வளர்ப்பு திருமணம்?


பெங்களூரில் ஜெயலலிதாவிடம் காலை 11 மணி தொடங்கி மாலை 5.20 மணிவரை நீதிபதி கேள்விகளை கேட்டார்.
அப்போது அவரின் வளர்ப்புமகன் சுதாகரன் திருமணச் செலவு பற்றி ஜெயலலிதா கூறியது வியப்பான தகவல்களாக உள்ளது.
அவர் தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ரூ.6 கோடி செலவு செய்தது தொடர்பான கேள்விக்கு, நான் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. முழு செல வையும் பெண் வீட்டாரே ஏற்றுக் கொண்டனர் என்று பதிலளித்தார்.
" வங்கி கணக்கு, தொழிற் சாலைகளில் பங்கு தொடர்பான கேள்விகளுக்கு நான் எதிலும் முதலீடு செய்யவில்லை. என் மீது பற்று கொண்டவர்கள் என் பெயரை சேர்த்திருக்கலாம். எனக்கு தெரியாது" என்று பதிலளித்தார்.
தொண்ணூறு சதவிகித கேள்வி களுக்கு எனக்கு தெரியாது அல்லது நினைவில்லை என்று பதிலளித்தார். - இவ்வாறு ஆச்சார்யா தெரிவித் தார்.
ஜெயலலிதாவின் வழக்கறிஞர் பி.குமார் கூறும்போது, நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் தெளிவாகவும் நிதானமாக வும் பதிலளித்தார். நாளை மீதியுள்ள கேள்விகளுக்கு பதிலளித்தார்” என் றார்.

இந்த வளர்ப்புமகன் திருமணத்திற்கு பெண்வீட்டார் ரூ6/- கோடி செலவிட்டார்களா? அதற்கான வருமான விபரங்களை பெண் வீட்டாரிடம் விசாரிக்க வேண்டும்.அப்போது முதல்வரும்-உடன்பிறா சகோதிரியும் போட்டு வந்த நகைகளும் இவர்களின் மீது பற்று கொண்டவர்கள் கொடுத்ததுதானா?
இவர் கட்சி நடத்துகிறாரா?அலலது திருப்பதி கோவில் கிளையை வைத்திருக்கிறாரா? பற்று கொண்டவர்கள்[?] கோடிக்கணக்கில் பங்குகளும்,வங்கியிலும் போட்டுவிட்டு செல்ல.
போயஸ் வீடு மட்டுமே தான் வாங்கியுள்ளதாகக்கூறுகிறார்.அப்படியென்றால் முன்பு ஒய்வெடுக்க சென்றாரே ஐதராபாத் திராட்சைத்தோட்டம்,இப்போது ஒய்வெடுக்கும் கொட நாடு,சிறுதாவூர் எல்லாம் யாருக்கு சொந்தம்?
பிறந்தநாளுக்கு வந்த கோடிக்கணக்கான ரூ காசோலைகளை தனது கணக்கில் போட்டது எப்படி.
          
சிப்காட் நில விவகாரத்தில் தான் போட்ட கையேழுத்தையே தனதில்லை எனக்கூறி மாட்டிக்கொண்டு சமாளித்தவருக்கு தெளிவாக,நிதானமாக பதிலளிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல.
________________________________________________________________________________


