திருடிய ஆப்பிள்,
அமெரிக்காவின் உட்பிரிட்ஜ் பகுதியை சேர்ந்தவர் டேவிட் ஜெலர்ட்னர். வயது 56. மிரர் வேர்ல்ட்ஸ் என்ற தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் நடத்துகிறார்.1993ல் டேவிட் ஜெலர்ட்னர் போட்டி நிறுவனங்களை சேர்ந்த யாரோ அனுப்பிய பார்சல் குண்டு வெடித்து ஒரு கண் பார்வை இழந்ததுடன் பலத்த காயம் அடைந்தவர்இவர்.
தனது கண்டுபிடிப்புகளை திருடி கணணி, ஐபோன், ஐபாட்களில் சமீபத்தில் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு முன் அதே குற்றச்சாட்டில் வழக்கு தொடர்ந்தார் டேவிட். அதில் அவரது பக்கம் ஆதாரம் இருப்பதாக கூறிய விசாரணை நீதிமன்றம் ரூ.62.5 கோடி டாலர் இழப்பீடு தொகை வழங்குமாறு ஆப்பிள் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அதை எதிர்த்துஆப்பிள் தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரலில் வெளியானதீர்ப்பில் காப்புரிமை பெற்ற டேவிட்டின் கண்டுபிடிப்புகள் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் தொழில்நுட்பங்களுடன் பொருந்துவது உண்மைதான். எனினும் அவை திருடி பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறி இழப்பீடு வழங்குவதை நிராகரித்தது.
இதுபற்றி டேவிட் கூறுகையில், ஆப்பிள் நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் ரூ.62.5 கோடி டாலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு வந்ததும் அமெரிக்க மக்கள் அனைவரும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன். தனியார் விமான நிறுவனம் ஒன்று போன் செய்து, தனது பணக்கார பயணிகள் பட்டியலில் சேருமாறு அழைப்பு விடுத்தது.
ஆனால் 4 மாதங்களில் நிலைமை தலைகீழானது. மேல்முறையீட்டில் எனது தொழில்நுட்பம் காப்பி அடிக்கப்பட்டதை ஏற்பதாக அறிவித்தும் ஆதாரமில்லை என்று கூறி நிராகரித்ததில் வானத்தில் இருந்து கீழே விழுந்தது போல இருந்தது. எனினும் மனம் தளராமல் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளேன் என்றார்.
இவரின் தொழில் நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் பயன் படுத்துவது உண்மை என்றால் இவர் வாதமும் உண்மைதானே.ஒருவர் காப்புரிமை பெற்ற தொழில் நுட்பத்தை மற்றவர் பயன் படுத்தி தனதாக்குவதற்கு என்ன பெயர் ?காப்புரிமை சட்டத்திற்குதான் என்ன தேவை?.நீதிமன்றம் இவருக்குஇப்போதாவது நியாயம்-இழப்பீடு கிடைக்க செய்யுமா?