கெடுத்தவன் கதைகள்,
கதை -1, > -கடவுள் அல்ல ,மனிதர்->>>
”கிராமியக்கதை ஒன்று.
கிராமம் ஒன்றில் மிகவும் கெட்ட எண்ணம் கொண்ட ஒருவன் இருந்தான்.அவன் கிராமத்தில் உள்ள வர்களுக்கு ஏதாவது இடைஞ்சல் செய்து அவர்களுக்கு கொடுமை செய்வதையே பொழுதுபோக்காகவும் கொண்டிருந்தான்.
அவன் எப்போதடா சாவான்.நிம்மதியாக இருக்கலாம் எனக்கிராமத்தினர் ஏங்கிக்கொண்டிருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த காலம் வந்தது. நோயினால் பீடிக்கப்படட அவன் சாகும் தருவாயில் இருந்தான்.முடிவு நெருங்கியது.இப்பவோ,அப்பவோ நிலை.
கிராமத்தில் உள்ளவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.
முதலில் தயங்கினாலும் பரிதாபப்பட்டு அவனை பார்க்க எல்லோரும் சென்றனர்.
“ஒன்றும் இல்லை.நான் உங்களுக்கு செய்ததெல்லாம் தீமைதான்.எனக்கு மனம் வெறுத்து போய்விட்டது.நிம்மதியே இல்லை.நான் இறந்ததும் என்னை கையை,காலை வெட்டி,குடலை எடுத்து மாலையாகப்போட்டு புதையுங்கள்.அதுவும் இங்கே வேண்டாம்.அடுத்த கிராமத்தில் இரவோடிரவாய் புதைத்து விடுஙகள்.என் பிணம் இங்கே புதைத்தால்கூட உங்களுக்கு நிம்மதி கிடைக்காது.என் நினைவில் கோபம்தான் உண்டாகும் “என்றான்.
முதலில் அப்படி செய்ய கிராமத்தினர் மறுத்தாலும் அவன் விடவில்லை. விடாப்பிடியாக பலவாறு சொல்லி சம்மதிக்க வைத்துவிட்டான்.
அடுத்தநாளே அவன் இறந்தும் விட்டான்.
அவன் கூறியபடியே கை,காலை துண்டித்து,மாலையாக குடலையும் போட்டு மிக மரியாதையாக[சந்தோசமாய்] உடலை இரவு அடுத்த கிராமத்தில் புதைக்க சென்றனர்.
கிராமத்தை நெருங்கியவர்களுக்கு அதிர்ச்சி .
அடுத்த கிராமத்தவர்கள் தீப்பந்தத்துடன் கையி ஆயுதங்களுடன் இருந்தனர்.பக்கத்தில் காவல்துறையினரும் குவிந்திருந்தனர்.
கொடுமையான தொத்துவியாதி பிணத்தை இரவில் தங்கள் கிராமத்தில் புதைக்க வந்ததுக்காக அடுத்த கிராமத்தினர் ஆயுதங்களை ஒங்கித்தாககவர,,
அப்பாவியை குத்திக்கொலை செய்து கைவேறு,கால் வேறாக ஒருவருக்கும் தெரியாமல் இரவில் புதைக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து வண்டியில் கிராமத்தினர் அனைவரையும் ஏற்றிச் சென்றனர்.
பக்கத்துக் கிராமத்திற்கும்-காவல்துறைக்கும் இப்படி பொய்யானத்தகவலைக்கூறிவிட்டு மண்டையப்போட்டது நம்ம ஆளுதானாம்.
சரி.இப்போ எதர்கு இந்த கதை?
கீழே உள்ள செய்தியைப்படியுங்கள்.உங்களுக்கே புரிந்தாலும் புரியும்.
பாகிஸ்தானில் உள்ள தாவூத்இப்ராகிம்இப்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனுக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டது. உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவன், தனது நாட்கள் எண்ணப்படுவதாக உணர்கிறான். இதனால், டாக்டர்கள் குழு அவனுடைய உடல் நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறது.
தனது முடிவு நெருங்கி விட்டது என்பதை உணர்ந்துள்ள தாவூத், தான் இறந்த பிறகு தனது உடலை மும்பையில் அல்லது சொந்த ஊரான ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேட் நகரில் புதைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளான். இதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும்படி உதவியாளர்களை கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து மும்பை குற்றப்பிரிவு போலீசுக்கும் தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்தவன் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம். குண்டு வெடிப்புக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பியோடி விட்டான். அங்கு, கராச்சியில் ஒளிந்திருக்கும் அவன், பாகிஸ்தான் உளவுத் துறையின் பாதுகாப்புடன் தனது சட்டவிரோத தொழிலை தொடர்ந்து செய்து வருகிறான்.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான். தாவூத்தை ஒப்படைக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்தியா பலமுறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால், தாவூத் பாகிஸ்தானிலேயே இல்லை என்று அந்நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.
