வேண்டப்படாதவர்கள்.....
”இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை பாகிஸ்தான் வழங்கவில்லை’ பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் மட்டுமே இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக இந்த நிலை எடுக்குமாறு கருத்தினை முன்வைத்தது . இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடந்து வரும் நிலையில் புதுதில்லியுடனான வர்த்தக நோக்கில் பாகிஸ்தானின் வர்த்தகத் துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது” என்றார் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி.
பாகிஸ்தானுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு இந்தியா என்ற அந்தஸ்தை அளிக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பிர்தெüஸ் அவான் தெரிவித்து மூன்று நாள்களுக்குப் பிறகு கிலானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்..
1996-ம் ஆண்டு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு பாகிஸ்தான் என்ற அந்தஸ்தை இந்தியா அளித்தது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாகபாகிஸ்தான் இத்தகைய அறிவி வெளியிடாமல் இருந்தது. இதற்கு அரசியல் ரீதியாகவும், அரசிலும் கடும் எதிர்ப்பு இருந்து வந்தது. காஷ்மீர் விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் அரசியல் நடைபெறுவதால் இதற்குஎதிர்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதுமே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில்பிரதமர் கிலானி”,இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை வழங்கவில்லை. இப்போதைக்கு இந்தியாவுக்கு மிகவும் வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை அளிப்பது குறித்த பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நடவடிக்கை தொடர்பாக சுயமாக முடிவெடுத்துக் கொள்ள வர்த்தக அமைச்சகத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் விரும்பத்தக்க நாடு அந்தஸ்தை இந்தியாவுக்கு அளிப்பது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டு அது நாடாளுமன்றத்துக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. பிற நாடுகளுடன் பேச்சு நடத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அவசியம். இது தொடர்பாக உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்படும்” என்று கிலானி குறிப்பிட்டார்.
முன்னதாக பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் அவான் வெளியிட்டவேண்டப்பட்ட இந்தியா அறிவிப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் வரவேற்பு தெரிவித்தார்.” இதுபோன்று பல ஆண்டுகளுக்கு முன்பே பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இப்போதைக்கு “வேண்டப்பட்ட நாடு” அறிவிப்பு பாகிஸ்தான் வெளியிடாததால் இந்தியாவில் விலை வாசிகள் பயங்கரமாக ஏறும் நிலை உள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு அதுதான் காரணம்.?பாகிஸ்தான் இந்தியாவை வேண்டப்பட்ட நாடு” என்று அறிவிப்பை விட்டுவிட்டு எல்லை தாண்டி பயங்கரவாதம் செய்யாமல் விட்டு விடுமா?
வேண்டப்பட்ட நாடு என்ற உரிமையை தருவதால் என்ன பயன்? வர்த்தகம் நடத்த சில சலுகைகள் கிடைக்கும்.அதனால் நாடுக்கு என்ன நன்மை.இங்குள்ள அம்பானிகள் தங்கள் வியாபரத்தையும்,பணக்குவியலையும் பெருக்கிக்கொள்வாரகள். மக்களுக்கு-இந்திய வளர்ச்சிக்கு ஒரு பயனும் இல்லை.
ஏற்கனவே இந்தியா வேண்டப்பட்ட நாடு என்பதால்தான் இங்கு ஆங்காங்கு தனது குண்டை தீவிர வாதிகளைத்தூண்டிவிட்டு வைக்கிறதே.அந்த உரிமை நமக்கு போதாதா?
____________________________________________________________________________________________________________வெடிக்கக்_கூடா[ங்]குளம்
கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த மாதம் மின் உற்பத்தியை துவங்க தயாராகி விட்டது. ஆனால் இப்போதுஅணுமின் நிலையத்தை மூடக்கோரி, ஒரு தரப்பினர் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இதில், பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்க வைக்கப்படுகின்றனர். அணு எதிர்ப்பாளர்கள் கூறுமணுசக்தி தொடர்பானசெய்திகளை கேட்டு, பெண்களும், கிராம மக்களும் பயமடைந்துள்ளனர்.இதில், பெரும்பாலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிலர், திட்டமிட்டு போராடுவதாக கூறப்படுகிறது.
உதயக்குமார் என்பவர் தலைமையில் போராட்டம் நடக்கிறது. இதில், ஜெயக்குமார், சுசிலன் ஆகிய இரண்டு பாதிரியார்களும், அவர்களை சார்ந்தவர்களும் மும்முரமாக உள்ளனர்.இரண்டு மாதங்களுக்கு மேலாக, மிகுந்த பொருட்செலவுடன் போராட்டம் நடத்தப்படுகிறது. போராட்ட பகுதிக்கு வருவோர், வாகனங்களில் வரவும், அவர்களுக்கு உணவு ஏற்பாடுகளுக்கும் அதிக பணம் செலவாகிறது. போராட்டக்காரர்களின் அச்சம் போக்க, மத்திய அரசு 15 பேர் குழுவையும், மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்.பி., மற்றும் போராட்டக்காரர்கள் அடங்கிய ஆறு பேர் கமிட்டியை மாநில அரசும் அமைத்துள்ளது. அணு உலையை திறக்க கோரி, தமிழ்நாடு சத்திரிய நாடார் இயக்கம் சார்பில், அனைத்து சமுதாய தலைவர்கள் அடங்கிய 15 பேர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் உண்ணாவிரதம், விழிப்புணர்வு பிரசாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
:ஆனால்அணு எதிர்ப்பு போராட்ட பின்னணியில், வெளிநாட்டு, மேற்கத்திய நாட்டு சக்திகள் உள்ளதாகவே, இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் பானர்ஜிகூறியுள்ளார்.
