பெண் என்றால் எல்லோரும் இரங்க வேண்டுமா?

                    
 பிணைகோரி மனு தாக்கல் செய்த எட்டுப் பேரில், கனிமொழி மற்றும் நான்கு பேரை ஜாமினில் விட, சி.பி.ஐ., எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆனால் ஷாகித் பல்வா, சந்தாலியா மற்றும் பெகுராவை ஜாமினில் விட எதிர்ப்புத் தெரிவித்தது. கனிமொழி பெண் என்பதாலும், கரிம் மொரானி இதய நோயாளி என்பதாலும் அவர்களுக்கு சலுகை காட்ட வேண்டும் என்று அவர்களது வழக்குரைஞர்கள் வாதிட்டார்கள். ஆனால் கனிமொழி உள்ளிட்ட எட்டு பேரின் பிணை கோரும் மனுவையும் நீதிபதி ஓ.பி. சைனி தள்ளுபடி செய்து விட்டார்.. மேலும்,”பெண் என்பதால் கனிமொழிக்கு பிணை தரவேண்டிய கட்டாயமில்லை என்றும் வரும் 11ம் தேதி முதல் இவ்வழக்கின் விசாரணைஆரம்பம்.பெண்களைப் பொருத்தவரை, பொதுவாக அவர்கள் பலவீனமானவர்கள், சமுதாயம் அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்திக் கொள்வதால், அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பும், கரிசனமான அணுகுமுறையும் காட்டப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதேபோல், ஒருவரை காவலில் வைத்திருப்பதால் அவரது உடல்நிலைக்கு ஆபத்து என்று கூறி விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த சலுகைகள் கனிமொழிக்கும், கரிம் மொரானிக்கும் காட்டப்பட வேண்டுமா என்று கேட்டால், கண்டிப்பாக `இல்லை’ என்றும், .” என்றும் நீதிபதி கூறினார்.”ஏற்கெனவே பிணைமனுக்கள் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அல்லது வெளியிலிருந்து வரும் செலுத்தப்படும் செல்வாக்கு உள்பட எந்தவித காரணங்களாலும் இந்த ஆனை வரவில்லை என்றும், முழுக்க முழுக்க சட்டத்தின் அடிப்படையிலும், நீதியை மனதில் கொண்டும் இந்த ஆணை பிறப்பிக்கப்படுவதாகவும்” நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.  இந்த வார்த்தைகளை ஷைனி எதற்காக தேவையின்றி குறிப்பிட்டுள்ளார்?அப்போது வெளியில் இருந்து யாரோ பிணை வழங்கக்கூடாது என்பதில் தீவிரமாக செயல் படுவது போல்தெரிகிறது.அந்த சக்தி யார்?ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்பது ரகசியமாக உள்ளது.ஆக மொத்ததில் ஷைனி நீதிபதி இருக்கையில் இருக்கும் வரை கனிமொழிக்கு பிணை கிடைக்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. கனிமொழி மீது அவருக்கு சி.பி.ஐ.பினைகொடுக்க எதிர்ப்பு தெரிவிக்காதபோதும் பிணை கொடுக்க மறுக்கும் அளவு என்ன எண்ணமோ?
குற்ற சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடங்கிய பின்குண்டு வைத்த தீவிர வாதிகளுக்கே பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு அடிப்படை ஆதாரமுமின்றி வழக்கு ஆரம்பித்தபின்னரும் பிணை வழங்க மறுப்பதை பலரும் தேவையற்ற நிலை என்றே கூறுகின்றனர். 
இந்த ஜாமீன் விஷயத்தில் நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு நீதி தவறிய செயல் என்றே நான் கருதுகிறேன். இந்த நீதிமன்றத்தின் தவறை திருத்தி உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறேன்.
ஜாமீன் கோரும் ஒரு நபர், தலைமறைவாக வாய்ப்பு இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்துவிடுவார் என்ற நிலையிருந்தால்தான் ஜாமீனை மறுக்க முடியும். இந்த வழக்கில் கனிமொழி இதுபோன்று நடந்து கொள்ள எவ்வித வாய்ப்பும் இல்லாதபோதும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது சரியல்ல’ என்று பிரபல வழக்குரைஞர் ராஜ்ஜெத்மலானி கூறியுள்ளார்.
                    திகாரில் இருந்து வர முதலில் காரை தயார் செய்யுங்க....                
_______________________________________________________________________
”முகமது நபி கேலி”  பத்திரிக்கை அலுவலகம் எரிப்பு.
                                        

