வீணான மக்கள் பணம்,


திவால்  கிங் ஃபிஷர்-
மக்கள் பணத்தைப் பாழடித்த மல்லையா!
பெரு முதலாளிகளில் ஆடம்பரம் மற்றும் வீண் செலவுகளுக்கு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் எளிதில் நினைவுக்கு வருபவர் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருக்கும் விஜய் மல்லையாதான். அவரது இந்த நடவடிக்கை

கள் அனைத்தும் மக்களைக் கவருபவையாக ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டன. வெறும் காலண்டர் தயாரிக்க ஏராளமான மாடல்களை அழைத்துக் கொண்டு, தனி விமானத்தில் உலகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் மல்லையா. அந்த செலவெல்லாம் புதுமையான உத்தியாகக் காட்டப்பட்டு மக்கள் மூளைச் சலவைக்கு உள்ளாகினர். கிங் ஃபிஷர் விமான நிறுவனம் வந்தபோது தனியார் துறைக்கு எடுத்துக்காட்டாக அதை சித்தரித்து வந்தனர்.
                         
       
இவையனைத்தும் வெகு விரைவிலேயே அம்பலமாகிவிட்டன. 2003 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், ஒரு ஆண்டில்கூட லாபத்தில் இயங்கவில்லை. அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த இழப்பு எட்டாயிரம் கோடி ரூபாயைத் தாண்டி நிற்கிறது. அவரது சொத்துக்கள் என்று பார்த்தால் ஆடம்பரக் கார்கள், பந்தயக்குதிரைகள், பழங்கால வாட்கள், ஐ.பி.எல். கிரிக்கெட் மற்றும் ஃபார்முலா-1 அணி என்றுதான் பட்டியல் இருக்கிறது. மக்களின் பணத்தை ஆடம்பரமாக வாரிக் கொட்டியிருக்கிறார். தாங்க முடியாத கடன் என்றவுடன்தான் இது அம்பலமாகியிருக்கிறது. அனைத்துக் கடன்களையும் தீர்க்க அரசு உதவ வேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்தக் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.ஏழை மக்களுக்கு மானியங்களை வழங்குவதை மறுக்கும் மத்தியமன்மோகன் அரசு  மக்கள் பணத்தில் இந்தப் பணி நடக்கக்கூடாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கருத்து தெரிவித்துள்ளார்.
    
                       
விஜய் மல்லையா தலைமையிலான குழுமத்தில் ஆறு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் பங்குகள் விலையும் கடுமையாகச் சரிந்துள்ளது. அதைத் தூக்கி நிறுத்தவே, நோய் வாய்ப்பட்டிருக்கும் விமானப் போக்குவரத்துத்துறைக்கு உதவுவோம் என்று பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்தார். அதேவேளையில்தான், பெட்ரோல் விலை மீண்டும் உயரும் என்று அபாயச்சங்கு ஊதியுள்ளார். கிங் ஃபிஷர் நிறுவனத்திற்கு உதவக்கூடாது என்று பஜாஜ் குழுமத்தின் தலைவர் ராகுல் பஜாஜ் கருத்து கூறியுள்ளார். இவருடைய குழுமம் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடன்கள் திருப்பித் தரப்படாதது பற்றி இவர் இன்னும் வாய் திறக்கவில்லை என்பது தனிக்கதையாகும். 
                                 
