கை மீது பொருளாதாரத்தடை விதித்தால் அதில் மேலும் துன்பப்படுபவர்கள் தமிழர்களாகத்தான் இருப்பார்கள்.
ஏற்கனவே இடமின்றி-சரியான வாழ்வாதார வசதிகள் இல்லாமல் திண்டாடும் அவர்கள் .மேலும் வதைக்கப்படுவார்களே ஒழிய நல்லமுறையில் நடத்தப்படமாட்டார்கள்.
அவர்களால்தான் இந்நிலை என இலங்கை அரசும் கொடுமைகளை சுமத்தும் நிலைக்கே தமிழர்கள் ஆளாக்கப்படுவார்கள்.
இப்போதையத் தேவை உலக நாடுகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும்.
அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்த செய்ய வேண்டும்.போர் குற்றங்களுக்கு பக்சே அரசை பொறுப்பேற்க வைத்து அதற்கான தண்டனையை பெற்றுத்தர முயலவேண்டும்.
அய்யா நெடுமாறனும்,தம்பி சீமானும் செயல்பாடுகள் ஈழமக்கள் நலனைக்கருதிதான் என்றாலும் தங்கள் கையில் அதிகாரம் கொட்டிக்கிடப்பது போல் அதை செய்யவேண்டும் -இதை செய்வேன் என அறிக்கைகளிலேயே முடங்கிக்கொண்டிருப்பது சரியான வழியல்ல.
ஒவ்வோரு நாட்டின் தலைவர்களையும் சந்தித்து ஈழ மக்கள் நிலையினை எடுத்துரைத்து பக்சேயின் அரக்கத்தனத்தை பகிரங்கப்படுத்தி அவரை தனிமைப்படுத்தி ஈழமக்கள் நலன்களை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இந்தியா போன்று மொழிவழி மாநிலங்களாக்கி மத்தியில் கூட்டாட்சி கொண்டுவருவதே இப்போதைய நல்வழியாகும். தமிழர் பகுதிகளில் தமிழர்கள் ஆட்சியை ஏற்படுத்திட முயல வேண்டும் .
புலிகளின் தமிழீழம் இப்போதைக்கு கனவாகி போய் விட்ட நிலையில் இதை நோக்கியே தமிழர்கள் தங்கள் பாதையை அமைத்துக்கொள்வதுதான் சரி. 
இங்கிருந்து ஆவேச அறிகையிலேயே ஈழத்தமிழருக்கு செல்லாத ஊருக்கு போகாத வழியைக்காட்ட வேண்டாம்.
 =============================================================================================


   திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனை தூத்துக்குடியில் போலீசார் இன்று கைது செய்தனர்.கடந்த மார்ச் 1ஆம் தேதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவின் போது நடந்த கொலை முயற்சி ஒன்றில் சசிகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் அதில் ஈடுபட்டதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் சசிகுமார் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பெரியசாமியின் ஆதரவாளரான சுரேஷ் கோஷ்டியினர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்திருந்தனர். இந்நிலையில் சுரேஷை கொலை செய்யத் தூண்டியதாக அனிதா ராதாகிருஷ்ணன் மீது புகார் கூறப்பட்டது.  மார்ச் 1ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாகவும், சுரேஷ் கொடுத்த புகார் தொடர்பாகவும் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். திருச்செந்தூரில் இருந்த அவரை தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது ஐபிசி 307 வது பிரிவின் கீழ் கைது செய்தனர். 
இதுவரை நிலமோசடி,மற்றவகைகளில் அனிதாவை கைது செய்ய வில்லையே என பரவலான பேச்சு இருந்தது.அது இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
காரணம் அவர் ஜெயலலிதாவின் கடுங்கோபத்த்க்கு ஆளாகியே அ.தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டவர்.
அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வளர்த்த்வர். இருப்பினும் அவரின் கல்கோரிகள்,சொத்துக்கள் மீது சின்னம்மாவின் கண்பட்டுவிட்டது.அதை தனது பெயரில் எழுதிவைக்கக் கோரி அது முடியாததால் அம்மாவிடமும் போட்டுக்கொடுத்து அங்கும் பருப்பு வேகாததால்  முதல் செயற்குழு க்கூட்டத்திற்கு அழிப்பில்லாமல்போய் விட்டது. தனியேஇவருக்கு மட்டும் செயற்குழு என ஒரு ஊருக்கு வர அழைப்பு அனுப்பப்பட்டதாம்.அங்கு வைத்து பலவந்தமாகவாவது எழுதி வாங்கப்படாலாம் என்று அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தகவல் வந்துவிட அதில் இவர் கலந்து கொள்ளவில்லை.
பின் கட்சியை விட்டு நீக்கப் பட.தனது பாதுகாப்பை முன்னிட்டே அவர் தி.மு.க.வில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.
ஆக இவர் எப்படியும் ஜெயலலிதா ஆட்சியில் துன்பத்தை சந்திப்பார் என்று தொகுதி முழுக்கவே பேச்சு இருந்ததௌ.இதுகூட தாமதமான கைது முன்பே எதிர்பார்த்ததுதான்.
ஆனால் தூத்துக்குடி மாவட்டம் முழுக்க தி.மு.க.தோற்றப்போதும் திருச்செந்தூர் தொகுதியில் இவர் மட்டுமே 4-வது முறையாகத்தேர்ந்தெடுக்கப்பாட்டுள்ளார்.
அதில் இருந்தே இவரின் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம்.
இப்போது அவர் எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதே தெரியவில்லை.அதை போலீசார் மிக ரகசியமாக வைத்துள்ளனர்.இதில் இருந்தே இவ்வழக்கு போலியாக உருவாக்கப்பாட்டது எனத் தெரிகிறது.
அடுத்து யார்? எ.வ.வேலு வாக இருக்கலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?