அதிகமான சாதனை,


100-படத்தில் ஜாக்கிசான்,
                       8 ஹாலிவுட், சீனா, ஜப்பான் படங்களில்நடிகர்கள்100 வரைநடிப்பது அபூர்வம். ஜாக்கி சான் 1911 என்ற படத்தின் மூலம் 100-வது படம் என்ற எண்ணிக்கையை தொட்டிருக்கிறார். வர்க்க போராட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த சீனாவை 1911-ம் ஆண்டு நடந்த மக்கள் புரட்சி குடியரசு நாடாக்கியது. அந்த வரலாறுதான் படமாகி இருக்கிறது. சீன ராணுவத்தின் முதல் தலைமை கமாண்டராக வேடம் ஏற்றிருக்கிறார் ஜாக்கி. 

இதற்காக ராணுவ முகாம்களில் தங்கி சிறப்பு பயிற்சி பெற்றார். அவரது வழக்கமான பாணி சண்டை போல அல்லாமல், மாறுபட்ட காட்சிகளில் நடித்திருப்பதுடன் அவரே இயக்கியும் இருக்கிறார். 

100 வருடத்துக்கு முந்தைய வரலாற்றை மையமாக வைத்து தனது 100-வது படமாக அவர் தந்திருப்பதும் சிறப்பு. சீனாவில் 1911 படம் வெளியாகிவிட்டது. மற்ற நாடுகளில் 11-11-11ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிருந்தார்கள். மழை உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போடப்பட்டு, உலகம் முழுக்க 18-ம் தேதி வெளியாகிறது.
_________________________________________________________________________________
        11-11-11


                                   
வெள்ளிக்கிழமை 11.11.11 என்பதால், சிறந்த நாளாக உலகம் முழுவதும்சிலர் கருதுகின்றனர். குறிப்பாக சீனாவில் ஆயிரக்கணக்கானோர் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இன்றைய தேதி, மாதம், ஆண்டு 11.11.11. என எல்லா எண்ணும் ஒன்றில் வருவதால் மிகச் சிறப்பான நாளாக கருதுகின்றனர். எனவே, குழந்தை பெற்றுக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்ளவும், மற்ற முக்கிய விஷயங்களை தொடங்கவும் பலர் திட்டமிட்டுள்ளனர். சீனாவில் ஆயிரக்கணக்கான ஜோடிகள் இன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகாதவர்கள், திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்கள் கூட, இந்த நாளை விட்டுவிட மனமில்லாமல் அவசர அவசரமாக ஜோடி பார்த்துள்ளனர். இன்றை நாளை மிக கோலாகலமாகவும் சீனர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஷாங்காய் நகரில் 3,000க்கும் அதிகமானோர் இன்று திருமணம் செய்து கொள்ளபதிவு செய்துள்ளனர். நூறு ஆண்டுக்கு ஒரு முறைதான் இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கும். அதுவரை காத்திருக்கவும் முடியாது என்பதால் இந்த நாளில் திருமணம் செய்து கொள்கிறோம் என்று  கூறியுள்ளனர்.  தலைநகர் பீஜிங் உள்பட பல நகரங்களிலும் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக உள்ளனர். திருமண ஏற்பாடு செய்யும் ஏஜென்சிகளும் இந்த நாளில் மணமக்கள் ஏற்பாடுகள் செய்வதின் மூலம் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றன.
                              
 ____________________________________________________________________________________________

இந்தியாவிலேயே அதிக சம்பளம்
 வாங்கும் பெண் நிர்வாகிகள் பட்டியலில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மனைவி காவேரி மாறன் முதலிடத்தில் இருக்கிறார். இவரது ஆண்டு சம்பளம் ரூ. 64.4 கோடியாகும்.

ஆண் நிர்வாகிகளில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். 2வது இடத்தில் கலாநிதி மாறன் இருக்கிறார்.

பார்ச்சூன் இதழ், இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓக்கள், நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் நவீன் ஜின்டாலும், பெண்கள் பிரிவில் காவேரி கலாநிதி மாறனும் முதலிடத்தில் உள்ளனர்.
காவேரி கலாநிதி மாறன் இந்தியாவின் பத்து அதிக சம்பளம் வாங்கும் பெண் நிர்வாகிகள் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சன் டிவியின் இணை நிர்வாக இயக்குநர் ஆவர். இவரது வருடாந்திர சம்பளம் ரூ. 64.4 கோடியாகும்.

