எங்கே செல்லும் இந்த பாதை,,,?

”கனிமொழிக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது, இது இந்திய ஜனநாயகம் எங்கே செல்கிறது என்ற கவலையை ஏற்படுத்துகிறது. இந்திய ஜனநாயகத்தின் தூணாக நீதிமன்றங்கள் விளங்குகின்றன. இந்நிலையில், கோர்ட்டில் கனிமொழியின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, இந்திய ஜனநாயகம் எங்கே செல்கிறது என்ற கவலையையும், எதிர்காலம் குறித்த பயத்தையும் ஏற்படுத்துகிரது. நல்லது நடக்கும் என நம்புவோம் . கனிமொழிக்கு நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு பின்னால் மறைமுக சக்திகள் இருக்கிறதா?”
-இவை எல்லாம் கனிமொழிக்கு பிணை மறுக்கப்பட்டதால் கருணாநிதி புலம்பிய வார்த்தைகள்.
                       
இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் எனத்தெரியாத அளவு இருக்க கருணாநிதி என்ன அனுபவமற்ற அரசியல்வாதியா?
தங்கள் ஆட்கள் மாட்டிவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதியைக்கூட திகாருக்கு அனுப்ப தயாராக உள்ள “கூடா நட்பு”கூட்டணியினர் கையில்தான் சி.பி.ஐ.உள்ளது.
மாயாவதியையும் ,முலாயம் சிங் யாதவையும்,லல்லு பிரசாத் யாதவையும் அணு சக்தி ஒப்பந்த வரைவு,புதிய ஓய்வூதிய வரைவு போன்றவைகளில் இடதுசாரிகளுக்கு எதிராக -தனக்கு ஆதரவாக வாக்களிக்க வைத்த ஆயுதம் சி.பி.ஐ.தானே.காங்கிரசு அதாவது சோனியா-ராகுல் குடும்பத்தின் கட்டளையின்படிதானே அது செயல்படுகிறது.
எந்தவகையிலும் தி.மு.க.விற்கோ தனிப்பட்ட முறையில் கலைஞருக்கோ உதவாத முடிந்தால் மாட்டி விட்டு தாந்தப்பித்துக்கொள்ளும் காங்கிரசை இன்னும் எதற்காகக் கட்டி அழுகிறார் என்றே தெரியவில்லை.சி.பி.ஐ.இடம் இருந்தும் காப்பாற்ற வில்லை.
இங்கு தமிழ் நாட்டில் அம்மையார் கட்சியினர் அனைவரையும் உள்ளே தள்ளுவதிலும் இருந்து காப்பாற்ற வில்லை.
பிறகு எதற்கு கூட்டணி? அவர்கூறும் கூட்டணி தர்மம்.?
அதுமட்டுமல்ல கூட்டணிக்கட்சியினர் எனக்கூறிக்கொண்டே தி.மு.க.வையும் தனிப்பட்ட முறையிலும் விமர்சித்துக்கொண்டிருக்கும் காங்கிரசு கூட்டணி ,ஆதரவை தி.மு.க.வின் கீழ்மட்டத்தொண்டரும் விரும்பவில்லை.பின் எதற்கு தி.மு.க.-காங் கூட்டணி. இவர்களின் கூட்டணி மிக வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
விலகினால் ஆபத்து என்ற பயமா?பழிவாங்கி விடுவார்கள் என்ற கவலையா?
இன்னும்காங்கிரசு தி.மு.க.வையும் ,கருணாநிதி குடும்பத்தையும் பழிவாங்க பாக்கி இருக்கிறது.?
ஒரு வேளை கருணாநிதிக்கு தனக்கும் திகாரில் அறையை ஒதுக்கி விடுவார்களோ என்ற பயமா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கணினியுலகக் கொள்ளையர்?
                      

இணையதளங்களில் தெரியும் பொருளுக்கான விளம்பரங்களை பாப்பவர்கள் விபரம் காண அதைசொடுக்கினால் அது அவர்களை குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கான இணையதளத்துக்கு இட்டுச் செல்லாமல், இவர்களுடைய சட்டவிரோத கணினி சர்வர்களினால் விளம்பரம் செய்யப்படும் வேறு பொருட்களின் விளம்பரங்களுக்கு கொண்டு சென்று விட்டிருந்தன.
இவர்கள் வழியாக எத்தனை பேர் தமது விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த பொருளின் விற்பனையாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்கள்.
இந்த ஏமாற்று வேலையின் மூலம் இந்தக் கும்பல் 14 மில்லியன் டாலர்களை சம்பாதித்திருந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வால் ஸ்டிரீட் பத்திரிகையின் இணையதளத்தில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்ட் விளம்பரம் ஒன்று தெரிகிறது. அதனை ஒருவர் பார்வையிட சொடுக்கினால் அவரது திரையில் "ஃபாஷன் கர்ல் எல்.ஏ." என்ற இணையதளத்தின் விளம்பரம் தோன்றும்.
பாவனையாளரின் கணினியில் அண்டி வைரஸ் மென்பொருள் இருந்தாலும். இவற்றை அடையாளம் கண்டு தடுக்க முடியாத வகையில் இந்தக் கும்பலின் சட்டவிரோத மென்பொருள் அதிநவீனமாக வடிவகைக்கப்பட்டிருந்தது.


அமெஸான் இணைய விற்பனை நிறுவனம்,நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர்.
             எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளையர்கள்" என்று குறிப்பிடுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தாய்லாந்து வெள்ளம்.பாதிப்புகளை அகற்றும் பணியில் யானைகள்.
                வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட புத்தர் சிலை.
  ----------------------------------------------------------------------------------------------------------------------------
       என்ன மறுபடியும் பெட்ரோல்விலையைக் கூட்டப்போறாங்களா?                   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?