மேசை-மடி- பை கணினி,
தற்போது லேப்டாப் கணினிஇடத்தை டேப்ளட் பிசிக்கள் பிடித்து வருகின்றன. குறிப்பாக, வர்த்தகப் பணிகள் மற்றும் நிர்வாக வேலைகளை மையமாகக் கொண்டு இயங்குபவர் அனைவரும் லேப்டாப்க்குப் பதிலாக, டேப்ளட் பிசிக்களை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர்.உலகளவில் இந்த மாற்றம் ஏற்பட்டு வருகிறது. டேப்ளட் பிசிக்களை விரும்பக்காரணமாக கீழ்க்காணும்வசதிகளை குறிப்பிடுகின்றனர்.
0 டேப்ளட் பிசியை ஒருமுறை சார்ஜ் செய்தால், நாள்முழுக்கப் பயன்படுத்தலாம். லேப்டாப் அப்படி இல்லை. அதிகமாக மூன்று மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது.
.0 டேப்ளட் பிசியை வைரஸ் தாக்குவ தில்லை. மால்வேர்களும் பாதிப்பதில்லை. ஆனால், லேப்டாப்பில், குறிப்பாக விண்டோஸ் இயக்கத்தில், வைரஸ் மற்றும் பிற மால்வேர் நுழைவது எளிதாகிறது.
0எளிதாக எங்கேயும் எடுத்து செல்லலாம் சட்டை ,பேண்ட் பாக்கெட்டிலேயே, பாதுகாப்பாக டேப்ளட் பிசியினை வைத்துக் கொண்டு செல்ல லாம். எடையும் குறைவு. மற்றவர் அறியாமல் ஓரிடத்தில், தனி இடத்தில் வைத்துப் பயன்படுத்தலாம். டேப்ளட் பிசியின் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. லேப்டாப் விலையை விடமூன்றில் ஒரு பங்கில் நல்ல டேப்ளட் பிசிவாங்கலாம். 4ஜி அல்லது 3ஜி தொடர்பினைப் பெறலாம்.
0சில நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களில், குறிப்பிட்ட நெட்வொர்க் இணைப்பினை ஏற்படுத்தியே தருகின்றனர். நாமும் டேப்ளட் பிசிக்களுக்கான நெட்வொர்க் இணைப்பு கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம்.
0 டேப்ளட் பிசிக்களுக்கென பல்லாயிரக் கணக்கான அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான அப்ளிகேஷன்கள் இலவச மாகவே கிடைக்கின்றன. மேலும் இவற்றை ஓர் இணைய இணைப்பிலேயே டேப்ளட் பிசியில் ஏற்றம் செய்து கொள்ளலாம். பயன்படுத்தியபின் அன் இன்ஸ்டால் செய்து நீக்கிவிடலாம். . எளிமையான இன்டர்பேஸ்: டேப்ளட் பிசிக்களும், அவற்றில் இயங்கும் அப்ளிகேஷன்களும் மிக எளிமையான இன்டர்பேஸ் கொண்டு இயங்குவதால், சிக்கல்கள் எதுவுமின்றி அவற்றை இயக்க முடிகிறது. ஹெட்போன், ஹெட்செட், கீ போர்ட் என டேப்ளட் பிசி தொடர்புக்கென எதனை எடுத்தாலும், அவை புளுடூத் பயன்பாட்டில் இயங்கு பவையாகக் கிடைக்கின்றன.
எந்த நேரத்திலும் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டேப்ளட் பிசியை, மீண்டும் இயக் கத்திற்குக் கொண்டு வரலாம். லேப்டாப் கம்ப்யூட்டர் போல, டேப்ளட் பிசி அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. .
எந்த வகையில்பார்த்தாலும் டேப்ளட் பிசிதான் கூடுதல் பயனுள்ளதாக இருக்கும். லேப்டாப் கம்ப்யூட்டர் ,டேப்ளட் பிசி போட்டியில் டேப்ளட் பிசி நல்ல முறையில் நமக்குப் பயன் தரும்.
எதிர்காலத்தில் மேசைக் கணினி-மடிக்கணினி இடத்தை சிறிய டேப்ளட் கணினி கைப்பற்றிவிடும் என்றே தெரிகிறது.