மலபார் போலீஸ்,,,,,?

_ முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள எல்லைகளை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்காக கம்பம் பள்ளத் தாக்கில் போலீஸ் தடைகளை மீறி சென்ற 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். சரமாரி கல் வீச்சை தொடர்ந்து பெண்களை ஓட ஓட விரட்டினர். கண்ணீர் புகை குண்டுகள் வெடிக்கப்பட்டன. 


_ நாராயணதேவன்பட்டியில் இருந்து 100 இளைஞர்கள் கேரள முதல்வர் உருவபொம்மையை சவ வண்டியில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். சவ வண்டியை போலீசாரை நோக்கி தள்ளிவிட்டனர். போலீசார் நிலைகுலைந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி லோயர்கேம்ப் மின் நிலையம் பகுதிக்கு விவசாயிகள் ஓடினர். 

அங்கு 500 போலீசார் வஜ்ரா வாகனத்துடன் தடுப்புகளை ஏற்படுத்தி நின்றிருந்தனர். அவர்கள்   தடுத்ததால்  போராட்டக்காரர்கள் கல்வீசினர். போலீசாரும் பதிலுக்கு கற்களை வீசி, தடியடியும் நடத்தினர். பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என அனைவரையும் போலீசார் 4 கி.மீ. தூரம் ஓட ஓட விரட்டி அடித்தனர். பெண்களுக்கும் லத்தியடி விழுந்தது. வாகனங்களை போலீசார் அடித்து நொறுக்கினர்.



இந்த தகவல் கூடலூர் பகுதியில் பரவியது. அதனால் கூடலூரில் பெட்ரோல் பங்க், தெற்கு போலீஸ் ஸ்டேஷன், புது பஸ்டாண்ட், அரச மரம் பகுதிகளில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அங்கு மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டினர். போலீசார்வீடு புகுந்து பெண்களை தாக்கினர். கூடலூரில் வீரணத்தேவர் என்பவர் இறந்ததால் உறவினர்கள் வீட்டருகே காத்திருந்தனர். அவர்கள் மீதும்  போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும்தடியடி தாக்குதல் நடந்ததால் பெண்கள் போலீசார் மீது மிளகாய்பொடி தூவி போலீசாரை விரட்டினர். இதனால் கூடலூர் பகுதியிலும் கலவரம் பரவிவருகிறது. 

கூடலூர் அரச மரம் பகுதியில் மறியலில் ஈடுபட்டவர்கள் 30 பேரை போலீசார் வேனில் ஏற்றி சென்றனர். அவர்களை விடுவிக்க முயன்றதால் தடியடி, கல்வீச்சு அதிகரித்தது.  டயர்களை கொளுத்தி போட்டனர். போலீசார் 10 முறை கண்ணீர் புகை குண்டுகளை வெடித்தனர். சம்பவ இடத்தில் 2 மணி நேரமாக தேனி கலெக்டர் இருந்தார். அவரால் கலவரத்தை மீறி முன்னேறி செல்ல முடியவில்லை. மக்கள் பல இடங்களில் போராட்டம் துவக்கியுள்ளதால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையினரின் நடவடிக்கைகளே கலவரத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினரையே குற்றம் சாட்டுகின்றனர்.
அமைதியாக குமிளியை நோக்கி சென்று ஆர்பாட்டம் நடத்தினாலும் காவல்துறையினர் திடீரென தாக்கத்துவங்குகின்றனர்.இதனால்தான் கலவர சூழல் உருவாகுகிறது.
இவர்கள் தமிழக காவல் துறையா? கேரள காவல்துறையினரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதற்கு ஏற்றார்போல் இப்பகுதி காவல் உயர் அதிகாரி ஜார்ஜ் மலையாளி.கேரளத்தை சேர்ந்தவர்.அதனால்தான் தமிழகமக்களை காவ்ல்துறை பகைவர்கள் போல் தாக்குகிறது என்பது பரவலான மக்கள் மத்தியில் அதிருப்தி கருத்தை எழுப்பியுள்ளது.
________________________________________________________________________


ஒரே நாவல்.தேசிய விருது.


தமிழ் நாவல் எழுத்தாளரான சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் & கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராவார். மதுரையில் இவர் வசித்து வருகிறார். இவர் எழுதிய ஒரே நாவல் காவல்கோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரு வேறு உலகங்கள் சந்திக்கும் சித்திரம் உள்ள நாவல் இது. 


