ஆயுதமும்-மருத்துவமும்,

ஆயுதம் செய்வொம்.
                           
0விடுதலைப் புலிகள் சமாதான காலகட்டத்திலும் அதற்கு பிந்திய நிலையிலும் ஆயுதப் பற்றாக்குறை காரணமாக அவர்களே ஆயுதங்களைத் தயாரிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பல நீர் மூழ்கிக் கப்பல்களையும் மற்றும் கடலில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளையும் அவர்கள் தயாரித்திருந்தனர். நீர் மூழ்கிக் கப்பலில் இருந்து கடலுக்கு அடியில் இருந்து ஏவப்படும் ரோப்பிடோ என்று அழைக்கப்படும் ஏவுகணைகள் போல நிலத்தில்(அதாவது கடற்கரைகளில்) இருந்து ஏவக்கூடிய சக்திவாய்ந்த ஏவுகணைகளை விடுதலைப் புலிகள் தாமே தயாரித்திருந்தனர். சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட இவ்வகை ஏவுகணைகளைப் பயன்படுத்தி புலிகள் இலங்கை கடற்படையின் சில டோறாப்படகுகளை மூழ்கடித்தும் உள்ளனர்.

ஆயுதங்களை மாற்றுவதும் அவற்றை மேலும் மேம்படுத்தி அதிசக்திவாய்ந்ததாக மாற்றுவதில் புலிகளுக்கு நிகர் புலிகளே தான் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ உயர் அதிகாரி ஒருவர். முல்லைத்தீவுக் கடற்பரப்பில் உள்ள இரகசிய இடம் ஒன்றில் வைத்தே புலிகள் தமது கடல் தாக்குதல் படகுகளையும் மற்றும் ஏவுகணைகளையும் தயாரித்து வந்தனர் என அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார். தாம் தயாரித்த ஏவுகணைகளை நீருக்கு அடியில் செலுத்தவும் ஏவுகணைகளை தயாரிப்பு நிலையங்களில் இருந்து கடற்கரைக்கு கொண்டுவரவும் அவர்கள் பிரத்தியேக வசதிகளைச் செய்துவைத்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை வைத்தே இந்த ரோப்பிடோ ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டது. மற்றும் அதில் அதி தொழில்நுட்ப வசதிகளும் பொருத்தப்பட்டிருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் தயாரித்த சிலவகையான நீர் மூழ்கி ஏவுகணைகள் துல்லியமாக இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்டவையாக இருந்தது என்றும் ஒரு முறை இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான டோராப் படகு ஒன்று அதிஷ்டவசமாக தப்பியதை அடுத்து அதனை காங்கேசன் துறைமுகத்திற்கு எடுத்துச் சென்று கடற்படையினர் ஆராய்ந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய அதிகாரிகள் காங்கேசன் துறைமுகம் சென்று அத்தாக்குதல் படகை ஆராய்ந்தவேளையே அப்படகு ரோப்பிடோ மூலம் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியா உட்பட இலங்கையும் அதிர்ச்சியில் ஆழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இதே போலவே விடுதலைப் புலிகள் சாதாரண சிறு ரக விமானத்தைவாங்கி அதனை வன்னிக்கு எடுத்துச் சென்ற பின்னர் அதை போர் விமானமாக மாற்றம் செய்து இலங்கை விமானத்தளத் தாக்குதலுக்கு பயன்படுத்தியுள்ளனர்.


நன்றி:தரவு
_________________________________________________________________________________________________________


எல்லாவற்றையும் மருத்துவமனையாக்குவோம்
           
பள்ளித்தளமனைத்தையும் கோவில் செய்வோம் எனபாரதி கூறியது போல் நமது முதல்வர் ஜெயலலிதா கலைஞர் கட்டியதனைத்திலும் மருத்துவம் செய்வோம் என இறங்கிவிட்டார்.
                                  
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாகஜெயா அரசு அறிவித்துள்ளது.
 இது பற்றி கருணாநிதி பேட்டியில்:
 நூலகம் மாற்றப்பட்டது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, "தன்மானமுள்ள தமிழர்கள், தமிழறிஞர்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்' என்று கூறினார்.
 இதன்பின் அறிவாலயத்திலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது கருணாநிதியிடம் பேட்டியளிக்குமாறு செய்தியாளர்கள் கேட்டதற்கு கருணாநிதி பதில் அளிக்க மறுத்துவிட்டார். தமிழக அரசின் அறிவிப்பால் ஏற்பட்ட கோபத்தால்தான் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை.

 அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக மூத்த எழுத்தாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 இது தொடர்பாக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்கள், மூத்த எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர் புதன்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
 அண்ணா நூற்றாண்டு நூலகம் இடம் மாற்றப்பட்டு குழந்தைகள் மருத்துவமனையாக்கப் போவதாக தமிழக முதல்வர் அறிவித்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறோம்.உயர் சிறப்பு குழந்தைகள் நல மருத்துவமனை அமைப்பது குறித்து மகிழ்ச்சியடையும் அதே நேரத்தில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றுவதைக் கைவிட்டு, அதே இடத்தில் அந்நூலகம் சிறப்பாக இயங்க ஆவன செய்ய வேண்டும் என்றுள்ளனர்.

                                             
 சா. கந்தசாமி, அசோகமித்திரன், பொன்னீலன், இந்திரா பார்த்தசாரதி, நாஞ்சில் நாடன், பிரபஞ்சன், சிற்பி பாலசுப்பிரமணியம், எஸ். ராமகிருஷ்ணன், ஞாநி, ச. தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, ஆ. சிவசுப்பிரமணியன், வாஸந்தி, இரா. நடராசன், மனுஷ்யபுத்திரன், கீரனூர் ஜாகிர்ராஜா,சு. வெங்கடேசன் ஆகியோர் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச்செல்வன்:
 நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த நூலகத்தைக் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றுவது என்ற அரசின் முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.
 வேபல்வேறு றொரு பொருத்தமான இடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை அமைக்கலாம். அரசு தனது முடிவை கைவிட்டு நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


                          
 இந்திய ஜனநாக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் இரா. வேல்முருகன்:
 அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றாமல் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
 அறிவுசார் பூங்கா அமையக்கூடிய இடத்தில்தான் நூலகம் இருக்க வேண்டும் என்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளார்


கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டை மருத்துவமனையாக்க அரசுக்கு கொடுத்தாலும் கொடுத்தார்.ஜெயலலிதா அவர் கட்டிய அனைத்துக்கட்டிடங்களையும் மருத்துவமனையாக்குவதில் இறங்கிவிட்டார்.


அறிவாலயத்தையும் கைப்பற்றி”நெஞ்சுக்கு நீதி” மருத்துவமனையாக்கலாமே.அதில் நெஞ்சக தொடர்பான மருத்துவங்களை செய்யலாமே?




                          



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?