நடப்பு நிதியாண்டுத் துவக்கத்தில்தான் தனது கடன் சுமையை நிதி நிறுவனங்கள் மீது கிங் ஃபிஷர் ஓரளவு இறக்கி வைத்தது. அதை பங்குகளாக பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகள் வாங்கிக் கொண்டன. அப்போது சந்தையில் நிலவிய பங்கு விலையில் 60 விழுக்காடு கொடுத்து அந்தப் பங்குகள் இந்த வங்கிகளுக்குக் கிடைத்தன. இந்த வகையில் சுமார் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை மக்கள் பணத்தில் தீர்த்துக் கொண்டார் விஜய் மல்லையா. இதன் பிறகும் இருக்கும் நிறுவனத்தின் இழப்புதான் சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். 1,400 கோடி ரூபாய் கொடுத்து கிங் ஃபிஷரைக் காப்பாற்ற பாரத ஸ்டேட் வங்கி மற்
றும் ஐசிஐசிஐ ஆகியவை எடுத்த முயற்சிகள் அந்த வங்கிகளுக்கு பாதகமாகவே முடிந்துள்ளன. கடுமையான நெருக்கடி காரணமாக கிங் ஃபிஷர் நிறுவனத்தின் பங்கின் விலை வெறும் 19 ரூபாய் அளவுக்கு சரிந்துவிட்டது. ஏகப்பட்ட கோடிகளை இரண்டு வங்கிகளும் இழந்து நிற்கின்றன. தனியார் துறை வெற்றியின் அடையாளமாகக் காட்டப்பட்ட கிங் ஃபிஷர் நிறுவனம், முதலாளித்துவ கொள்கைகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதற்கான அடையாளமாக மாறியுள்ளது.

                                                                                                                             நன்றி: மெயில் டுடே

         

கிங் ஃபிஷர் கடன் வாங்கியுள்ள வங்கிகள்
பொதுத்துறை

இந்திய ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) - 1,410 கோடி ரூபாய்

ஐ.டி.பி.ஐ - 719 கோடி ரூபாய்

பஞ்சாப் நேஷனல் வங்கி - 702 கோடி ரூபாய்

பேங்க் ஆப் இந்தியா - 552 கோடி ரூபாய்

பேங்க் ஆப் பரோடா - 532 கோடி ரூபாய்

யுனைடெட் வங்கி - 395 கோடி ரூபாய்

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - 360 கோடி ரூபாய்

கார்ப்பரேசன் வங்கி - 305 கோடி ரூபாய்

யூகோ வங்கி - 287 கோடி ரூபாய்

ஸ்டேட் வங்கி ஆப் மைசூர் - 139 கோடி ரூபாய்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 122 கோடி ரூபாய்

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - 56 கோடி ரூபாய்

பஞ்சாப் அண்டு சிந்த் வங்கி - 51 கோடி ரூபாய்

தனியார் துறை

ஐசிஐசிஐ வங்கி - 430 கோடி ரூபாய்

பெடரல் வங்கி - 100 கோடி ரூபாய்

ஆக்சிஸ் வங்கி - 46 கோடி ரூபாய்

இண்டஸ்இந்த் வங்கி - 6 கோடி ரூபாய்
                     

விஜய் மல்லையாவின் சொத்து

2011 ஆம் ஆண்டுக்கணக்குப்படி அவருடைய சொத்து மதிப்பு 22 ஆயிரத்து 850 கோடி ரூபாய்.
610 கோடி ரூபாய் செலவில் ஃபார்முலா-1 அணி.

ஐ.பி.எல். அணியான ராயல் சேலஞ்சர்சை 464 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.

16 ஆடம்பரக் கார்கள்,

200 பந்தயக் குதிரைகள்,

ஏராளமான பழங்கால வாட்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை ஏலத்தில் எடுத்துள்ளார்.[திப்பு சுல்தான் வாளை லண்டனில்  பெரும் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்  .]
_______________________________________________________________-

2-ஜி,புது வாக்குமூலம்.
இரண்டாம் தலைமுறை [2-ஜி]அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு விவகாரத்தில்,இந்திய கணக்குத் தணிக்கை ஆணையமுன்னாள் அதிகாரி ஒருவர் நாடாளுமன்றக் குழு முன்பு அளித்த வாக்குமூலம் புதிய திருப்பத்தை ஏற்படுத்துகிறது.
                                 
ஆர்.பி. சிங். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்து, நாடாளுமன்றத்துக்கு அறிக்கை அளித்த சிஏஜி எனப்படும் கணக்குத் தணிக்கை ஆணையத்தில், டைரக்டர் ஜெனரலாகப் பணியாற்றியவர். குறிப்பாக, அந்த ஆணையத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்புத்துறையின் கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பு அவரிடம் இருந்தது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஏலம் விடப்படாததாலும், சில நிறுவனங்களுக்கு ஆதரவாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா நடந்துகொண்டதாலும், அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கை தெரிவித்தது. அதன் அடிப்படையில்தான், ராசா பதவி விலக நேரிட்டது.
அதுதொடர்பாக விசாரணை நடத்த, எதிர்க்கட்சிகளின் கடும் நெருக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பி.சி. சாகோ தலைமையிலான அந்தக் குழு, பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

மதிப்பீடு சரியானதா?
                    
