புதன், 14 டிசம்பர், 2011

கடவுளைக் கண்டோம்?

அணுவைத்துளைத்து கடவுள் கண்டுபிடிப்பு,,,,,,?

அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹிக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன.இதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நுண்துகள்களை சுவிட்சர்லாந்து - பிரான்ஸ் எல்லையில் உள்ள ஒரு சுரங்கத்தில் பெரும் வேகத்துடன் முடுக்கிவிட்டு
அவற்றை மோதச் செய்து லார்ஜ் ஹட்ரன் கொலைடரை பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு” தெய்வீகத் துகள்” என்று பெயரிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.அணுவை இயக்க வைக்கும் தன்மை இதற்கு உண்டு என்பதாலேயே இப்பெயரிடப்பட்டுள்ளது.
என்றாலும்உறுதியான- இறுதியான ஆதாரத்துடன் நிருபிக்க இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர்.
ஒரு வழியாக கடவுளைக்கண்டு பிடித்தாகிவிட்டது.பின்னே? இத்துகள்தானே பிரபஞ்சத்தின் அடிப்படையாகவும்,உயிர்கள் உருவாக்கவும் அடிப்படை. 
_________________________________________________________________________________________________________
முல்லைப்பெரியாறு;தொடரும் விசாரணை,

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளதால் அணையில் நீர் தேக்கும் அளவை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அணை பலவீனமாக இருப்பதாகக் கேரள அரசு வதந்தி பரப்பிவருவதைத் தடுக்கக் கோரியும், அணைக்கு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசு மனு தாக்கல் செய்திருந்தது.

நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஆர்.எம். லோதா, தீபக் வர்மா, சந்திர மௌலி கே.ஆர். பிரசாத், அனில் ஆர்.தவே ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு இருதரப்பு மனுக்களும் செவ்வாய்க்கிழமை மாலை விசாரணைக்கு வந்தன.அப்போது நீதிபதிகள் :_
அணைக்கு ஆபத்தில்லை: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய "அதிகாரமளிக்கப்பட்ட குழு' அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆய்வு அறிக்கைகளை அந்தக் குழுவினர் எங்களிடம் சமர்ப்பித்துள்ளனர்.
கேரள அரசு குறிப்பிடும்படி நில அதிர்வுகளால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அக்குழுவினர் முறையிட்டிருப்பார்கள். ஆகையால் கேரளம் குறிப்பிடும் ஆபத்து எதுவும் அணைக்குக் கிடையாது.
இருந்தாலும் கேரளத்தின் கோரிக்கையை ஏற்று 22, 23-ம் தேதிகளில் அணையை நிபுணர் குழுவினர் பார்வையிட உள்ளனர். கேரள அரசு தனது சந்தேகங்களை, அந்தக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் அந்தக் குழுவினர் தாக்கல் செய்யும் அறிக்கையின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும்.
136 அடியாக இருக்க வேண்டும்: அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 26 முதல் டிசம்பர் 7 வரை அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 136.60 அடியாக இருந்ததாக பதிவாகியுள்ளது. இது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. நீர் அளவு 136 அடிக்கு மேல் உயராமல் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அணைக்கு வரும் தண்ணீர் 13 மதகுகள் மூலம் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தங்களது மனுக்களை நிலுவையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.பி. ராவ் தெரிவித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்கக் கோரும் கேரள அரசின் மனுவைத் தள்ளுபடி செய்வதாகதெரிவித்தனர்.


கொரியாவால் முடியுமானால் இந்தியாவால் முடியாதா?
வால்மார்ட் போன்ற பெரிய விற் பனை நிலையங்களில் இந்திய பிராண்டுகளுக்கு என்ன இடம் இருக் கும் என்பது கேள்வி. மக்கள் விரும் பக்கூடிய தரமான பொருட்களை இந்திய உற்பத்தியாளர்கள் உருவாக்கி னால் அந்த பொருட்கள் நிச்சயம் இடம்பிடிக்கும் என்பதே பதில். அமெ ரிக்காவில் உள்ள வால்மார்ட் கடை களில் இருக்கும் 60 சதவிகிதம் பொருட்கள் சீனாவில் உற்பத்தி யானவை என்பது குறிப்பிடத்தக்கது.

மகாத்மா காந்திக்கு பிறகு யாரும் தேசிய பெருமிதம் என்பதை இந்தியர் களுக்கு உருவாக்க தவறிவிட்டனர். அவர்கள் இந்தியாவின் கஜானாவை காலி செய்வதிலேயே குறியாக இருந் தனர். ஜப்பானிலோ உள்நாட்டு பணி மனைகளில் பொருட்கள் செய்யப்படு வதைதான் ஊக்குவிக்கின்றனர். இது தான் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளுக் கும் பொருந்தும். அமெரிக்க நிறுவனங் களான ஜிஎம் மற்றும் கிரிஸ்லர் நிறு வனங்களை கடனில் இருந்து அமெ ரிக்கா ஏன் மீட்டது என்றால், அவை கள் அமெரிக்கத்துவத்தை பிரதிபலிப் பவை.

