வெள்ளி, 23 டிசம்பர், 2011

பறைஞ்சதால் பிரிஞ்சனரா ?

ஜெயலலிதா-சசிகலா விவகாரம் தற்போது மிக முக்கியமாக தினமலர் போன்ற நாளிதழ்களில் வெளியிடப்படுகிறது.சொல்லப்போனல் முல்லைப்பெரியாறு விவகாரத்தை சின்னதாக்கி மறக்கடிக்கும் அளவில் இச்செய்திக்கு முக்கியத்துவத்தை சில ஊடகங்கள் தருகின்றன.
ஜெ-சசி உடன்பிறவா சகோதரிகள் ஊடல் இது என்னவோ முதன்முதலாக நடப்பது போலவும்,இதுவே முடிவானது போலவும் சித்தரிக்கும் வேலைகளும் நடக்கிறது.சோ வும்,மோடியும் தான் சசிகலாவின் துரோகத்தை அம்பலப்படுத்தி அவர்களிடம் இருந்து தமிழகத்தையே காப்பாற்றியது போல் காண்பிக்கும் பணியும் செய்யப்படுகின்றன.
சசி கலாகுடும்பத்தைப்பற்றியும் அவர்களின் அதிகார அத்து மீறல்களைப்பற்றியும் செய்தி வெளியிடாத ஊடகங்களே இல்லை எனலாம்.இன்று ஜெயலலிதாவின் முன்னாள் ஆதரவாளர்கள் ஜெயலலிதாவை விட்டு விலகக்காரணமும் சசிகலாதான் என்கிறார்கள் சசிகலா சொன்னபடிதான் ஜெயலலிதா ஆடினார்.அறிக்கை வெளியிட்டார்.அரசியல்நடத்தினார்,ஜெயலலிதா ஒன்றுமே செய்யவில்லை அப்பாவி என்கிறார்கள்.இப்போதுதான் உணர்வு பெற்று செயல்பட ஆரம்பித்துள்ளார்.என்றும் கூறுகிறார்கள்.

அவர்களின் கருத்துப்படி பார்த்தால் கட்சியை பலப்படுத்தி இன்று ஆட்சியில் அமோகமாக அமர காரணம் சசிகலாதானே?ஜெயலலிதாதான் ஒன்றும் செய்யவில்லையே?இதுவரை செயல்படா ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வை இதுவரை கட்டுக்கோப்பாக நடத்திகருணாநிதியிடமிருந்து ஆட்சியை கைப்பற்றி ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்கியது சசி-நடராஜன்தானே?
ஜெயலலிதாவுக்குத்தான் வெளிவுலகமே தெரியாமல் வைத்திருந்தார்களே?பத்திரிக்கைகளைப் படிக்கமாட்டேன் என்று பெருமையாகக்கூறியவருக்கு உலக நடப்புகள்,கட்சியின்,ஆட்சியின் நெளிவு ,சுழிவுகள் தெரியுமா?
என்னவோ நடக்கிறது .அது சசிகலா குடும்பத்திடமிருந்து ஜெயலலிதாவை சோ-மோடி வகையறாக்கள் காப்பாற்றவில்லை.கைப்பற்றியிருக்கிறார்கள்.அதுதான் நடந்துள்ளது.காரணம் ஜெயலலிதா கோபம்,வீரம் உள்ளவர்தான் என்றாலும் யாராவது ஆட்டிவைக்க ஆடும் தன்மையுள்ளவராகவே இருக்கிறார்.
அதற்குக்காரணம் அவர் சின்னவயதில் நடிக்க வந்தபோதில் இருந்து ஒருவரின் கட்டளைக்கேற்ப [இயக்குநர்]இயங்கியே வந்துள்ள மனப்பான்மையாகக்கூட இருக்கலாம்.
இந்த ஆராய்வு இருக்கட்டும் .சசிகலா வெளியேற்றம் நிரந்தரமாக இருக்குமா ?என்றால் இதவரை முன்னாள் நடந்த வைகளை வைத்துப்பார்க்கும் போது  இன்னும் சில மாதங்களிளேயே மீண்டும் சசி பெயற்சி நீங்கி மீண்டும் போயஸ் வீட்டில் குடியேற அதிகமான வாய்ப்புகள் உள்ளது.முன்பு நள்ளிரவில் சசிகலா வீட்டைவிட்டு வெளியேறி தெருவில் நிற்க நடராஜன் காரில் வந்து அழைத்துச் சென்ற சரித்திரங்கள் எல்லாம் உண்டு.இப்போதே கூட ஜெயலலிதாவை பராமரிக்கும் முறையை பற்றி சசிகலா தொலைபேசி மூலம் தினசரி உத்திரவிடுவதாக கூறப்படுகிறது.ஜெயின் தேவைகளை மிக அந்தரங்கமாக அறிந்தவர் சசிகலா மட்டும்தான்.சோவோ,மோடியோ மற்றோரோ அல்ல.