சரி.செத்தபின் தாவூத் இப்ராகிம் பிணம் எந்த நாட்டில் இருந்து வருகிறது என பார்ப்போம்.ரகசியமாகக் கொண்டுவந்து கூட புதைப்பார்கள்.நமது பாதுகாப்பு லட்சணம் அப்படித்தானே இருக்கிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கெடுத்தவன் கதை-2,
-------------------
புலிகளும்,இந்தியா[காங்கிரசு]வும்,
இலங்கைச் சமாதான முயற்சிகள் இடம்பெற்ற காலத்தில் இம்முயற்சிகளை ஆதரிப்பதாக இந்தியா வெளிப்படையாக கூறினாலும் தமிழீழ விடுதலைப் புலிகளை உரிய இடத்தில் அடக்கி வைக்க வேண்டும் என நோர்வேயிடம் இந்தியா அந்தரங்கமாக கூறியது என நோர்வேயில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமாதான முயற்சிகள் தோல்வியுற்றது ஏன் என்பதை கண்டறிவதற்கு நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.
இவ் அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2003-2004 இல் சமாதான முயற்சிகள் மெதுவாக சிக்கறுக்கப்பட ஆரம்பித்தபோது கொழும்பு மீது புதுடில்லி அனுதாபம் கொண்டிருந்தது.
2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் தமிழர் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு தொடர்ச்சியாக கோரி வந்தது.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அதன் இராணுவ ரீதியிலான தெரிவு தொடர்பாக எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனிப்பட்ட சந்திப்புகளின்போது எல்.ரி.ரி.ஈ.யுடன் அதிக நட்பாக இருப்பது குறித்து நோர்வேயை இந்தியா விமர்சித்தது.
அத்துடன் புலிகளை உரிய இடத்தில் வைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 202 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது நோர்வே வெளிவிவகார அமைச்சின் ஆவணங்கள் மற்றும் சமாதானச் செயற்பாட்டில் முக்கிய பாத்திரம் வகித்த நபர்களுடனான செவ்விகள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் படைகளுக்கு இந்தியா ராடர் மற்றும் புலனாய்வுத் தகவல்களை வழங்கியது. இலங்கைக்கு இராணுவ தாக்குதல் கருவிகளை தான் வழங்கமாட்டாது என இந்தியா கூறிவந்தது. ஆனால் அவற்றை இலங்கை வேறெங்காவது வாங்கிக் கொள்வதை அது ஆட்சேபிக்கவில்லை.
மிக முக்கியமாக, புலிகள் மீதான இந்தியாவின் எதிர்ப்பானது இலங்கை அரசாங்கத்திற்கான உறுதியான ஆதரவாக மாறியது' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் உயிரிழப்புகளை மட்டுப்படுத்துமாறு இந்தியா சில கோரிக்கைகளை விடுத்தாலும் புலிகளை தோற்கடிப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளை தொடர்வதற்கு தாம் ஆதரவளிப்பதை இந்தியா மிகத் தெளிவாக்கியது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் இறுதி நாட்கள் தொடர்பாக இவ்வறிக்கையில் குறிப்பிடுகையில், 'இக்கிளர்ச்சியாளர்களை சூழ்ந்த வலை இறுகிவரும்போது புலிகள்சரணடைவது என்பது கொழும்புக்கு மிக மிக குறைந்த ஈர்ப்புடையதாக மாறி வந்தது.
யுத்தத்தின் இறுதியில் புலிகள் தப்பியிருப்பதில் இந்தியாவுக்கு ஆர்வம் எதுவுமிருந்ததா என்பதும் சந்தேகமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் இக்கிளர்ச்சியாளர்களின் உதவிக்கு எவரும் வந்துவிடக் கூடும் என இலங்கை கவலை கொண்டிருந்ததாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இந்திய அமைச்சர் பி. சிதம்பரம் பிரபாகரனுடன் தொடர்புகொண்டு, ஆயுதங்களை கீழே வைப்பார்கள் என்ற முன்னதாகவே தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை புலிகள் ஏற்றுக் கொள்ளுமாறு யோசனை கூறியதாகவும் நோர்வேயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ஆனால் அவர் எவ்வாறு பிரபாரகரனை தொடர்பு கொண்டார் என்று கூறப்படவில்லை.) எனினும் இந்த நடவடிக்கை விடயம் புலிகள் சார்பு தமிழக அரசியல்வாதியான வைகோவுக்கு கசிந்தது.
'அவர் இதை காங்கிரஸின் ஒரு தந்திரம் எனக்கூறி நிராகரித்ததுடன் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று புலிகளை மீட்கும் என விடுதலைப்புலிகளுக்கு உறுதியளித்தார்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது நடைபெறவில்லை...
நன்றி:தமிழ் சி.என்.என்.தளம்
________________________________________________________________________________________________________________________________,
விமானம் ஒட்டிக் கெடுத்தவன் கதை -3,
மெக்சிகோ அமைச்சர் விமான விபத்தில் பலி,
மெக்சிகோநாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட ஏழு பேர் பலியாயினர். மெக்சிகோநாட்டின் உள்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் பிரான்சிஸ்கோபிளாக்மோரா. இவர் சம்பவத்தன்று மெக்சிகோ நகரில் இருந்து குர்னவாகா என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில்பயணம் செய்தார்.மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரை கட்டுப்பாடு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனையடுத்து அமைச்சரை தேடும் பணி நடைபெற்றது. இவ்விபத்தில்அமைச்சர் பலியானது உறுதிசெய்யப்பட்டது. அவருடன் பயணம் செய்த ஹெலிகாப்படர் பைலட் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பலியாயினர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரின த்தினர் திருமணத்திற்கு அனுமதி வழங்கியதை அடுத்தக் குத்தாட்டம்,