புதிய நோட்பேட்
பொதுவாக நீங்கள் லிடுர்ட்பேட் மற்றும் நோட்பேட் பற்றிதெரிந்து வைத்திருப்பீர்கள். நம்மில் பலரும் அதையே பயன் படுத்தி வருகிறோம்.. இப்போது புதிதாகவந்திருக்கும் இன்னொரு வேர்ட் ப்ராசசர் ஜார்ட். இப்போது இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது. இதில் பல வசதிகள்கூடுதலாகஉல்ளது. பைல்களை PDF மற்றும் HTML பார்மட்டில் அனுப்பலாம். இவற்றை DOC, RTF மற்றும் TXT என்ற பார்மட்களில் சேவ் செய்திடலாம்.
இதில் இன்னொரு சிறப்பாக மெனு தேர்ந்தெடுக்க கிளிக் செய்யத் தேவை யில்லை. அதாவது, கர்சரை மெனு அருகே கொண்டு சென்றாலே, மெனு விரிந்து கொடுக்கும். ஐகான்கள் மற்றும் பிற மெனுக்கள் கிடைக்கின்றன. அதிலிருந்து நமக்கு தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். இதனை வழக்கம்போல கிளிக் அடிப்படைஇயக்கத்திற்கு மாறிக் கொள்ளலாம். 
இதன் இன்டர்பேஸ் மூன்று வகைகளில் கிடைக்கிறது. அவை Minimal (NotePad போல), Compact, மற்றும் Classic ஆகும்.
இதன் சில அம்சங்களைக் காணலாம். word, page, line மற்றும் character ஆகியவற்றை எண்ணி அறியலாம். தேதி, நேரம், படங்கள், ஹைப்பர்லிங்க், டேபிள், ஸ்பெஷல் கேரக்டர்கள், ஈக்குவேஷன்கள், ஆப்ஜெக்ட்டுகள் ஆகியவற்றை விரும்பும் இடத்தில் இணைக்கலாம். டிக்ஷனரி, தெசாரஸ் ஆகியவற்றுடன் ஸ்பெல் செக் வசதி தரப்பட்டுள்ளது. பல பைல்களை இயக்கினால், அவற்றை அடையாளம் கண்டு கொண்டு இயக்க டேப் வசதி தரப்பட்டுள்ளது. 
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஓப்பன் ஆபீஸ் ரைட்டர் பயன்படுத்தி வரும் நமக்கு ஜார்ட் டெக்ஸ்ட் எடிட்டர் மிக வசதியாகவும் புதுமையாகவும் இருக்கும். இதன் மற்றொரு மிக முக்கிய வசதி இதை திறந்தவுடனே செயலில் இறங்கி விடலாம்.இந்த வேகம் மற்றவற்றில் இல்லை.இதன் இயக்கம் துவக்க சில விநாடிகளே போதும்.
நான்கு விநாடிகளிலேயே ஜார்ட் புரோகிராம் இயங்கத் தொடங்குகிறது. 
இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் எளிது.  ஒரு யு.எஸ்.பி. ட்ரைவில் பதிந்தும் இயக்கலாம். 
இதனை தரவிறக்க இதை சொடுக்குங்கள்.http://download.cnet.com/Jarte/30002079_410212778.html 
___________________________________________________________________________________________________________
யாகூ வீடியோ ஆன்லைன்

யாகூ இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் அருண் ததாங்கி ”இந்தியாவில், சமீபகாலமாக ஆன்லைன் வீடியோ பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த தருணமே, தாங்கள் இப்பிரிவில் களமிறங்குவதற்கு சிறந்த தருணமாக கருதி, இந்த சேவையை துவக்கி உள்ள‌ோம். இந்தியாவில், 30 மில்லியன் பேர் ஆன்லைன் வீடியோ சேவையை உபயோகித்து வருவதாகவும், இதன்மூலம், ஒருவர், மாதம் ஒன்றிற்கு குறைந்தது 58 வீடியோக்களை கண்டுகளிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. யாகூ இந்தியா நிறுவனம், என்டிடிவி, ஸ்டார் டிவி , ஷெமாரோ, ஹெட்லைன்ஸ் டுடே, பிவிஆர் பிக்சர்ஸ், அல்ட்ரா உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து செய்தி, பொழுதுபோக்கு, லைப்ஸ்டைல் மற்றும் திரைப்படங்கள் தொடர்பான வீடியோக்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, யாகூ மூவிப்ளெக்ஸின் மூலம், முழு நீளத்திரைப்படங்களையும் இலவசமாக வழங்க உள்ளது” என்று கூறியுள்ளார்.
_______________________________________________________________________

                                     பூமி கொஞ்சம் கிட்டேயிருந்து பாருங்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?