ஜெயலலிதா-சசிகலா மோதல் வெளியேற்றம் நிரந்தரமானது போல் சில ஊடகங்கள் காட்டினாலும் அப்படி இருந்துவிட வாய்ப்புகள் மிகக்குறைவு. ஜெயலலிதா சொத்துக்கள் பட்டியலில் போயஸ்-ஹைதராபாத் திராட்சை தோட்டம் போன்றவைதான் அவர் பெயரில் உள்ளது.சிறுதாவூர்,கொடநாடு ,நமது எம்.ஜி.ஆர்,ஜெயா பப்ளிகேசன்,ஜெயா தொலைக்காட்சி போன்றவை உட்பட வாங்கிக்குவிக்கப்பட்டவை சசிகலா,அவரின் உறவுகள் பெயரில்தான் உள்ளது.
மொத்தத்தில் இப்பிரிவைப்பற்றி எனக்கு தோன்றுவது:-
“ஒரு பிரபல ஆஸ்தான சோதிடன் “இப்போது சசிகலாவுக்கு சனி பெயற்சி நடக்கிறது.அது உங்களுக்கு நல்லதில்லை.பெங்களூர் சொத்துகுவிப்பு வழக்கில் உங்களுக்கு எதிரா தீர்ப்புவர வாய்ப்புள்ளது ஒரு ஏழரை ஆண்டு இல்லாவிட்டாலும் வார,மாதக்கணக்கிலாவது இருவரும் பிரிந்திருப்பது உங்கள் பதவிக்கு நல்லது”என்று பறைஞ்சிருக்கலாம்.அதானால்தான் இருவரும் பிரிஞ்சிருக்கலாம்.இதுதான் நடந்திருக்கலாம்.
இது தெரியாமல் சசிகலாவை திட்டியோ.குறை கூறியோ ஜெயலலிதாவிடம் போட்டுக்கொடுப்பவர்களுக்கு விரைவிலேயே ஆப்பு காத்திருக்கு.
____________________________________________________________
5-மாநில தேர்தல்கள்,

உ.பி., உத்தர்கண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பஞ்சாப்பில் ஒரே கட்டமாக 2012 ஜனவரி 30ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி மாதம் 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடக்கிறது.பிப்ரவரி 4, 8, 11, 15, 19, 23, 28 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது.கோவாவில் மார்ச் 3ம் தேதியும், மனிப்பூரில் ஜனவரி 28ம் தேதியும், உத்தரகண்டில் ஜனவரி 30ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது.

  • கோவா மாநிலத்தில் 40 இடங்களுக்கும்,
  • உத்தர்கண்ட்டில் 70 இடங்களுக்கும்
  • உத்தரப்பிரதேசத்தில் 403 இடங்களுக்கும்
  • பஞ்சாப்பில் 117 இடங்களுக்கும்
  • மணிப்பூரில் 60 இடங்களுக்கும்

தேர்தல் நடக்கவுள்ளது.
_____________________________________________________________________

அகதிகளாகும் ஐரோப்பிய-அமெரிக்கர்கள்.
அமெரிக்காவில் துவங்கிய நெருக்கடி ஐரோப்பாவிற்குப் பரவியபோது, சில மாதங்களில் அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்று பல நாடுகளின் அரசுகள் தெரிவித்தன. ஆனால் போர்ச்சுக்கல், கிரீஸ் மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள் திவாலாகின. அதையடுத்து, இந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் சேர்ந்துவிடும் என்று பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகிறார்கள். யூரோ மண்டலத்தில் உள்ள அனைத்து நாடுகளின் பொருளாதார வலிமை சரிந்துள்ளது என்று தரக்குறியீடு நிறுவனங்கள் புள்ளிவிபரங்களை வெளியிட்டு வருகின்றன. வறுமை, வேலையின்மை, ஆட்குறைப்பு, நிதிவெட்டு போன்ற பிரச்சனைகள் மக்களை வறுத்தெடுத்தது ஒருபுறம். மறுபுறத்தில், இப்பிரச்சனைகள் நீண்டகாலத்திற்கு நீடிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், சொந்த வீட்டை விட்டு, சொந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டிய அவல நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.