2வது இடத்தில் இருப்பவர் பெனின்சுலா லேன்ட் நிறுவனத்தின் தலைவர் ஊர்வி பிரமாள். 3வது இடத்தில் அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரீத்தா ரெட்டி இருக்கிறார். 4வது இடத்தில் பிரிட்டானியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினீதா பாலி இருக்கிறார்.

ஆண்கள் பிரிவில் முதலிடத்தில் இருப்பவர் நவீன் ஜின்டால். இவரது ஆண்டு வருமானம் ஆண்டுக்கு ரூ. 69.7 கோடியாகும்.
2வது இடம் கலாநிதி மாறனுக்குக் கிடைத்துள்ளது. கலாநிதி மாறனின் ஆண்டு வருமானம், 64.4 கோடியாகும். அதாவது இவரும் மனைவி காவேரியும் ஒரே சம்பளம் வாங்குகின்றனர். கடந்த 2010-11ல் கலாநிதியின் சம்பளம் 73.68 சதவீதம் அதிகரித்துள்ளது. டிவி சானல்கள், ஸ்பைஸ்ஜெட் விமான சேவை உள்ளிட்ட பல பிசினஸ்களில் ஈடுபட்டுள்ளார் கலாநிதி மாறன். இவரை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை தென்னிந்தியாவின் தொலைக்காட்சி ராஜா என்று வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஒட்டுமொத்த இந்திய சிஇஓக்கள் பட்டியலில் அதிக சம்பளம் வாங்குவோரில் கலாநிதி மாறன் 2வது இடத்திலும், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் 3வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அதிக சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்கள் அல்லது நிர்வாகிகள் பட்டியலையும் பார்ச்சூன் வெளியிட்டுள்ளது. அதில், முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயலதிகாரி சந்தா கோச்சார். 2வது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் சிஇஓவான ஷிகா சர்மாவும், 3வது இடத்தில் டபே தலைவர் மல்லிகா ஸ்ரீனிவாசனும் உள்ளனர். 4வது இடத்தில் காக்னிசன்ட் தலைமை செயல் அதிகாரி அருணா ஜெயந்தி உள்ளார்.
____________________________________________________________________________________________
 இலங்கை தீர்வின் திசை வேண்டி
                                                                                                          -மதுக்கூர் இராமலிங்கம்
மாலத்தீவில் சார்க் நாடுகள் கூட் டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. மாலத்தீவு புறப்படும் அவசரத்தில் கூட பிரதமர் மன்மோகன் சிங் ஒரு விஷயத்தை திட்டவட்டமாக தெரிவித்துவிட்டுத்தான் புறப்பட்டார். அதாவது, உயர்த்தப்பட்ட பெட் ரோல் விலையை குறைக்கும் பேச்சுக்கே இட மில்லை. அதுமட்டுமல்ல, இனியும் உயர்த்தப் போவதில்லை என்ற உத்தரவாதத் தையும் வழங்க முடியாது என்பதுதான் அது. 

அந்த அளவுக்கு செயல்திறனும் பொறுப் புணர்ச்சியும் மிக்கவர்தான் பிரதமர் மன் மோகன் சிங். ஆனால் இவ ரை சிலர் செயல் திறன் அற்றவர் என்று பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பதுதான் வேதனை. 

சார்க் கூட்டமைப்பில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி ராஜபக்சேவும் மாலத்தீவு மாநாட்டில் பங்கேற்கிறார். இலங்கை தமிழர்கள் பிரச் சனை குறித்து, இந்தியா அளிக்கும் உதவி தமிழர்களுக்கு சரியான முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து ராஜபக்சேவுடன் பேசுவேன் என்று ஒரு வார்த்தை கூட மன்மோகன் சிங் கூறவில்லை.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் காமன் வெல்த் நாடுகளின் மாநாடு நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கும் ராஜபக்சே வருகை தந்தார். அவரை எதிர்த்து ஆஸ் திரேலியாவில் வாழும் இலங்கை தமிழர் கள் மட்டுமின்றி அந்நாட்டின் மனித உரிமை ஆர்வலர்களும் கூட ஆர்ப்பாட் டம் நடத்தினர். அங்கே ராஜ பக்சேவை சந்தித்த போது, இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவருடன் விவாதிக்கவில்லை.