பெருந்திரளான எண்ணிக்கையும் ஆயுதபலமும் கொண்ட மேய்ச்சல் நில மக்களான தெலுங்கு நாயக்கரும், சிறிய எண்ணிக்கையில் உள்ள கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம்செய்து கொண்டு வரலாற்றை உருவாக்குகிறார்கள் என்பதை காவல்கோட்டம் எடுத்துக்காட்டுகிறது.
காவல் கோட்டம் நூலுக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது.
இந்த நாவலின் அடிப்படையில்தான் இயக்குநர் வசந்தபாலன் "அரவான்" படத்தை இயக்கி வருகிறார். ராமச்சந்திரா குஹா எழுதிய இண்டியா ஆஃப் டர் காந்தி என்ற ஆங்கில நூல், கோபாலகிருஷ்ண பாய் எழுதிய கன்னட நாவல் ஸ்வப்ன சரஸ்வதா, எம்.கே.சானு எழுதிய பஷீ¦ர்: ஏகாந்த வீதியிலே அவதூதன் என்ற மலை யாள வாழ்க்கை வரலாற்று நூல், சமலா சதாசிவா எழுதிய தெலுங்கு கட்டுரை தொகுப்பு நூல் ஸ்வரலயலு ஆகியவையும் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகதாமி விருது பெறுகின்றன. 
 சாகித்தயஅகதாமி விருது தாமிரப் பட்டயம், சால்வை மற்றும் ரூ1 லட்சத்துக்கான காசோலை ஆகியவற்றைகொண்டது.வாழ்த்துக்கள்.
_______________________________________________________________________________




ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி
                                                                      -பேராசிரியர் பிரபாத் பட்நாயக்.
ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி குறித்த ஒரு பொதுவான பார்வை என்னவாக இருக்கிறது?


‘சந்தை’க்கு ஐரோப்பிய அரசாங்கங்களின் நம்பகத்தன்மை குறித்து ஒரு நம்பிக்கை யின்மை ஏற்பட்டுவிட்டது என்பதே இதற்கு பதில். கடந்த காலத்தில் இந்த அரசாங்கங்கள் தொடர்ந்து ஒரு நெறிமுறை இல்லாமல் நடந்து கொண்டதன் விளைவாக மிகப்பெரிய அளவில் கடன் குவிந்துவிட்டது. இதன் காரணமாக சந்தைக்கு நம்பிக்கையின்மை ஏற்பட்டுவிட்டது. ‘சந்தை’ என்பதன் கண்ணோட்டத்தில் இந்த நெருக்கடியின் தீர்வு இந்த அரசாங்கங்கள் தங்களுடைய செலவினங்களை சுருக்கிக் கொள்வதைப் பொறுத்தும், மிகக்கடுமையான சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதைப் பொறுத்தும் தான் அமையும் என்பதாகும். அதாவது செருப்புக்குத் தகுந்தாற்போல் காலை வெட்டிக்கொள் என்பது போன்ற உத்தரவுகள் சந்தையால் பிறப்பிக்கப்படும்; அவை ஒழுங்காக கடைப்பிடிக்கப்படுகின் றனவா என்று மதிப்பீடு செய்யப்படும் என்ப தால் இந்த உத்தரவுகள் அரசாங்கங்களால் மீறப்படுவதில்லை. 

இந்தக் கருத்தானது பொதுவான முதலா ளித்துவக் கொள்கையின் குணாம்சத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

‘சந்தை’யும் கிரீசும்

‘சந்தை’ என்பது மனிதர்களால் உருவாக் கப்பட்ட அமைப்பு. ஆனால், அது ஏதோ மனி தர்களையே சார்ந்திராத, சுயமாக அறிவு நுட்பமும், விவேகமும் கொண்டுள்ள அமைப்பு போன்று கருதப்படுகிறது. அதை யும் தாண்டி, மனிதர்களின் முட்டாள்தனங் களையே அது தான் சரி செய்வது போலவும், எனவே அது மரியாதைக்கும் கீழ்ப்படிதலுக் கும் உரிய அமைப்பு என்பது போன்றும் இன்று கருதப்படுகிறது.

