இந்தியாவை சூடான் அளவு முன்னேற்றுவோம்?
பிரதமர் மன்மோகன்சிங் ”கடந்த 5 ஆண்டு காலத்தில் இளைஞர் காங்கிரஸ் பெரும் பலம் உள்ள இயக்கமாக உருவெடுத்துள்ளது. இது ராகுலின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். நாட்டில் பல்வேறு நல்ல பல திட்டங்களை காங்கிரஸ் அரசு செய்து வருகிறது. இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. இதனை எட்டுவதில் பெரும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு பெரும் சவால்களை எதிர்நோக்கும் நிலையில் இருக்கிறோம். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தும். விவசாயிகள் நல்ல விலை பெறுவர்” என்று ராகுல் காந்தி தலைமையில் நடந்த இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் வருத்தத்துடன் மொழிந்திருக்கிறார்.
நீங்கள் சந்தித்த சவால்கள்.
புதிய பொருளாதார திட்டம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் லாபம் தந்த பொதுத்துறை நிறுவனங்களை வெளிநாட்டி ற்கு விற்ற நல்லதை சொல்லவா?
அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் இந்திய அணு உலைகளை அமெரிக்காவிற்கு திறந்து வைத்து விட்டு போபால் போல் பெரும் அழிவு வரும் போது மக்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டிய நிலையை அகற்றியதை சொல்லவா?
இன்று நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கும் ஆயுள் காப்பீட்டுக் கழகம்,தேசிய வங்கிகளை தனியாருக்கு விற்க ஆளாய் பறப்பதை சொல்லவா?
நாட்டில் சில்லறை விற்பனயில் 25 லட்சம் கடையினர் ஈடுபட்டுள்ளனர்.அவர்களிடம் கிட்டதட்ட 70 லட்சம் பேர்கள் பணிபுரிகின்றனர்.அவர்கள் குடும்பம் சேர்த்து 2கோடி இருக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தையே குழிதோண்டி புதைத்து விட்டு சில நூறு வெளிநாட்டினர் கொள்ளை ,கொள்ளையாக நம் பணத்தை அவர்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறீர்களே அதுவா?
நீங்கள் செய்ய நினைத்து செய்ய தடங்கள் வரும் நல்ல காரியங்கள் இவைதானே?
சிறு வியாபாரிகளை உயர்த்தும்.விவசாயிகள் நலன் பெறுவார்கள் என்கிறீர்களே அது எப்படி என்று விளக்க முடியுமா.சும்மா எழுதி வைத்துக்கொண்டு புள்ளி விபரங்களைக்கூறாமல் மக்களுக்கு விளக்கமாக எவ்விதத்தில்பயன் என்று கூற உங்களால் முடியுமா?
நீங்கள் இந்தியாவை ஆட்சிசெய்யும் இடத்தில் இருக்கிறீர்களே தவிர உண்மையான இந்தியனாக இல்லை.நீங்கள் நடத்துவது உண்மையில் இந்திய தேசிய காங்கிரஸ் அல்ல.அமெரிக்கன் காங்கிரஸ்தான்.
உங்களின் எண்ணம் எல்லாம் இந்தியாவை நல்ப்படுத்துவது அல்ல.
அமெரிக்காவை எப்படி திருப்தி படுத்துவது என்பதுதான்.
வால்மார்ட் போன்ற பகாசுர நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தால் என்ன நடக்கும் என்பதை அறியாத அளவு நீங்கள் விபரம் புரியாதவர் அல்ல.ஆயினும் உங்களுக்கு இந்திய நலனைவிட,மக்கள் நலனைவிட வேறு யார் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவதுதான் தலையாயக்கடமை எனத் தெரிகிறது.இவ்வளவு எதிர்ப்பையும் மீறி அந்நிய முதலீட்டைக்கொண்டுவருவேன் என்று திமிராகக் கூறும் மன்மோகன் சிங்,காங்கிரசை தேசத் துரோகிகள் என்று கூறினால் கூட தப்பில்லை என்றே தெரிகிறது.
பாவம்.இந்தியா,அதன் மக்கள். காட்டிக்கொடுக்கும் கட்சியினர் கையில் சிக்கியுள்ளனர்.
பொருளாதாரக் கொள்கைகளை யாரிடம் இருந்து நீங்கள் இறக்குமதி செய்கிறீரகளோ அந்த அமெரிக்கா-ஐரோப்பிய நாடுகள் தங்களின் தவறான கொள்கைகளால் சிக்கி தினறுவதையும் அங்கு தினம் நடக்கும் போராட்டங்களையும் பார்த்தும் அந்த வழியில்தான் போவேன் என்று அடம் பிடிக்கும் மன்மோகன்சிங்-சோனியா
வகையறாக்கள்இந்தியாவை இன்னொரு சூடான் ஆக்காமல் விட மாட்டார்கள் என்றே தெரிகிறது.
_________________________________________________________________________________
சோவியத்ரஷியா நாட்டை உருவாக்கிய இரும்பு மனிதர் ஸ்டாலின். இவரது ஒரே மகள் ஸ்வெத்லானா(வயது 85).
இவர் 1970ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவில் உள்ள மத்திய விஷ்கான்சின் நகரில் கணவர் வில்லியம் பீட்டருடன் குடியேறினார்.பீட்டர் கட்டிடக்கலை நிபுணர் .
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஸ்வெத்லானா இன்று மரணம் அடைந்தார்.
மகள் ஸ்வெத்லானாவைக் கொஞ்சும் ஸ்டாலின்.
_______________________________________________________________________________
ஈரான்:தாக்கப்பட்ட பிரிட்டீஸ் தூதரகம்.
அடித்து நொறுக்குவோம்,,,...
அகப்பட்டதை சுருட்டுவோம்.ஈரான்:தாக்கப்பட்ட பிரிட்டீஸ் தூதரகம்.
அடித்து நொறுக்குவோம்,,,...
இன்று ஈரான் தலை நகர் டெஹ்ரானில் ஈரானிய இளைஞர்களால் பிரித்தானிய தூதரகம் சூறையாடப்பட்டது.பீரித்தானிய பார்லிமெண்டில் ஈரான் அணு சக்தி விவகாரம் தொடர்பாக பொருளாதார தடை விதிக்கும் மசோதா நிறைவேறியதை அடுத்து இச்சம்பவம் நடை பெற்றிருக்கிறது.
_________________________________________________________________________________
”வாங்க” ,வாங்க உங்களை வரவேற்கிறது வால்மார்ட்