அணு எதிர்ப்பாளர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது. ஏன் போராட்டம் நடக்கிறது என்பதை அறியும் முயற்சி நடக்கிறது. ஒரு தேசிய கட்சியால் கூட ஒரு போராட்டத்தை, ஒரு வாரம் வரை மட்டுமே நடத்த முடியும். ஆனால், ஒரு சிறு குழு, இரண்டு மாதங்களுக்கு மேல், மக்களை திரட்டி வந்து, தொடர் போராட்டம் நடத்துவது, எளிதல்ல. இடிந்தகரையில் முகாமிட்டுள்ள குழு, இதை செய்து வருகிறது.தற்போது, சில அரசியல் தலைவர்கள், அவ்வப்போது ஏதாவது பிரச்னையை கிளப்பும் தலைவர்கள் சிலர், அணு எதிர்ப்பு குழுக்களுடன் கலந்துள்ளனர். இது மட்டுமின்றி, சில கடல் வாணிப குழுக்களும், போராட்ட பின்னணியில் உதவி செய்வதாக அணுசக்திக்கழகமும்,மத்திய அரசும் எண்ணுகிறது.
கூடங்குளம் அணு உலை இருக்கும் பகுதி, கடலை ஒட்டிய பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், 24 மணி நேரமும் ராணுவம் சுற்றிக் கொண்டிருக்கும். இனிமேல் அங்கு சட்டவிரோத கடத்தல்களுக்கு, இடம் கிடைக்காது. இலங்கையை மையமாக வைத்து, வாணிபம் செய்யும் குழுக்களும், அந்தமான், லட்சத்தீவுகள், மொரீஷியஸ் தீவுகளை மையமாக கொண்ட சட்ட விரோத குழுக்களும், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பாதுகாப்பால்,பாதிக்கப்படுவார்கள்.இந்த போராட்டம், நாங்கள் எதிர்பாராத மக்கள் போராட்டமாக இருந்தாலும், பின்னணியில் பல வகை சக்திகள் பயன்பெறுகின்றன. மக்கள் பாதுகாப்பு மட்டும் தான், போராட்டத்தின் லட்சியம். ஆனால், அதன் பின்னணியில் பல லட்சியங்கள், ப"ல கரங்கள்', பல சக்திகள் பயனாளியாகின்றன.
இவை எல்லாம் மத்திய அரசுக்கு இதுவரை கிடைத்த தகவல்களாகத்தெரிகிறது.
அணு எதிர்ப்பு போராட்டம் இந்திய மக்களின் பாதுகாப்புக்கான பிரச்னை என்பதை விட அரச்சியல், சில மேற்கத்திய நாடுகள் தூண்டிவிடும் பிரச்னையாக மாறியுள்ளது.அதன் பாதுகாப்பை உறுதி செய்வது என்பதை விட அணுமின் நிலையத்தையே மூடிவிட வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டும் உள்ளதாகத் தெளிவாக தெரிகிறது.மத்திய அரசு அமைக்கும் குழுவை புறக்கணிக்கும் இவர்கள் தாங்களாகவே குழு அமைப்பதாகக் கூறுவது அக்குழுவின் முடிவு எப்படிபட்ட அறிக்கையை தரும் ,அது மூடிவிட வேண்டும் என்பதைத்தவிர வேறு ஒன்றும் இருக்காதுஎன்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.
இப்போதே சில மீனவர்கள் அல்லாத சாதியினர் இதை சாதிய-சமுக பிரச்சினையாக்குவதைக் காணும் போது கவலையாக இருக்கிறது.
கூடங்குளத்தை சுற்றியுள்ள 27 கிராமத்தில் 2கிராமத்தினர்[கத்தோலிக்க மதத்தினர்}மட்டும் போராடுவதுடன் அவர்களுக்கு துணையாக குமரி,கேரளாவில் இருந்து ஆட்கள் வாகனங்களில் அழைத்து வந்து போராட்டத்தில் கலந்து கொள்வதும்,கவனிக்கப்பட வேண்டிய விடயம்.அவர்களுக்கு பாதுகாப்பதரும் தமிழகக் காவல் துறையினர் அணுமின் நிலையத்தில் பனிக்கு செல்பவர்களை பாதுகாப்பில்லை பணிக்கு செல்லாதீர்கள் என மிரட்டி திருப்பி அனுப்புவதும் அங்கு நடக்கிறது.
இந்தஅணுமின்நிலைய எதிர்ப்புப் போராட்டத்தை எதிர்த்து பக்கத்துக் கிராமத்தைசேர்ந்த நாடார் ,தேவர் சமுகத்தினர் உண்ணாவிரதம்,ஆர்பாட்டம்,துண்டறிக்கைகள் என அணுமின் நிலையத்திஅற்கு ஆதரவாக இறங்கியுள்ளது கவலையுடன் கவனிக்கப்பட வேண்டிய அவசியம் அரசுக்கு உண்டு.தமிழக அரசும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகப் பேசுவதை நிறுத்தி விட்டு நடுநிலையில் தனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும்.ஒரு சாதிய மோதலை தமிழகத்தில் ஏற்பட்டு விடாமல் தடுக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு.
ஸ்பெய்ன் கடலுக்கடியில் எரிமலை[05-11-11] வெடித்ததினால் ஏற்பட்ட கடல்அலைகள் .