கிரீஸ் நாட்டின் பிரதமராக இருந்த பபான் ட்ரியோ, கிரீஸ் அரசாங்கம் இழந்துவிட்ட ‘சந்தை’யின் நம்பகத்தன்மையை திரும்பப் பெற வேண்டும் என்பதற்காக, ஐரோப்பிய யூனியன் திட்டமிட்டுக் கொடுத்த மிகக் கடு மையான சிக்கன நடவடிக்கைகளை பொது வாக்கெடுப்பிற்கான பொது மகஜர் வடிவமாக் கினார். இந்த சிக்கன நடவடிக்கைகளின் மூலம் கிரீஸ் நாடு தனது பொதுக் கடனி லிருந்து வெளியே வந்துவிடலாம் என்பது அவரது கணிப்பு. அதே நேரம் இந்த நடவடிக் கைகள் பொது மக்களின் மீது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால் அவர் களது கருத்துக்களை அறிய வேண்டுமென்று பொது வாக்கெடுப்பிற்கு விட நினைத்தார். உடனே, முதலாளித்துவ வட்டாரத்தின் ஒவ் வொரு பகுதியிலிருந்தும் மிகப் பெரிய கூக் குரல் எழுந்தது. நமது நாட்டு செய்தித்தாள்கள் கூட பபான்ட்ரியோவின் இந்த முடிவிற்கு எதி ராகத் தலையங்கம் எழுதின. அவர்கள் எல்லோ ரும் இப்படி ஒரு புதுமையான, விசித்திரமான, முட்டாள்தனமான நடவடிக்கையைப் பார்த்து பயந்துவிட்டனர். எனவே, என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய அவசியமே இல் லாமல், மக்களிடையே பொது வாக்கெடுப் பிற்கு விடும் தன்னுடைய திட்டத்தினை பபான்ட்ரியோ கை விட்டு விட்டார். 

கிரீஸ் நாட்டு அனுபவத்தின் பின்னணி யில் உண்மையில் சர்வதேச நிதி மூலதன நல விரும்பிகள் சொல்ல விரும்புவது என்னவென்றால், அரசாங்கங்கள் பழைய முறையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து செலவுகள் செய்வது என்பதைத் தொடரக்கூடாது என்பது தான். அதாவது பழைய “சேம நல அரசு” என்பதன் மிச்ச சொச்சங்களாக கொஞ்சம் நஞ்சம் இருக்கும் அரசாங்கச் செலவினங்களைக் கூட தொடரக் கூடாது என்பது தான்.

அரசாங்கங்கள் தங்களுக்கான மீட்புத் திட்டங்களை வெட்டிச் சுருக்கக்கூடாது; ஆனால், தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்களுக்காக செய்யப்படும் செலவினங்களை குறி வைத்து கடுமையாக வெட்டிக் குறைப் பதன் மூலமே பொருளாதார சுழற்சிக்கான நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என் றும் நிதி மூலதனம் விரும்புகிறது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு காலத்தில் ஐரோப்பிய சேம நல அரசு என்று புகழ் பெற்ற அரசாங்கங்களின் மிச்ச சொச்சங்கள் ஏதே னும் இருந்தால் அவற்றை ஒழித்துவிட வேண்டும் என்பது தான். 

கடைசித் தாக்குதல்

இதையே வேறு விதமாகக் கூறுவதென் றால், ஐரோப்பிய பொருளாதார நெருக்கடி என் பது வேறு ஒன்றுமில்லை; சட்டத்தை மீறி பலவந்தமாக ஐரோப்பிய ஜனநாயகத்தின் மீதும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந் தைய காலகட்டத்தில் நிறுவப்பட்ட ஐரோ ப்பிய சேம நல அரசுகள் மீதுமான நிதி மூல தனத்தின் அத்து மீறிய தாக்குதலே. இந்த சேம நல அரசு என்பது எப்படி இருந்தது என் றால், ஒரு முதலாளித்துவ அரசாக இருந்த போதிலும் அதனுடைய வர்க்கக் கொள்கை களுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவ வர்க் கம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்கு மட்டுமல்லாமல் ஒரு குறிப் பிட்ட அளவிற்கு தொழிலாளி வர்க்கத்தின் நலன்களிலும் அக்கறையும் பொறுப்பும் உடையதாக இருந்தது. இத்தகைய சேம நல அரசின் மீதான தாக்குதல், எப்போது நிதி மூலதனம் உச்சத்திற்கு வந்ததோ அப்போது எழுந்தது. குறிப்பாக, தேசிய அரசுகள் நிறைந்த இந்த உலகத்தில், நிதி மூலதனம் என்பது உலகமயமான போது இந்த தாக்குதல் ஆரம்ப மானது. நாம் இப்போது பார்ப்பது இறுதிக் கட்ட தாக்குதல். ஒட்டு மொத்தமாக ஒரு பெரிய கட்டிடத்தையே உலுக்குகிற, நொறுக்கித் தள்ளுகிற இறுதியான முயற்சி. ஒரு குறிப் பிட்ட அளவிற்கு சாதாரண உழைக்கும் மக்க ளின் மீது அக்கறை கொண்ட, வர்க்கங் களைத் தாண்டி வெளிப்படையாக நிற்கக் கூடிய சமூக ஜனநாயக அடையாளம் பதித்த பழைய முதலாளித்துவ அரசிற்குப் பதிலாக, நிதி மூலதனத்தின் உண்மையான அதிகாரத் திற்குட்பட்ட ஒரு அரசினை நிலைநிறுத்து வதற்கான இறுதிக் கட்ட முயற்சி இது. 

