திங்கள், 3 அக்டோபர், 2011

சுப்பிரமனியன் சுவாமி மாட்டிக்கொண்டார்....?

ஜனதா கட்சி தலைவரும், ஸ்பெக்ட்ரம் வழக்கு இவ்வளவு முக்கியமாகக்காரணமாக இருந்த சுப்ரமணியம் சுவாமி மீது டில்லி போலீசார் எப்.ஐ.ஆர் பதிந்துள்ளனர். பதட்டத்தை ஏற்படுத்தக்கூடிய செய்தியை வெளியிட்டு பதட்டத்தை ஏற்படுத்தியது தொடர்பாக, இந்த எப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளதாகபோலிசார் தெரிவித்துள்ளனர். 
முஸ்லீமகளுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காகத்தான் இந்த முன் தகவல் அறிக்கை என கூறியுள்ளனர்.
                                                 
உண்மையிலேயே அதற்குத்தானா?  
--------------------------------------------------------------------------------------------------------------------
”நோபல்” பரிசுகள் ஆரம்பம்.
                             


இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு நேற்று முதல் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, மருத்துவத்திற்கான பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மனித உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்த்ததற்காக, மூன்று பேருக்கு இப்பரிசு வழங்கப்பட உள்ளது. மருத்துவத் துறையில், மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்திய மூன்று பேருக்கு, இப்பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமெரிக்கரான ப்ரூஸ் பட்லர், பிரான்ஸ் நாட்டவரான ஜூல்ஸ் ஹாப்மேன் மற்றும் கனடா நாட்டவரான ரால்ப் ஸ்டெயின்மென் ஆகியோர், இப்பரிசை பெறுகின்றனர். பரிசுத் தொகையான 1.5 மில்லியன் டாலர் (ஒரு மில்லியன் - 10 லட்சம்; ஒரு டாலர் - ரூ.45) இம்மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இத்தகவல் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு குழுவால் அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு புரட்சிகரமான ஆண்டாக இருப்பதால், டுனீஷியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் நடந்த புரட்சிகளில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கும் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு, இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த விஜய்தான் டேத்தா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணியன் சுவாமிக்கு ஏதாவது நோபல் கிடைக்க வாய்ப்பு உண்டா?

--------------------------------------------------------------------------------------------------------------------------
பதற வைத்த இந்திய பார்சல்.


 அமெரிக்காவின் துணி அதிபர் ஜோ பிடனின் தம்பி பிரான்சிஸ் பிடன். 57 வயதான இவர் தெற்கு புளோரிடாவில் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது.  இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பார்சலை பிரான்சிஸின் தோழி மின்டி  என்பவர் பிரித்துப் பார்த்தார்.
                                            


அதில் வெள்ளை நிறப் பவுடர் இருந்தது. அப்போது அதை வாங்கிப் பார்த்த பிரான்சிஸ் மீது பவுடர் கொட்டி விட்டது. இதனால் பீதியடைந்தார் பிரான்சிஸ். அவரை ஆந்த்ராக்ஸ் பீதி தொற்றிக் கொண்டது. உடனடியாக சுகாதார, காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.


அவர்கள் விரைந்து வந்தனர்.அக்கம் பக்கத்தில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். தெருவையும் மூடி விட்டனர். பின்னர் பிரான்சிஸ் மற்றும் மிண்டி ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக மருந்துகள் கொடுக்கப்பட்டன. பின்னர் மிண்டி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் பிரான்சிஸ் மட்டும் பயம் காரணமாக வரவில்லை. அங்கேயே இரவு முழுவதும் தங்கிக் கொண்டார். ஞாயிற்றுக்கிழமை காலைதான் அவர் விடுவிக்கப்பட்டார்.இந்த பவுடர் குறித்து எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அது அபாயகரமற்றது என்று தெரிய வந்தது. அந்தப் பார்சலில் வேறுஎந்தப் பொருளும் இல்லை. இதுகுறித்து எப்பிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.2001ம் ஆண்டு அமெரிக்காவில் பார்சல்கள் மூலம் ஆந்த்ராக்ஸ் வைரஸ் பரப்பப்பட்டது. இதையடுத்து அமெரிக்க அரசின் வி்ஞ்ஞானி ப்ரூஸ் இவின்ஸ் கடும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் நினைவிருக்கலாம். பார்சல் மூலம் ஆந்த்ராக்ஸைப் பரப்பியதில் 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தது தெற்கு புளோரிடாவில் என்பதால் இப்போது பிரான்சிஸுக்கு வந்த வெள்ளை பவுடரால் அங்கு மீண்டும் பீதி ஏற்பட்டுள்ளது.
அந்த பயம் இருக்கட்டும்.
அது சரி அந்த பவுடரை அனுப்பியது யாராக இருக்கும்.?
________________________________________________________________________