அடுத்த சாமி


2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பேசி வருவது குறித்து நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை நான் ஓயமாட்டேன் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வெளியில் கருத்து கூறுவது நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் குறுக்கிடுவதாகும் என்ற அடிப்படையில் சுப்பிரமணியன் சுவாமி மீது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசின் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தியை முட்டாள் என்று சொன்னதன் விளைவு எப்படி ‘கயஸ் தியரிபடி” உண்டாகிவிட்டது பார்த்தீர்களா? உள்ளே செல்லும் நாளும் வந்தாலும் வந்திடும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?