சாதா பேருந்தே கிடையாது. இங்கே.....
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் சாதாரண, எல்எஸ்எஸ், எம்.சர்வீஸ், பி.பி, விரைவு, சொகுசு, வால்வோ ஏசி என 7 வகையான பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது எல்எஸ்எஸ், எம்.சர்வீஸ், பி.பி வகையான பேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. சாதாரண, விரைவு, சொகுசு, வால்வோ என 4 வகை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த 1000 குறைந்த கட்டண பேருந்துகள் விரைவு மற்றும் சொகுசு கட்டணத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மேலும் அவதிப்படுகின்றனர்.
பேருந்து புறப்படும் இடத்தில் இருந்து, கடைசி வரையில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவு. 2 அல்லது 3வது ஸ்டேஜில் இறங்குவோர் தான் அதிகம். எனவே தற்போது ஒரு ஸ்டேஜூக்கு ஒரு கட்டணம் என வசூலிக்கப்படுகிறது. முன்பு 2 ஸ்டேஜூக்கு ஒரே கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிரடி கட்டண உயர்வினால் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மட்டுமே ரூ.1 கோடி கூடுதல் வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தினந்தோறும் இரண்டே கால் கோடி வருமானம் கிடைக்கிறது. தமிழ்நாடு அரசாங்க போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளன (சிஐடியு) துணை தலைவர் சந்திரன் கூறியதாவது: ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 7 சதவீத டிஏ வழங்கவில்லை. இப்போது பேட் டாவும் குறைக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு ரூபாய்1000 வசூலித்தால் ரூபாய் 23.50 பைசா பேட்டாவாக கிடைக்கும்.
ஆனால் இப்போது பஸ் கட்டண உயர்வுக்குப் பின்பு ரூ16.50 பைசாவாக குறைத்து அரசுஉத்தரவிடப்பட்டுள்ளது. பேட்டாவை உயர்த்தி வழங்க கோரி வரும் 24ம் தேதி போக்குவரத்து பணிமனைகளில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்பட்டு வந்த 1000 சாதாரண கட்டண பேருந்துகளையே விரைவு மற்றும் சொகுசுபேருந்துகளாக பெயரை மட்டும் மாற்றிவிட்டுள்ளனர். இந்த மோசடியால் பொதுமக்கள் ஏற்கனவே உயர்ந்த கட்டணத்திலும் மேலும் அதிகமாக பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர். வரலாறு காணாத அளவில் பஸ் கட்டணங்கள் உயர்த்தியதை கண்டித்து மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவைகளை செய்திகளாக வெளியிடுவதில்லை நமது நடுநிலை நாளிதழ்கள் .