பெரும் நெருக்கடியைச் சந்தித்து வரும் கிரீஸ் நாட்டு மக்களில் சுமார் 12 லட்சம் பேர் வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 10.8 விழுக்காடாகும். இதுபோன்று போர்ச்சுக் கல் மற்றும் அயர்லாந்து ஆகிய இரண்டு நாடுகளிலிருந்து அதிக அளவில் மக்கள் வெளியேறியுள்ளனர் என்று கூறும் உலக வங்கி, ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாடுகளிலிருந்தும் மக்கள் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. தாங்கள் செல்லும் நாடுகளில் எந்தவித உத்தரவாதத்தையும் பெற்றுக் கொள்ளாமல்தான் அவர்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கிரீஸ் நாட்டிலிருந்து வெளியேறியவர்கள் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, அல்பேனியா, துருக்கி, பிரிட்டன், சைப்ரஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு 2 ஆயிரத்து 500 பேர் தற்போது சென்றுள்ள நிலையில், மேலும் 40 ஆயிரம் பேர் அங்கு செல்ல விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். அயர்லாந்து மக்களைப் பொறுத்
தவரை, 40 ஆயிரத்து 200 பேர் இதுவரை அங்கிருந்து வெளியேறியுள்ளனர். கடந்த ஆண்டில் 27 ஆயிரம் பேர் வெளியேறினர். அந்நாட்டின் வேலை
யின்மை விகிதம் 15 விழுக்காட்டைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் பலர் தங்கள் வேலைகளை இழப்பதும் தொடர்கிறது. இதனால், நடப்பாண்டின் இறுதிக்குள் வெளியேறியவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்று அயர்லாந்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இங்கிருந்து வெளியேறுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை நோக்கி செல்கிறார்கள்.

போர்ச்சுக்கல்நடப்பாண்டில் மட்டும் பத்தாயிரம் பேர் அங்கோலாவிற்கு சென்றுள்ளார்கள் என்று போர்ச்சுக்கல் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகிறது. மேலும், மொசாம்பிக் மற்றும் பிரேசில் நாடுகளை நோக்கியும் போர்ச்சுக்கீசியர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். பிரேசில் அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, அங்கு வசிக்கும்வெளிநாட்டினரின் எண்ணிக்கை 14 லட்சத்து 70 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அவர்களில் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் போர்ச்சுக்கீசியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெருக்கடியைத் தவிர்க்க முயற்சிக்காமல், ஏற்கெனவே கடைப்பிடித்த முதலாளித்துவக் கொள்கைகளையே போர்ச்சுக்கல் ஆட்சியாளர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதால் நெருக்கடி அதிகரித்து, இடம் பெயர்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளின் கடன் நெருக்கடி உலகில் உள்ள அனைத்துப் பொருளாதாரங்களையும் பாதிக்கும் என்று ஐ.எம்.எப்.(சர்வதேச நிதியம்) தலைவர் கிறிஸ்டின் லகார்டே எச்சரித்துள்ளார். வளர்ந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் தற்போதுள்ள நிலைமை உலகில் உள்ள அனைவரும் கவலைப்பட வேண்டிய ஒன்றாகும் என்று கூறும் அவர், நெருக்கடியைக் கையாள்வதில் ஐரோப்பியர்கள் பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். நெருக்கடியின் தன்மை மிகவும் கடுமையானதாக இருப்பதே அதற்குக் காரணமாகும். இது மற்ற நாடுகளுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் பல்வேறு போர்கள் நடந்து கொண்டிருக்கையில், அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு பல நாடுகளிலிருந்து வந்து கொண்டிருந்தனர். ஐரோப்பிய யூனியன் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு உருவானபோது நம்பிக்கை அதிகரித்தது. ஆனால், முதலாளித்துவக் கொள்கைகளைக் கடைப்பிடித்த காரணத்தால் ஒட்டுமொத்த யூனியனே ஆட்டம் கண்டுள்ளது. வறுமை மற்றும் வேலையின்மைப் பிரச்சனைகளால் தீர்வு கோரி பல நாட்டு மக்கள் ஐரோப்பாவிற்கு வந்தனர். தற்போது ஐரோப்பிய மக்கள் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக மற்ற நாடுகளை நோக்கி அகதிகள் போல் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான சிக்கன நடவடிக்கைகள் சாமானிய மக்கள் மீது சுமையை ஏற்றுகின்றன. இதுதான் புதிதாக மற்ற நாடுகளுக்கு வெளியேறுபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.
______________________________________________________________________________________------