ஐரோப்பிய சமூகத்தின் ஜனநாயகத் தன் மையின் பாரம்பரியத்திலிருந்து பின்னோக் கிச் செல்வது என்பதன் பொருள், ஐரோப்பா வின் ஐனநாயகத்திற்கு ஒட்டு மொத்தமாக மூடுவிழா நடத்துவது என்பது தான். கிரீசுக் கான சிக்கன நடவடிக்கைத் திட்டத்தை பொது வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென்ற அந்நாட்டுப் பிரதமரின் முன்மொழிவின் மீது எழுந்த பரபரப்பிற்கான காரணம், இந்த சிக்கன நடவடிக்கைத் திட்டமே ஜனநாயகத்தி லிருந்து பின்னோக்கிச் செல்வதை சுட்டிக் காட்டுகிறது என்பதால்தான். சாதாரண மக் களின் முதுகின் மீது சுமையை ஏற்றுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை பாதிக் கும் கடுமையான நிகழ்வுகள் இனிமேல் தீர் மானிக்கப்பட இருக்கின்றன என்பதால்தான்.

‘நெருக்கடி’ என்பதன் உட்பொருள் 

இந்தப் பின்னணியில் “நெருக்கடி” என் பதற்கான மிகச் சரியான வரையறையைப் புரிந்து கொள்ள வேண்டும். “நெருக்கடி” என்ற வார்த்தை தேசிய அரசாங்கங்களால் நிதி மூலதனத்திடமிருந்து பெற்ற கடன்களை திருப்பிக் கொடுக்க முடியவில்லை என் பதை, அல்லது அந்த கடன்களை திருப்பிக் கொடுப்பதை இந்த அரசாங்கங்கள் தள்ளிப் போடுகின்றன என்பதைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த அரசாங்கங்கள் கூடுதலாக கடன் கேட்ட போது நிதி மூலதனம் அதைக் கொடுக்கத் தயாராக இல்லாமல் இருந்ததன் காரணமாக இந்த அரசாங்கங்களுக்கு எழுந்த பிரச்ச னையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. எனவே ‘நெருக்கடி’யைத் தீர்க்கும் நோக்க மாகவே கடுமையான சிக்கன நட வடிக்கைகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், தொழிலாளர்களைப் பொறுத்தவரை மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகள் என்பது நெருக்கடியின் தீவிரத்தை- ஆழத் தைக் குறிக்கிறது.

கிரீஸ் நாட்டை பொருளாதார நெருக்கடி யில் இருந்து விடுவிப்பதற்காக என்று சொல்லிக் கொண்டு ஐரோப்பிய யூனியன் நாடுகளால் உருவாக்கப்பட்ட சிக்கன நட வடிக்கைத் திட்டமானது, கிரேக்க மக்கள் எவ்வளவு காலத்திற்கு இந்த நடவடிக்கை களை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பது குறித்தோ, அல்லது இந்த சிக்கன நடவடிக் கைகளுக்கு கிரேக்க மக்கள் எப்படி ஈடு கொடுக்கப் போகிறார்கள் என்பது குறித்தோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. சுருக்க மாகச் சொல்ல வேண்டுமென்றால், கிரீஸ் நாட்டு அரசாங்கத்திற்கு நிதி மூலதனம் கொடுத்திருந்த கடன்கள் திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடக்கூடாது என்பதால் அதற்கான நிதிப் பாதுகாப்பினை உத்தரவாதப் படுத்திக் கொள்வது மட்டுமே ‘நெருக்கடி’ என்ற பிரகடனத்தின் திடமான நோக்கமாக இருந்தது. ஆனால், சாதாரண மக்களின் வாழ் நிலையில் எந்த முன்னேற்றத்தையும் தருவ தாக, அவர் களுடைய விதியை மாற்றுவதாக எந்த நட வடிக்கைகளும் இந்தத் திட்டத்தில் இல்லை. எனவே, ‘நெருக்கடி’ என்பதற்கு நாம் கொள்ளும் அர்த்தத்தையே மாற்றிக் கொள்ள வேண் டியுள்ளது. உலகமயமாக்கல் சகாப்தத்தில், சமுதாயத்தின் நலன்களும் நிதி மூலதனத் தின் நலன்களும் ஒன்றாக - ஒரே பொருள் கொண்டதாக பார்க்கப்படு கிறது. ஆனால், அந்த சமுதாயத்தினை நிர் மாணிக்கும் எளிய மக்களின் நலன்களும் சமுதாய நலன்களும் ஒன்றாகப் பார்க்கப்படு வதில்லை. 

