ஞாயிறு, 18 டிசம்பர், 2011

இன்னொரு122.33 லட்சம் கோடி ஊழல்..?

இந்த நிதியாண்டில், நவம்பர் வரையிலான எட்டுமாதத்தில், நாட்டின்ஊகபேர வர்த்தக சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட வர்த்தகம், 122.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்டதை விட, 68 சதவீதம் (72.56 லட்சம் கோடி ரூபாய்) அதிகமாகும் என, பார்வார்டு மார்க்கெட் கமிஷன் தெரிவித்துள்ளது.நாட்டில், தேசிய அளவில் ஐந்து முன்பேர வர்த்தக சந்தைகளும், மண்டல அளவில் 18 ஊகபேர வர்த்தக சந்தைகளும் உள்ளன. இதில் தங்கம், வெள்ளி, தாமிரம், எரிசக்தி மற்றும் வேளாண் பொருட்கள் ஆகியவற்றின் மீது வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
நிதியாண்டின், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மீதான வர்த்தகம், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 32 லட்சத்து 81 ஆயிரத்து 86 கோடி ரூபாயிலிருந்து, 72 லட்சத்து 84 ஆயிரத்து 934 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வேளாண் பொருட்கள் மீதான வர்த்தகம், 50 சதவீதம் வளர்ச்சிகண்டு, 8 லட்சத்து 36 ஆயிரத்து 605 கோடி ரூபாயிலிருந்து, 12 லட்சத்து 51 ஆயிரத்து 697 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எரி பொருட்கள் மீதான வர்த்தகம், 35 சதவீதம் அதிகரித்து, 14 லட்சத்து 11 ஆயிரத்து 620 கோடி ரூபாயிலிருந்து, 19 லட்சத்து 2 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தாமிரம் உள்ளிட்ட மதிப்புமிக்க உலோகங்கள் மீதான வர்த்தகம், 17 லட்சத்து 26 ஆயிரத்து 925 கோடி ரூபாயிலிருந்து, 17 லட்சத்து 95 ஆயிரத்து 158 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இப்போது தெரிகிறதா தங்கம்,வெள்ளி ,உரங்களின் கடும் விலை உயர்வுக்குக் காரணம்?
இந்த கையில் காசும்-விற்கும் பொருளும் இல்லாமல் ஒரு சிறு அறை.கையடக்க கணினி ஒரு தொலைபேசி ஆகியவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பங்கு சந்தையில் கோடிக்கண்க்கில் விலைகளை உயர்த்தி சம்பாதிக்கும் ஒரு முன்பேர சூதாட்டக் கும்பல்தான் நாட்டின் விலைவாசி,பொருளாதாரகுழப்பங்களுக்கும் காரணம் .
இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.சிலர் அடிக்கும் முன்பேர வர்த்தக சூதாட்டத்தால் தங்கம்,வெள்ளி விலை மட்டுமல்ல.
வேளாண் பொருட்களான உரங்கள்,பூச்சி மருந்துகள் கூட விலை உயர்ந்து பல விவசாயிகள் கடனில் விழுந்து தற்கொலை செய்யும் நிலை வந்து விட்டது.ஆனால் மத்திய அரசோ தடை செய்யாமல் முன்பேர வர்த்தகத்தில் பங்கு கொள்ளும்பொருட்களின் பட்டியலை உயர்த்தி வருகிறது.
வேளாண் பொருட்கள்.மக்களின் அத்தியாவசிய பொருட்களான உணவுப்பொருட்களை இப்பேர வணிகத்தில் இருந்து விலக்க வேண்டும்.
122 லட்சம் கோடி வர்த்தகம் என்பது பொருளை உற்பத்தி செய்யாமல்,வாங்காமல்,இருப்புவைக்காமல்,ஏன் கண்ணால் காணாமலேயே கைக்காசை போடாமல் செய்யப்பட்ட வர்த்தக சூதாட்டம்.இதை மத்திய அரசு தடை செய்யாமல் மேலும் ,மேலும் அவர்கள் சூதாடும் பொருட்கள் பட்டியலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.காரணம் இதில் உள்ள வர்களில் பெரும் பாலோர் காங்கிரசின் இளவல்கள்.
கார்த்தி சிதம்பரம்,மன்மோகனின் மகன் போன்றவர்கள் முக்கிய இடம் வகிக்கிறார்கள்.
இவர்களால் உணவு ,உலோக பொருட்கள் உயர்ந்து கொண்டே இருப்பதுதான் மக்களுக்கு கிடைக்கும் நலன்.
பைசா போடாமல் இந்த ஆண்டு இவர்கள் சம்பாதித்தது122 லட்சம் கோடி.இதை ஒரு வகையில் 2-ஜி அலைவரிசை ஊழலுடன்தான் ஒப்பிட வேண்டும்.காரணம் அந்த 122 லட்சமும் விலையை செயற்கையாக,ஊகமாக் உயர்த்தி சிலரின் பைகளில் -கைகளில் போன மக்களின் பணம்தான்.இது போன்ற ஊகமான லாபக்கணக்குதானே 2-ஜி யில் இழப்பு எனக்கருதப்படுகிறது.இவர்களும் அந்த அளவு தவறுsta செய்தவர்களாகவே கருதப்பட வேண்டும்.

____________________________________________________________________________