அண்ணன்[தம்பி]மார் கதை.

 சென்னை தேனாம் பேட்டையில் ரூ.6 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது மு.க.ஸ்டாலின் ராமநாதபுரத்தில் இருந்தார். தகவல் அறிந்தததும் அவர்  நள்ளிரவு விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என்று வதந்தி பரவியதால் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் விமான நிலையத்தில் கூடியிருந்தனர். அவரது வீட்டிலும் தொண்டர்கள் குவிந்தனர்.   
இன் றுகாலை 11.45 மணிக்கு மு.க.ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகம் சென்றார். அவருடன் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்களும் சென்றனர்.
 
டி.ஜி.பி. ராமானுஜம் அங்கு இல்லாததால் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் 2 மனுக்களை கொடுத்தார்.    பின்னர் நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் பேசிய கூறியதாவது:- 
”முதல் தகவல் அறிக்கை எனப்படும் எப்.ஐ.ஆர் இந்த ஆட்சியில் பிராடு இன்வெஸ்டிகேசன் ரிப்போர்ட்டு என்ற நிலை மாறிவிட்டது. என் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு.எனது உணர்வை,உண்மையக் கூறவே  டி.ஜி.பி.யை சந்திக்க வந்தேன். அவர் இல்லை. கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் 2 மனுக்கள் கொடுத்துள்ளேன்.   ஒன்று என் மீதான பொய் வழக்கு தொடர்பானது. இந்த வழக்கில் எனக்கோ, என் குடும்பத்தாருக்கோ எந்த சம்பந்தமும் கிடையாது. 
எனது மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்த வீட்டை எடுத்துள்ளார். அந்த வீட்டில் எனது மகளும், மருமகனும் குடியிருக்கிறார்கள். இதுதவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் உண்மை. ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு மிரட்டியோ, அச்சுறுத்தியோ காவல்துறையை பயன்படுத்தி தவறான புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள்.   எப்.ஐ.ஆர். பதிவு செய்தால் கைது செய்ய வேண்டாமா? ஆனால் இதுவரை ஏன் கைது செய்யவில்லை. 
என்னை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்பதற்காகத்தான் வந்தேன். அதை கேட்ட கூடுதல் டி.ஜி.பி.யால் பதில் சொல்ல இயலவில்லை. நில அபகரிப்பு வழக்கை பொறுத்தவரை தி.மு.க.வினர் மீது உடனே வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கூட நில அபகரிப்பு புகார் உள்ளது. அந்த புகார்கள் மீதுஇதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.   
உண்மையில் நில அபகரிப்பு என்றால்சிறுதாவூர்,கொடநாடு பாதைஎன்று முதல்வர் ஜெயலலிதா மீதுதான் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எனது மீதான புகார்களை நீதிமன்றத்தில் சட்டப்படி சந்திப்பேன். என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
 மு.க.ஸ்டாலின் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
 
நான் கொளத்தூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு எம்.எல்.ஏ. ஆக உள்ளேன். தி.மு.க. பொருளாளராக இருக்கிறேன். துணை முதல்வர் பொறுப்பையும் வகித்துள்ளேன். ஒரு சொத்து மாற்றம் தொடர்பாக என் மீதும், என் மகன் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன்.
 
என் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாருக்கு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அரசியல் உள் நோக்கத்துடன் என் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து மாற்றத்துக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த சொத்து உரிமையாளரிடம் என் மகன் உதயநிதி தன் நிறுவனம் மூலம் வாடகைக்கு இருக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் எனக்குள் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கவே இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது.  
தமிழக காவல் துறை இந்த விஷயத்தில் எனக்கு எதிராக தவறாக பயன் படுத்தப்படுகிறார்கள். அரசியல் உள்நோக்கத்துடன் இது நடைபெறுகிறது. என் மீது கூறப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக முழுமையாக எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் கைப்பாவையாக காவல்துறை ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது. எனவே என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாததால் புகார் கொடுத்தவர் மீது உரிய சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.’ 
என்றுள்ளது. 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீது புகார் கூறி மற்றொரு மனுவும் கொடுத்தார்.  
எந்த தைரியத்தில் மு.க.ஸ்டாலின் காவல்துறை அலுவலகம் சென்றாறோ?
மனுவையும் வாங்கிக் கொண்டு உள்ளே உட்கார வைத்திருந்தால்-வெளியே வரும் தங்கையை வரவேற்க செல்ல முடியாதே.
_______________________________________________________________________________________________________
அழகிரியின் அலுவலகம் -அழகிரியின் விளக்கம்.


2009ம் ஆண்டு மு.க.அழகிரி மதுரை மக்களவைத் தொகுதிஎம்.பி. ஆனார். அப்போது மதுரை மாநகராட்சி திமுக பொறுப்பில் இருந்தது. மதுரை மாநகராட்சி சார்பில் புதிதாக ஒரு கட்டடம் கட்டி அதை எம்.பி. அலுவலகமாக பயன்படுத்திக் கொள்ள அழகிரியிடம் ஒப்படைத்தார் மேயர் தேன்மொழி.
இந்த நிலையில் ”இந்த அலுவலக ஒதுக்கீடுக்கான உத்தரவை கடந்த 30ம் தேதி மதுரை மாநகராட்சி தீர்மானம் மூலம் ரத்து செய்து அந்த இடத்தை மேற்கு மண்டல அலுவலகமாக்க அதை மாநகராட்சி ஆணையர் நடராஜனிடம் மேயர் ராஜன் செல்லப்பா ஒப்படைத்தார்” என்று செய்திகள் வெளியிடப்பட்டது.

  
இப்போது மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பேசுகையில்,” நான் முன்பே அந்த அலுவலகத்தைக் காலி செய்து சாவியை மாநகராட்சி ஆணையர் நடராஜனிடம் ஒப்படைத்துவிட்டேன். சாவியைப் பெற்றுக் கொண்ட பிறகு அவசர ,அவசரமாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். எனது அலுவலகம் பறிக்கப்படவில்லை. நானாகத் தான் அ.தி.மு.க வெர்றி பெற்றதால் ஒப்படைத்தேன். இந்த உண்மையை ஆணையர் வெளியே சொல்லாமல் அரசியல் செய்கிறார். அதை அதிமுகவினர் தாங்கள் தீர்மானம் ஏற்றியதால்தான் காலி செய்தது போல்பொய் பிரச்சாரம் செய்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.
அரசியலில் என்னவெல்லாம் கூத்து நடக்கிறது?
          

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?