சிக்கல் சிதம்பரம்

 அமைச்சர் சிதம்பரத்திற்கு தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டவண்ணம் உள்ளன. உள்துறை அமைச்சராக இருந்த போது நாட்டில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதல், தேர்தலில் முறைகேடாக ஜெயித்ததாக குற்றச்சாட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தற்போதைய நிதி அமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு சிதம்பரம் மீதான அதிருப்தி கடிதம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் டில்லி ஓட்டல் அதிபர் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய பரிந்துரைத்ததாக நேற்று மாலை வரை பார்லி.,யில் அமளி. இன்று சாமியின் சாட்சியம் இருக்கிறது. இதனையடுத்து வரும் உத்தரவுகளை பொறுத்து உள் துறை அமைச்சர் பதவி நீடிக்குமா என்பது தெரிந்து விடும். வரும் 21 ம் தேதி சனி பெயர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். பிரதமர் ரஷ்யநாட்டு பயணத்தை முடித்து வரும் திங்கட்கிழமை 19 ம் தேதி தாயகம் திரும்பி விடுவார். இவர் வந்ததும் ,சிதம்பரத்தின் மீதான முக்கிய முடிவுகள் , பார்லி., கூட்டம், லோக்பால் விவகாரம் என அரசியல் அனலுக்கு துளியும் பஞ்சம் இருக்காது. சிதம்பரத்தைப் பாதுகாக்க மன்மோகன் சிங்,சோனியா கடுமையாக முயற்சித்தாலும் சிதம்பரம் சீக்கிரம் பதவி விலகவேண்டியது வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தொலை தொடர்பு துறையில் ராஜா அமைச்சராக இருந்தபோது சிதம்பரம் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்தார். நிதி அமைச்கத்திற்கு தெரியாமல் இந்த விற்பனை நடந்திருக்காது என்றும், இவர் நினைத்திருந்தால் 2-ஜி ஊழல் நடக்காமல் தடுத்திருக்கலாம்.இதன் மூலம் ராஜா குற்றம் புரிய துணை புரிந்திருக்கிறார் எனவே ராஜா எப்படி ஒரு குற்றவாளியோ அது போலத்தான் சிதம்பரமும் என்று பா.ஜ., தரப்பு தனது வாதத்தை வைக்கிறது. 
ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமியும்ஊழலில் ராஜாஅளவிற்கு சிதம்பரத்திற்கும் பங்கு இருக்கிறது. எனவே இவரையும் வழக்கில் சேர்த்து விசாரிக்க வலியுறுத்தியும், இது தொடர்பாக நிதி துறை இயக்குனர் மற்றும் சி.பி.ஐ, இயக்குனரை விசாரிக்க வேண்டும் என்றும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் சாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓ..பி..,சைனி மனுவை ஏற்றுக்கொண்டு சாமி தனது தரப்பு ஆதாரங்களை சாட்சியமாக அளிக்க அனுமதி அளித்தார். அவர் அளிக்கும் சாட்சியத்தின் அடிப்படையில் ஆதாரங்கள் இருப்பதாகவோ , தொடர்பு இருப்பதாகவோ கோர்ட் கருதினால் அவர்களை விசாரிக்க அழைக்கும். இதனால் இன்று சு.சாமி அளிக்கும் சாட்சியம் முக்கியத்துவம் பெறுகிறது. 
இவ் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நாளில் சாமி தெரிவித்த கருத்தின் அதிகாரப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிபதி கூறியுள்ளார். இன்று காலை நீதிபதி சைனி முன்பு ஆஜரான சுப்பிரமணிய. சாமி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீது தொடர்பாக பிரதமர் அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம், ராஜா ஆகியோர் என்ன பேசிக்கொண்டனர். எந்த விதமான கடிதங்கள் பரிமாறப்பட்டது , இது தொடர்பாக பார்லி.,யில் சொல்லப்பட்ட கருத்துக்கள் என்ன, காபினட் கூட்டத்தில் விலை நிர்ணயம் செய்யும் உரிமை உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து சிதம்பரத்திற்கு உள்ள தொடர்பையும், ராஜா தனிப்பட்ட முறையில் குற்றம் செய்யவில்லை, சிதம்பரத்தின் அறிவுரையின்படியே ராஜா செயல்பட்டுள்ளார் . இவர் நிதி அமைச்சக கண்காணிப்பில்தான் விலை நிர்ணயம் செய்துள்ளார் என்று பிரதமரே ராஜ்யசபாவில் ( பிப். 24 2011 ) தெரிவித்துள்ளார். இதனால் சிதம்பரத்திற்கும் இதில் பங்கு உண்டு என்று வாதாடினார்.சாமி. இதனை கேட்ட நீதிபதி இது தொடர்பான ஆவணஙகளை அரசு ஆவண ஒப்பத்தின் மூலம் வாங்கி தாக்கல் செய்யுமாறு கூறினார். இதனை வரும் 7 ம் தேதிக்குள் தாக்கல் செய்வேன் என்றார் சாமி. மேலும் தமது வாக்குமூலத்தை நீதிபதி மகிழ்ச்சியுடன் கேட்டதாகவும், ஆவணத்தின் அடிப்படையில் சிதம்பரம் சிக்குவார் என்றும் இந்த ஆவணஙகள் தரப்பட்டதும் மேலும் சாட்சியங்கள் தேவையில்லை, நேரிடையாக விசாரணைக்கு போய்விடலாம் என நீதிபதி கூறியதாக சாமி்.நிருபர்களிடம் கூறினார். 
__________________________________________________________________________
இன்று[17-12-11]எகிப்தில் இராணுவத்துக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 8 பேர்கள் கொல்லப்பட்டனர்.300 பேர்களுக்கு மேல் காயமடைந்தனர்.
 ----------------------------------------------------------------------------------------------------
                                                       வானம் கீழே வந்தால் என்ன?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?