---------------------------------------------------------------------------------------ஒரு விபத்து
_____________________

ஒரு குடிகார பெண்மணி ரெயிலில் இருந்து இறங்கி தள்ளாட்டத்தால் அதே ரெயிலில் விழுந்தார்.ரெயில் உடனே நிறுத்தப்பட்டதால் காயங்களுடன் தப்பினார்.ரெயில் நிலைய காமிராவில் சுட்டது.
___________________________________________________________________________
இரட்டைத்தலை 


 பிரேசில் நாட்டின், வடகிழக்கு பாரா மாநிலத்தைச் சேர்ந்தவர், மரியா டி நாசரே,25. கர்ப்பமாக இருந்த மரியா, இங்குள்ள அனாஜஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, மரியாவுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், குழந்தைக்கு இரண்டு மூளைகள், இரண்டு முதுகெலும்பும்; ஆனால், இதயம், நுரையீரல், கல்லீரல், இடுப்பெலும்பு ஆகியவை, வழக்கமாக இருப்பது போல ஒன்று மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. பிரசவ காலம் நெருங்கியதும், மரியாவுக்கு டாக்டர்கள் அவசர அறுவை சிகிச்சை செய்து, இரட்டை தலை உள்ள ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை இருப்பதாகவும், அதன் நிறை 4 கிலோ இருப்பதாகவும், டாக்டர்கள் தெரிவித்தனர். இக்குழந்தைக்கு, எமனோயில் யேசு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. பிரேசில் நாட்டில், இரட்டை தலையுடன் கூடிய குழந்தை பிறப்பது, இது இரண்டாவது சம்பவம். ஏற்கனவே, பரைபா மாகாணத்தில், சுலே பெரைரா என்ற பெண்ணுக்கு, இரண்டு தலை கொண்ட குழந்தை பிறந்து, பின்பு சில மணி நேரங்களில் உயிர் பிரிந்தது என்று கூறப்படுகிறது.
________________________________________________________
தமிழகத்தில் அரங்கேறும் இலங்கை புலனாய்வாளர்களின் சதிதிட்டம்?

