எல்லோரும் முன்னாள் அமைச்சர்கள்---

’அ.தி.மு.க,வில் உள்ள எம்.எல்.ஏ,க்கள் அனைவரும் இந்த ஆட்சி முடியும் போது முன்னாள் எம்.எல்.ஏ.க்களாக இருக்க மாட்டார்கள்.அனைவரும் முன்னாள் அமைச்சர்களாகத்தான் இருப்பார்கள்.

 16,30,90,180 இப்படியாகத்தான் அமைச்சர்களின் பதவிக்காலம் உள்ளது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் மூன்று முறை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சராக்கும் முன் அவரின் தகுதி,திறமை,நன்னடத்தை ஆகியவற்றை பொறுத்துதான் பதவி வழங்க வேண்டும்.ஆனால்ஜெயா அமைச்சரவையில் பரஞ்சோதி ,இசக்கி சுப்பையா அமைச்சர்களாக்கும் முன்னரே பல குற்றசாட்டுகள் அவர்கள் மீது பகிரங்க மாகவே இருந்து வந்தும் அமைச்சர்களாக்கப்பட்டார்கள்.அந்த தவறுக்கு முதல்வர்தான் பொறுப்பு.
இரவு படுக்கப்போகும்போது அமைச்சர்.காலை எழும் போது முன்னாள் அமைச்சராகிவிடுவோமோ?என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருப்பின் ஆட்சி எப்படி ஒழுங்காக நடக்கும்?

தங்கள் துறையப்பற்றியே தெரிந்து கொள்ளும் முன் பதவி பறிபோனால்  நிவாகம் என்ன ஆக்கத்தில் நடக்கும்?
அமைச்சர்கள் மற்றும் இல்லை.அரசு அலுவலர்களும்,காவல்துறையினரும் மாதம்,மாதம் மாற்றம் என்றால் நிர்வாக சீர்கேடு உருவாகாமல் இருக்குமா?முழுமனதுடன் தங்கள் பணியை செய்ய முடியுமா?நாளை மாற்றம் வரலாம் என்று நினைத்தே கோப்புகள் ஒரங்கட்டப்பட்டுவிடும்.தாங்கள் இருக்கும் வரை அனுபவிப்போம் என்ற மனப்பான்மைதானேவரும்.ஊழலுக்கும்,முறைகேடுகளுக்கும் வழியை இது உருவாக்கிவிடும்.
இதன் முன் இருந்த காங்,தி.மு.க,ஏன் எம்ஜியாரின் அ.தி.மு.க ,ஆட்சியில் கூட அமைச்சர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிகாலம் வரை அமைச்சர்களாகவே இடுந்திருக்கிறார்கள்.
தனது மனநிலை மாறும்போதெல்லாம் அமைச்சர்களையும்,அதிகாரிகளையும் மாற்றுவது நல்ல ஆட்சிக்கு அழகல்ல.


மாறுதல்கள் வரலாறு
_________________________
ஜெயா, அரசு இம்முறைஅமைந்த பிறகு இதுவரை மூன்று முறை,அமைச்சரவை மாற்றமும் ,பல முறை துறைகள் மாற்றமும் நடந்துள்ளது.


அறநிலையத் துறை சண்முகநாதனுக்கு ஒதுக்கப்பட்டது.  அமைச்சரவை மாற்றத்தில், சண்முகநாதனிடம் பதவி பறிக்கப்பட்டு, பரஞ்ஜோதி வசம் ஒப்படைக்கப்பட்டது.  ஆட்சி அமைந்த போது, சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சராக இசக்கி சுப்பையா நியமிக்கப்பட்டார். 
இவரது பதவி ஒரு மாதத்தில் பறிக்கப்பட்டது. இதன் பின், செய்தித் துறை அமைச்சர் செந்தமிழன் வசம், சட்டம், நீதி, சிறைத் துறை ஒப்படைக்கப்பட்டது. ஆனால் கடந்த முறை நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, செந்தமிழனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதன்பின், ராஜேந்திர பாலாஜி செய்தித் துறை அமைச்சராகவும், சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை புதிதாக பதவியேற்ற பரஞ்ஜோதியிடமும் வழங்கப்பட்டது. ஆறு மாதங்களில், சட்டத் துறையை கவனித்து வந்த மூன்றாவது அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சட்டம், நீதி, சிறைத் துறை ஆகியவை, பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டத்துறையை கவனிக்கும் நான்காவது அமைச்சராக இவர் இருப்பார். செல்வி ராமஜெயம் முதலில் பதவியேற்ற போது, சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சராக இருந்தார். பின் சத்துணவு சம்பத்திடம் கொடுக்கப்பட்டது.



பரஞ்சோதி: திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆன பரஞ்சோதி, நவ., 6ம் தேதி இந்து சமய அறநிலைத்துறை மற்றும் சட்ட அமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற ஒரே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளார். 
செல்வி ராமஜெயம்: புவனகிரி சட்டசபை தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வி.ராமஜெயம் மே 16ம் தேதி, சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். நவ., 5ம் தேதி இவருக்கு மகளிர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகியவை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. நேற்று இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 6 மாதங்களில் பதவியை இழந்துள்ளார்.
__________________________________________________________________

தவிர்க்க வேண்டிய செயல்,

கம்பம்-கூடலூர் சாலையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தமிழக எல்லையில் உள்ள லோயர் கேம்ப் பகுதியை நோக்கி ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும், கேரளாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். மேலும் கேரள எல்லைப் பகுதியான குமுளிக்கு செல்லவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குமுளிக்கு அவர்கள் சென்றால் பதற்றம் ஏற்படக்கூடிய சூழல் உண்டாகும்.
இது தமிழ்நாடு மக்கள் தவிற்க வேண்டிய செயல்.அரசியல்வாதிகள் இடைத்தேர்தல் போன்றவற்றை கணக்கிட்டு செயல் படுகின்றனர்.அவர்கள் கேரள மக்கள் கவனத்தை திட்டமிட்டே திருப்புகின்றனர்.

