முல்லையும் -காவிரியும்




''முல்லைப்பெரியாறு,காவிரி நதி நீர்ப்பிரச்னைகள் பெரிதாகி நீண்டுகொண்டே போவதற்கு காரணம் மத்திய அரசின் பலவீனம்தான். 1956-ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நதி நீர்ப் பிரச்னைகள் தொடர்பாக இரண்டு சட்டங்களைக் கொண்டுவந்தார்.
 முதலாவ தாக, நதி நீர்த் தாவா சட்டம். இதன்படி நதி நீரைப் பங்கிட்டுக்கொள்வதில் மாநிலங் களுக்கு இடையே பிரச்னை எழுந்தால், நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏதாவது ஒரு மாநில அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்பதற்காகத்தான்... இரண்டா வது சட்டம். இந்தச் சட்டத்தின்படி நதி நீர் வாரியம் அமைக்கப்படும். 
உதாரணமாக, கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்காததால், நதி நீர் வாரியம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதன் பிறகு வாய்க்கால்கள், அணைகள், மதகுகள் என்று எவற்றின் மீதும் தமிழக அரசுக்கோ, கர்நாடக அரசுக்கோ அதிகாரம் இருக்காது. இரண்டு மாநிலங்களுக்குப் பொதுவான நதி நீர் வாரியம்தான் நீரைப் பங்கிட்டுக் கொடுக்கும். 
ஆனால், நேருவுக்குப் பிறகு வந்த எந்த அரசுமே இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தவில்லை. தமிழகத்துக்கு மட்டும் தான் மற்ற மாநிலங்களோடு பிரச்னை இருக்கிறது என்று இல்லை. இந்தியா முழுக்கவே நதி நீர்ப் பிரச்னைகள் இருக் கின்றன. ஆனால், மத்தியில் அமையும் அரசு கூட்டணி அரசாகவும் பலவீனமான அரசாகவும் இருப்பதால் உறுதியானநிலைப் பாட்டை எடுப்பது இல்லை.

'காவிரி எங்கள் மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது. எங்களுக்குப் போகத்தான் மிச்ச நீர்’ என்கிறது கர்நாடகா. இதே நியாயத்தை நாமும் பேசினால்? நெய்வேலி மின்சாரமும் எண்ணூர் அனல் மின்சார நிலைய மின் சாரமும் எங்கள் மாநிலத்தில் எங்கள் தொழிலாளர்களால் உற்பத்தி ஆகிற மின்சாரம். அதை கர்நாடகாவுக்குத் தர மாட்டோம் என்று சொன்னால், என்ன ஆகும்? அதே போல, தமிழ்நாட்டில் ஆனைமலையில் உற்பத்தியாகும் நீர்தான் கேரளாவில் பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடி ஆறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இங்கே உற்பத்தியாகும் தண்ணீரை இங்கேயே அணை கட்டித் தடுத்தால் என்ன ஆகும்? தமிழகத்தில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் வசிக்கிறார்கள். நமக்குப் பெரியாறு அணை மூலம் கேரளா தரும் தண்ணீர் வெறும் 10 டி.எம்.சி-தான். அதாவது, 126 மில்லியன் கன மீட்டர். ஆனால், 30 லட்சம் மலையாளிகள் தமிழ்நாட்டில் ஒரு ஆண்டுக்குப் பயன்படுத்தும் நீரோ 5,100 மில்லியன் கன மீட்டர் நீர். எனவே, தமிழ்நாட்டில் வாழும் மலையாளிகளுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள், 'தயவுசெய்து பொய்ப் பிரசாரத்தை நிறுத்துங்கள்’ என்று கேரள அரசியல்வாதிகளுக்கு நீங்கள் சொல்ல வேண்டும். இல்லை என்றால்,எதிர் காலத்தில் இதே மாதிரி அமைதியான சூழல் நிலவும் என்று எதிர்பார்க்க முடியாது.