முகம்மது நபிகள் பத்திரிகையாசிரியராக இருந்து உருவாக்கியதுபோன்ற கற்பனையில் சிறப்பு பதிப்பொன்றை”பிரான்ஸில் உள்ள ”சார்லி எப்தோ” எனும் நையாண்டி பத்திரிக்கை வெளியிட்டிருந்தது
ஷரியா சட்டங்களையும், துனிஷியா மற்றும் லிபியாவில் அண்மையில் கிளர்ச்சியாளர்களின் வெற்றிபெற்றதையும் இந்த இதழில்நையாண்டி செய்திருந்தது.
சார்லி எப்தோ பத்திரிகையின் அலுவலகங்களுக்கு தீவைத்தது இஸ்லாமியஅடிப்படைவாதத்தினர் கள்தான் என தெரியவந்துள்ளது.
”இச்செயல் ஐரோப்பிய நாடுகளின் பேச்சு,எழுத்து சுதந்திரத்துக்கும்எதிரான இஸ்லாமிய அடிப்படை வாதிகள் செய்துள்ள பதட்டம் தரும் செயல்”.என பிரான்ஸ் பிரதமர் ‘பிரன்சுவொ பியோன்”தெரிவித்துள்ளார். 
ஐந்து கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் ஐரோப்பா நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால் சில இஸ்லாமிய பழக்கங்களும் நம்பிக்கைகளும்- பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம் போன்றவை  கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமேற்குலகுடன் பொருந்திப்போக முடியாது என்ற கருத்து செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளில் வலுப்பெற்றுவருகிறது.
முகமது நபியை சித்திரமாகக் காட்ட இடம்தந்தால், அது உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்துவிடும் என்று முஸ்லிம்கள் கருதுகின்றனர்.குரானில் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கவில்லை என்றாலும், முகமது நபியை எந்த வகையில் வரைந்து காண்பிப்பதென்பதும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு விஷயமாகவே நூற்றாண்டுகள் காலமாக முஸ்லிம்கள் நம்பிவருகிறனர்.

டென்மார்க் கேலிப்படவிவகாரம்

2005,2006 -ம் ஆண்டுகளில் முகமது நபியின் கேலிச் சித்திரம் டென்மார்க்கில் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டபோது, தங்களது மத நம்பிக்கை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாவதாக முஸ்லிம்கள் கோபமடைந்தார்கள்.
வெடிகுண்டு தலைப்பாகை அணிந்தவராக முகமது நபியைக் சித்தரித்து, அதன் மூலம் பயங்கரவாதத்தை இஸ்லாத்துடன் நேரடியாகத் தொடர்புபடுத்திய குறிப்பிட்ட ஒருகேலிப்படத்தை அந்த பத்திரிகை வெளியிட்டிருந்ததால் முஸ்லிம்கள் கொதித்தெழுந்தார்கள்.
ஐரோப்பாவிலும், மத்திய கிழக்கிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மேற்குலக நாடுகளின் தூதரகங்கள் தாக்கப்பட்டன. கொலை மிரட்டல்கள் வந்ததால் கேலிப்படம் வரையும் ஓவியர்கள் சிலர் தலைமறைவாக வேண்டிய நிலையும்ஏற்பட்டது.
________________________________________________________________________________________________________
புரட்சித்தலைவியின் புரட்சி இலவசம்.
                   
இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
”முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மகளிர் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறைக் கொண்டு பல முன்னோடி திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகிறது.   

தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில்  ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.
 

இதனைச் செயல்படுத்தும் விதமாக, அனைத்து கிராமங்களில் உள்ள 10 முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) வழங்கிட ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

இந்தத்  திட்டத்தின்படி கிராமத்தில் வாழும் இளம் பெண்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) கொண்ட ஒரு பை வீதம், மூன்று பைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.  அதாவது ஒவ்வொரு ஆண்டும் 18 பைகள் ஒவ்வொரு வளர் இளம் பெண்ணுக்கும் வழங்கப்படும்.   


இந்த மாதவிடாய் பஞ்சுகள், அரசு பள்ளிகளில் பயிலும் வளர் இளம் மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவும், மற்ற வளர் இளம் பெண்களுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட மையங்களில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் கிராமங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர்கள் மூலமாகவும் வழங்கப்படும்.
 

மேலும், இந்தத் திட்டத்தின்கீழ் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கிராம சுகாதார துணை நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட ஏழு பைகள் வழங்கப்படும்.
 

இதுவன்றி சிறைச்சாலைகளிலுள்ள பெண் கைதிகளுக்கும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ஆறு மாதவிடாய் பஞ்சுகள் கொண்ட மூன்று பைகள் வழங்கப்படும்.
 

பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் பஞ்சுகளை தூக்கி குப்பையில் எரிந்து சுற்றுப்புற சுகாதாரம் மாசு அடைவதை தடுக்க அந்தந்த கிராமப்பகுதிகளில் குழிகள் தோண்டி புதைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் இளம் பெண்களால் பயன்படுத்தப்பட்ட பஞ்சுகளை சுகாதார முறையில் அழிக்க சூளை அடுப்பு நிறுவிடவும்” முதல்வர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இலவசங்கள் கொடுக்க புதுசு ,புதுசா கண்டு பிடிக்கிறாங்களே.
                                               
                                       

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?