எகிப்து கலவரத்தில் இது வரை 30 பேர்கள்.இறந்துள்ளனர்,1700 பேர்கள் வரை காயமடைந்துள்ளனர்.
எகிப்து நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் ஹோசினி முபாரக் தலைமையிலான ஆட்சியை அகற்ற கோரி பயங்கர கலவரம் நடைபெற்றது. இதனையடுத்து ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. சுப்ரீம் கவுன்சில் ஆப் த ஆர்ம்டு போர்ஸ் என்றழைக்கப்படும் இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது. முபாரக் அமைச்சரவையில் ராணுவ தளபதியாக இருந்துவந்த பீல்டு மார்ஷல் ஹூசைன்தந்தாவி என்பவர் தற்போதைய இடைக்கால அரசின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆட்சி முறையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என கூறி ஆர்பாட்டக்காரர்கள் முன்னர் ஆர்பாட்டம் நடத்திய தஹ்ரீர் சதுக்கத்தில் மீண்டும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதனையடுத்து ஆர்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் தடியடி நடத்தினர். இதனால் மோதல் ஏற்பட்டு பயங்கர கலவரமாக மாறிவிட்டது. கலவரம் தொடர்கிறது.இன்னும் உயிர்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
________________________________________________________________________________
இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் (நவ.19) சிங்கப்பூர் சென்ற பிரதமர் மன்மோகன் சிங் அங்கு அந்நாட்டு பிரமரை சந்தித்து பேச்சுக்கள் நடத்தியபின், நேற்றிரவு (நவ.20) தில்லி திரும்பினார்.இடைவெளியின்றி வெளிநாடுகளிலேயே சுற்றிக்கொண்டிருக்கும் பிரதமரை மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேச வேண்டுமானால் எந்த நாட்டிற்குப் போக வேண்டும்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------
முதலாளித்துவ தீய சக்திகள் உலாவும் இடம்-பங்குச்சந்தை குறித்து அமெரிக்க மக்கள் விமர்சனம், |
.
|
ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்காரர்களைவெளியேற்றியசம்பவம்,அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாவது மாதம் துவங்கியதை அமெரிக்கா முழுவதும் போராட்டக்காரர்கள் அனுசரித்துள்ளனர். ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அதற்கு அருகில்தான் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்க வந்த போராட்டக்குழுவினர் திரண்டனர். வால் ஸ்டிரீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள், வால் ஸ்டிரீட்டை இழுத்து மூடு மற்றும் நாங்கள்தான் 99 விழுக்காட்டினர் என்ற முழக்கங்களை எழுப்பினர். முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்வதைச் சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கக் காவல்துறை, ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரும்புத் தடுப்புகள் போன்றவற்றைக் கொண்டு சாலைகளை மறித்து, ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்தவும் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.
பங்குச்சந்தை முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட போராட்டக்குழுவி னர் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அப்போது பேசிய கேட்டி என்ற போராட்டக்காரர், அமெரிக்க முதலாளித்துவத்தின் தீய சக்திகள் உலாவும் இடம் இதுதான். அதனால்தான் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்த இங்கு வந்திருக்கிறோம் என்றார். பொது அமைதிக்கு இடையூறு செய்த னர் என்று கூறி 60 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அமைதியான முறையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அவற்றை எதிர்கொள்ள கலவரத்தடுப்பு காவல்துறையினரையே நிர்வாகம் களத்தில் இறக்கிவிட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோநகரில் உள்ள பேங்க் ஆப் அமெரிக்காவின் அலுவலகத்தை,கைப்பற்றுவோம்போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். அலுவலகத்திற்கு உள்ளும், வளாகத்திலும் கூடாரங்களை அமைத்து, முழக்கங்களை எழுப்பினார்கள். இங்கும் காவல்துறையின் கலவரத்தடுப்புப் பிரிவு உள்ளே நுழைந்து, நூற்றுக்க ணக்கான போராட்டக்காரர்களைக் கைது செய்தது. நாட்டின் செல்வத்தில் பெரும்பங்கை ஒரு விழுகாட்டினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இது சகித்துக் கொள்ள முடியாததாகும் என்று போராட் டக்காரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது, நீங்கள் யாரைப் பாதுகாக்கிறீர்கள், யாருக்காக சேவை செய்கிறீர்கள்? என்ற கேள்விகளை மக்கள் எழுப்பினர். சிகாகோ நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியிருந்தனர். வேலைகளே தேவை, ஆட்குறைப்பல்ல என்ற முழக்கத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சிகாகோ நகரின் தாம்சன் மையத்தில் குழுமிய போராட்டக்காரர்கள் ஜாக்சன் மற்றும் லாசல்லே வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
நிதிவெட்டைத் தடுப்பது, பொருளாதாரத்தை மீண்டும் கட்டுவது மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் உருவாக்குவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தியே கைப்பற்றுவோம் சிகாகோ போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளதன் அடையாளமாகவே இந்தப் போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களோடு நாங்களும் முழுமையாக இணைந்து நிற்கிறோம். முகாம்களுக்குள் நுழைந்து சோதனை செய்யலாம். ஆனால் போராட்டத்தை அழிக்க முடியாது என்று உலகிற்கு சொல்ல விரும்புகிறோம் என்கிறார் சிகாகோ போராட்டக்குழு உறுப்பினரான மேகன் குரோவ்ஸ்.