மேலும், பெரியாறு அணைக்குச் செல்லும் நீரில், 5-ல் 1 பங்கு தமிழகத்தில்தான் உற்பத்தியாகிறது. அதாவது, 4867.9 மில்லியன் கன மீட்டர் நீர் இங்கிருந்து பெரியாறு அணைக்குச் செல்கிறது. ஆனால், நாம் கேட்பதோ வெறுமனே 126 மில்லியன் கன மீட்டர் நீர்தான். அதே போல்வீணாக அரபிக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,313 மில்லியன் கன மீட்டர். இதில் 18 சதவிகித நீர்தான் நாம் கேட்கிறோம். 'கடலில் வீணாகக் கலந்தாலும் பரவாயில்லை, தமிழகத்துக்குத் தர மாட்டோம்’ என்று அடம்பிடிக்கிறது கேரளா. இதே நிலை தொடர்ந்தால்... தேசிய ஒருமைப்பாடு சுக்குநூறாகும்.''

                                                                                                                                                                         -பழ.நெடுமாறன்

----------------------------------------------------------------------
தங்கமே, தங்கம்....,
”இந்தியமக்கள் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு 95 ஆயிரம் கோடி டாலர்கள்.
இந்திய மதிப்பில் 50 லட்சம் கோடி ரூபாய்கள் ஆகும்.
இந்திய மக்கள் நகைகளாகவும், தங்கக்காசுகளாகவும் சேர்த்துவைத்திருக்கும் இந்த தங்கம், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 50 சதவீதமாகஉள்ளது. 
இந்தியர்களின் தனிப்பட்ட சேமிப்பாக இருக்கும் தங்கம் உலகின் மொத்த தங்கக் கையிருப்பில் சுமார் 11 சதவீதமாக இருக்கும்.

ஒரு நகைக்கான அலங்காரப் பொருள் என்றில்லாமல், பாதுகாப்பான சேமிப்பு என்றும் தங்கத்தின் பயன்பாடு இந்தியாவில் உயர்ந்துள்ளது.இந்தியர்கள் அவசர தேவை ஏற்படும் காலங்களிலும் தங்கத்தை விற்கத்தயங்குவார்கள்.என்பதினாலும் தங்கம் ஒரு முடக்கப்பட்ட பொருளாக மாறிவிடுகிறது.
 தங்கத்தை ஒரு சேமிப்பாகப் பயன்படுத்துவது இந்தியா, சீனா ,ஜப்பான் நாடுகளில் காலங்காலமாக உள்ளது.
 இந்தியர்களின் தங்க மோகம் , தங்கத்தின் விலை உயரும்போது கூட குறையாது இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு குறையவும் அதுவே வழிவகுத்துவிடுகிறது. 
 தங்கத்தில் மட்டும் மக்கள் தங்களது வருமானத்தில் முதலீடு செய்வது மற்ற வகைபொருளாதார வளர்ச்சிக்கு இடைஞ்சலாக மாறிவிடுகிறது.
தங்கத்தில் பணம் முடங்காவிட்டால், அது பொருளாதாரத்தில் புழங்கி பொருளாதர சுழற்சிக்கு வழிவகுக்கும்.

பொருளாதாரத்தில் பணம் புழங்குவதை தங்கச்சேமிப்பு ஆசைதான்குறைக்கிறது.”
இவை எல்லாம் பொருளாதார ஆய்வறிக்கை ஒன்றில் வெளியான செய்திகள்.
இந்தியாவில் பெண்களை திருமணம் செய்து கொடுப்பதில் தங்க நகை அளவுதானே முக்கிய பங்கு வகிக்கிறது.
____________________________________________________________________________________________________________
வறிய[வர் நிரம்பிய] இந்தியா,,,

இந்தியாவில் மக்களின் வருமானத்தில் காணப்படுகின்ற ஏற்றத்தாழ்வுகள் கடந்த இருபது ஆண்டுகளில் இரு மடங்காகியுள்ளதாக ஒரு அறிக்கையில் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தில் வளரும் நாடுகளில் இந்தியாதான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
நாட்டின் மிகவும் அதிகமான வருமானத்தைப் பெறும் முதல் 10 சதவீதத்தினர், மிகவும் குறைவான வருமானத்தைப் பெறும் 10 சதவீதத்தினரை விட 12 மடங்கு அதிகமான வருமானத்தைப் பெறுகிறார்கள்.
ஆனால் 20 வருடங்களுக்கு முன்னதாக இந்த வித்தியாசம் 6 மடங்காக மாத்திரமே இருந்தது என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு அறிக்கை கூறுகிறது.
உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான வறிய மக்கள் இருக்கிறார்கள் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 121 கோடி மக்களில் 42 சதவீதமானவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 60 ரூபாவிற்கும் குறைவான வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திவருகிறார்கள்.
பிரேசில், இந்தோனேசியா, ஆர்ஜண்டீனா ஆகிய நாடுகள் கடந்த 20 வருடங்களில், இந்த வருமான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகஅந்த அறிக்கை கூறுகிறது.
ஆனால் சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இந்த வருமான வேறுபாடு அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

