3 லட்சத்திற்கு 5 ஆண்டு,லட்சம் கோடிக்கு....?

அணுமின்நிலைய வரைபடம்,ஒப்பந்த நகல்கள் எதற்கு?

அணு சக்தி மின்நிலைய மத்திய குழு தலைவர் முத்துநாயகம் கூடங்குளம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள்.;-
           
    “கூடங்குளத்தில் ஒவ்வொரு நிபுணரும் தனித்தனியாகவும், குழுக்களாகவும் ஆய்வு மேற்கொண்டார்கள். அணுஉலையின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தோம். எந்த பாதிப்பும் இல்லை. மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்போம். இந்த அணுஉலை ரஷ்யா இதற்கு முன்பு தயாரித்துள்ள இதே போல அணு<உலைகளில் உலக அளவில் மிகவும் நவீனமானதாகும்.இதே போல 20 அணுஉலைகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்ஒப்பபாட்டில் உள்ளன.
ஜப்பானில் பிகுஷிமா அணுஉலை பாதிப்பிற்கு பிறகு சிறப்பு செயல்குழுவினரின் ஏற்பாட்டின்படி மின்சாரம் முழுமையாக தடைபட்டாலும் இயற்கை முறையில் குளிரூட்டும் தன்மை கொண்டது. ஹைட்ரஜனை ஆபத்து காலத்தில் நீராக மாற்றும் தன்மைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அணுஉலையில் குளிர்விப்பானாக பயன்படும் கடல் நீர் மீண்டும் கடலுக்குள் 7 டிகிரி செல்சியஸ் என்ற வெப்ப அளவில் கூடங்குளம் கடல் பகுதியின் வெப்பநிலை குளிர்காலத்தில் 23 டிகிரியாகவும் வெப்பகாலத்தில் 26 டிகிரியாகவும் உள்ளது. எனவே இந்த வெப்பத்தால் மீன்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இன்றைக்கு உலக அளவில் 30 நாடுகளில் 433 அணுஉலைகள் செயல்பாட்டில் உள்ளது. 3 லட்சத்து 66 ஆயிரத்து 560 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. உலகம் முழுவதும் 65 அணுஉலைகள் கட்டப்படுகின்றன. பாகிஸ்தான், சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலும் புதிதாக அணுஉலைகள் அமைக்கப்பட்டுவருகின்றன. வியட்நாம், துருக்கி, வங்கதேசம் ஆகிய நாடுகளிலும் புதிய அணுஉலைகள் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன என்றார்.
அணு உலை பாதுகாப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அணு உலைகளை சூழ்ந்து 2 அடுக்கில் கோபுரக் கட்டுமானம் உள்ளது. பழுது ஏற்பட்டால் குளிரூட்ட 4 வகை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 4 டீசல் என்ஜின் ஜெனரேட்டர்கள் தனித் தனியே அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைக் காற்றைப் பயன்படுத்தி குளிரூட்டும் சாதனம் உள்ளது. மையக்கரு பொருள் எரிந்தாலும் கதிர்வீச்சைத் தடுக்கும் கோர்கேச்சர் சாதனம் உள்ளது.
போராட்டக்குழு சார்பில் 8 கேள்வியும் இதில் 5 ல் தேவையில்லாமல் 50 ஐயங்களை எழுப்பியுள்ளனர். இதற்கும் மத்திய குழு சார்பில் ஒரு பதில் அறிக்கை வழங்கப்பட்டது.
அரசின் சட்டரீதியான விஷயங்களில் மத்திய குழு கேள்வி எழுப்ப முடியாது. எங்களது வரையறைக்கு உட்பட்டுத்தான் நாங்கள் பேச முடியும். நாங்கள் மீண்டும் மாநிலக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை. போராட்டக்குழுவினர் தேவையில்லா சந்தேகங்களை எழுப்புகின்றனர். இவர்களின் கேள்விகள் சந்தேகத்தை தோற்றுவிக்கிறது. அரசு ஒப்பந்தம் - வ‌ரைபடம் எல்லாம் கேட்பது ஏன்?இவை போன்ற விபரங்களைக் கேட்பது அவர்களின் நோக்கத்தின் மீது சந்தேகங்களை உருவாக்குகிறது என்றார்.
அடையாறு புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குனர் சாந்தா கூறுகையில் : கதிரியக்க பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. கதிரியக்க அளவு வரம்பிற்குட்பட்டு தான் இருக்கிறது என்பதுடன் அதன் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை அதனால் கேன்சர் வரும் என்ற வாய்ப்பு இல்லை.என கூறியுள்ளார்.
________________________________________________________________________
சுக்ராம்;3 லட்சம் லஞ்சம்,5-ஆண்டு சிறை.
காங்கிரசைச் சேர்ந்த நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் சுக்ராம்,86. இவரது பதவிக் காலத்தில், அரியானாவைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு கேபிள் சப்ளை செய்வதற்காக, 30 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அளிப்பதற்கு, நிறுவனத்திடம் மூன்று லட்ச ரூபாய் பெற்றதாக, சுக்ராமுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பல நிறுவனங்கள் குறைந்த விலையில் கேபிள் சப்ளை செய்ய முன்வந்த போதும், லஞ்சம் பெற்றதால், அரியானா நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்ததாக, சுக்ராம் மீது குற்றம் சாட்டப்பட்டது. 1996ல் நடந்த இந்த ஊழல் குறித்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி ஆர்.பி.பாண்டே விசாரித்து வந்தார்.இதில், சுக்ராம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக, நீதிபதி நேற்று முன்தினம் தெரிவித்தார். ஆனாலும், அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை

இதைத் தொடர்ந்து, சிறப்பு கோர்ட்டில் சுக்ராம் சார்பில் நேற்று, ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,"எனக்கு தற்போது 86 வயதாகிறது. கடந்த 13 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகி வருகிறேன். வயது மூப்பால் ஏற்படும் நோய்களால் அவதிப்பட்டு வருகிறேன். என் மனைவியையும் இழந்து விட்டேன். எனவே, இந்த வழக்கில் எனக்கு கருணை காட்ட வேண்டும். கருணை காட்டுவதற்கு வயது மூப்பு என்பது, நல்ல காரணம் என்பதை பரிசீலிக்க வேண்டும். ஒப்பந்தம் வழங்கிய விவகாரத்தில், அரசுக்கு இழப்பு எதையும் நான் ஏற்படுத்தவில்லை.  
லஞ்சம் வாங்கியதாக மட்டுமே சி.பி.ஐ., குற்றம் சாட்டியுள்ளது' என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.இதற்கு, சி.பி.ஐ., வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து நீதிபதி அளித்த தீர்ப்பில், அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்ற முன்னாள் அமைச்சர் சுக்ராமுக்கு, ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், நான்கு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

சி.பி.ஐ., வழக்கறிஞர் வாதாடுகையில்
”குற்றம் செய்வதை வழக்கமாகக் கொண்டவர், சுக்ராம். ஏற்கனவே சில வழக்குகளில் இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்குகளிலும், தன் வயதை காரணமாகக் கூறி, கருணை காட்ட வேண்டும் என, இவர் கூறியுள்ளார்
வழக்குகள் கையாளப்படும் போது, வயதை பரிசீலனை செய்ய வேண்டும் என்பது உண்மை தான். ஆனால், இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கு முந்தையது.
தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் லஞ்சம் பெற்ற போது, அவரது வயது எத்தனை என்பதை பார்க்க வேண்டும். எம்.பி.,யாகவும், அமைச்சராகவும் இருந்தவர். இவர் மீது நம்பிக்கை வைத்து தான், இவரை மக்கள் தேர்வு செய்தனர். லஞ்சம் வாங்கியதன் மூலம், தன்னைத் தேர்வு செய்த மக்களுக்கு, இவர் துரோகம் செய்து விட்டார்.”-என்றார்.
பழைய கதை,* ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்கு உபகரணங்கள் சப்ளை செய்ய அனுமதி அளித்த விவகாரத்தில், அரசுக்கு 1.66 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், 2002ல் சுக்ராமுக்கு, மூன்றாண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
* வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், 2009ல் சுக்ராம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

 தாக்குதல் ஏன்?
சுக்ராமுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்ட பின், சிறைக்கு அழைத்துச் செல்வதற்காக, போலீசார் அவரை கோர்ட்டுக்கு வெளியில் அழைத்து வந்தனர். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர், சுக்ராமை தாக்
கினார். அவரை போலீசார் கைது செய்தனர். அந்த நபரின் பெயர் ஹர்வீந்தர் சிங் என, விசாரணையில் தெரிந்தது.ஆனால் எதற்காக அவர் சுக்ராமை தாக்கினார் என்பது தெரிய வில்லை.இன்னும் விசாரிக்கிறார்கள்.
















-------------------------------------------------------------
கனிமொழி ,அடுத்து செல்வி யா?
                  

''முன்னாள் முதல்வர் கருணாநிதி யின் மகள் செல்வி நடத்தும் டெலிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக் கேட்டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட்டல்கள் வருகின்றன...'' எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி  என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதிபர் அதிரடிப் புகார் கொடுக்க... கோபாலபுர ஏரியாவில் புதிய கிடுகிடுப்பு!

புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ''2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவனங்களைச் சேர்ந்த   இருவர்  என்னைச் சந்தித்து, 'ஐஸ் டெலிகாம்’ என்ற கம்பெனியின் வர்த்தகம் குறித்துப் பேசினார்கள். பிறகு சென்னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோட்டில் உள்ள ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி

ஷ்யாமைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அந்த நிறுவனம் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந்தமானது என்பதை அவர்கள் கூறிதான் அறிந்துகொண்டேன். தங்களது நிறுவனமும் இந்த ஐஸ் டெலிகாம் நிறுவனமும் இணைந்து, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க்கிங் பணிகள் நிறைவேற்றுவதற்காக  3,250 கோடிக்கு தென் மாநில டெண்டரைப் பெற்று இருப்பதாகக் கூறினர். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பெயரைச் சொல்லி...  நாடு முழுவதும் இதுபோல  40 ஆயிரம் கோடிக்கு  ஒப்பந்தம் பெற்று இருப்பதாகவும் கூறினார்கள்.
எனக்கு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. என் மூலமாக கூடுதல் விலை வைத்து, அந்தத் தென் மாநில டெண்டரை
 4,000 கோடிக்கு விற்க முடிவெடுத்தனர். இதற்கு, கமிஷன் தொகையாக எனக்கு
 60 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கான கடிதமும் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து, உரிய நிறுவனங்களுடன் பேசி ஒப்பந்தத்துக்கு ஏற்பாடு செய்தேன். என் அழைப்பை ஏற்று, மொபைல் போன் டவர் நிறுவும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென்னைக்கு வந்தனர். அவர்கள் என் விருந்தினர்களாக ஸ்டார் ஹோட்டல்களில் தங்கினர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் மற்றும் சிலரோடு அவர்களைச் சந்திக்கவைத்தேன். வெளிநாட்டினர் தங்கியது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நானே கவனித்துக்கொண்டேன்.
இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து ஆவதற்கு முன், 2ஜி பிரச்னை பெரிதாகி இந்திய அரசியலையே பரபரக்கவைத்தது. அதோடு, ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், செல்வி மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட அனைவரும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டதுடன், தொகை அளிக்கப்படாத பில்களை என்னிடம் விட்டுச் சென்றுவிட்டனர்.
ஷ்யாம் மற்றும் செல்வியை சந்திக்க பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. டெல்லிக்குச் சென்று ஆ.ராசாவை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தபோது, அவரும் கை விரித்துவிட்டார். ஒருவழியாக கனிமொழியைச் சந்தித்தேன். பிரச்னையை முடித்துத் தருவதாக அவர் கூறினார். ஆனால் அதன் பிறகு பல ரவுடிகள் என்னைத் தேடி வந்து மிரட்டினர். இதனால், என் குடும்பத்தினரை பீகாருக்கு அனுப்பிவைக்கும் சூழல் ஏற்பட்டது. இப்போது நான் தனியாகவே வாழ்கிறேன். கடந்த ஒரு வருடமாகவே தி.மு.க-வினரிடம் இருந்து எனக்குத் தொடர்ந்து கடுமையான மிரட்டல்கள் வருகின்றன. எனவேதான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.
எனது சாஃப்ட்வேர் நிறுவனத்தைக்கூட கவனிக்காமல் இவர்களுக்காக இரவு பகலாக அலைந்தேன். அதனால் என்னுடைய சொந்த நிறுவனத்திலும் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது நான் குடும்பச் செலவை சமாளிக்கவே திண்டாடுகிறேன். ஆனால், நான் செலவு செய்த தொகையைக் கொடுக்கக்கூட இவர்களுக்கு மனது இல்லையே...'' என விரக்தியுடன் முடித்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க செல்வியைத் தொடர்புகொண்டபோது, ''சஞ்சீவ்குமார் திவிவேதி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. மேலும், ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் எனக்கு எந்த விதமான வணிகத் தொடர்புகளும் கிடையாது. அப்படி இருக்க யாரோ சிலரின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு என் மீது அபாண்டக் குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார் அந்த மனிதர். எனது பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்ற காரணத்துக்காக, வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறேன். அந்த நோட்டீஸில் உள்ளதுதான் என் கருத்து'' என்றார்.
செல்வியின் வழக்கறிஞர் ரவீந்திரன் சஞ்சீவ்குமாருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ''எனது கட்சிக்காரர் செல்விக்கு அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ள நபர்களுடன் எந்தவிதமான வணிக தொடர்புகளும் கிடையாது. பொய்ப் புகாரை வாபஸ் பெறாவிட்டால், சட்டரீதியாகக் கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறியுள்ளார்.
''ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் தனக்கு வணிகத் தொடர்பு இல்லை என்று செல்வி கூறுகி றாரே?'' என சஞ்சீவ்குமார் திவிவேதியிடம் மீண்டும் கேட்டபோது, ''அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஷ்யாமுடன் செல்விக்கு நன்கு அறிமுகம் உண்டு. இன்னொரு நபரின் பெயரில் அந்த நிறுவனத்தை நடத்துவது செல்விதான்'' என்றார் உறுதியாக.
                           
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு சஞ்சீவ்குமார் திவிவேதியை அழைத்த போலீஸார், அவரிடம் ஆடியோ வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்களாம்.



_______


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?