மலிவு விலை கை கணினி.
4ஜி தொழில் நுட்பத்தின் இயக்கத்துடன் கை கணினி [டேப்ளட் பிசி] ஒன்றை வடிவமைத்து, குறைந்த விலையில் விற்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதில் தங்களுடன் ஒத்துழைக்க கனடா நாட்டின் டேட்டாவிண்ட் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. இந்த நிறுவனம்’ உலகில் மலிவான ஆகாஷ் என்னும் டேப்ளட் பிசியினை அண்மையில் வெளியிட்டது. மேல் நாடுகளில், பல நிறுவனங்கள் 4ஜி தொழில் நுட்பத்துடன் டேப்ளட் பிசியினை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றன.
டிசம்பர் மாதம் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பத்துடன் இயங்கும் டேப்ளட் பிசி யை டேட்டாவிண்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் விலை ரூ3000/- என்ற அளவில் இருக்கும் என்று தெரிகிறது.
--------------------------------------------------------------------------------------------
-
--------------------------------------------------------------------------------------
லிபியா முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் அரசிடம் மாட்டிக்கொண்டார்.
கை விரல்கள் முழுக்க கட்டுகளுடனும் ,கால் கள் வெளியே தெரியாமல் மூடப்பட்ட நிலையிலும் லிபிய தொலைக்காட்சியில் தெளிவின்றி இன்று[19]காட்டப்பட்டுள்ளார். சித்திரவதைதான் அதன் காரணமாக இருக்கும்.
-----------------------------------------------------------------------------------------
52 கார்கள் மோதிய விபத்து.
ஜெர்மனியில் ஹீக் நகரில் 52 கார்கள் ஒன்றின் மீது ஒன்று மோதிய விபத்து நடந்துள்ளது.
இதி மூவர் உயிரிழந்தனர்.35 பேர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மோதிய கார்களின் மேல் அதன் எண்கள் எழுதப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
’கரை கடந்த காதல்?’