கேரள மக்களை,மலையாளிகளை நாம் தாக்குவதால் முல்லைப்பெரியாறு பிரச்சனை தீர்ந்துவிடாது.இது தமிழர்,மலையாளிகள் பிரச்னை அல்ல.
கேரள மக்கள் மனதில் அங்குள்ள அரசாலும்,ஊடகங்களாலும்தான் அணை பற்றிய பயங்கள் உருவேற்றப்பட்டுள்ளது.அவர்களுக்கு ஏற்பட்ட பயம் நியாமானதுதான்.அதை நீக்கிட அவர்களின்
.அணை பற்றிய அச்சத்தைப் போக்கி ட செய்ய வேண்டியதும்தான் இப்போதைய தமிழக அரசின் கடமை.
அதை விட்டு மக்களுக்குள் மோதல் என்பது நல்லதல்ல.இங்கு மலையாளிகள் வசிப்பதுபோல்,அங்கும் ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர்.
மேலும் இந்தியா முழுக்க எங்கும் நாம் செல்லலாம் என்ற உரிமைக்கும் வேட்டு வைக்கும்.
மத்திய அரசுதான் யாருக்கு வந்ததோ என்று செயல்படாமல் இருப்பது ந்மது ஒற்றுமைக்கு உலை வைக்கும் செயலாகும்.கூட்டாட்சி தத்துவத்திற்கே வேட்டுவைக்கும் செயல்.அதை உனர்ந்து மன்மோகன் அரசு செயலில் இறங்க வேண்டும்.
ஆய்வு குழுவும் நத்தை போல் ஊராமல் சுறு,சுறுப்புடன் தனது முடிவை வெளியிட வேண்டும்.குதிரைகள் வெளியே ஒடிய பின் பாதுகாப்பாக லாயத்தை மூடுவது முட்டாள்கள் செய்யும் செயலாகும்.


வங்க தேசத்துடன்,பாகிஸ்தானுடன்,சீனாவுடன் நாடுகளின் எல்லை தாண்டிய ஆறுகளின் நீர் பிரச்னையை தீரத்துக்கொண்டுள்ள மத்திய அரசுக்கு உள்நாட்டு மாநிலங்களுக்கிடையேயான நீர் பிரச்னையை தீர்ப்பது கடினமான வேலை அல்லவே.
அடுத்து ஆந்திரா பாலாற்றில் அணைகட்டப்போவதாக பயமுறுத்துகிறது.
மொத்தத்தில் காவிரி,கிருஷ்ணா,பாலாறு,முல்லைப்பெரியாறு போன்ற சிக்கல்களை தீர்க்க நதிகளை அரச்சுடமையாக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும்.
நதியின் நீர்வளத்தை மத்திய அரசு கைகொண்டு பங்கிட்டு தருவதுதான் நாட்டில் வளமையையும் -பிரச்னைகளையும் கையாளும் முறையாக அமையும்.
__________________________________________________________________________________________
தமிழ் இணையம் நடத்தும் சிங்களர்கள்,

லங்காசிறிகுழுவின் இணையத்தளங்களான தமிழ்வின், லங்காசிறி, மனிதன், ஆகிய இணையத்தளங்களை நடத்துபவர்கள் சுவிஸில் உள்ள சிறிகுகன், லண்டனில் உள்ள சஞ்சே ஆகியோர் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

ஆணால் அந்த நிறுவனத்தின் பிரதான பணிப்பாளராக இருப்பவர் SEWWANDI என்ற சிங்கள பெண்ணாகும். இவர் மிகதீவிர சிங்கள இனவாதி.பலராலும் சிங்கள வெறியராகஇனங்காணப்பட்டவர். இவர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்டவர்.
அந்த நிறுவனத்தில் யார் யார் பணிப்பாளர்கள் இந்தியாவில் லங்காசிறி எப்.எம் வானொலியை யாரின் பெயரில் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற விபரங்கள் அனைத்தையும் நாம் சேகரித்துக்கொண்டிருந்ததை லங்காசிறி குழு அறிந்து கொண்டது.

இதனாலும் எப்படியாவது என்னை பழிவாங்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தது. இந்த விபரங்கள் அனைத்தும் நாம் விரைவில் வெளியிட இருக்கிறோம்.

லங்காசிறி மனிதன் இணையத்தளத்தை நடத்தும் சிறிகுகனின் அண்ணனான நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் தொடர்பு கொண்டு பேசியபோது ( இன்னொருவரே அவருடன் பேசினார்) மனிதன் இணையத்தளத்தை கே.பி குழுதான் வழிநடத்துகிறார்கள் என்றும் சிறிதரன் தெரிவித்திருந்தார்.

தகவல்:தமிழ் நியூஸ் .சி.சி,
________________________________________________________________________________________________________________________________
20.02.2008 அன்று செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட பூமியின் படம்.எலிப்ஸ் வடிவவில் துண்டு,துண்டாக இணைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.
______________________________________________________________________

                                                   அசதி. உழைப்பை பார்த்தாலே வருமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?