சனி, 10 டிசம்பர், 2011

கலவரத்தின் மறுபக்கம்.


photo

முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கூடலூரில் இருந்து கேரளா நோக்கி புறப்பட்ட 25 ஆயிரம் பேர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும், புதிய அணை கட்டக்கூடாது என கடந்த ஒரு வார காலமாக தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அய்யப்ப பக்தர்கள் இந்த வழியாக கேரள செல்ல வேண்டாம் என தடுத்தனர். கேரள பகுதிக்குள் வந்த அய்யப்ப பக்தர்கள் சென்ற வாகனம் அடித்து நொறுக்கப்பட்டது.கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக கேரள எல்லை பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் சுற்று வட்டார விவசாயிகள் மற்றும் பல்வேறு கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று பேரணியாக புறப்பட்டு லோயர்கேம்ப் வழியாக ( குமுளி ) கேரளா செல்ல புறப்பட்டு சென்றனர். மேலும் முதல்வர் உம்மன்சாண்டியின் உருவ பொம்மையையும் எரித்தனர்.

யாரும் செல்ல வேண்டாம் என தேனி மாவட்ட கலெக்டர் பழனிச்சாமி கேட்டும் யாரும் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி வைக்க போலீசார் எவ்வளவோ சிரமப்பட்டும் அவர்களை தள்ளி விட்டபடி முன்னேறினர். எல்லை வழி மூடப்பட்டது. இதனையடுத்து அணையை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால் இன்று மதியத்திற்கு மேல் இங்கு கூடுதல் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
4 இடங்களில் தடுத்தும் பயனில்லை: போராட்டக்காரர்கள் தேனி மாவட்டம் முழுவதுமிருந்து ஆண்கள், பெண்கள், என 20 ஆயிரத்திற்கும் அதிகமானோரர்வந்தனர். தடை அமலில் இருந்தும் , பவரும் வழியில் 4 இடங்களில் போலீசார் தடுத்தும் பொருட்படுத்தாமல் முன்னேறி வந்தனர். தற்போது குமுளி பகுதியில் அனைவரும் நின்று கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
 இன்றைய போராட்டக்களத்தில் மக்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு: அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர‌ை அமர்த்த வேண்டும், தமிழக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி இது தொடர்பான தீர்மானத்தை நி‌றைவேற்ற வேண்டும். தமிழகத்தில் இருந்து கேரளா நோக்கி செல்லும் 13 பாதைகளை அடைக்க வேண்டும், பால் மற்றும் காய்கறி பொருட்கள் கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கை‌களை வலியுறுத்தியுள்ளனர்.
எல்லையோரங்களில் கேரள எதிர்ப்பு அதிகமாகக் காரணம்?அவர்கள் மிக அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
கீழே உள்ள செய்திகளைப்படியுங்கள்.அவர்களின் உணர்ச்சி புரியும். 
கேரள எல்லையில் அரங்கேறிய அராஜகத்தை நேரில் சென்று விசாரித்துத் திரும்பி இருக்கிறது  'எவிடன்ஸ்’ அமைப்பின் உண்மை அறியும் குழு. 'எவிடன்ஸ்’ அமைப்பின் செயல் இயக்குநர் கதிரிடம் பேசினோம். ''ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள், குறிப்பாக பெண்கள் மீது ஒரு பெரிய வன்முறை நடத்தப்பட்டு இருக்கிறது. உயிர் பயம், அவமானம் தரும் அச்சுறுத்தல்... எல்லாவற்றையும் தாண்டி எங்களிடம் 37 பேர் வாக்குமூலம் அளித்து இருக்கிறார்கள்.

 காந்தியம் பேசும் ஆளும் காங்கிரஸ்காரர்,பா.ஜ.க.வினரும்இவ்வளவு அக்கிரமங்களையும் தூண்டியிருக்கிறார்கள்,செய்திருக்கிறார்கள். கேரளக் காவல் துறையும் தமிழகக் காவல் துறையும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் தேசியப் பெண்கள் ஆணையமும் மனித உரிமை ஆணையமும் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். கேரள எல்லையில் நடக்கும் அராஜகங்களைத் தடுக்க முடியாவிட்டால், மன்மோகன் அரசு பதவி விலக வேண்டும்'' என்றார் கதிர்!  
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்ல முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.
 எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.
அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
 அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.’
அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார்  தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன' 
தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள்  உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசிய கட்சி் எ்னப்படும் காங்கிரஸ் கட்சியும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
 என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தமிழகப்பகுதியில் கேரளாக்காரர்களுக்கு பாதுகாப்பு தரும் காவல்துறை தாக்குதல் நடத்திய தமிழர்களை கைதும் செய்கிறது.
ஆனால் இங்குள்ள மலையாளிகளுக்கு பாதுகாப்பு தரக் கடிதம் எழுதி நேரிலும் பேசும் இடுக்கி மாவட்ட ஆட்சியரும்,காவல் அதிகாரிகளும்  அவர்கள் மாவட்டமான இடுக்கியில் தாக்கி,கேவலப்படுத்தப்படும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் தரவில்லை.வ அவர்கள் முன்னே நடக்கும் தாக்குதல்களையும் வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.என்பது சற்று அதிகமான் குற்ற சாட்டாக உள்ளது.
  
கேரள அரசியல்வாதிகள் தூண்டுதலில் நடக்கும் இந்த கலவரத்தை அடக்க ,அணைக்கு பாதுகாப்பு தர  மத்திய அரசு உடனே செயல்பட வேண்டும்.
அவர்களோ அன்னை சோனியா பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.சிதம்பரம்.கிருஷ்ணா வை காப்பாற்றும் முயற்சியில் மட்டுமே செயல் பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

                                                       சகோதரர்களுக்குள் சண்டை தேவையா?
________________________________________________________________________
 எல்லாவற்றுக்கும் கூட்டம்தானா?


என்ன கூட்டம்.இப்படி அலைமோதுகிறது.
நியுயார்க் கிரண்ட் செண்ட்ரல் டெர்மினலில் ”ஆப்பிள் ஸ்டோர் “ஆரம்பிக்கப்பட்ட முதல்நாள் கூட்டம்தான் .இது.
_____________________________________________________________________