தேசிய பெருமிதம் என்பதற்கு உதா ரணமாக தென்கொரியாவைதான் நாம் உடனடியாக குறிப்பிட வேண்டியிருக் கிறது. உலகிலேயே நான் அதிகம் பாராட்டும் நாடும் இதுதான். சீனாவை விட, ஜப்பானைவிட தேசிய பெரு மிதத்தில் அது உயர்ந்த நிலையில் இருக்கிறது. இந்தியாவுடன் ஒப்பிடும் போது ஒரு துளி போல அந்த தேசம் இருக்கிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் தேசிய பெருமிதத் துடன் தங்கள் அடையாளத்தை பதித் துள்ளனர் அவர்கள். தென்கொரி யாவில் உள்ள பள்ளிகளில் உள்ளூர் பிராண்ட் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் என அறி வுறுத்தப்படுகிறது. இப்பொருட்கள் மீதான விமர்சனம் தேசத்தின் மீதான விமர்சனமாக அணுகப்படுகிறது. உலக அளவில் நோக்கியோ மற்றும் பிளாக்பெரி ஆகிய பிராண்டுகள் புகழ் பெற்றிருந்தாலும், தென்கொரியாவில் அவர்களது பிராண்டான சாம்சங்கே 48 சதவிகிதம் சந்தை பகிர்வுடன் முதலிடம் வகிக்கிறது. கூகுள் 20 சத விகிதமே அங்கு வகிக்கிறது. தென் கொரியாவில் உள்ளூர் தேடுதல் எந் திரங்களான நாவர் மற்றும் டௌவும் ஆகியவைதான் 90 சதவிகிதம் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆட்டோ மொபைல் தொழிலை பொறுத்த வரையில் கியா அல்லது ஹூ‘ண் டாய் போன்றவையே முதலிடம் வகிக் கின்றன. சியோலின் சாலைகளில் அமெரிக்க, ஜப்பானிய கார்களை பார்ப் பதே அரிது. அத்துடன் தென்கொரியா வில் செய்யப்பட்ட கார்கள் பார்ப் பதற்கு பிரமாதமானவை, செயல்படு வதில் திறன்மிக்கவை. அரசின் கொள்கைகளும் உள்ளூர் உற்பத்தி யாளர்களுக்கு மிகவும் ஆதரவாகவும் உள்ளன. அருமையான தொழில் போட்டி சூழலையும் உருவாக்கியுள் ளன.

தேசிய பெருமிதத்தை தாண்டி வால்மார்ட் கொரியாவில் ஏன் தோற்ற தென்றால், கொரியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வேலை செய்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் அனுபவிக்கும் வாழ்க்கைத் தரமாக இருக்கவேண்டும் என்று நினைக் கிறார்கள். மலிவான பொருட்களை வாங்க கூடாது என்று எண்ணு கிறார்கள். இருப்பினும் சர்வதேச அளவில் புகழ்பெற்றிருக்கும் பிராண் டுகள் கொரியாவில் எந்த முத் திரையையும் பதிக்கமுடியவில்லை. ஏனெனில் கொரிய நிறுவனங்கள் தர அளவில் மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளன. இந்தியாவின் சிறிய மாநிலத்தின் அளவே இருக்கும் கொரியா, உள்நாட்டிலும் உலக அள விலும், உலகின் சிறந்த பிராண்ட் தயா ரிப்புகளை உற்பத்தி செய்வதாய் உள் ளது. கடந்த மாதத்தில்தான் ஸ்மார்ட் போன்ற விற்பனையில் சாம்சாங் உச் சத்தை அடைந்து ஆப்பிளை பின் தள்ளியது. கொரிய நிறுவனங்கள் உலகத்தரம்வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கு காரணம், அந்த நாட்டின் மக்களிடையே இருக்கும் அபரிமிதமான தேசிய பெருமிதம்தான். அத்துடன் அவர்களது கடின உழைப் பும் உதவுகிறது.

ஆனால் அந்த வாய்ப்பை இந்தியர் களான நாம் இழந்துவிட்டோம். சிறிய நாடான கொரியாவால் இந்த வெற் றியை பெறமுடியும்போது, 10 மடங்கு பெரிய இந்தியாவால் ஏன் பெறமுடிய வில்லை? சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நாட்டு முதலீட்டை விவாதிப் பதற்கு முன்னால், கொரியர்களை போல தேசிய பெருமிதத்தை ஏற் படுத்தி தரமான இந்திய பொருட் களையே வாங்கும் மனநிலைக்கு வரு வோம். உலகின் பெரிய கோடீஸ்வரர் கள் பட்டியலில் இந்தியர்கள் இருக் கிறார்கள். ஆனால் உலகின் உயர்ந்த பிராண்டுகளில் நமக்கு எந்த இடமும் இல்லை. இது வெட்ககரமானது.

இப்போது ஒன்றும் தாமதம் ஆக வில்லை. நமது பாரம்பரிய உற்பத் தியாளர்களை ஊக்குவித்து மேம்படுத் துவோம். அவர்களை ஆதரிப்போம். நமது பொருட்களை தரமாக உரு வாக்கி தேசிய பெருமிதத்துடன் வால் மார்ட்டுகளை இங்கே தோற்கடிக் கலாம். வெறுமனே கோஷங்கள் போட்டு நாட்டை ஏமாற்றுவதற்காக காத்திருப்பது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மக்கள் இதை யெல்லாம் அதிகமாக பார்த்துவிட் டனர். கடின உழைப்பும், நேர்மையும் கொண்டு இந்திய பொருட்களை உலக தரத்துக்கு தயாரித்து, தேசபக் தியின் இன்னொரு பக்கத்தை திருப்பு வோம். அவற்றை வாங்குவதின் மூலம் இந்தியனை பெருமை கொள்ளச் செய் வோம். அதை நீங்கள் செய்யமுடியா விட்டால், சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வருவதை பற்றி புகார் செய்யாமல் இருங்கள்.

                                                                                                                      நன்றி:த சண்டே இந்தியன்