தனியாத [விலை ஏற்றத்] தாகம்

                     
 பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 1.82 உயர்த்த வேண்டும் என  எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசிடம் கேட்டுள்ளனவாம்.

இப்போது சில நாட்களுக்கு முன்புதான் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 என்ற அளவில் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் ரூபாய் மதிப்புக் குறைவாலும், கச்சா எண்ணெய் விலையின் கடுமையாலும் விலையை உயர்த்த வேண்டியது அவசியம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்தன.
இன்னும் 2 வாரத்துக்குள் இந்த விலையை உயர்த்த வேண்டும் என்றும் பெட்ரோலிய நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
பெட்ரோல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் தற்போது லிட்டருக்கு ரூ 1.50 வரை இழப்பை சந்தித்து வருவதால் சில்லரை விற்பனையில் லிட்டருக்கு ரூ 1.82 வரை விலையை உயர்த்த வேண்டுமாம்.
அது சரி விலையை உயர்த்துவதில் மட்டும் கரிசனம் காட்டும் இந்நிறுவனங்கள் இரு மாதங்களாக கச்சா எண்ணை விலை குறைவாக இருக்கும் போது பெட்ரோல் விலையை குறைக்க கேட்டுக்கொண்டனவா?
இல்லையே? கூடும் விலை முன்பு குறைந்ததில் இருந்துதான் கூடுகிறதே ஒழிய இவர்கள் பெட்ரோல் விலையை உயர்த்தும்போடு இருந்த விலையில் தான் கச்சா எண்ணை இருக்கிறது.
 முதலில் ரூ1.50 வரை எண்ணை நிறுவனங்கள் இழப்பை சந்திப்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கை எனப்படும் உள்ளதை -உள்ளபடி கூறும் அறிவிக்கை வெளியிடட்டும்.
இழப்பை சந்திக்கும் இந்த எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஆண்டுதோறும் லாபத்தில் ஈவுத்தொகை ஆயிரக்கணக்கான கோடியில் கொடுப்பது எப்படி?
”இந்து”போன்ற நாளிதழ்களில் ஆண்டறிக்கையில் லாபத்தொகைக் கோடு மேல்நோக்கியே ஏறுமுகமாக இருப்பது எவ்வாறு?


______________________________==============________________________________
மீண்டும் வாய்தாவை நோக்கிய பயணம்.
சொத்துக்குவிப்பு வழக்கில், நேரி்ல் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி கடந்த மாதம் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் கடந்த 20 மற்றும் 21 தேதிகளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் நேரில் காலை முதல் மாலை வரை இரண்டு நாட்களும் நீதிமன்றத்தில் ஜெயலலிதாநீதிபதியின் நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதையடுத்து, மேலும் கேள்விகள் பாக்கியிருப்பதால், நவம்பர் 8-ம் தேதி மீண்டும் நேரில் மின்னிலையாக வேண்டும் என ஜெயலலிதாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
                       அப்போது தலையாட்டிவந்த ஜெயலலிதா இப்போதுஉச்சநீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில்”தான் கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக, 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். அந்தப் பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.இரண்டு நாட்கள் நடந்த விசாரணையில், மொத்தமுள்ள 1500 கேள்விகளில் 567 கேள்விகளுக்கு தான் பதிலளித்திருக்கும் நிலையில், அந்த விசாரணை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நடக்கும் என்று சொல்ல முடியாது.ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால், கூப்பிடும்போதெல்லாம் நீதிமன்றத்துக்கு வருவது இயலாது.மீதமுள்ள கேள்விகளுக்கு தான் எழுத்துமூலம் பதிலளிக்கத் தயாராக இருப்பதால், இனிமேல் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.
வரும் நவம்பர் 8-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்றும் ஜெயலலிதா தனது மனுவில் கோரியுள்ளார்.
விரைவில் இம்மனு விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

கூப்பிடும் போது வர இயலாத முதல்வர் கொடநாடு,சிறுதாவூர்,ஹைதராபாத் போன்ற இடங்களில் மட்டும் மாதக்கணக்கில் ஓய்வெடுப்பது எப்படியோ?
----------------------------------------’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’--------------------------------------------------------------------
How the Qaddafis lived: In pics


                                      மேலே படத்தில் இருப்பது லிபிய கடாபி யின் ”தங்க”இருக்கை.[சோபா]
_______________________+++++++++++++++++++++++++++____________________________________

ஒருலட்சம்பேர் வேலை இழப்பு.?
                            