இலங்கையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அந்நாட்டு ஜனாதிபதி ராஜபக்சே, பத்தி ரிகைகளில் வருவதைப் பற்றி தமக்கு கவலை இல்லை என்றும் பல பத்திரிகைகள் குப்பை என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார். 

எதைத்தான் மதித்தார் மகிந்த ராஜபக் சே? இலங்கையில் அப்பாவி தமிழ் மக்க ளுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்ட அறிக் கையை கூட குப்பைக் கூடையில் தூக்கி எறிந்துவிட்டு, கொஞ்சம் கூட மனசாட்சி யில்லாமல் இருந்து வருகிறார் அவர். சித்ர வதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 47வது அமர்வு ஜெனிவாவில் 2011 நவம்பர் 8 அன்று நடைபெற்றது. இலங்கையிலும் வடக்குப்பகுதியி லும் ஏழு ரகசிய சித்ரவதை முகாம்கள் இயங்கி வருவதாகவும், அதில் 700க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் இளை ஞர்கள் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அக் கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வவு னியாவில் ஐந்து முகாம்களும், முல்லைத் தீவில் இரண்டு முகாம்களும் செயல்படு வதாக ஐ.நா. குழுவின் உதவித் தலைவர் பெரிஸ்கேர் குற்றம் சாட்டியுள்ளார்.

உலகில் அதிக அளவில் காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள அவர், இவ்வாறு சட்டவிரோத முகாம்களில் அடைத்து வைக் கப்பட்டுள்ளோர் பெயர்ப் பட்டியலை ஐ.நா. சபை பலமுறை கோரியபோதும் இலங்கை இன்னமும் தரவில்லை என்று அவர் கூறி யுள்ளார்.

இலங்கையின் சார்பில் இந்த விசாரணை யில் பங்கேற்ற முன்னாள் சட்ட அமைச்சர் மொகான்பிரீஸ், ஐ.நா. சபையின் சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டின் சில அம்சங்களில் இலங்கை கையெழுத்திடவில்லை என்று வாதிட்டுள்ளார். அதாவது சித்ரவதைக்கு எதிரான உடன்பாட்டில் நாங்கள் கையெழுத் திடவில்லை. எனவே அப்பாவி தமிழ் மக் களை சித்ரவதை செய்வதை ஐ.நா. தடுக்க முடியாது, விசாரிக்கக் கூட முடியாது என்பது அவரது வாதம். ஆனால் சித்ரவதைகளை சகிக்க முடியாது என்பதை 110 சதவீதம் ஒத்துக் கொள்வதாக அவர் வாய்ப்பந்தல் போட் டுள்ளார். 

இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. சபை அமைத்த குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விவரங் கள் கண்ணீரை வரவழைக்கிறது என்றால், லண்டனைச் சேர்ந்த சேனல் 4 வெளியிட்ட காணொளி காட்சிகள் இதயத்தில் உள்ள இரத் தத்தை முற்றாக வற்றிப்போகச் செய்கிறது. 

இறுதிக்கட்டப்போரின்போது இலங்கை ராணுவத்தின் குண்டுமழையில் அப்பாவி தமிழ் மக்கள் 40 ஆயிரம் பேர் பலியானார்கள் என்பது ஐ.நா. குழு அளித்துள்ள விவரம். போர் நிறுத்தப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங் களை மட்டுமல்ல, செஞ்சிலுவைச் சங்க கட்டிடங்கள், மருத்துவமனைகள் எதையும் இலங்கை ராணுவம் விட்டு வைக்கவில்லை. நரவேட்டையாடியது என்பது ஐ.நா. குழு வெளியிட்டுள்ள அறிக்கை. இவர்களது கொலைவெறிக்கு பெண்கள், குழந்தைகள் கூட தப்பவில்லை. மிகக்கடுமையான முறை யில் போர்க்குற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனித உரிமை மீறப்பட்டுள்ளது என்பது ஐ.நா. குழுவின் குற்றச்சாட்டு. ஆனால் இதுகுறித்து முறையான எந்தவொரு விசாரணைக்கும் ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

மாறாக, சர்வதேச சதுரங்கக் களத்தில் சாதுர்யமாக காய் நகர்த்தி தன்னுடைய குற்றங் களை முற்றாக மறைத்துவிட, நியாயப்படுத்த ராஜபக்சே அரசு முயலுகிறது. இலங்கையில் காணாமல் போகிறவர் பட்டியலில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல. உண்மை யை பேசும் சிங்கள மொழி பத்திரிகையாளர் களும் உள்ளனர் என்பதுதான் கொடுமையி லும் கொடுமை. இத்தகைய கடத்தலும் காணா மல் போவதும் இன்னமும் தொடர்கதையாக நீடிக்கிறது.

