மீண்டும் புலி வருது.?
இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியுள்ளனர்.
இலங்கையில் பெரும் போரில்புலிகள் பலர் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகஇலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார்.
இப்போது மத்திய உளவுத்துறையினருக்கு ஒரு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலில்பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்த திட்டம் வகுத்து வருகி ன்றனர். இவர்கள் இந்தியாவிற்குள் நுழைவதில் சிரமம் இருப்பதால் மாற்று வழியை தேடினர். ஏற்கனவே இந்திய அரசு மீது அதிருப்தியில் இருக்கும் புலிகள் மற்றும் பஞ்சாபை மையமாக கொண்டுள்ள சீக்கிய பயங்கரவாத அமைப்பனா பப்பர் கல்சா போன்ற பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவர்கள் மும்பையில் குறிப்பாக கடற்படை தளம் அமைந்திருக்கும் பகுதியில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம். இந்த 3 அமைப்பினரும் இது தொடர்பாக பேசி முடிவு எடுத்திருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. இதனால் முழு எச்சரிக்கையுடன் இருக்க மும்பை போலீசார் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.என்று ஒரு செய்தியை இந்தியாவில் பரப்பிவருகின்றனர்.
மத்திய அதிகாரி ஒருவர் ; செயல் இழந்து நின்ற புலிகள் இயக்கத்தினர் கடந்த 2 மாதத்தில் சற்று வளர்ந்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இரு அமைப்பினரின் மறைமுக செயல்பாடுகள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அம்பாலாவில் ஒரு காரில் வெடிபொருட்களுடன் நின்ற கார் கண்டுபிடிக்கப்பட்டு செயல் இழக்க செய்யப்பட்டது, இந்த சம்பவத்திற்கும் இந்த அமைப்பினருக்கும் தொடர்பு இருக்குமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது என்று கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
தினமலர் எப்படி பட்ட விடுதலைப்புலிகள் எதிர்ப்பு பத்திரிகை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இச்செய்தி விடுதலைப் புலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதை தொடர ,தடையை புதுப்பிக்க உருவாக்கப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்றே பலர் கருதுகின்றனர்.
3 பேர்களின் தூக்கை தமிழகம் எதிர்க்கும் போது அந்த எதிர்ப்பை நீர்த்துப்போகவும் விடுதலைப்புலிகள் பூச்சாண்டிக்காட்டவுமே இச்செய்தி உருவாக்கப்பட்டதின் உண்மை நோக்கமாக இருக்கலாம்.
விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டிவிட்டோம்.மாவீரன் பிரபாகரன் அழிக்கப்பட்டு விட்டார் என்று கூறிக்கொண்டு வருபவர்கள் இப்போது இப்படி செய்தியை பரப்புவது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. உண்மையாக இருக்கவும் கூடாது. _________________________________________________________________
சபாநாயகரின் வாடகை பாக்கி 1.98 கோடி?

”மக்களவை சபாநாயகர் மீரா குமாரின் குடும்பத்தினர், டில்லியில் உள்ள அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ள வகையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு, 1.98 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று தகவல் உரிமை சட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராமுக்கு, டில்லியில், அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 1986ல், இவர் மறைந்தார். ஆனாலும், அந்த பங்களாவில், ஜெகஜீவன் ராமின் மனைவி இந்திராணி தேவி மற்றும் அவரின் மகளும், தற்போதைய லோக்சபா சபாநாயகருமான மீரா குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கியிருந்ததாகவும், இந்த வகையில், அரசுக்கு அவர்கள் வாடகையாக, 1.98 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தகவல் அமைச்சகம் மூலம் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சுபாஸ் சந்திர அகர்வால் என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் இத்தகவலைட் தெரிவித்துள்ளது.
சபாநாயகர் மீரா குமார் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
"இந்த பங்களாவை, கடந்த 2002லேயே இந்திராணி தேவி குடும்பத்தினர் காலி செய்து விட்டனர். இதுகுறித்த தகவலும், அப்போதே அரசுக்கு தெரிவிக்கப்பட்டு விட்டது' என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
அப்போது இந்த 1.98 கோடிக்கு யார் பொறுப்பு.?அதிகாரிகள் வீட்டை திரும்ப வரவில் வைக்கததா?
1986 -இல் இருந்து ஒருமுறை கூட வீட்டை காலி செய்ய அறிவிக்கை மீராகுமார் குடும்பத்துக்கு அனுப்பப்படவில்லையா?அனுப்பியிருந்தால் வீட்டின் நிலை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்குமே.
சரி.இன்னுமொரு த.அ.உ.சட்ட மனு அனுப்ப வேண்டியதுதான்..
___________________________________________________________________
___________________________________________________________________