இந்திய தொலைத்தொடர்பு சேவையின் துவக்க காலத்தில், பி.எஸ்.என்.எல்., நிறுவனமே பிரதானமாக இருந்தது. தனியார் நிறுவனங்களின் வருகைக்கு பின், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சியும், வருவாயும் குறைந்து போனது. இதனால், அரசின் தனியார்மய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழலை எதிர்த்தும், பி.எஸ்.என்.எல்., தொழிற்சங்கங்கள் கூட்டாக போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், நஷ்டத்தை ஈடுகட்டும் நோக்கில் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., துவக்கியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையை பி.எஸ்.என். எல்., நிர்வாகம், தொழிற்சங்கங்களுடன் டில்லியில் நடத்தியுள்ளது. இது, பி.எஸ்.என். எல்., ஊழியர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து, பி.எஸ். என். எல்., கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறியதாவது:பி.எஸ்.என்.எல்., 2004-05ம் ஆண்டில், 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டியது. அதன் பின், மோசமான நிர்வாகத்தால், வருவாய் படிப்படியாக குறைந்துள்ளது. இந்த ஆண்டு, 6,000 கோடி ரூபாய் வரை நஷ்ட கணக்கு காட்டப்படுகிறது."நாடு முழுவதும், 2.5 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஒரு லட்சம் ஊழியர்கள் உபரியாக இருக்கின்றனர்; இவர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்து, மாதாந்திர செலவினத்தை கட்டுப்படுத்தி, நஷ்டத்தை ஈடுகட்டலாம்' என, பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் கருதுகிறது.வி.ஆர்.எஸ்., திட்டத்தை செயல்படுத்த, ஊழியர்கள் மற்றம் அதிகாரிகளின் தொழிற்சங்கங்களுடன் டில்லியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது, ஊழியர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. விருப்ப ஓய்வு அளிக்க, சாதாரண ஊழியர் முதல் உயரதிகாரிகள் வரை ஆசை வார்த்தை காட்டுகின்றனர். மும்பையில் எம்.டி.என். எல்., நிறுவனமாக இருந்த போது, லாபத்தை அதிகரிக்க விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்தினர். ஆனால், லாபம் கிடைக்கவில்லை. உண்மையில், ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளித்தால், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சி முற்றிலும் பாதித்துவிடும். தற்போதே பணிகள் தேங்குகின்றன. ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் விலகினால், ஒட்டுமொத்த பணியும் வெகுவாக பாதித்துவிடும்.விருப்ப ஓய்வு தொடர்பாக, டில்லியில் பேச்சு நடக்கிறது. இதுவரை எழுத்துப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வரவில்லை.
ஏற்கனவே வெளியில் வேலைவாய்ப்பு இல்லாதநிலையில் வேலை பார்ப்பவர்கலையும் வீட்டுக்கு அனுப்புவது சரியான செயலாக தெரியவில்லை.லட்சம் கோடிகணக்கில் ஊழல் நடக்கும் நிறுவனத்தில் அதை சரிசெய்யாமல் நட்டம் எனக்காண்பித்து வேலைபார்ப்பவர்களை வீட்டுக்கு அனுப்புவது சரியா?
________________________________________________________________________________________ 
கனிமொழி
கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்குபிணை...?.
கனிமொழி
அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஷரத்குமார், குசேகான் நிறுவன இயக்குநர்கள் ஆஸிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால், திரைப்படத் தயாரிப்பாளர் கரிம் மொரானி ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்றத்தில் முடிவடைந்து, தீர்ப்பு 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், யுனிடெக் நிறுவனமேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச சிபிஐ ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும், அவர்களுக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்று வாதிட்டார்.
மேலும், சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை நடைபெறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை சிபிஐ எடுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. ஆனால், அக்டோபர் 24-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில், கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதி்ர்க்கவில்லை என்று ராம்ஜெத்மலானி சுட்டிக்காட்டினார்.
அப்போது, நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எச்.எல். தத் குறுக்கிட்டு, அது உண்மையா என்று கேள்வி எழுப்பினார்கள். அக்டோபர் 24-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரங்களை செவ்வாய்க்கிழமை தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிடர் ஜெனரலுக்கு உத்தரவிட்டார்கள்.
அதன்படி, ஹரின் ராவல் இன்று உச்சநீதிமன்றத்தில் அதுபற்றிய விவரங்களைத் தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையின்போது, கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள்தான் என்றும், அதே நேரத்தில், அதுபற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்ததாக, ஹரின் ராவல் சுட்டிக்காட்டினார்.
 சஞ்சய் சந்திரா உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இதுதொடர்பாக நடந்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அந்த ஐந்து பேரும் வெளியில் விடப்பட்டால், சாட்சிகளை அழிக்க மாட்டார்கள் என சிபிஐ கருதும்பட்சத்தில் அவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பது ஏன் என நீதிபதிகள் கேட்டனர்.தொடர்ந்து நீதிபதிகள் தெரிவிக்கும்போது, நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரங்களை இன்று ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பதாகக்கூறினார்கள். நேற்று நடந்த விசாரணை விவரங்கள், ஊடகங்களில் முழுக்க முழுக்க தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்றுதான் இந்த நீதிமன்றம் கேட்டது. ஆனால், ஊடகங்கள் தங்கள் விருப்பம்போல் ஏதேதோ எழுதியிருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நீதிபதிகள்கூறினார்கள்.
.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?