பொருளாதார வல்லுநர் பால் க்ரூக்மேன் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் ஐரோப் பிய நாடுகளின் கடன் நெருக்கடி குறித்து வாதிடும்போது, எந்த நாடுகளெல்லாம் வெளி நாடுகளிடம் இருந்து கடன் பெற நிர்ப்பந்திக் கப்பட்டனவோ அந்த நாடுகளில் மட்டுமே கடன் நெருக்கடி எழுந்துள்ளது என்று வாதிடுகின்றனர். அதாவது அவர்களைப் பொறுத்த வரையில், தங்களுடைய மத்திய வங்கிகள் உட்பட சொந்தப் பொருளாதாரத்தில் இருந்து கடன் வாங்க முடியாத நாடுகள் தான் கடன் நெருக்கடிக்கு ஆட்பட்டுள்ளன என்று வாதிடுகின்றனர்.

ஒரு நாட்டின் அரசாங்கம் அந்த நாட்டின் மத்திய வங்கியில் இருந்து கடன் வாங்கிக் கொள்ள சுதந்திரம் உடையதா, இல்லையா என்பது விஷயமல்ல. உலகப் பொருளாதாரச் சரிவின் பின்னணியில் ஒரு நாட்டின் அர சாங்கம் என்ன செய்கிறது என்பது தான் விவாதத்திற்கான விஷயம். உலக அளவில் ஒட்டு மொத்தமாக பொருட்களுக்கான கிராக்கி (னுநஅயனே) என்பதில் கூர்மையான வீழ்ச்சி ஏற்படும்போது, உலகம் முழுவதும் உள்ள பொருளாதாரங்களின் மீது அதனுடைய தாக்கம் பெரியதாகவோ அல்லது சிறிய தாகவோ கட்டாயம் இருக்கும். நடப்பில் உள்ள பங்கு பரிவர்த்தனை விகிதத்தின் அடிப்படையில் செயல்படும் நாடுகளில் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் அதிகமாக இருக்குமென்றால் (உதா ரணமாக அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப் பிய நாடுகள்) அந்த நாடுகளில் இந்த சரிவின் தாக்கம் பெரிய அளவில் இருக்கும். அதே நேரம் தொழில் உற்பத்தியை விட டாலர் சம்பள விகிதம் குறைவாக இருக்குமென்றால் (உதா ரணம் சீனா) இந்த சரிவின் தாக்கம் குறை வானதாக அல்லது ஒதுக்கிவிடக் கூடியதாக இருக்கும். 



மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு கள், இந்த சரிவின் தாக்கத்திலிருந்து சாத் தியமான மூன்று வழி முறைகளில் பாது காத்துக் கொள்ள முடியும். 