 ஆர்.பி. சிங் அந்தக் குழுவின் முன் ஆஜராகி வாக்களித்தார். தனக்குக் கீழ் பணியாற்றும்” மூன்று தணிக்கைத் துறை அதிகாரிகள், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு நடத்தி, கடந்த ஆண்டு தன்னிடம் அறிக்கை ஒன்றை அளித்ததாகவும், ஒதுக்கீடு வெளிப்படையாக நடக்காததால், அரசுக்கு 68 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்னர்.ஆனால், அவ்வாறு யூகத்தின் அடிப்படையில் இழப்புக் குறித்து கணக்கிட முடியாது என்றும், அது நமது பணியும் இல்லை” என்றும் தான் அந்த அதிகாரிகளிடம் கூறியதாகவும் சிங் தெரிவித்தார்.
”தனியார் நிறுவனம் ஒன்று சொல்வதை அடிப்படையாக வைத்து இவ்வாறு கணக்கிட முடியாது என்றும், அதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குக் கூட வாபஸ் பெறப்பட்டுவிட்டதால், அந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டுகூட முடிவெடுக்க முடியாது” என்றும் ஆர்.பி. சிங் தெரிவித்தார்.
அப்படியே கணக்கிடுவதாக இருந்தாலும் கூட, சுமார் 2600 கோடி அளவுக்கு வேண்டுமானால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதுவும் கூட முறையான கணக்கீடு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
                        கையெழுத்திட்டது ஏன்?
அப்போது,இடதுசாரி உறுப்பினர்கள் குறுக்கிட்டு, நீங்கள் கையெழுத்திட்டு வெளியிடப்பட்ட அறிக்கைக்கு எதிராக நீ்ங்களே இப்போது பேசுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது.
அதற்கு பதிலளித்த ஆர்.பி. சிங், தான் எதிர்க்கவோ ஆதரிக்கவோ இல்லை என்றும், அறிக்கையில் கையெழுத்துப் போட வேண்டிய பதவியில் இருந்ததால் கையெழுத்திட்டதாகத் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களில் எந்தப் பிரிவையாவது தாங்கள் ஏற்கவில்லையா என்று அவரிடம் கேட்டபோது, தான் எதையும் மறுக்கவில்லை என்றும், அதே நேரத்தில், அந்த அறிக்கையில் தனது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அம்சங்களுக்கு மட்டும் பொறுப்பேற்பதாகவும், நிதியமைச்சகம் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறைகளின் அறிக்கைகளும் அதில் இடம் பெற்றுள்ளதாகவும், அதற்கு தணிக்கைத் துறையில் வேறு அதிகாரிகள் பொறுப்புஆரம்பத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் வருவாய் குறித்த கணக்கெடுப்புக்கெல்லாம் திட்டமிடப்படவில்லை. பின்னர்தான் அதை சேர்த்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பாக டிராய் எந்தவிதமான முடிவையும் எடுத்திருக்கவில்லை. மத்திய அமைச்சரவையும் அதே முடிவில்தான் இருந்தது. எனவே ரூ. 1.76 லட்சம் கோடி அளவுக்கெல்லாம் இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. அப்படி இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று உத்தேசமாக கணக்கிடவும் முடியாது.

என்னைப் பொறுத்தவரை ரூ. 2645 கோடி அளவுக்கே நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என திடமாக கருதுகிறேன். இந்த நிலையிலிருந்து எந்தவிதமான மாற்றமும் இல்லை. மேலும் சிஏஜியின் முந்தைய அறிக்கையில் என்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கினர் என்று சிங் கூறியதாக சாகோ தெரிவித்தார்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------
கிரீசில் போராட்டத்தை படம் எடுத்த புகைப்படக்காரர் காலுக்கடியில் வெடித்த பெட்ரோல் குண்டு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?