பாதிக்கும் பட்டியல்?
அரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த, பி.பி.கபூர் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம் மனு தாக்கல் செய்தார். அதில், "பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும்' என கோரியிருந்தார்.
அவரின் கோரிக்கையை நிராகரித்த ரிசர்வ் வங்கி, "வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் தொழிலதிபர்களின் பெயர், விவரங்கள் எங்களிடம் உள்ளன என்பது உண்மையே. ஆனாலும், அவை ரகசிய ஆவணங்கள் என்பதால், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதை மீறி வெளியிட்டால், அது நாட்டின் பொருளாதார நலனை பாதிக்கும்' என,பதில் தெரிவித்தது.
இதனால்கபூர் மத்திய தகவல் ஆணையத்தில் அவர்மேல்முறையீடு செய்தார். அவரின் மனுவை விசாரித்த, தகவல் ஆணையர் சைலேஷ் காந்தி ”பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும், முதல் 100 தொழிலதிபர்களின் பெயர் மற்றும் விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். மேலும், தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4ன்படி, இதுபோன்ற தொழிலதிபர்களின் முழுமையான விவரங்களை, ரிசர்வ் வங்கி, தங்களின் வெப்சைட்டில் டிசம்பர் 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்.
அத்துடன் அந்தப் பட்டியலை ஆண்டுக்கு ஒரு முறை அப்பட்டியலை புதுப்பித்து வெளியிட வேண்டும். வங்கிகள் ஒப்படைக்கும் ஆவணங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, ரிசர்வ் வங்கிக்கு உண்டு என்றாலும், பெரிய அளவிலான இதுபோன்ற பொதுநலன் தொடர்பான விஷயங்களில், விதி விலக்குகளை காரணம் காட்டி, தகவல்களை வெளியிட மறுக்கக் கூடாது”என்று ஆணை வெளியிட்டார்.
சுய தொழிலுக்காக வெறும் 50000 -லட்சம் எனக் கடன் வாங்கியவர்கள் தொழில் பின்னடைவினால் தவணைக்கட்டாவிட்டாலும்,தாமதமாகக் கட்டினாலும் நாளிதழ்களில் படத்துடன் தீவிரவாதி அளவுக்கு விளம்பரப்படுத்தி கேவலப்படுத்தும் வங்கிகள்.
கோடிக்கணக்கில் பணத்தை வங்கிகளில் வாங்கிவிட்டு தொழிலையும் பலநூறு கோடிக்கு பெரிக்கிக்கொண்டு வங்கிக்கடனையும் செலுத்தாமல் திரியும் பகாசுர நிறுவனத் தொழில் அதிபர்கள் பெயரை வெளியிட மறுப்பது எந்த வகையில் நியாயம்.?
அவர்களில் பல அம்பானிகள்,சத்யம்,விஜய் மல்லையா போன்ற நிறுவனங்கள்தானே உள்ளன.
அவர்களின் கடன்களை மட்டும் அவ்வப்போது பட்டியல் வெளியிடாமலே ரகசியமாக வராக் கடன்கள் என்ற பெயரில் தள்ளுபடி செய்கிறார்களே.அது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்காதா?
அந்த வராக்கடன் காரர்கள் பட்டியலை என்றாவது நம் வங்கிகள் வெளியிட்டுள்ளதா என்றால் இல்லை.இதுவரை 10லட்சம் கோடிக்கு மேல் வராக் கடன்கள் தள்ளுபடி நடந்துள்ளது.
சுவிஸ் உட்பட வெளிநாடு வங்கிகளில் போடப்பட்டுள்ளப் பணமும் -வராக்கடன் தள்ளுபடி பணமும் மதிப்பில் ஒன்றை யொன்று மிஞ்சும் அளவில்தான் உள்ளன.
ரிசர்வ் வங்கிக்கு கடைசியாக ஒரு கேள்வி.?
“பணத்தை திருப்பி செலுத்தாத பெருந்தொழிலதிபர்களின் பட்டியலை வெளியிட்டால் இந்தியாவின் பொருளாதரம் எந்தவகையில் பாடிக்கப்படும்.?
பட்டியலை வெளியிடுவதன் மூலம் திருடர்களை இனம் கண்டு அவர்களுக்கு இனி வங்கிகள் எச்சரிக்கையாக கடனை வழங்கும் அல்லவா?
பொருளாதாரத்திற்கல்ல பாதிப்பு.அந்த தொழிலதிபர்களுக்கும் அவர்களை வைத்து பிழைக்கும் ஆட்சியினருக்கும்,அரசியல்வாதிகளுக்கும்தான்!
----------------------------------------------------------------------------------------------------
கற்கள்
இவை எல்லாம் 250 மடங்கு நுண்ணோக்கி மூலம் பெரிதாக்கப்பட்ட மணல்,பாறைத் துகள்கள்.
__________________________________________________________________________________________
அழிவின் அழகு,,