1,பிற நாடுகளை விட தன் நாட்டு பணத் தின் மதிப்பைக் குறைப்பதன் மூலம் அந்த நாட்டில் சம்பள விகிதம் உயராமல் பார்த்துக் கொள்ளும் முறை. அதாவது அந்த நாட்டின் தொழிலாளர்கள் தங்களுடைய உண்மைச் சம்பளத்தில் ஒரு வெட்டினை ஏற்றுக்கொள் வதன் மூலம் தங்களை போட்டிக்குத் தயாராக வளர்த்துக் கொள்ளும் முறையின் மூலம் (பிற நாடுகள் தங்களுடைய பண மதிப்பை பதி லுக்குக் குறைக்காமல் இருக்கும் வரை இது சாத்தியமாகும்) மலிவான சம்பள விகிதத்தை தக்க வைப்பது. மற்றும் தனது நாட்டின் நிகர ஏற்றுமதியை அதிகப்படுத்துவதன் மூலம் உற்பத்தியையும் வேலை வாய்ப்பையும் பெருக்குவது. இதைத் தான் க்ஷநபபயச அல நேiபாbடிரச யீடிடiஉல என்கிறோம். அதாவது, வேறு ஒரு நாட்டினை தாழ்வடையச் செய்வதன் மூலம் இந்த நாடு தன்னுடைய நலனை பாதுகாத்துக் கொள்ளும் முறை. இருந்தபோதும், இது கையாள வேண்டிய மிகச் சரியான வழி முறை அல்ல.

2,அரசாங்கத்தின் வருவாய் குறைந்த பிறகும் கூட, மிகப் பெரிய நிதிப் பற்றாக்குறை மூலமாவது அரசாங்கச் செலவினங்களை குறைக்காமல் தக்க வைப்பது, இந்த முறை யைத்தான் பெரும்பாலான ஐரோப்பிய பொரு ளாதாரங்கள் செய்ய முயல்கின்றன. இது மாதி ரியான நேரத்தில் அரசாங்கங்கள் வெளியி லிருந்து கடன் வாங்காமல் இருந்தாலும், கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டதன் காரணமாக இந்த நாடுகளின் ஏற்றுமதிகள் குறைந்தாலும், மிகப் பெரிய நிதிப் பற்றாக் குறையின் மூலமாவது இந்த நாடுகளின் இறக்குமதிகள் தக்க வைக்கப்படும் என்பது தான் இதன் பொருள். எப்படி பார்த்தாலும், பிற நாடுகள் எது மாதிரியான பிரச்சனைகளை சந் தித்தனவோ அதே பிரச்சனைகளை இந்த நாடுகளும் சந்திக்க வேண்டியது வருகிறது. 
3, உள்நாட்டில் மக்களிடையே தேவையை அதி கரிப்பதன் மூலம் பொருளாதார சரிவிலிருந்து தனது பொருளாதாரத்தை பாதுகாத்துக் கொள் வது. அதாவது இரண்டாவது வழி முறையில் கூறியது போல் மிகப் பெரிய நிதிப் பற்றாக் குறையின் மூலமாவது உள்நாட்டில் தேவையை அதிகரிப்பது. ஆனால், அதே நேரத்தில் மூல தனம் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகளின் மீது ஒரு கட்டுப்பாட்டினை வைப்பதன் மூலம் ‘உலகமயமாக்கலில்’ இருந்து தொடர் பினை துண்டித்துக் கொள்வது முக்கிய மானது ஆகும். அதே போல அந்த நாடானது ஒரு வேளை ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு ஐக்கிய அமைப்பின் உறுப்பு நாடாக இருக்குமானால், அந்த ஐக்கிய அமைப்பி லிருந்தும் தனது தொடர்பினை துண்டித்துக் கொள்வதும் அவசியமாகிறது.

ஒரு வேளை ஒரே நேரத்தில் உலக அள வில் ஒட்டு மொத்தமாக உலகத் தேவையை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளும் செயல் பாடுகளும் செய்யப்படுமானால், நிச்சயமாக அது ஒரு தனித்துவமான அம்சம ாக இருக் கும். ஆனால், அது போன்ற செயல்பாடுகள் எதுவும் தற்போது இல்லை. அப்படிப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், உலக நிதி மற்றும் வர்த்தகப் பரிவர்த்தனை களுக்குத் திறந்துவிடப்பட்ட ஒரு பொருளா தாரத்தை, உலகமயமாக்கல் கொள்கையை அமலாக்குவதற்கென்றே உள்ள புதிய பொரு ளாதாரக் கொள்கைகளின் ஆட்சிக் காலத் தில், சரிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நம்புவது வெறும் மாயையே!

(பீப்பிள்ஸ் டெமாக்ரஸி, நவம்பர் 14-20, 2011)

                                                                                        தமிழில்:ஆர்.எஸ்.செண்பகம், திருநெல்வேலி
__________________________________________________________________________________________

                                 கண்களுக்கு ஒய்வு கொடுங்கள்.

                              வேகமாக இப்படத்தை மேலும் கீழும் பாருங்கள்.அப்புறம் தெரியும் .

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?