வறுமைக் குறைப்பு நடவடிக்கைகளிலும் இந்தியா சரியாக செயல்படவில்லை.அது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கும் நடவடிக்கைகளையே எடுத்து வந்துள்ளது என்றும் அந்த அறிக்கை  வருத்தம் தெரிவித்துள்ளது.
37 வீதமான இந்தியர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்வதாக இந்திய அரசுவெளியிட்டுள்ள அறிக்கை கூறினாலும் உண்மையில், 42 சதவீதமான இந்தியர் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் அறிக்கை உண்மையை வெளிபடுத்தியுள்ளது.

வறியவர்களை வரையறுப்பதற்கான வறுமைக்கோடு மிகவும் குறைவாக ந்தியாவில்இருப்பதாகவும், வறிய மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் காண்பிப்பதற்காக வேண்டுமென்றே வறுமைக்கோடு அளவை ரூ32,ரூ27 என்று காண்பிக்கப்படுவதாக உலக பொருளாதார அறிக்கையில்நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
வறுமையை ஒழிப்பதற்காக இந்திய அரசாங்க உண்மையான உருப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை.ஊழல், மோசமானஅரசு நிர்வாகம் , குறைவான ஊதியம் போன்ற காரணங்களால் இந்தியாவில் வறியவர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
-என்று பாரீசை தலைமையிடமாகக் கொண்ட’”உலக பொருளாதார-மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு”அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவ்வமைப்பில் 34 நாடுகள் உறுப்பினராக உள்ளது.
_________________________________________________________________________________________

உலக அளவில் செலவாகும் நகரங்கள் பட்டியல்.

------------------------------------------------------------------------

 2011-ல்

உலகில்
இடம்

நகரம்

நாடு

 2010-ல்

பெற்ற 
இடம்
1
Japan
Tokyo
1
2
Norway
Oslo
6
3
Switzerland
Geneva
8
4
Japan
Nagoya
3
5
Switzerland
Zurich
7
6
Japan
Yokohama
4
7
Switzerland
Bern
10
8
Norway
Stavanger
9
9
Switzerland
Basel
11
10
Japan
Kobe
5
11
Angola
Luanda
2
12
Denmark
Copenhagen
12
13
Venezuela
Caracas
16
14
Finland
Helsinki
15
15
Australia
Sydney
25
16
Russia
Moscow
14
17
Australia
Canberra
23
18
Gabon
Libreville
17
19
Sweden
Stockholm
27
20
France
Paris
24
21
Korea Republic
Seoul
22
22
Brazil
Rio de Janeiro
19
23
Australia
Melbourne
33
24
Australia
Adelaide
44
25
Australia
Perth
35
26
Australia
Brisbane
36
27
Australia
Darwin
49
28
Papua New Guinea
Port Moresby
85
29
Brazil
Sao Paulo
26
30
Democratic Republic of the Congo
Kinshasa
13
31
Singapore
Singapore
42
32
Israel
Tel Aviv
18
33
Brazil
Brasilia
30
34
Cote d'Ivoire
Abidjan
31
35
China
Beijing
43
36
Senegal
Dakar
59
37
Sweden
Gothenburg
45
38
Germany
Berlin
40
39
Israel
Jerusalem
21
40
Belgium
Brussels
46
41
China
Shanghai
41
42
Austria
Vienna
37
43
Canada
Vancouver
56
44
New Zealand
Auckland
87
45
Italy
Rome
52
46
United States of America
Manhattan NY
28
47
Belgium
Antwerp
66
48
France
Strasbourg
54
49
Nigeria
Abuja
20
50
Canada
Ottawa
53
இந்திய நகரங்கள் ஒன்றையும் இப்பட்டியலில் காணவில்லை.ஆஸ்திரேலிய நகரங்கள் அதிகம் உள்ளது.

______________________________________________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?