முன்னாள் போராளிகளை கண்டுபிடிக்க அரங்கேறும் சதித்திட்டம் சனல் 4 என்றபெயரில் உலா வரும் புலனாய்வாளர்கள் மக்கள் தமிழ்உணர்வாளர்களை விளிப்பாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.சனல் 4தொலைக்காட்சி செய்தியாளர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களில் போராட்டத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறியும் சதித்திட்டமொன்று அரங்கேறி வருவதாகவும் இது குறித்து தமிழர்கள் விளிப்பாக இருக்குமாறும் வேண்டப்பட்டுள்ளது பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4 தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராது உழைத்து வருகின்றது .
பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .முன்னாள் போராளிகள் வாழ்ந்துவருகின்றார்கள். அத்துடன் இலங்கை படையினரால் பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் வாழ்கின்றனர். இவர்களைக் கைது செய்யும் முகமாக சனல் 4 தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரி செவ்வி கண்டுள்ளது புதிய மர்ம கும்பல் ஒன்று.இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மோப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . இந்த சம்பவத்தில் முக்கிய சில முன்னாள் போராளிகள் அவர்கள் வசம் சிக்கியுள்ளனர். சனல் 4தொலைகட்சிக்குள் தமிழர்கள் இருப்பதாகவும் அவர்களே பல் போர்குற்ற ஆதாரங்களை வழங்கி வருவதாகவும் நம்பும் இலங்கை அரசு தமிழர்களை வைத்து அவர்களே தாம் என கோரி இந்த புதிய குழப்பகரமான நாசகார வேலையினை செய்துள்ளது .
இதனை செய்த நபர் பேட்டி காண சென்ற நபர் தமிழக தலைவர்களை தமது பிடிக்குள்வைத்திருக்கும் நபர் என்றும் கண்டறியபட்டுள்ளது .இவர்களின் பின்னால் பெரிய புலனாய்வு சூழ்ச்சி திட்டம் ஒன்று அரங்கேறிவந்துள்ளது அம்பலமாகியுள்ளது .எனவே இந்தியாவில் உள்ள தமிழர்கள் தாம் சனல் 4 தொலை காட்சி எனகோரி யராவது வந்து உங்களுடன் செவ்வி காண முற்பட்டால் உடன் பிரித்தானியாவின் லண்டன் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் காரியாலயத்திற்கு அழைத்து இவர்கள் தான் அவர்களா என உறுதிப்படுத்திய பின் உங்களது செவ்விகளை வழங்குங்கள் என தயவு கூர்ந்து தெரிவித்து கொள்கின்றோம் .தொலைபேசி இலக்கம்: 0044- 207 306 8444 தொலைபேசி இலக்கம் 0044-20 7396 4444 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு கேளுங்கள்.உங்கள் உயிர் காத்து தப்பி வந்த நீங்கள் இந்த புதிதாக உருவாக்கபட்டு வழிநடத்த பட்டு வரும் புதிய மர்ம கும்பல்களிற்குள் சிக்கி சீரழிந்துபோகாதீர்கள் என தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் .என இணையத்தளம் ஒன்றுசெய்தி வெளியிட்டுள்ளது.
ஈழத்தமிழர் தளம் வெளியிட்டுள்ள அறிக்கை இது.
______________________________________________________________________
பிறந்தநாள் நாயகன் ஸ்டாலின் நினைவு,,,,
ஏழைக் குடும்பத்தில் பிறந்த சிறுவன் ஒருவன் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சிறுவன் வரும் வழியில் விவசாயிகள் சிலர் தங்கள் வேலையினை முடித்துவிட்டு, கரை ஏறி மேலே வந்து சாப்பிட அமர்ந்தனர்.
மிகவும் மோசமான நிலையில் உலர்ந்து கெட்டுப் போயிருந்த ரொட்டித் துண்டுகளைப் பசியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த சிறுவனின் மனம் துன்புற்றது. விவசாயிகளின் அருகில் சென்று, இவ்வளவு மோசமான உணவினை ஏன் சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான்.
சிறுவனின் இரக்க உணர்வினை - அன்பினைப் பார்த்த விவசாயிகள், தம்பி, எங்கள் தலைவிதி இது. இதைவிட நல்ல உணவு எங்களுக்கு எவ்வாறு கிடைக்கும் என்றனர்.
விவசாயிகளின் பதிலில் அதிர்ச்சியடைந்த சிறுவன், நீங்கள் வயலில் இறங்கிக் கடுமையாக வேலை செய்கிறீர்கள். தானியங்களை விளையச் செய்கிறீர்கள், மற்றவர்களும் சாப்பிடுவதற்காகப் பாடுபடும் உங்களுக்குத்தானே நல்ல உணவு கிடைக்க வேண்டும் என்றான்.
நீ சொல்வது உண்மை தம்பி. நாங்கள் உழைத்த பயன் அனைத்தையும் அரசாங்கம் அள்ளிக் கொண்டு போய்விடுகிறதே. என்ன செய்ய, நாங்கள் இந்த உணவைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று வேதனையுடன் கூறினர் விவசாயிகள்.

சிறுவனை அதிகம் சிந்திக்க வைத்தது விவசாயிகளின் பதில். ஆழ்ந்த சிந்தனை, எதிர்காலத்தில் விவசாயிகளின் உரிமையைப் பெற பாடுபட வேண்டும் என்ற எண்ணத்திற்கு வித்திட்டது.
இச்சிறுவன் பின்னாளில் தனது எண்ணங்களைச் செயலில் கொண்டு வந்து ஒவ்வொரு துறையிலும் மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு சோவியத் யூனியனில் புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் தலைவராகப் போற்றப்படும் ஜோசப் ஸ்டாலின்
______________________________________________________________________________