சேனல் 4 காட்டிய காட்சிகள் உலக மனித சமூகத்தையே அதிர்ச்சியடைய வைத் தது. ஒரு காகம் இறந்தால் கூட சக காகங்கள் கூடி கூச்சலிட்டு தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தும். ஆனால் குவியல் குவிய லாக குவித்து வைக்கப்பட்ட மனிதச் சதை களை காகங்கள் கொத்தித் தின்கிற காட்சியும் இதுவரை அவல இலக்கியங்களில் கூட சொல்லப்படாத அளவுக்கு பிணந்தின்னி கழுகுகள் வட்டமிட்டு, சதைகளை தூக்கிச் செல்லும் காட்சிகளும் மனித நாகரிகத் தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

இன்னமும் கூட முள்வேலி முகாம்க ளிலிருந்து தமிழ் மக்களுக்கு முற்றாக விடு தலை கிடைக்கவில்லை. கொஞ்சம் கொஞ் சமாக அவர்கள் மீள் குடியமர்த்தப்படுகிறார்கள் என்று இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சாகடிக்கப் படுகிறார்கள் என்பதை பல்வேறு ஊடகங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. 

அந்த முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளவர்கள் மனச்சிதைவுக்கு ஆளாகி வருகின்றனர். பெண்கள் மற்றும் சிறுமிக ளுக்கு எதிரான ராணுவத்தினரின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்கதையாக நீடிக்கிறது.

12வயது சிறுமி ஒருத்தியை ராணுவத் தினர் “விசாரணைக்காக” தூக்கிச்செல்ல முயன்றபோது அவளுக்கு அம்மை நோய் கண்டிருப்பதாகக் கூறி தற்காலிகமாக தனது மகளை தப்பவைத்தேன் என்று கூறியுள்ளார் ஒரு தந்தை.

குண்டுவீச்சில் தான் பலியானால் தனது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுமாறு கூறியுள்ளார் ஒரு பெண். தனது சடலத்தின் மீது ராணுவத்தினரின் கைகள் ஊர்வதை தான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார் அந்தப்பெண். 

பிணங்களை லாரியில் ஏற்றிய போது தானும் பிணம்போலக்கிடந்து முகாமிலிருந்து தப்பித்ததாக கூறியுள்ளார் ஒரு இளைஞர். இவை ஒன்றிரண்டு நிகழ்ச்சிதான். மொத்த பயங்கரத்தையும் தொகுத்துப் பார்த்தால், இலங்கைத் தீவே கண்ணீரால் மூழ்கிவிடும்.

இலங்கை தமிழ் மக்களுக்கு அந்நாட்டு மத்திய அரசு மீது அதிருப்தி ஏற்படுவதற்கான காரணங்கள் இன்னமும் நீடிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. 

மொழிவழி தேசிய இன மக்களான தமிழ் மக்களின் சம உரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று தமிழ் தள்ளி வைக்கப்பட்டது. நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை என அவர்களது பிரதிநிதித்துவம் பறிக்கப்பட்டது. மக்களாட்சியில் கூட அவர் களுக்கு உரிய உரிமை கிடைக்கக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்ற ஜனநாயக முறை அகற்றப்பட்டு, அதிபர் ஆட்சி முறை கொண்டுவரப்பட்டது.

யாழ்ப்பாணம் நூலக எரிப்பு உட்பட அவர்களது பண்பாட்டு அடையாளங்களும் அழிக்கப்பட்டன. இதனால்தான் கனன்று கொண்டுதான் இலங்கை தமிழர் பிரச்சனை 1983ல் பெரும் தீயாக உருவெடுத்தது.

போரில் வெற்றிபெற்றுவிட்டதாக கெக் கெலி கொட்டும் ராஜபக்சே அரசு, தனது நாட்டின் சொந்த குடிமக்களான தமிழ் மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக் கூட வழங்க முன்வரவில்லை.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட் டுள்ள எஞ்சிய தமிழ் மக்கள் தங்களது முந்தைய சொந்த வாழ்விடங்களில் மீள்குடி அமர்த்தப்படவில்லை. மாறாக அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் ராணுவத்தினர் மற்றும் பெரும்பான்மை இன மக்களை குடியமர்த்து வதாக தகவல்கள் வருகின்றன. போருக்குப் பிறகும் கூட தமிழர்கள் வசிக்கும் பகுதியில் கல்வி நிலையங்கள் முழுமையாக செயல் படவில்லை. மாறாக ராணுவ முகாம்கள் செயல்படுகின்றன.