பங்குச்சந்தைமற்றும்பெரும்வங்கிகளின் பேராசை ஆகியவற்றிற்கு எதிராகத் துவங்கிய போராட்டங்கள் கல்வி, சுகாதாரம் போன்றவை அரசுப்பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற முழக்கங்களுக்கு இட்டுச் சென்றது. தற்போது அமெரிக்க அரசியலில் பணத்தின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் முழக்கமிடுகிறார்கள். அதைச் செய்வதன் மூலம்தான் இரண்டே இரண்டு கட்சிகள் என்ற தடையைத் தகர்க்க முடியும் என்பது போராட்டக்காரர்களின் கருத்தாக உள்ளது.
பிரிட்டனில் அமெரிக்காவில் தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் கைப்பற்றுவோம் போராட்டங்களுக்கு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் இரண்டாவது ஆர்ப்பாட்ட முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் சதுக்கத்தில் முகாமடித்திருந்த போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் தாண்டி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. போராட்டக்குழுவைச் சேர்ந்த மார்க் போர்சியானி, ஒரு முகாமிலிருந்து வெளியேற்றினால் அடுத்த முகாமை அமைப்போம். உலகின் ஒரு பகுதியில் மக்களை ஒடுக்கினாலும், மறு பகுதியில் கிளர்ந்து எழுவார்கள் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில்போராட்டம் நடத்திய கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் பலரை போலீசார் பிடித்து கைகளை கட்டிப் போட்டனர். பின்னர் அவர்களை வரிசையாக உட்கார வைத்து அவர்கள் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து கொடுமைப்படுத்தினர். இந்த காட்சியை பலர் செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழக துணை வேந்தர் லிண்டா கடேஹி கூறுகையில், போலீசாரின் நடவடிக்கை உறைய வைக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால், மாணவர்களை போலீசார் கொடுமைப்படுத்தியதற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேராசிரியர்கள் போர்க் கொடி உயர்த்தி உள்ளனர். இதற்கிடையில், போலீசாரின் சட்ட திட்டங்கள்படிதான் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அத்துமீறல் எதுவும் இல்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.
___________________________________________________________________
திருநங்கையர் மாநாட்டில் தீ விபத்து
புது டில்லியில் திருநங்கையர் நந்த் நகரி பகுதியில் உள்ள சமுதாயக் கூடம் ஒன்றில் மாநாடு நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்காக சமுதாயக் கூடத்திலேயே உணவு சமைக்கப்பட்டது. நேற்று மாலையில் சமுதாயக் கூடத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதி மளமளவென பரவியதில் உள்ளே இருந்தோர் சிக்கிக் கொண்டனர்.
சமுதாயக் கூடத்தை ஒட்டி தற்காலிக டென்ட் அடித்திருந்தனர். அங்கு பல திருநங்கையர் தங்கியிருந்தனர். அங்கு ஏற்பட்ட மின்கசிவில்தான் தீவிபத்து ஏற்பட்டு விட்டது. மேலும் டென்ட்டுக்கு அருகில் சமையல் செய்ய வைக்கப்பட்டிருந்த காஸ் சிலிண்டர்களும் தீயில் சிக்கி வெடித்துச் சிதறியதால் தீவிபத்து பெரிதாகி விட்டது.
12க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்து கடுமையாக போராடி தீயைஅணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். 31 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது.
|
|