7 ஆம் அறிவு படத்தில் இடம் பெறும் தமிழன் குறித்த வசனங்களுக்குதான். ஒட்டுமொத்த தியேட்டரும் கைதட்டி ஆர்ப்பரிக்கும் அந்த காட்சிகளில் வசனத்தை உணர்ச்சியுடன் உசுப்பேத்தும்படி உச்சரித்திருக்கிறார் சூர்யா. இப்படிபேசிய வசனங்கள் உள்ள அப் படத்தை அப்படியே இலங்கையில் வெளியிட எதிர்பார்த்தால் நடக்குமா? படத்தில் முக்கியமாக இலங்கையில் ஒன்பது நாடுகள் சேர்ந்து நடத்திய போரை எப்படி வீரம் என்று சொல்ல முடியும் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு இலங்கை சிங்களவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. தற்போது சர்ச்சைக்குரிய இந்த வசனங்களை நீக்கிவிட்டு படத்தை இலங்கையில் படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அந்நாட்டு அரசின் தணிக்கை குழு புத்தருக்கு இணையானவர் போதிதர்மர் என்ற வசனத்தையும், திருப்பி அடிக்கணும் என்ற வசனத்தையும் நீக்கிவிட்டது. எப்படியோ படம் ஓடினால் சரிதான்.
ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள கஸ்னி பகுதியில் தாலிபான்கள் விதவைத் தாய் ஒருவரையும் அவரது மகளையும் கல்லால் அடித்தும் பின்னர் அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும் உள்ளதாக அவர்தம் உறவினர்களும் மருத்துவர்களும் தெரிவித்துள்ளனர்.
ஒழுக்கக்கேடான விஷயங்களில் இந்தப் பெண்கள் ஈடுபட்டதாக தாலிபான்கள் குற்றம்சாட்டுகின்றனர்.தாலிபான்கள் அப்பெண்களை வீட்டை விட்டு வெளியில் இழுத்துப் போட்டு கல்லால் அடித்தும், பின்னர் துப்பாக்கியால் சுட்டு சாகடித்தும் இருந்தனர்.இளம் விதவை ஒருவரும் அவரது மகளும் வாழ்ந்துவந்த வீட்டுக்குள் நுழைந்த தடாலடியாக நுழைந்த தாலிபான்கள், வெளி ஆண்களுடன் உறவு வைத்துள்ளதாக அந்தப் பெண்கள் மீது குற்றம் சாட்டியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்பகுதியின் காவல்துறைத் தலைமையதிகாரி அலுவலகத்துக்கும், ஆளுநரின் அலுவலகத்துக்கும், ஆப்கானிய உளவுத்துறையின் முக்கிய அலுவலகம் ஒன்றுக்கும் வெறும் சில நூறு மீட்டர் தூரத்திலே இப்படி கோர சம்பவம் நடந்துள்ளது.
திருமண பந்தத்துக்கு வெளியில் உறவு வைத்திருப்பவர்கள் பற்றி தகவல் தரும்படி கஸ்னியின் மதத் தலைவர்கள் அண்மையில் ஃபத்வா எனப்படும் மத ஆணைகளைப் பிறப்பித்திருந்தனர் என்று கூறப்படுகிறது
இந்த நகரைக் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆப்கானிய அரசு அதிகாரிகள் திணறிவருகிறார்கள் என்றே தெரிகிறது.
இந்தப்பகுடியில் தாலிபான்கள் தமது ஆளுநர் ஒருவரையும், நீதிபதிகளையும் வைத்துள்ளனர்.
இந்த ஊரில் உள்ள வானொலி நிலையங்கள் சிலவற்றில் தாலிபான்களின் பிரச்சாரப் பாடல்கள் ஒலிபரப்பப்ப்டுவதாகக் கூறப்படுகிரது.
கஸ்னியைச் சுற்றிய இடங்களில் கிளர்ச்சிக்காரர்கள் வெளிப்படையாகவே ஆயுதங்களுடன் உலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.