இலங்கையில் அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்மக்கள் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும் வெற்றி பெற்றது. ராஜபக்சே அரசை தமிழ் மக்கள் நம்ப வில்லை என்பதையே இந்த முடிவு உணர்த் தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வர், ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் பொருளாதாரம், பண்பாட்டு செயல்பாடுகள் பேணப்பட வேண்டும் என்பதை இந்த முடிவு உணர்த் தியதாக குறிப்பிட்டார்.

தாங்கள் கோருவது மாநில சுயாட்சியே என்றும் இந்த அரசியல் தீர்வுக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் இந்த கூட்டமைப் பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நிரந்தர அமைதி நிலவ வேண்டுமானால் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டியது அவ சியமாகும். இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து, கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சி வழங்க வேண்டும்; தமிழ்மொழியும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும்; தமிழ் மக்க ளுக்கு நாடாளுமன்றம் உட்பட அனைத்து நிலைகளிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்; அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள் ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மக்க ளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அரசியல் சாசனத்தின் அனைத்துப் பிரிவுகளும் ரத்து செய்யப்பட வேண்டும். அவர்களது பண்பாட்டு அடையா ளம் பாதுகாக்கப்பட வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அவர்களது வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட வேண்டும். நில உரிமை உள்ளிட்ட அவர்க ளது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப் பட வேண்டும். சட்டவிரோத காவல் முகாம் களில் அடைக்கப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிக்க வேண்டும் என்பது தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளாகும். 

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச அளவில் நம்பகத்தன்மை கொண்ட, சுயேட்சையான விசாரணை நடத் தப்பட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையுடனான பொருளாதார, வர்த்தக உறவுகள் குறித்து இந்தியா கவலைப்படு கிறது. ஆனால் இந்தியாவின் சார்பில் வழங் கப்படும் உதவி தமிழ் மக்களுக்கு உரிய முறையில் சென்று சேருகிறதா என்பது குறித்து கவலைகொள்வதில்லை. இந்தக் குற்றச்சாட்டை அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கேயே முன்i வத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதில் சார்க் அமைப் பின் அங்கம் என்ற முறையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கை தமிழர் பிரச்சனை தமிழ்நாட்டில் உணர்வுப்பூர்வ மான பிரச்சனையாக நீடிக்கிறது, அது நியா யமானது என்ற அடிப்படையிலும் இந்தியா உண்மையான அக்கறையுடன் தலையிட வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் தொடர்ச்சியாக, முன்பின் முரணின்றி போராடி வந்துள்ளது. உணர்ச்சி ஊட்டக் கூடிய முழக்கங்களை மட்டும் முன் வைக் காமல் காரியசாத்தியமான தீர்வை முன் வைத்து போராடி வந்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக் கத்தை நடத்தியது. விருதுநகரில் நடைபெற்ற தமுஎகச மாநில மாநாட்டில் முதல் தீர்மான மாக இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அரசி யல் தீர்வு காண வேண்டும்; அவர்களது கண் ணீர் துடைக்கப்பட வேண்டும் என்று வலி யுறுத்தியுள்ளது. 

இதயத்தில் ரத்தம் வடியச்செய்யும் இந்த பிரச்சனையில் மத்திய அரசு உரிய முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டத் திற்கும் விருதுநகர் மாநாடு அறை கூவல் விடுத்தது. 

மத்திய அரசின் பிரதிநிதியாக விளங்கும் ஆளுநர் மாளிகை முன்பு நவம்பர் 12ந்தேதி தமுஎகச சார்பில் ஆர்ப்பாட்டமும், கையெழுத் துப் படிவங்களை வழங்கும் இயக்கமும் நடை பெற உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் சமூகத்தின் மனசாட்சி. தமிழகத்தின் மனசாட்சியாக விளங்கும் தமுஎகச கேட்கிறது, மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

[கட்டுரையாளர்_

மாநில துணைத்தலைவர், த.மு.எ.க.சங்கம்]

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------கீசா பிரமிடு அருகே செல்லும் சுற்றுலாவினர்,
         





                       

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?